நிலாமுற்றம்
ஞாயிறு, 9 ஜனவரி, 2022
சனி, 8 ஜனவரி, 2022
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
—- பச்சை
கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
—- பச்சை
நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
—- பச்சை
வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
—- பச்சை
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே —- பச்சை
அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
—
சனி, 26 ஜூன், 2021
குழலூதி கழலோதி
sankara dass nagoji
காலி னால்வி சும்பு மண்ண ளந்த கல்வி வல்லவா
கூலி யேநி னைந்து நாளும் வாடு வேனை ஏல்வையோ
நாலி ரண்டில் ஆலு கின்ற சக்க ரத்தெம் அண்ணலே.....(71) -- 10-June-2021
காலி - கால்நடை உயிரினம்
sankara dass nagoji
கோள்கள் ஒன்ப தேத்து கின்ற குற்ற மற்ற குள்ளனே
காள மேக மூர்த்தி யேக லங்கு வேனை ஆள்வையோ
தாள மோடு நாத மாய சக்க ரத்தெம் அண்ணலே....(72) -- 11-June-2021
sankara dass nagoji
நாத்தி கர்க்கு நன்மை நல்கி டாத நல்ல நம்பனே
ஆத்தி கத்தின் ஆணி யாய ஆழி வண்ண ஆதியே
ஆத்தி சூடி யோன்வ லத்த சக்க ரத்தெம் அண்ணலே....(73) -- 12-June-2021
ஆணி - ஆதாரம்
பொற்பு - அழகு
கடிச்சம்பாடி
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFRyaoJEyypGKtEPRr_ijKnkzngLdsXSeDtzNcKAdPxvrA%40mail.gmail.com.
sankara dass nagoji
மத்தை சூடி மேவு மேனி கொண்ட மாய மாதவன்
வித்தை கற்ற மித்தை யில்த விக்கும் என்னை மீட்பவன்
அத்தை மக்கள் ஐவர் போற்று சக்க ரத்தெம் அண்ணலே...(74) -- 13-June-2021
மத்தை - ஊமத்தை
அத்தை - குந்தி
sankara dass nagoji
கற்ப னைக்க கப்ப டாத காதல் காட்டு கள்வனே
விற்ப னர்கள் போற்று கின்ற மேன்மை மிக்க வேதியா
அற்பன் என்னை ஆள வந்த சக்க ரத்தெம் அண்ணலே....(75) -- 14-June-2021
கற்பகம் - கற்பகாம்பாள்
sankara dass nagoji
மட்டி லாம யக்க றுக்க வல்ல னேத யாகரா
கொட்டி யாடு வான்வ லத்த குற்ற மற்ற கோலனே
அட்டி செய்தி டாமல் ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே...(76) -- 15-June-2021
பரை - உமை
அட்டி - தடை, தாமதம்
கொட்டி - கொடுகொட்டி - சிவனின் நடனம்
sankara dass nagoji
கம்பர் செய்த காதை ஓது வார்க்க ருள்செய் கண்ணனே
பம்பை மீது சேது கட்டு பற்ப நாப மூர்த்தியே
நம்பு வேனை ஆள்க நாத சக்க ரத்தெம் அண்ணலே....(77) -- 16-June-2021
பம்பை - பாம்பன் ஜல சந்தி
சேது - பாலம்
sankara dass nagoji
தக்கி ணத்தை நோக்கு மூர்த்தி தங்கு மேனி கொண்டவா
எக்க ணத்தும் உன்றன் எண்ணம் என்ற னக்கு வாய்க்குமோ
சுக்கி ரன்கண் ஒன்றை வாங்கு சக்க ரத்தெம் அண்ணலே....(78) -- 17-June-2021
சுக்கிரன் - சுக்கிராச்சாரியார்
sankara dass nagoji
புண்ணி யம்செய் பத்தர் புத்தி உள்ள உள்ள ஊறுவோய்
கண்ணி ரண்டி ருந்தும் என்று காண்பன் உன்னை மாயனே
மண்ண ளந்து விண்ண ளந்த சக்க ரத்தெம் அண்ணலே....(79) -- 18-June-2021
sankara dass nagoji
கோழி வேந்தர் பாடு பாட்டில் ஆழ்ந்த பக்தி கொண்டவா
மூழி தாங்கி நின்ற வாமு ழங்கு பாஞ்ச சன்னியா
தாழி வெண்ணெய் உண்ட வாய சக்க ரத்தெம் அண்ணலே.....(80) -- 19-June-2021
கோழி வேந்தர் - கோழிக்கோன் குலசேகர ஆழ்வார்
மூழி - மத்து
siva siva
sankara dass nagoji
பாணி மிக்க பாத னேப ணிந்த வர்க்கொர் சேணியே
காணி இன்றி வாடு வேனை ஆத ரிக்கும் ஆணியே
சாணி னோடு கோணு மாய சக்க ரத்தெம் அண்ணலே...(81) -- 20-June-2021
கோண் - அணுவில் 100ல் ஒரு பகுதி
காணி - நிலம், உரிமை
பாணி - அழகு
சேணி - ஸ்ரேணி - ஏணி
sankara dass nagoji
வேறு வேறு தன்மை கொண்ட னைத்தி லும்வி ளைந்தவா
ஈறி லாத வீர னேஎ னைப்ப டைத்த தேன்சொலாய்
ஆறும் நாலும் ஆகி நின்ற சக்க ரத்தெம் அண்ணலே....(82) -- 21-June-2021
ஆறும் நாலும் - ஆறு அங்கம், நாலு வேதம்
கோது - குற்றம்
sankara dass nagoji
நாடி வந்த அன்பர் முன்பு சேவை சாதி நம்பனே
பாடி யாடு பத்த ரிற்ப ரந்த வாவொர் பாம்புமேல்
ஆடி நின்ற ஆய னாய சக்க ரத்தெம் அண்ணலே...(83) -- 22-June-2021
சேவை சாதித்தல் - காட்சி அளித்தல்
sankara dass nagoji
கற்பெ னுங்க னல்கொள் மாதை மீட்டு வந்த காவலா
கற்பம் எண்ணில் கண்ட வாக லங்கு வேனை ஆள்வையோ
தற்ப ரச்சு யம்பு வாய சக்க ரத்தெம் அண்ணலே....(84) -- 23-June-2021
கற்பம் - 4,32,000 0,00 ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு நாள்.
sankara dass nagoji
மரங்க ளேழ்து ளைத்த வாவ ராக மாய எந்தையே
தரங்க மேற்று யில்கொ ளும்க றுத்த வண்ண அங்கனே
அரங்க மேய அப்ப னாய சக்க ரத்தெம் அண்ணலே....(85) -- 24-June-2021
rajjag
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQbF1_o4FKYfFJczkmJ42uq8Vcha3s%2BQ0k-7JYWb8_sDQ%40mail.gmail.com.
sankara dass nagoji
முத்து வேளை மெச்சு கின்ற மூப்பி லாத மாமனே
அத்த னைக்கும் ஆதி யாய சக்க ரத்தெம் அண்ணலே....(86) -- 25-June-2021
முத்துவேள் - முருகன்
குத்தல் - பிறருக்கு நோவு தருதல்
sankara dass nagoji
அந்து ழாய மர்ந்த ணிந்த சக்க ரத்தெம் அண்ணலே....(87) -- 26-June-2021
துழாய் - துளசி
அமர்தல் - விரும்புதல்