புதன், 20 நவம்பர், 2013

மறந்து போகுமோ

தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
Picture 004
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி!
கூழுக்குள் நீந்தியது காணும்! 

கரையேருங்கள்!
எனக்கு புரையேறுகிறது!
கவிதைக்கு அவ்வப்போது
கரவோசையும் வேணும்!.
அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன்
வணக்கம்.

திங்கள், 18 நவம்பர், 2013

இனியேனும் ஒன்றிணைவீர்?

இனியேனும் ஒன்றிணைவீர்?

கதைபேசி, இலக்கியங்கள் சலிக்கப் பேசிக்
கற்பனையாம் பொய், புளுகில், கலைகள் தம்மில்
புதைபட்டீர்; காலமெல்லாம் போக்கி விட்டீர்!
புரைபட்டீர்; சிறைப்பட்டீர்; பார்ப்பான் காலில்
உதைபட்டீர்; வதைப்பட்டீர்; அடிமைப் பட்டீர்!
ஓடோடித் துயர்ப்பட்டீர்! உருப்பட் டீரா?
சிதைபட்டீர், தமிழர்களே! இனிமே லேனும்
சேர்ந்திணைந்து செயல்பட்டே இனங்காப் பீரே!

மண்சுமந்தீர்; கல்சுமந்தீர்; வானை முட்டும்
மாளிகைகள், கோபுரங்கள், கட்டி வைத்தீர்!
விண்சுமந்த முகில்தடவும் காட்டை யெல்லாம்
வெட்டி நல்ல நகராக்கி, வெளிநா டேகிக்
கண்சுமந்த நீர்சுமந்து, கையற் றேங்கிக்
கால் நடையாய்த் துயர்சுமந்து, நெஞ்ச மெல்லாம்
புண் சுமந்தீர் தமிழர்களே! உருப்பட் டீரா?
பொறைசுமந்தே இனியேனும் இனங்காப் பீரே!


புகழ்படைத்த வரலாற்றைப் பொய்யாய்த் தள்ளிப்
புளுகுக்குப் ‘புராணங்கள்’ எனும்பே ரிட்டுத்
திகழ்கின்ற பெருமையுடன் அவற்றை யெல்லாம்
தெருத்தெருவாய்ப் போய்ச்சொல்லி, பெருமை யோடு
நிகழ்கின்ற விழாக்களிலே ஆரி யத்தை
நிலைநிறுத்தி, அதற்குக்கீழ் நீங்கள் நின்றே
இகழ்தேடும் தமிழர்களே! உருப்பட் டீரே?
இனியேனும் ஒன்றிணைந்தே இனங்காப் பீரே!

கட்டிவைத்தே கோயிலுக்குள் – கருவ றைக்குள்
கல்லைவைத்துக் கடவுளெனும் பெரும்பேர் சொல்லி
எட்டிநின்று கும்பிடென்பான்; இளித்த வாயோ
டிலைவிரித்துப் படைத்திட்டு, விழுந்து, முன்னால்
முட்டிதேய் கின்றவரை கும்பிட் டீர்கள்!
மூடர்களே, தமிழர்களே! உருப்பட் டீரா?
அட்டியிலை அவனுயர்ந்தான்! இனிமே லேனேம்
அனைவீரும் ஒருங்கிணைந்தே இனங்காப் பீரே!

உடன்பிற்ப்பை மேல்கீழென் றொதுக்கி விட்டீர்!
ஒண்டவந்த ஆரியனைத் தேவன் என்றீர்!
கடன்பெற்ற வடமொழிக்குக் காவல் செய்தீர்!
மடன்பெற்ற மூங்கையவன் குருட்டுப் பெண்ணை
மணங்கொண்டு முடமொன்றைப் பெற்ற வாறாய்,
இடமின்றி உரிமையின்றி அடிமைப் பட்டீர்!
இனியேனும் மனம் ஒன்றி இனங்காப் பீரே!
இனியேனும் ஒன்றிணைவீர்?

- -பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973

வியாழன், 14 நவம்பர், 2013

எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்




இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்