தினம் வாடும் மலரே சிரிப்பதெப்படி?
(கருவண்டும் மலரும்)
(கருவண்டு)
கொட்டி யெழில்விரி சொட்டு மிதழ்மது
கட்டழகு முகத் தேன்மலரே
பட்டெனக் காணிலும் பூவேயுன் மேனியும்
விட்டதென் வாழ்வுமோர் நாள்தனியே
கட்டழ குமேனி பட்டகதிர் வெம்மை
சுட்டதென வரும் மாலையிலே
பட்டு விடமுன்னர் எப்படியோ இதழ்
கொட்டிச் சிரித்துநின் றாய்எதிலே?
(மலர்)
கட்டை கரும்நிறக் கொட்டும் வலியெழத்
துட்ட குணமுங் கொண்டான வண்டே
திட்டமிட்டே யெனைத் தொட்ட பின்புவிட்டே
எட்டிச் செல்லும்நிலை நானறிவேன்
சட்டமிட்டே யுன்னைக் கட்டிவைத் தலில்லை
மொட்டி லிருந்து கண் காணுகிறேன்
வட்டமிட்டே எமைத் தொட்டழித்த பின்பு
சொட்டும் கவலையின் றாவதுமென்
வண்டு:
முட்டு மிதழ்களில் மென்மை தொடுந்தென்றல்
பட்டுவிடச் சொட்டும் தேன்மலரே
எட்டி ரசிப்பதோ கிட்டவந்தே உண்ணா
விட்டுக் கிடந்திட வோதனியே
கொட்டும் மழையுடன் சட்டசட இடி
வெட்டு மின்னல் வரும் வேளையிலும்
சுட்டு விடவில்லைப் பட்டுவிழும் உன்னை
தொட்டதில்லை யெனில் வீண்மதுவே
மலர்:
அட்டமியி லுன்னை அன்னை படைத்தனள்
அத்தனை கும்மிருட்டோ எழிலே
பட்டுமலர்களைக் குட்டை குளமெங்கும்
தொட்ட ழித்தகதை நானறிவேன்
கட்டு மலர்இதழ் விட்ட மணம் மட்டும்
தொட்டுக் கொள்ளுதென்றல் போலில்லையே
பட்டே உளம்கொள்ளும் அச்சம் துயர்தனை
விட்டுமிருப்பது தான்அழகே
தட்டுங் கதவுகள் சொர்க்க மெனிலதைத்
தட்டுவது சரியாம் உயிரே
பொட்டென் றழிவது விட்டவிதி யெனில்
கட்டி யழுதென்ன போமுயிரே
வெட்டு மிருவிழி நட்ட நடுநிசித்
திட்டென் றிருள்தனில் காண்பதுண்டோ
பொட்டு மிட்டபூவை பற்றியிழுத் தென்னைக்
கட்டி மாலையிடல் ஏனறியேன்
கட்டை வயலினில் முற்றும் புதுநெல்லு
வெட்டிக் கதிரடித்தார் பின்னரே
கொட்டும் வெயிலிட்டு சுட்டுலர்ந்த பின்னர்
தட்டிலிட்டுப் பதர் நீக் கிடவே
எட்ட வீசி வருங் காற்றுள்ள போதினில்
விட்டு மிருப்பரோ வேளையதே
நட்டமின்றித் தூற்ற வேண்டுமன்றோ அதை
நாமுங்கொண்டே இன்பங் காணுகின்றோம்
முட்டி வெள்ளம் வரும் நட்டமிடும் இங்கு
முற்றும் பறிதெங்கும் வீசிவிடும்
கட்டி யிழுத்தவை வெட்டி மின்னலிட்டுத்
தொட்ட மரம் சாய்த்துக் கூச்சலிடும்
விட்ட விதியென்ன தட்டியெவர் கேட்கத்
தொட்டதை விட்டுச்சென் றாவதுண்டோ
மட்டும்நீ வாழென விட்டதே நாளெனில்
மிச்சமென சிரித் தாடலன்றோ
******************
9 Aug 2013, 12:42:45
to santhav...@googlegroups.com
கனவும் களிப்பும் கற்பனையும்
இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போதும் மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்
விரிகின்ற மனமன்பு விளையுந் நெஞ்சம்
வேடிக்கை இன்பங்கள் வேண்டும் வாழ்வு
சரிகின்ற வானமதைத் தழுவும் பூமி
சற்றேனும் விலகாத நட்பின் சேர்க்கை
புரிகின்ற நிகழ்காலம் பின்னால் தோன்றும்
புலம்பாத நல்லெண்ணப் புதுமைகண்டு
தெரிகின்ற வருங்கால தோற்றம்தன்னும்
தேவையெனில் எதிர்நீச்சல் வாழ்வின்வெற்றி
கலையாத ஏகாந்தம் கன்னித்தீவு
கரைமீது விழுந்தாடும் கடலின் கூச்சல்
அலைநீவும் வெறும்பாதம் அதனால் சில்லென்
றசைகின்ற சுகமேனி அடங்காத் துள்ளல்
தலைமீது கனவாகும் தாகத் தேவை
தாம்தீமென் றாடும்நீர் தாவும் அலைகள்
மலைமீது உறைவேளின் மணிசொல் நாதம்
மகிழ்ந்தாடிக் குதிக்கின்ற மந்திக் கூட்டம்
மலர்ந்தாடும் மகிழ்வோடு மனதைக்கொள்ளும்
மனோரஞ்(சி)த பூவாச மனதில்நல்லோர்
பலமான உறுதி வீண்போகா தன்மை
பகையின்றி எதிர்காலம் படரும் தூய்மை
வலதேகாண் இடமென்று வார்த்தைபொய்க்கா
வளம்கொண்ட பேச்சும்நல் வழிகாட்டும்கை
இலதாகும் கொடுஞ்சொல்லும் இளகாநெஞ்சம்
இளமைகொள் புனிதத்தை இழக்காப் பண்பு
குளம்மீது அல்லிப்பூ குதிக்கும் மீன்கள்
கொள்ளின்பப் பாங்கிலின் கூடும்வதனம்
உளமெங்கும் பூச்சொரியும் இனிதோர் மாலை
இசைந்தோடும் எழிற்தென்றல் ஏற்கும் உள்ளம்
அளவான அதிகாரம் அணைக்கும் மென்மை
அழகோடு விளைமேனி அருகில் பெண்மை
இளமைக்கு குறையற்ற இசையின் சந்தம்
இதனோடு எழுங்கவிகள் எழுதும்வேகம்
தணலாகிக் கொதிக்கின்ற தங்கச் சூரியன்
தாங்காத வேளைநிழல் தருமோர்சோலை
மணல்மீது நடைபோடும் ஆற்றின் போக்கு
மறுபக்கம் ஊற்றுமோர் மலையின் அருவி
கணம் வாழ்வை மறந்தேநின் றாடும் இதயம்
காண்கின்ற இன்பங்கள் காட்டும் தெய்வம்
பிணமாகிப் போகும்நாள் பிறக்கும் மட்டும்
பேசும் என்வாழ்வின்பம் பெற்றிடாதோ
**************
13 Aug 2013, 21:44:49
to santhav...@googlegroups.com
தெய்வத்தைத் தேடு (ஈழத்திற்காக)
தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை
கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில் காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ
செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக் கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள்
அன்னையே ஆனந்தமாக்கிவிடு
கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு
ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை
*****************
13 Aug 2013, 22:44:19
to சந்தவசந்தம்
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில் காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில் காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ
வேதனையில் வேதாந்தம் தெறிக்கிறது. இறுதி அடிகளின் செய்தியும் அருமை.
அனந்த்
தெய்வத்தைத் தேடு (ஈழத்திற்காக)
தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை
கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில் காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ
16 Aug 2013, 21:04:41
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! என்றும் தங்கள் வாழ்த்துக்கள் இதயத்தில் ஒலித்துக்கொள்ளும்!
அன்புடன் கிரிகாசன்
*****************************************************
16 Aug 2013, 21:18:56
to santhav...@googlegroups.com
சிறு பெண்ணே
சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிரிக்கும் மலரம்மா
அன்னை தந்த அழகிய கண்ணே
அன்பின் பரிசம்மா
பொன்போல் கன்னம் பூவிதழ்முல்லை
பொருந்தும் வகையம்மா
புன்னகை யென்றும் புதிதாம் உதயம்
பொழுதும் நினையம்மா
அன்பை என்றும் அகமுள் கொள்வாய்
அதுவுன் பலமாகும்
இன்பம் எங்கே உள்ளது வாழ்வின்
எளிமைத் தனமாகும்
தென்பைக் கொள்ளு தினமும்வாழ்வு
தேனில் இனிதாகும்
தன்னல மெண்ணி தன்னலம் விட்டால்
தகமை உயர்ந்தோங்கும்
கல்விநற் செல்வம் காசொடு பொருளும்
காண்பது பின்னாகும்
வல்வினை யாற்று வளமொடுவாழ
வகுத்திடு விதிதானும்
தொல் திருநாட்டின் சுகமெழு வாழ்வும்
திரும்பிடத் தான்வேண்டும்
அல்லது தீர்ந்தே அறமெழுந் தாட
அடுத்து எதுவாகும்
சிங்கமும் புலிகள் வாழ்வது இன்று
சேர்ந்தோர் வனமல்ல
செங்கணை தீயின் அம்புகள்யாவும்
சிரம்மேல் எரிதூவும்
பொங்கிட வழியும் பாலென் றுள்ளம்
புதிதோர் நிலை காண
நங்கையின் உறவே நாடுன தானால்
நலமே வாழ்வெய்தும்
தென்னவர் பக்கம் தித்திப்புண்டோ
சிறுமைக் கரமேந்தி
என்னவர் நாட்டில் ஏழ்மைப் பஞ்சம்
இயல்பென் றுருவாக்கி
பொன்னெழில் காணப் புரளும்மதியை
பெரிதோர் வரமென்றே
தன்னினம் தாழத் தனிவழிகாண்போர்
தமிழுக்குரி யோரில்
வெண்ணெய் மலரே விடிவுக ளென்றும்
வெளிச்சம் தனைத்தாரும்
விண்ணிடை காற்றில் விரியும்சுதந்திர
வேட்கை மனம்காணும்
கண்ணிடை போற்றும் கருமணிபோலுன்
கடமைகள் தனையாக்கு
பெண்ணவளே நீ பெரிதோர்சக்தி
புரிவாய் பலம் கொண்டே!
**********************
18 Aug 2013, 08:51:24
to santhav...@googlegroups.com
வாழ்வீயா வகையேன்
சில்வண்டே சொல்லாய் செழித்தோர் வனத்திடையே
நில்லென் றுனைநிறுத்த நேர்ந்தசெய லுண்டோ, ஏன்
இல்லென்று ஆகுவையென் றெள்ளித் தமிழினத்தைக்
கொல்லென்று வந்தாரின் கொள்கை அறிகுவையோ
கல்லென்ற உள்மனதைக் கனிந்ததாய்ப் பூவென்று
நல்வாசம் கொண்டேயிந் நாட்டின் நிலையறிந்து
சொல்கொண்டு பேசித் சுதந்திரமே தீர்வாக்கித்
தொல்நின்று காணுமித் தூயமொழி வாழ்வீயாப்
பல்வண்ண மாயைகளைப் பாரெடுத்த தேனடியோ
வெல்லென்று கூறியெழ வீரரையும் கொன்றுவிதை
செல்லென் றவர்வாழ்வைச் சீரழித்துப் போனவரும்
நல்லெண்ணத் தூதாய் நடிப்பதனை நம்பிடவோ
முல்லைக்கு வாசம் முகிலுக்குப் பெய்மழையும்
அல்லலுக் கீழமென் றனைத்துத் தமிழ்மாந்தர்
வல்லமைகொள் ளுள்ளத்தில் வாள்வீசி ரத்தமெழப்
பொல்லா விதிசெய்தே போயழிய விட்டதுமென்
வல்லூறின் காலிடையில் வாழ்வை இழந்தசிறு
மெல்லியவெண் குஞ்சின் மேனிதனைப் போலாகிப்
புல்லாய் விதைபோலும் பூமிக்குள் போய்விடவும்
மெல்லியதோர் பஞ்சாய் மிதந்து உயிர்நீக்கா
பல்லோர் மனம்மாறிப் பண்பட்டும் ஒன்றாகித்
தில்கொண்டே யுள்ளத் திறனோங்கித் தலைதூக்கிச்
சொல்லென்று நீதிதனை சுட்டொளிரும் வெய்யோனாய்
எல்லைதனைக் கேட்கவுமேன் இறுக்கம் எழுந்துவிடு
சில்வண்டே சொல்லாய் செழித்தோர் வனத்திடையே
நில்லென் றுனைநிறுத்த நேர்ந்தசெய லுண்டோ, ஏன்
இல்லென்று ஆகுவையென் றெள்ளித் தமிழினத்தைக்
கொல்லென்று வந்தாரின் கொள்கை அறிகுவையோ
கல்லென்ற உள்மனதைக் கனிந்ததாய்ப் பூவென்று
நல்வாசம் கொண்டேயிந் நாட்டின் நிலையறிந்து
சொல்கொண்டு பேசித் சுதந்திரமே தீர்வாக்கித்
தொல்நின்று காணுமித் தூயமொழி வாழ்வீயாப்
பல்வண்ண மாயைகளைப் பாரெடுத்த தேனடியோ
வெல்லென்று கூறியெழ வீரரையும் கொன்றுவிதை
செல்லென் றவர்வாழ்வைச் சீரழித்துப் போனவரும்
நல்லெண்ணத் தூதாய் நடிப்பதனை நம்பிடவோ
முல்லைக்கு வாசம் முகிலுக்குப் பெய்மழையும்
அல்லலுக் கீழமென் றனைத்துத் தமிழ்மாந்தர்
வல்லமைகொள் ளுள்ளத்தில் வாள்வீசி ரத்தமெழப்
பொல்லா விதிசெய்தே போயழிய விட்டதுமென்
வல்லூறின் காலிடையில் வாழ்வை இழந்தசிறு
மெல்லியவெண் குஞ்சின் மேனிதனைப் போலாகிப்
புல்லாய் விதைபோலும் பூமிக்குள் போய்விடவும்
மெல்லியதோர் பஞ்சாய் மிதந்து உயிர்நீக்கா
பல்லோர் மனம்மாறிப் பண்பட்டும் ஒன்றாகித்
தில்கொண்டே யுள்ளத் திறனோங்கித் தலைதூக்கிச்
சொல்லென்று நீதிதனை சுட்டொளிரும் வெய்யோனாய்
எல்லைதனைக் கேட்கவுமேன் இறுக்கம் எழுந்துவிடு
20 Aug 2013, 22:00:47
to santhav...@googlegroups.com
கவியரங்கத்திற்கு எழுதியபோது திருப்பம் பெரிதாகிவிடவே அதை குறைத்து அங்கு சேர்த்தேன்.
அதை முழுவ்துமாக இங்கு சேர்த்துக் கொள்ள மனம் விரும்பியதால் அதை எடுத்தபோது
இன்னும் சிலபகுதிகள் சேர்த்தாலென்ன என்று தோன்றியது. பெரிதாக்கி இங்கே போடுகிறேன் .
தொடராக வரும் . இது
திருப்பம்
1. நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்
ஆருயிராம் அன்பர்தமை ஆழியிடை கவரும்
அழகுதனில் குமரர்மனம் அள்ளியதோ வென்று
பாருறங்கும் போதிலென்ன பண்புகொண்டு நின்றார்
பாய்மரத்தைக் காற்றலைக்கும் பாடெனநாம் ஆக
சேருருளும் சிற்றலைகள் சிந்துநகை யோசை
சில்சிலென்று மோதியெழும் சிறுதுளியின் கொஞ்சல்
நாருதிர்ந்த பூவெனவே நள்ளிரவின் திங்கள்
நடைபயிலும் அலைமிதக்கும் நளினஒளிப் பூக்கள்
தூரஎழும் அலை யணைந்து தொட்டிலென ஆட்ட
துள்ளுகயல் படகருகில் துடித்த விழிபோலும்
நீரலைகள் நீலவண்ணச் சேலையெனக் காணும்
நெஞ்சிலிளங் காற்றணைந்து நேசமொழிபேசும்
பேரரிய இன்பமதைப் பெற்றனரோ என்றே
பெண்ணிவளின் நோவறியாப் பின்னிரவில் நின்றார்
ஊரறியும் இவள்நிலைமை உளமறியா தென்ன?
உன்செயலே என்றுவிழி யொத்த கயல் தூக்கி
நீரெடுத்து தீயிடையில் நிறுத்தியதில் இட்டு
நெஞ்சமதில் வஞ்சமதன் நிலையழித்த மாதர்
சீரெழுந்த உணவுடனே சிந்தை கொளும் அன்பை
சேர்த்தெடுத்தும் உண்ண இடும் செந்தமிழர் பாவை
யாரெடுத்துப் போட்டவிதி அத்தனையும் மாற்றம்
யாழிசைத்த பூமியிலே வாளெடுக்க வைத்தார்
வேரெடுத்த பகைவளர வெறுப்பெடுத்து நாளும்
விளைநிலத்தில் பயிர் வளர்க்க வெட்டியழிப் போராய்
பாரெடுத்த பகையுணர்வில் பாவியிவர் நேசம்
பறிகொடுத்த சுதந்திரத்தின் பயன்விளைவு நாசம்
நேரெதிராய் வாழ்வுமுறை நிர்க்கதியென் றாக்கி
நிலைமையதிற் சீரழிவும் நேர்மைவழி மாற்றி
போரெனவே இவருடலம் பூமிகடல் உண்ண
போனநிலை ஆழியலை பார்த்தழுமோ ஓடி
கோரமிட்ட கீழ்மையினைக் கொள்ளமனங் குமுறி
கோவெனவே ஓலமிட்டுக் கொள்ளுங்கடல் இதுவோ!
2. ஊரின் புறத்தே!
ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்
வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்
நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ
கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)
அதை முழுவ்துமாக இங்கு சேர்த்துக் கொள்ள மனம் விரும்பியதால் அதை எடுத்தபோது
இன்னும் சிலபகுதிகள் சேர்த்தாலென்ன என்று தோன்றியது. பெரிதாக்கி இங்கே போடுகிறேன் .
தொடராக வரும் . இது
திருப்பம்
1. நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்
ஆருயிராம் அன்பர்தமை ஆழியிடை கவரும்
அழகுதனில் குமரர்மனம் அள்ளியதோ வென்று
பாருறங்கும் போதிலென்ன பண்புகொண்டு நின்றார்
பாய்மரத்தைக் காற்றலைக்கும் பாடெனநாம் ஆக
சேருருளும் சிற்றலைகள் சிந்துநகை யோசை
சில்சிலென்று மோதியெழும் சிறுதுளியின் கொஞ்சல்
நாருதிர்ந்த பூவெனவே நள்ளிரவின் திங்கள்
நடைபயிலும் அலைமிதக்கும் நளினஒளிப் பூக்கள்
தூரஎழும் அலை யணைந்து தொட்டிலென ஆட்ட
துள்ளுகயல் படகருகில் துடித்த விழிபோலும்
நீரலைகள் நீலவண்ணச் சேலையெனக் காணும்
நெஞ்சிலிளங் காற்றணைந்து நேசமொழிபேசும்
பேரரிய இன்பமதைப் பெற்றனரோ என்றே
பெண்ணிவளின் நோவறியாப் பின்னிரவில் நின்றார்
ஊரறியும் இவள்நிலைமை உளமறியா தென்ன?
உன்செயலே என்றுவிழி யொத்த கயல் தூக்கி
நீரெடுத்து தீயிடையில் நிறுத்தியதில் இட்டு
நெஞ்சமதில் வஞ்சமதன் நிலையழித்த மாதர்
சீரெழுந்த உணவுடனே சிந்தை கொளும் அன்பை
சேர்த்தெடுத்தும் உண்ண இடும் செந்தமிழர் பாவை
யாரெடுத்துப் போட்டவிதி அத்தனையும் மாற்றம்
யாழிசைத்த பூமியிலே வாளெடுக்க வைத்தார்
வேரெடுத்த பகைவளர வெறுப்பெடுத்து நாளும்
விளைநிலத்தில் பயிர் வளர்க்க வெட்டியழிப் போராய்
பாரெடுத்த பகையுணர்வில் பாவியிவர் நேசம்
பறிகொடுத்த சுதந்திரத்தின் பயன்விளைவு நாசம்
நேரெதிராய் வாழ்வுமுறை நிர்க்கதியென் றாக்கி
நிலைமையதிற் சீரழிவும் நேர்மைவழி மாற்றி
போரெனவே இவருடலம் பூமிகடல் உண்ண
போனநிலை ஆழியலை பார்த்தழுமோ ஓடி
கோரமிட்ட கீழ்மையினைக் கொள்ளமனங் குமுறி
கோவெனவே ஓலமிட்டுக் கொள்ளுங்கடல் இதுவோ!
2. ஊரின் புறத்தே!
ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்
வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்
நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ
கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)
21 Aug 2013, 01:58:33
to santhav...@googlegroups.com
திருப்பம் 2
3, உலகில் எங்கோ ஒரு ரகசிய அறை
3, உலகில் எங்கோ ஒரு ரகசிய அறை
வட்டமிட்டோர் ஓரு மேசையை சுற்றியும்
வந்திருந்தோர் பலவண்ணம் - அதில்
கட்டியுமாள்திடக் கண்களில் தீ பற்றிக்
காணுதே ஏனிந்தக் கோபம் - இதை
விட்டுவிட்டால் என்ன வாகிடும் என்றவர்
விந்தை கலங்கிய போது - அந்தக்
கட்டமைப்பில் கைகள் விட்டு நழுவிடக்
காணுமுலகென்ற தாபம்
எத்தனையோ முறை எண்ணில் பிசகற்ற
எத்துணை ஆற்றல்கள் தானும் - இனி
புத்தியினால் பலவெற்றிகள் ஈட்டிடப்
போய்விடு மெங்களின் பேரும்
சத்தியமும் காத்து சாமிகளாய்ப் பெரும்
சித்திவிளைத்திடுங் காலம் - இங்கு
நித்திரை கொண்டிடில் நேருவது மெங்கள்
நெற்றியில் இட்டவர் நாமம்
வெட்டி ஒழிக்கட்டும் பூங்கொடிகளங்கு
வேரைஅறுத்திடவேண்டும் - அதில்
தொட்டவுடன் மனம் தீயெரிந் தாகட்டும்
தூவிக் கொட்ட நஞ்சுதானும்
பட்ட வகைகளில் பால்மரம் தானென்ன
பிஞ்சு கனி இலையாவும் - இனி
விட்டதில்லை இந்த வேளை எரியட்டும்
பொத்திடுவோம் விழிநாமும்
துட்டரும் தீயரும் பொங்கிஎழுந்தனர்
தேசமொன்றின் எல்லைமீது - அங்கு
கெட்டது நீதியும் காக்கும் அறமதும்
காகிதமேல் எழுத்தாக - பலம்
கட்டினை மீறித் தலையெழுதென்றிட
காட்சிகள் மாறும் திருப்பம் -அங்கு
தொட்டவர் கையிடை மைபடவேஇல்லை
தோன்றியதோ கருங்கோலம்
தேவர்கடைந்த
அமுதினிலே யன்று
தோன்றிய நஞ்சினைப் போலே - இன்று
யாவரும் கொண்ட மனங்கள் கடைந்திட
ஆகிய நஞ்சென்னும் தோற்றம்
ஏவல் விளைத்திட என்ன நடக்கினும்
ஏதுமோர் பேச்சறியாது - எவர்
தூவினும் நஞ்சினை தோல்வி முடிவென
தோற்றம் இருந்திட வேண்டும்
***********
4. தேசத்தில் ஒருபக்கம்
கட்டுமரம் ஏறியதில் சுற்றி ஓடுவோம் = வீசும்
காற்றினிலே பாய்விரித்துக் கப்பல் ஓட்டுவோம்
எட்டியுயர்ந் தோங்கும் அலைமீது ஏறுவோம் - அது
ஏறிவிழும்போது விண்ணில் மாறித்தாவு வோம்
சுட்டவெயில் போனபின்னே தூர ஓடிடும் - முகில்
செந்தமிழ்க் குலத்தின்வீரம் தூய்மை எண்ணியே
சட்டெனத்தன் மெய்சிவந்து சஞ்சலத்துடன் - மேற்கு
சேர்ந்த வானத்தோடு சென்று சாய்ந்துகொள்ளினும்
கட்டிபோட்டு தீமைசெய்யும் காதகர்களின் - எண்ணம்
காற்றிலேபதர் பறக்கும் வண்ணமாக்குவோம்
சுட்டதும்நல் பொன்சிவக்கும் எங்கள்பாதையில் - உண்மை
சுட்டதாயின் கைகள் கூடிக்காணும் மெய்மையும்
எட்டநீர் குதித்துஓட எங்கள் தாகமும் - அது
இங்கு வாருமென்னும் எண்ணம் விட்டுஏகுவோம்
தொட்ட நீரும்மொண்டு வாயில் தாகம்நீக்கினும் - உள்ள
மட்டும்காண் சுதந்திரதை மேனி கோள்ளுவோம்
(தொடரும்)
4. தேசத்தில் ஒருபக்கம்
கட்டுமரம் ஏறியதில் சுற்றி ஓடுவோம் = வீசும்
காற்றினிலே பாய்விரித்துக் கப்பல் ஓட்டுவோம்
எட்டியுயர்ந் தோங்கும் அலைமீது ஏறுவோம் - அது
ஏறிவிழும்போது விண்ணில் மாறித்தாவு வோம்
சுட்டவெயில் போனபின்னே தூர ஓடிடும் - முகில்
செந்தமிழ்க் குலத்தின்வீரம் தூய்மை எண்ணியே
சட்டெனத்தன் மெய்சிவந்து சஞ்சலத்துடன் - மேற்கு
சேர்ந்த வானத்தோடு சென்று சாய்ந்துகொள்ளினும்
கட்டிபோட்டு தீமைசெய்யும் காதகர்களின் - எண்ணம்
காற்றிலேபதர் பறக்கும் வண்ணமாக்குவோம்
சுட்டதும்நல் பொன்சிவக்கும் எங்கள்பாதையில் - உண்மை
சுட்டதாயின் கைகள் கூடிக்காணும் மெய்மையும்
எட்டநீர் குதித்துஓட எங்கள் தாகமும் - அது
இங்கு வாருமென்னும் எண்ணம் விட்டுஏகுவோம்
தொட்ட நீரும்மொண்டு வாயில் தாகம்நீக்கினும் - உள்ள
மட்டும்காண் சுதந்திரதை மேனி கோள்ளுவோம்
(தொடரும்)
21 Aug 2013, 13:03:52
to santhav...@googlegroups.com
திருப்பம் 3
5. குறிஞ்சி நிலம்
ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்து உந்தன்காதில் என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுசிந்திடும் - அந்த
தூயநீர்கொள் அருவியோடி என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது
பூங்கொடிக்குள் கொத்துகொத் தென்றான தேன்மலர் - தானும்
புன்னகைப்பில் உன்னைப் பார்த்து என்னசொன்னது
தாங்கிநீ மனம் பொறுத்த தன்மை ஏனது - உன்றன்
தாயெனும் நல்தேசம் மீட்கதேடு என்குது
மாங்கனிந்த சோலை யெங்கும் ஆடும் இன்பழம் - அது
மாறிஉள்ளம் தேய்ததேனே என்றுகேட்குது
மூங்கில் கூட்டம் மோதிதீ பிடித்த போதிலும் - உன்றன்
மூச்சுக்காற்றில் வெம்மையில்லை என்று நோகுது
செங்கனலென் றந்திவானம் மாறியதேனோ - அங்கு
சீறி நெஞ்சம் கோபமிட்ட மேகமும் ஏனோ
கங்கைவெள்ளம் போலமண்ணில் காணுது செந்நீர் - இதைக்
கண்டும் தூக்கம் கொள்வையோ என்றென்னைப் பேசுது
அங்கமெங்கும் அழகுமின்ன ஆடுது தோகை - அது
அங்கிருப்ப துச்சிமலைக் கந்தனின் கோவில்
தங்கவண்ணத் தோகை வேலன் தன்னைக் கேட்குது வேலும்
துன்பம் நீக்கிக் காக்கும் வீரம்கொள்ளத் தூண்டுது
பொங்கியோடும் பொய்கையூடு பொன்னிழில் மின்ன இந்தப்
போதினிலே நான் இருப்பேன் பொற்றமிழ்மன்றம்
சங்குமூதும் சத்தமொன்று கேட்பதுமென்ன - உந்தன்
சங்கநூலைப் போட்டுவிட்டு சென்றிடு கூட
தொங்கியாடும் ஊஞ்சல் வாழ்வை வென்றிடுநாளை - நல்ல
தூய நோக்கம் மின்னும்வண்ணம் தீயெழக் காளை
நங்கையோடு அன்னை நாட்டின் சின்னவர் குழந்தை - இவர்
நாளும் இன்ப வாழ்வுகாண வென்றிடு தேசம்
**************************
6. சதி அரங்கேற்றம்
வெட்டி முழக்கிய மேகம் மின்னலில்
கொட்டித் தூறுது மழை - அவை
தொட்டுக் கூரையின் மீது விழுந்திட
டக்டக் டக்கென இசை
கட்டிக் காத்தவை கள்வர் நுழைந்திடக்
கடும்புய லோ கடல் அலை - அது
முட்டத் திரள்வது போலப் புகுந்திட
முற்றிலும் அள்ளுது நிலை
திட்டமிட் டாற்றிடத் தோன்றிடு பகையும்
திசைகள் மூன்றிலும் கடல் - அவை
வட்ட மென்றாகியும் வந்து நுழைந்திடில்
வாழ்விற் குளதோ இடம்
விட்டுப்போவது உலகென் றாயினும்
வந்தே பிறந்திட்ட நிலம் -அட
கெட்டுப் போகினும் கும்பிட்டாவது
கீழ்மையில் வாழ்ந்திடும் குணம்
நெஞ்சுள் மூச்சினை கண்டே வாழ்வென
நின்றவரோ பயிர், களை - புவி
மஞ்சம் மாலைகள் மலரில் சயனமும்
மயங்கச் செய்திவர்களை
வஞ்சப் பாதையில் வழியும் காட்டிட
வென்றது உலகின் வலை - இனி
அஞ்சிக் கிடந்தவர் செல்திசை மாற்றித்
திருப்பம் நிகழுமோ விடை??
(தொடரும்)
5. குறிஞ்சி நிலம்
ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்து உந்தன்காதில் என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுசிந்திடும் - அந்த
தூயநீர்கொள் அருவியோடி என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது
பூங்கொடிக்குள் கொத்துகொத் தென்றான தேன்மலர் - தானும்
புன்னகைப்பில் உன்னைப் பார்த்து என்னசொன்னது
தாங்கிநீ மனம் பொறுத்த தன்மை ஏனது - உன்றன்
தாயெனும் நல்தேசம் மீட்கதேடு என்குது
மாங்கனிந்த சோலை யெங்கும் ஆடும் இன்பழம் - அது
மாறிஉள்ளம் தேய்ததேனே என்றுகேட்குது
மூங்கில் கூட்டம் மோதிதீ பிடித்த போதிலும் - உன்றன்
மூச்சுக்காற்றில் வெம்மையில்லை என்று நோகுது
செங்கனலென் றந்திவானம் மாறியதேனோ - அங்கு
சீறி நெஞ்சம் கோபமிட்ட மேகமும் ஏனோ
கங்கைவெள்ளம் போலமண்ணில் காணுது செந்நீர் - இதைக்
கண்டும் தூக்கம் கொள்வையோ என்றென்னைப் பேசுது
அங்கமெங்கும் அழகுமின்ன ஆடுது தோகை - அது
அங்கிருப்ப துச்சிமலைக் கந்தனின் கோவில்
தங்கவண்ணத் தோகை வேலன் தன்னைக் கேட்குது வேலும்
துன்பம் நீக்கிக் காக்கும் வீரம்கொள்ளத் தூண்டுது
பொங்கியோடும் பொய்கையூடு பொன்னிழில் மின்ன இந்தப்
போதினிலே நான் இருப்பேன் பொற்றமிழ்மன்றம்
சங்குமூதும் சத்தமொன்று கேட்பதுமென்ன - உந்தன்
சங்கநூலைப் போட்டுவிட்டு சென்றிடு கூட
தொங்கியாடும் ஊஞ்சல் வாழ்வை வென்றிடுநாளை - நல்ல
தூய நோக்கம் மின்னும்வண்ணம் தீயெழக் காளை
நங்கையோடு அன்னை நாட்டின் சின்னவர் குழந்தை - இவர்
நாளும் இன்ப வாழ்வுகாண வென்றிடு தேசம்
**************************
6. சதி அரங்கேற்றம்
வெட்டி முழக்கிய மேகம் மின்னலில்
கொட்டித் தூறுது மழை - அவை
தொட்டுக் கூரையின் மீது விழுந்திட
டக்டக் டக்கென இசை
கட்டிக் காத்தவை கள்வர் நுழைந்திடக்
கடும்புய லோ கடல் அலை - அது
முட்டத் திரள்வது போலப் புகுந்திட
முற்றிலும் அள்ளுது நிலை
திட்டமிட் டாற்றிடத் தோன்றிடு பகையும்
திசைகள் மூன்றிலும் கடல் - அவை
வட்ட மென்றாகியும் வந்து நுழைந்திடில்
வாழ்விற் குளதோ இடம்
விட்டுப்போவது உலகென் றாயினும்
வந்தே பிறந்திட்ட நிலம் -அட
கெட்டுப் போகினும் கும்பிட்டாவது
கீழ்மையில் வாழ்ந்திடும் குணம்
நெஞ்சுள் மூச்சினை கண்டே வாழ்வென
நின்றவரோ பயிர், களை - புவி
மஞ்சம் மாலைகள் மலரில் சயனமும்
மயங்கச் செய்திவர்களை
வஞ்சப் பாதையில் வழியும் காட்டிட
வென்றது உலகின் வலை - இனி
அஞ்சிக் கிடந்தவர் செல்திசை மாற்றித்
திருப்பம் நிகழுமோ விடை??
(தொடரும்)
22 Aug 2013, 09:07:23
to santhav...@googlegroups.com
இது எனது உறவினரில் ஒருவரான பெண்ணொருத்தி நீண்டகாலமாக நோய்வாய்ப் பட்டு படுக்கையில் கிடந்தவர்
மறைந்த சேதி கேட்டு மனதில் தோன்றிய உணர்வின் கவிதை வடிவம்...
கண்டதெல்லாம் துயரமே!
( கெட்ட காலக்கனவு)
வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன்
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ
நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்
துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் - புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்
பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ
காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!
*****************
மறைந்த சேதி கேட்டு மனதில் தோன்றிய உணர்வின் கவிதை வடிவம்...
கண்டதெல்லாம் துயரமே!
( கெட்ட காலக்கனவு)
வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன்
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ
நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்
துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் - புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்
பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ
காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!
*****************
26 Aug 2013, 21:17:01
to santhav...@googlegroups.com
இதில் தவறிருப்பின் திருத்த உதவுங்கள்!
கை கொண்டதோ
தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே
மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே
செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்
துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்
பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - ஓர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகுனியும்
மைக்கொண்ட விழியாட மயங்குவனோ
தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ
************************
கை கொண்டதோ
தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே
மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே
செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்
துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்
பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - ஓர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகுனியும்
மைக்கொண்ட விழியாட மயங்குவனோ
தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ
************************
28 Aug 2013, 17:44:42
to santhav...@googlegroups.com
தமிழ்த் தாய் பெற்ற மகன்!
தமிழே நான் தாயும் பெற்ற மகனா இல்லை
தரணிமீது தருமம் இட்ட கழிவா
அமுதே நீ அத்தனை பேச்சில் அழகா - உன்னை
அடக்குவோரைப் பார்த்துஇளிக்கும் நிலையா
எமதே என்றெண்ணிட வீரம் எழுமா - இல்லை
இறந்துவிட்டால் நிம்மதி என்ற நினைவா
குமிழே நீர் தன்னிடம் கொண்ட வாழ்வா - எம்
குலத்தை யழிக்கக் கும்பிடுபோட்டு விழவா
எடுத்ததேது படுக்கபோடும் விதியா - நாம்
எழுந்து நின்றால் குட்டுவர் என்ற பயமா
கொடுத்த தெல்லாம் கொடைகளென்றுவிடவா - பேரில்
குந்திபெற்ற கர்ணனைப் பின்னே விடவா
எடுப்பில் காணும் புடவை கட்ட அழகா - நாம்
எதிரிகாலில் அடகுவைத்த உயிரா
தொடுவதென்ன துயர்கள் என்னும் இருளா - நீ
தொட்டு வணங்கக் கடவுள் என்ன இவனா
கெட்டவன் சிம்மம் கையில் தூக்கும் வாளா - அதை
கொட்டுமுரசுடன் கண்டவர் தொன்மை தமிழாம்
பட்டிடும் துன்பம் பார்த்தவர் கின்பம் சதியா - இவர்
பார்வை குத்திடக் கட்டிய துணியும் விழுமா
பார்த்து களிக்கப் புதிய சித்திரத் தொடரா - நாம்
பாவி தமிழர் பாடைத் தூக்கம் அழகா
சேர்த் தெடுத்துக் கொன்றவன் கையில் பணமா - அது
சுட்டெடுத் தின்னும் விற்றிடும் செயலும்தொடரா
அடியடிப்பார் கேட்கிற ஆட்கள் இலையா - நாமும்
அந்தியதேசம் அரண்மனைக்குள் சிறையாம்
ஓடியாடி உண்பது சுவையில் ஆறாம் - வையம்
உற்றதென் றோர்நாள் உப்பினில் மழையை இடுமாம்
மாடிவீட்டு மன்னவர் போலும் வாழ்வாம் - நாளில்
மந்திரம்போட்ட பேயென ஏற மலையாம்
ஓடி பெய்யும் மழையில் சர்க்கரை தமிழாம் இந்த
உலகம் புத்தன் கரத்தில் பலியை தருமா
தமிழே நான் தாயும் பெற்ற மகனா இல்லை
தரணிமீது தருமம் இட்ட கழிவா
அமுதே நீ அத்தனை பேச்சில் அழகா - உன்னை
அடக்குவோரைப் பார்த்துஇளிக்கும் நிலையா
எமதே என்றெண்ணிட வீரம் எழுமா - இல்லை
இறந்துவிட்டால் நிம்மதி என்ற நினைவா
குமிழே நீர் தன்னிடம் கொண்ட வாழ்வா - எம்
குலத்தை யழிக்கக் கும்பிடுபோட்டு விழவா
எடுத்ததேது படுக்கபோடும் விதியா - நாம்
எழுந்து நின்றால் குட்டுவர் என்ற பயமா
கொடுத்த தெல்லாம் கொடைகளென்றுவிடவா - பேரில்
குந்திபெற்ற கர்ணனைப் பின்னே விடவா
எடுப்பில் காணும் புடவை கட்ட அழகா - நாம்
எதிரிகாலில் அடகுவைத்த உயிரா
தொடுவதென்ன துயர்கள் என்னும் இருளா - நீ
தொட்டு வணங்கக் கடவுள் என்ன இவனா
கெட்டவன் சிம்மம் கையில் தூக்கும் வாளா - அதை
கொட்டுமுரசுடன் கண்டவர் தொன்மை தமிழாம்
பட்டிடும் துன்பம் பார்த்தவர் கின்பம் சதியா - இவர்
பார்வை குத்திடக் கட்டிய துணியும் விழுமா
பார்த்து களிக்கப் புதிய சித்திரத் தொடரா - நாம்
பாவி தமிழர் பாடைத் தூக்கம் அழகா
சேர்த் தெடுத்துக் கொன்றவன் கையில் பணமா - அது
சுட்டெடுத் தின்னும் விற்றிடும் செயலும்தொடரா
அடியடிப்பார் கேட்கிற ஆட்கள் இலையா - நாமும்
அந்தியதேசம் அரண்மனைக்குள் சிறையாம்
ஓடியாடி உண்பது சுவையில் ஆறாம் - வையம்
உற்றதென் றோர்நாள் உப்பினில் மழையை இடுமாம்
மாடிவீட்டு மன்னவர் போலும் வாழ்வாம் - நாளில்
மந்திரம்போட்ட பேயென ஏற மலையாம்
ஓடி பெய்யும் மழையில் சர்க்கரை தமிழாம் இந்த
உலகம் புத்தன் கரத்தில் பலியை தருமா
29 Aug 2013, 13:06:12
to santhav...@googlegroups.com
இப்பொழுதெல்லாம் கடமைக்கு பாட்டெழுதுவது போலிருக்கிறது. மனம் சிதறடிக்கப்படுகிறது.ஆர்வம், குன்றிக் காணுகிறேன். வேறு விடயத்தில் கவனம் ஈர்க்கப்படுகிறது. உதாரணமாக முப்பரிமாண கலைவரை படங்களிலும் அனிமேஷன் களும் எப்படி செய்வதென்று அறிந்துகொள்ள விழைகிறேன்.
அதனால் என் கவிதைகள் சுவையற்றுப் போகலாம், இப்படிமுன்னரும் நடந்திருக்கிறது. மாறும் குரங்கு மனம். கொஞ்சநாட்களுக்கு குறைவாக கவிதை போடுவேன் . மனம் மீண்டும் சீராகும்போது வழமைக்கு திரும்புவேன்.
அதனால் என் கவிதைகள் சுவையற்றுப் போகலாம், இப்படிமுன்னரும் நடந்திருக்கிறது. மாறும் குரங்கு மனம். கொஞ்சநாட்களுக்கு குறைவாக கவிதை போடுவேன் . மனம் மீண்டும் சீராகும்போது வழமைக்கு திரும்புவேன்.
அன்புடன் கிரிகாசன்
என்ன செய்வது?
சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ
உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ
எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ
அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே
எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ
---------------------
சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ
உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ
எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ
அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே
எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ
---------------------
30 Aug 2013, 05:53:54
to santhav...@googlegroups.com
அன்பு கிரிகாசன்,
உங்கள் உடலின் வேதனை கவிதையில் தெரிகிறது..
முடிந்த போது கொஞ்சம் வினாகிரி கலந்து நீரில் உடல் கழுவுங்கள். வெந்நீர் கலந்த
வினாகிரியில் காலை மூழ்கவையுங்கள். நலம் தெரியும்.. எனக்கும் கொஞ்சம் வலி உண்டு.
ஐஸ் பை வைப்பேன்.. பின் சுடு நீர்ப் பை வைப்பேன்..
இத்துடன் வேலைப் பழு.. அதனால் தான் அதிகம் எழுதுவதில்லை..
ஆனால் உங்கள் கவிதைகள் படிப்பேன்..
வாழ்த்துகள்..
அன்புச் சோதரி
புஷ்பா கிறிஸ்ரி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
30 Aug 2013, 10:21:30
to santhav...@googlegroups.com
நன்றிகள் தங்கள் கருத்தும் வழிகாட்டலுக்கு. இதுதான் என்னி ல் உள்ள பலவீனம். என் உடலை பாதுகாக்கும் எண்ணம் என்னிடம் கிடையாது . நாள்முழுக்க கவிதை கணினி என்று இருப்பேன். எனது மாத்திரைகளில் ஒன்று ஒரு பழக்கத்தின்மீது அடிமையாக்கும் தன்மை கொண்டது. நான் கவிதைக்கும் கணனிக்கும் எனையாளும் சக்தியின் அருளுக்கும் அடிமை.! என்னை நான் கவனிப்பதில்லை!சொல்லப்போனால் அதிகமான நேரங்களில் என்னை நான் மறந்துவிடுவேன் / சரி இனிப் பார்ப்போம்/
30 Aug 2013, 10:23:07
to santhav...@googlegroups.com
பூவாக மலரச்செய்
நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா
சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்
தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா
சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை வளமும் தா
கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா
***************
30 Aug 2013, 10:37:58
to santhav...@googlegroups.com
On Friday, August 30, 2013 9:23:07 AM UTC+1, kirikasan wrote:
இதுவும் அதேதன் இதில்சொற்கள் வித்தியசப்படுகின்றன எதுபிடித்தோ அதைகொள்ளுங்கள்
பூவாக மலரச்செய்
நீயே சக்தி நெஞ்சம் தன்னில்
நிறைவாய் அன்பைத்தா
காயே இன்றிக் கனிவைக் கொள்ளும்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவிக்கும் உளமானேன்
வாயே இன்பத் தமிழைப் பாடும்
வகையில் கவிதை தா
சேயாம் இவனைத் தினமும் காலை
சிரிக்கும் மலராக்கி
தேயா திங்கள் திகழும் ஒளிபோல்
துலங்கும் வழிகாட்டு
ஓயா தூற்றும் அருவிக் கிணையாய்
ஊறும் கவிவெள்ளம்
தூயோர் தமிழில் தெய்வத்தாயே
தோன்றப் பெருகச்செய்
சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டு
நேயப் பொழுதாய் நிதமும் ஆடி
நீந்தும் அலைமேலே
ஒயா துள்ளும் உணர்வும் கயலின்
உவகைப் பெருக்கோடு
காயாதென்மேற் கருணைகொண்டே
கவிதை சொல் லென்பாய்
கூவாக் குயிலும் குதிக்கா தருவி
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தகிக்கா வெயிலில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
ஏற்றம் கொள்ளச்செய்
நாவால் சிறக்கும் நல்லோர் கவிதை
நாளும் ஒன்றைத்தா
***************
7 Sept 2013, 09:39:01
to santhav...@googlegroups.com
எனது நண்பர் ஒருவரின் தந்தையவர்கள் இறவனடி எய்திய இழப்பிற்காகத் துயர் களையஎழுதியது
காலமெனும் மருந்தே உதவும்
எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்
பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்
வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்
மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்
கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்
*************
காலமெனும் மருந்தே உதவும்
எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்
பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்
வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்
மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்
கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்
*************
7 Sept 2013, 10:09:24
to kirikasan, santhavasantham
My Dear good Poet kirikasan,
Pl. send yur PP size photo immly as requested by me in my last email. Thank yu,
yurs,
Truly,
yogiyaar
வாழ்க அனைவரும் வளமுடனே
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017
8 Sept 2013, 00:15:08
to santhav...@googlegroups.com, kirikasan
ஐயா தங்களின் ஈமெயில்
8 Sept 2013, 00:24:37
to santhav...@googlegroups.com, kirikasan
On Saturday, September 7, 2013 11:15:08 PM UTC+1, kirikasan wrote:
ஐயா தங்களின் ஈமெயில் பார்க்காமல் இருந்துவிட்டேன் ஐயா மன்னிக்கவும் அனுப்பி வைத்துள்ளேன் மிக்க நன்றிகள்!
அன்புடன் கிரிகாசன்
-+-
8 Sept 2013, 12:26:35
to santhav...@googlegroups.com, kirikasan
,மீண்டும் தலைவனின் ஆதங்கம்
இலக்கிய சுவையின் பெயரால் இதை தருகிறேன் .கவிதை நடை காதல் கருவாக இருபினும்
இதமாக இருக்கும் என்ற நம்பிக்கை
தலைவன் ஏக்கம்
மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துப்பொன் வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ
வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ
சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ
கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ
பொட்டிடும் மாடத்ஹுப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க் மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ
முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடுவோம்
9 Sept 2013, 20:10:03
to santhav...@googlegroups.com, kirikasan
தேனூற்றும் தீந்தமிழில் தித்திக்கும் கவியூறும்
தொங்கிவீ ழருவி யூற்றாய்
வானூற்றும் மழைபோலும் வந்தூற்றும் பாறையிடை
வளைந்தோடும் காற்றில் ஊறும்
பூநாற்றம் போலாகிப் பொழிலூறும் அலைபோலும்
புலமைகொள் கவிதை ஊறி
மாமாற்றம் பெற்றுமழை மடையுடைத்துப் பாயுமெனில்
மந்திரம் சக்திதேவி
வில்லூன்றி எய்யம்பு விரைவன்ன சொல்லாக்கி
வீழ்த்தி மனமெய்தல் காணும்
சொல்லூற்றிச் சுவையாக்கிச் சுந்தர மென்தமிழ் பூசிச்
சொர்க்கசுகம் இதுவேயென
மெல்லோடி மேகமிடை மிளிர்நிலவின் ஒளிகொண்டு
மேவியதிற் பொன்னும்பூசி
கல்லாத போதுமவை கண்நோக்கும் போதொளிரும்
காதிலவள் கூறுங்கால் காண்
எழுவதுமென் னிசையாகி இழைவ தவள்சொல் கீதம்
இயல்பிலெழும் குரலுமீந்தாள்
முழுதுமென நினைவோடு முடிவிலதென் றிணைபவளே
முன்காண லற்ற தெய்வம்
வழுவெதனும் உண்டோ இல் வரையுடனும் உண்டோயிவ்
வண்ணம்மது தெளியு மதிஇல்
கிழமனதில் கவிதைவளம் கொள்ளெனவும் ஆக்கியவள்’
குணம் போற்றின் கவிதை ஊறும்
தடையுமில சந்தமெழத் தரணியிலே நிறையொலிகள்
தாராளமாக வைத்தாள்
குடைவானில்மேக இடி குயிலோசை கழுதையழும்
குளத்தருகில் தவளைகூச்சல்
அடை மழையில் கூரையொலி அருவி மலை வீழுமிசை
எழில்வண்டின் ரீங்காரமாய்
அமிழ்தினிய சந்தமெழ ஆக்கியவள் அவளேநம்
அன்புமனம் கொள்ளவருவாள்
10 Sept 2013, 23:21:26
to santhav...@googlegroups.com, kirikasan
இட்டதீ எரித்ததுவே ஏழைவர்க்கம்
இன்னுமா தீ கொண்டு எரித்தல் வேண்டும்
சுட்டதெது தாய்மண்ணில் செந்தமிழ் தேகம்
சொல்லரிய மானிடர்தம் மெய்கொள் தீயும்
பட்ட விதம் போதாதென் றெம்மைநாமே
பாரென்று எரித்துவிடில் எதிரிஎண்ணம்
விட்டதனைத் தொடர்வதாய் விளங்குமன்றோ
வீணாகத் தீயிலே எரியவேண்டாம்
கத்தவும் கேட்கவும் கைகள்கூட்டிக்
காய்ந்த மனப் பாறையிலே இரக்கநீரும்
சுத்தமென ஓடவழி செய்தே எங்கள்
சொல்லரிய சுதந்திரம் காணல்வேண்டும்
உத்தமரே வாருங்கள் உயிர்கள் வேண்டும்
ஒன்றல்லப் பலராக எரிந்தபோதும்
சத்தியமோ விழித்திடா தூங்கும் கண்கள்,
சத்துரு தான் மட்டுமே நகைத்து நிற்பான்
வித்தைகளைப் புரிந்திடவே வேகம்வேண்டும்
விதவிதமாய் நம்முயற்சி விளைச்சல் கூட்டிப்
பத்துடனே பலவழியும் முயன்றக் காலை
பங்காளிச் சண்டையெனப் பலகூறாக்கி
மத்தியிலே தலைமையிலா மாக்கள் போலும்
மனவெறுப்பு சண்டை என மாறிடாமல்
புத்திதனை விதவிதமாய் பாவித்தன்பில்
புதியதொரு விடுதலையின் பாதை காண்பீர்
நித்தம் மலர் பூவெனவே நிமிர்ந்து நில்லாய்
நீ வாழத் தந்த உடல் நின்னது மல்ல
செத்திடவும் உன்தேகம் உனதென்றில்லை
சக்திஎனும் தீ பற்றக் காலம் உண்டு
புத்தொளியாய் கண்டவழி பயனைத்தாரும்
புதுவீரம் பொலிந்ததெனப் பலரும் கூடி
மத்தியிலே ஒருதலைவன் மட்டும்கொண்டு
மாணிக்க தீவினிலே மண்ணை மீட்போம்
சித்தமதும் கலங்கியதோ செல்வர் பூமி
சீரியதோர் வழிகண்டு நம்பால் அன்பை
புத்திகொண்டே என்னபடு பாடும்பட்டே
பொன் நாட்டை மூதாதைஇனமும் ஆண்ட
சத்தியத்தின் கதைஎண்ணிச் சரிந்திடாது
தன்வழியில் வீறுநடைகொள்ளல் வேண்டும்
நித்தியமாய் வாழவழி தேடும்போது
நிலைக்காமல் போவதிலே நன்மை உண்டோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக