வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்
 திசைமாறுமா? 1 பகுதி
(ஒரு வீர தேசத்தின் கதை)
1.  நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து  நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்