ஞாயிறு, 9 ஜனவரி, 2022

 


கண்ணீர் அஞ்சலி 

                                        திருமதி குமாரசிங்கம் பரமேஸ்வரி 
                                           புங்குடுதீவு .5

                 அன்னை மடியில்; 05.10.1942.  ஆண்டவன் அடியில் ; 15.04.2014

ஈழத்து மண்ணின் எழில்சிகரம் -யாழ்         ஈன்ற தீவுகள் ஏழின்  நடுவேஆழத்து அலையெழுந்து தாலாட்டும்         அழகு மண் புங்குடுதீவினிலேவேழமுகத்தான் அருள் வேரிட்ட -நல்         வேளாள குலக்கொழுந்தாம் -அவள்பாளத்துத் தங்கமே பரமேஸ்வரி தாயே       பண்போடு வாழ்தல் உன் மரபுவெனவே .பதி தனை இழந்தும் உன் பால்யவயதில்       பண்புற வளர்த்தாய் உன் செல்விகளிரண்டைமதியொத்த மருகரை காட்டியே வைத்து        மாண்புறு பேத்திகள் அறுவரை மோந்துஇது மட்டும்  போதும் எனக்கென்ன -இனி         என்றுமே இருந்த உன் வாழ்வில்விதியதன் சதியோ விண்ணவன் கதியோ        விரைந்து நீ போன காரணமறியோம்எந்தாய் மறைந்தீர் எம்மை மறந்தீர் -துயர்     அஞ்சலி செய்திட  கண்ணீர் வழியேசிந்திட துளிகளைச் சென்றீர்  எங்கே -உடன்     செப்புவீர் அன்னையே . செயலற்று இங்கேவெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு     விரைந்து திறந்ததேன் மரணத்து  வாயில்தந்தனை உயிரை தவித்திட உறவே -யாரும்       தாங்கிட இயலா உமது மறைவே.வந்தவர் எல்லாம் போவது உண்மை இது      வாழ்வியல் உலகில் இயற்கைத் தன்மைசிந்தனை எமக்குத் தோன்றிய போதும் நெஞ்சில்          செப்பிட இயலா துயரே மோதும்உந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் என்றும்        உள்ளத்தில்  உம்   நினைவே துஞ்சும்வந்தனை செய்வோம் வாழும் வரையில் உன்னை       வழி அனுப்பிடவோ வார்த்தைகளில்லை.


இருபது வருடங்களாக எங்களுக்கும் அன்னையாக,பேத்தியாக எம்மோடு இணைந்து வாழ்ந்து அன்பு காட்டி  பாசமூட்டி  நேசித்து நின்ற உங்கள் பூமுகத்தை என்று தான் மறப்போம்.எங்கள் நெஞ்சில் என்றும் வாழும் இதய தெய்வம் நீங்கள் .உங்கள் ஆத்மா இறைவனடி சேர இறைஞ்சுகின்றோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக