காணல் பொய்யா
கற்பனைக் கெட்டாத தூரத்திலே - அந்தக்
காற்றின் வெளியிடைத் தோற்றத்திலே - இந்த
அற்பனை ஈந்த ஒளிப் பொருளை - நானும்
அல்லும் பகலுமாய் எண்ணுகிறேன் - ஒரு
சிற்பமோ செய்கலைச் சித்திரமோ - எமைச்
செய்தது மண்சிலை கைப்பதமோ - இது
விற்றிடவோ போட் டுடைத்திடவோ - இந்த
வேதனைப் பாத்திரம் வேறெதுவோ
சுற்றிச் சுனையெங்கும் நீர்த்தெறிப்பு - ஒளி
சுட்டெழுங் காலை யுயிர்த் துடிப்பு - அதை
பெற்ற வகையிலோர் கண்விழிப்பு - அது
பிரமையோ இன்னும் இதுகனவோ - அதோ
வற்றுங் குளத்திடை வானவிரிப்பை- பிம்பம்
வைத்து விழுந்ததா யெண்ணவைத்து - அந்தக்
கற்பனையே வாழ்வென் றற்புதமாய் - வீசுங்
காற்றில் அழிந்திடக் காட்டிநின்றாள்
வெந்தழல் வீசிடுங் காற்றினிலே - அதி
வேகுமுடலி னுபாதை கண்டு - குளிர்ச்
சந்தணம்பூசிய நேரங்களை - எண்ணிச்`
சற்றே சிரித்துள்ளம் நோகுகிறேன் - இதைச்
செந்தேன் அமுதெனச் சொல்லியின்பம் - கொண்டே
சிற்றாடை மூடிய நோய்ப்பொதியை - இது
எந்தன் எனக்கூறி யாடியதை - எண்ணி
ஏனோ மனங்கொண்டு புன்னகைத்தேன்
சொந்தமெனச் சொல்லி வந்தவர்கள் - இதில்
சுத்த வெறும் பொய்யின் சாட்சிகளாம் - பக்கம்
வந்தார் இருந்தனர் போனரென்று ஏனோ
வாழ்வை யெடுத்தனர் காரணமென் - ஒரு
நந்தவனம் மலர்ப் பொய்கையெழில் - அதில்
நாட்டிய மாடும் குவளை மலர் - இவை
எந்தவகை வெறும் கற்பனையோ - இதை
எண்ணி விடையொன்றைத் தேடுகிறேன்
சந்திரன் பூத்திட வானத்திலே - ஒரு
சாய்ந்த மரக்கிளை ஓரத்திலே - அந்தோ
வந்தவன் எய்மலர் அம்பு பட்டு - ஒரு
வண்ணமான் கொண்டதோ மெய்த்துடிப்பு - அத்து
நொந்தே அழிந்திட வென்றறியா - அதை
நோக்கி இரங்கிட ஆசைப்பட்டு - அதில்
சந்தமெழ சற்றே ஆடல்கொண்டு - முழுச்
சஞ்சலப் பட்ட சரித்திரமேன்
வந்தவழி யுந்தெரிய வில்லை - மேலே
வானமா பூமியா எந்தன் எல்லை - எழிற்
செந்தமிழ் பூசிய வீதியிலே - நானும்
செல்லும் வழியிருள் கொண்டநிலை - சுக
மந்த மாருதமோ வீசிநிற்க - ஒரு
மங்கலவாழ் வின் திசைநடக்க - என்ன
மந்திரமோ உடை மாறியதென் - இந்த
மண்ணி லென்னவேடம் மாயை கண்டேன்
நீலநிறத்தொரு வானப்பட்டு - அதில்
நிற்குங் கோள்சூரியன் ஆனமுத்து - அங்கு
கோலமிட்ட மேகம் ஓடித்தொட்டு - ஒரு
கூனல் நிலவென்னும் தங்கத் தட்டு - இன்னும்
மேலே நட்சத்திர வெள்ளிப் பொட்டு - ஊடே
மின்னல் மழையென வைத்துகொண்டு - அந்தக்
காலதேவ தையும் என்னசெய்தாள் - இவை
காணல் பொய்யோ இதில் ஏது உண்மை?
*****************
23 May 2013, 08:34:34
to santhav...@googlegroups.com
திருத்தம்
சுற்றிச் சுனையெங்கும் நீர்த்தெறிப்பு - ஒளி
சுட்டெழுங் காலை யுயிர்த் துடிப்பு - அதை
பெற்ற வகையிலோர் கண்விழிப்பு - அது
பிரமையோ காணுதலோர் நினைவோ - சிறு
வற்றுங் குளத்திடை வான்விரிப்பை- பிம்பம்
சுற்றிச் சுனையெங்கும் நீர்த்தெறிப்பு - ஒளி
சுட்டெழுங் காலை யுயிர்த் துடிப்பு - அதை
பெற்ற வகையிலோர் கண்விழிப்பு - அது
வற்றுங் குளத்திடை வான்விரிப்பை- பிம்பம்
25 May 2013, 08:34:00
to santhav...@googlegroups.com
எப்படித் தொழுவேன் இனி?
செந்தமிழிற் சிலை சந்தமெழப் பொழிந்
திங்கொரு சோலை வைத்தேன் - அதிற்
சிந்தையுங் கொண்டிள மென்மல ரள்ளியே
சேர்த்தொரு மாலை செய்தேன் - இதில்
வந்தன துன்பமும் வாழ்விற் பிணிகளும்
வென்றிட வீரந்தனை - இன்று
தந்திடு வாயெனத் தாயே நினைந்ததன்
தாமரைப் பாதம்வைத் தேன்
கொஞ்சி மகிழ்ந்திடும் கூட்டமென் புள்ளினம்
கொண்ட மகிழ்வு தன்னும் - அந்தப்
பஞ்செனும் மேகமும் பார்த்தே ஒளித்திடும்
பட்டெழில் வான்மதியும் - கண்டு
மிஞ்சு மளவிந்த மேனி களிகொள்ள
மேதினி வாழ்வை யெண்ண - நீயும்
அஞ்சுக மும்கனி பஞ்சென விட்டதென்
றாக்கிச் சிரிப்பதென்ன
தந்திடு என்றிடத் தாயே மனம்கொண்ட
தான நினைவுமென்ன - தேவ
இந்திரனும் கொண்ட இன்ப நிலையெண்ண
எச்சிலிரத்தல் என - நல்ல
அந்தி வருமிளங் காற்றி னணைசுகம்
ஆனந்த போதைகொள்ள - ஒரு
விந்தைதனை வேண்ட வெள்ளரி கல்லிட்ட
வாறெமை ஆக்கலென்ன
செந்தமிழர் உலகோடு பரவிடச்
செய்தவள் நீதிசொல்ல - இங்கு
வந்திடு வாயென வாசல் தினங் கண்டு
வாடிக் கருகிக் கொள்ள - இந்தச்
சந்ததியே பெரும் சஞ்சலம்கொண்டிட
சற்றும் விழியறியா -நீயும்
இந்தவகை மனம் கொண்டதும் எப்படி
இத்தனை மோசம் செய்ய !
நந்தவனமலர் நன்னிதட் பூமது
நாடிடும் வண்டினையும் - ஒரு
மந்தை யினம் நடைகொள்ள மறுத்திடு
மங்கு மனத்திடமும் - இதிற்
சுந்தர வாழ்வெனுஞ் செங்களனியிடை
சேர்ந்த களைகளென்னும் - குறை
தந்தொருவாழ்வை யமைத்தவளே - உனைத்
தாயே எவ்வாறு தொழ??
*************
27 May 2013, 02:18:21
to santhav...@googlegroups.com
இனி வரும் காலம்
கொட்டும் மழையுடன் வெட்டும் இடிதனும்
கூரையில் கொட்டட்டும் - வெளி
தொட்டுப் படரிருள் திட்டென் றுலகினை
தொற்றிக் கொள்ளட்டும்
அட்டத்திசையினில் முட்டும் பகைபடை
விட்டு குவியட்டும் - வரு
மட்டும் நீதியின் சட்டம் சரிவர
சட்டச்சட சுத்தம்.
வெட்டும் மின்னலும் வானை விட்டிட
விளையும் தரைமீது - அது
பட்பட் படவென பாயும் கணைகளில்
பகைவன் பலகூறு
தட்தட் தடவென தாய்மண் கொண்டவன்
தனைநீ அறம்கேளு - அட
எட்டுத் திசையிலும் இடிபோல் விடிவொடு
எழுமோர் புதுவாழ்வு
துள்ளும் கால்களும் துடிப்பைக் கொள்ளுது
தோழா இதுபோதும் - அவன்
வெள்ளம் எனவுடல் வெட்டக் குருதியும்
வெளியே பாய்ந்தோடக்
குள்ளக் குறுநகை கொண்டே உலகமும்
கொள்ளிதீ வைக்க - நாம்
தள்ளிக் காலமும் தாயின் துயரினைத்
தாங்கிக் கிடப்போமோ
கண்கள் மூடியும் மௌன திரையினில்
காணும் ஓவியமாய் - நாம்
எண்கள் பலவென ஏகும்நாட்களை
எண்ணிக் கிடப்போமோ
பெண்கள் பிள்ளைகள் பெட்டி யடுக்கிடப்
பேசா திருப்போமோ - உயர்
மண்ணெம் வசம்வர எங்கள் தமிழ்மகள்
மகுடம் கொள்ளாளோ !
சொல்லும் கதைகளும் தொட்டில் தூக்கமும்
துச்சமதை வீசு - இனி
எல்லை வரைபகை ஒட்டிச் செல்வதும்
எங்கள் பணி கூடு
தொல்லை தரவென துட்டர் குழுமினர்
தூரம் கலைத்தோடு - அவர்
இல்லை எனும்வரை போராட்டம் தமி ழ்
தேசம் நம்நாடு
*********************
27 May 2013, 09:53:15
to santhav...@googlegroups.com
சக்தியவள் கோலம்
வெந்தெரியும் சுடுகாடெம் வீடு - அதில்
விளையாடும் பேய்களும்நம் சொந்தம்
செந்தணல்தீ எங்களது மூலம் - அதில்
சேரவிடா மண்பிடித்த தேகம்
கந்தைதனும் அற்றதொரு காயம் அது
காற்றடைத்தே ஊதிவிட்ட மாயம்
சிந்தைஆசை மந்திரங்கள் ஓதும் அது
செய்வதென்ன ஒன்றுமில்லைப் பாவம்
அண்டவெளி அன்னையவள் தேசம் - காணும்
ஆதவன்கள் சக்தியினோர் பாகம்
கண்ணொளியோ காணும்பகற் கனவு - வகை
காலையொளி கற்பனையின் விளைவு
எண்ணங்களோ மின்னுகின்ற விண்மீன் - அதற்
கேற்றவகை ஆக்குமெங்கள் மண்ணின்
வண்ணமெழ நாமமைக்கும் வாழ்வு - செயல்
வந்தளவை நிர்ணயிக்கும் வீழ்வு
மண்டபங்கள் மணிமகுடம் மஞ்சம் - இவை
மட்டுல்ல கொண்டதெலாம் சுழியம்
கண்டபடி ஆடுவதும்கனவும் - எங்கள்
காலமதைக் கணக்கெழுதக் காணும்
தண்டமெனத் தாயளிக்கும் நோயும் - நாம்
தரணிகொண்ட வாழ்வும் சிறையாகும்
கொண்ட உயிர் வான்வெளிக்குப் போகும் - பின்
கூடுவதென் மாஒளியின் மூலம்
தங்கநிலா வீசுமொளித் தண்மை - அதை
தாங்கிமனம் பொங்கியெழுந் தன்மை
மங்கிவரும் மாலையிருள் அச்சம் -துயில்
மற்றவரின் மெய்கலக்கும் இச்சை
கங்கையெனப் பொங்கி வடிந்தோடும் - பின்
காணுமுயிர்ச் சேர்க்கை புதுரத்தம்
இங்கிவைகள் யாவும் சக்தி யாக்கம் - இதில்
ஏதெனவோர் இயலபறியாத் தூக்கம்
இங்கிருந்து செல்லுமிடம் நித்தியம் - அதில்
இணைவதுவே முடிவுகாணும் சத்தியம்
பங்கெனவே நிலம்பிரித்த வாழ்வும் - கொள்ள
பாரில் அதைப் பறித்தெடுக்கும் யாவும்
இங்கெமையே ஒட்டிநிற்கும் காந்தம் - அது
இல்லையெனில் வீழ்ந்திடுவோம் வானம்
பொங்குமெழில் இயற்கையுங் கொள் பாசம் - காந்தப்
பிடிப்பைவிட மனிதகுலம் சூனியம்.
*****************************
29 May 2013, 10:11:20
to santhav...@googlegroups.com
உன்னை அறிவோமோ ?
அம்மையவள் அப்பனோவென் றறியேன் - எனையீந்த
ஆதாரத் தீயினுரு காணேன்
செம்மையதோ வெண்ணொளியோ தெரியேன் - அண்டமதில்
சீறியுமிழ் தீக்குழம்பின் வகையென்
இம்மைதனை இவ்வுலகில் கண்டேன் - இங்குதனும்
இருக்குமிடம் ஏதறியா தலைந்தேன்
எம்மையெது காரணியோ வைத்தாள் - இவ்வுலகில்
எல்லையற்ற பாசத்துள் பிணைத்தாள்
பெற்றவளும் தன்வயிற்றில் கொண்டே - மாதமென்ப
பத்துவரை சென்றலைந்து ஈந்தாள்
கற்றுவரக் கல்விபயில் கூடம் - காட்டியும்பின்
காணுலகில் கடமையறி வீந்தாள்
விற்றும்பல நன்மையொடு தீமை - வாங்கியதில்
வேடிக்கைகாண் விதியினோடு கூடி
உற்றதென்ன துயர்நிறைந்த வாழ்க்கை - முடிவிலிங்கு
உள்ளதென்ன வீணுழன்ற யாக்கை
மண்ணுடலில் மாயசக்தி ஏற்றம் - இறுதிவரும்
மரணமென்னும் மின்னுணர்ச்சி நீக்கம்
எண்ணமெனும் புரிந்திடாத அலைகள் - அவையுமீற்றில்
எங்குசென்று முடியுமென்னும் இருள்கள்
வண்ணம், இருள் வார்த்துசெய்த உலகம் - ஓடிக்கண்ட
வானஜோதி சூரியன் குடும்பம்
கண்ணெதிரில் கலைந்துபோகு மோர்நாள் - நாமுமங்கு
காணுபவை மீதமென்ன சூன்யம்
பெண்ணுருவாம் பிரபஞ்சத் தாயே - நீயும்வானில்
புன்னகைத்து நிற்பதெங்கு கூறேன்
உண்மைதனை வேலியிட்டு மூடி - இவ்வுலகை
உருளவைத்த மாயமென்ன கூறு
விண்ணிலொளி வீசவிட்டுப் பொய்மை - கொண்டதான
வெற்றுநீல நீள்திரையும் போட்டாய்
கண்ணெதிரே நீயிருக்கும் தோற்றம் - நாமதனைக்
காணுமொரு ஞானமதைத் தா தா
**************
29 May 2013, 16:17:32
to santhav...@googlegroups.com
தா வீரம் தாயே!
தேன் சுவைத்த நா திகட்டிப் போனதுவோ - அன்றி
நான்குடிக்க ஊற்றுந்தமிழ் நலிந்தனவோ
மீன்பிடிக்கப் போடும் வலை வீழ்வதென்ன - இன்று
ஏன்துடித்துக் காணுதிந்த ஏழைமனம்
தேள்கடிக்கக் காலருகில் வைத்தனனோ - அன்றி
வாள்பிடித்த கைவளத்தில் நின்றனனோ
தூள்பறக்கச் சாம்பலிடும் தீயெழுந்தே - இந்த
நாள்தனுக்கு மேல்நிலைக்கக் காரணமென்
ஏழையிவன் கணக்கெழுத ஏடில்லையோ - ஆயுள்
கூழையென்று தான்முடிக்கக் கூடுதுவோ
வாழை யிவன் ஈந்தகனி தீர்ந்தழிவோ - ஓர்
பேழைதனும் ஆறடிக்குப் பூரணமோ
தூறும் மழையூடு மின்னல் காணுதய்யா - தூர
ஏறுமிருள் வான்பிளந்தும் ஆடுதய்யா
மாறுநிலை என்றுமனம் வேகுதய்யா - ஆயின்
கூறும்விதி கோலமென்று நோகுதய்யா
பேதலித்துக் கொள்ளுமனம் பொய்மையிலா - அன்றி
ஆதரித்த சக்திமனம் போதுமென்றா
காதருகே கவிபடித்த வாழ்விருந்தே - எனை
ஓதரும்பொற் தமிழ் பிரிக்க உற்றதென்ன
நாளிருக்கு தின்னும் என்னை நாடுவிட்டே - உந்தன்
தாளிருக்கும் பக்கம்தலை வைத்திடென
கேளிருக்கும் நாட்களிதைக் கேடுசெய்யா - நீயும்
தோளிருக்கு முரம்பலக்க செய்திடம்மா
***********************
29 May 2013, 10:16:06
to santhav...@googlegroups.com
Very nice
31 May 2013, 00:05:23
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி! அவ்வப்போது என்கவிதையுணர்வுக்குத் தரும் விட்டமின் மாத்திரைகளாக விளங்கும் வாழ்த்துரைக்கு நன்றிகள்!
31 May 2013, 00:38:06
to santhav...@googlegroups.com
உயிர் கொண்ட சிலையொன்று
செந்தமிழில் இசைப்பாட்டெழுதிக் கொண்டே
சித்திர மாடம் சென்றேன் - அங்கு
வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை
வார்த்த சிலைகள் கண்டேன்
சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள்
சேர்ந்த அழகிடையே - எந்தன்
சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை
செய்ய உளி எடுத்தேன்
சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து
சித்திரமாடம் வைத்தேன் - அதில்
தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள்
தன்னை வடித்தெடுத்தேன்
விந்தை முகமதில் கொண்ட விழிகளில்
வேதனை தோன்றிடவே - அது
எந்தமுறைமையோ சந்தண மென்முகம்
குங்கும மானதென்ன
வெண்ணிலவும் குளிர் வீசும் இரவிடை
வியர்வை முத்தெழவும் - அவள்
கண்ணழகில் கருவண்டு துடிப்பெண்ணி
கைகள் கொண்டே கலைத்தேன்
எண்ண அதிசயம் அங்கவளின் இதழ்
எள்ளி நகைப்பது போல் - நல்ல
வண்ண உதடுகள்: வார்த்தையின்றி யொரு
புன்னகை பூத்ததடா
மூங்கில் வனத்திடை தீயெழுந்த வகை
மேனி எரிந்திருக்க -அவள்
தூங்கும் குழல் தனில் பூவிருந்தே எழில்
தேங்கிடச் செய்ததடா
மாங்கனிக் கன்னம் சிவந்ததனால் உயிர்
மாதெனத் தோன்றியதும் -அவள்
பூங்கை இரண்டினில் பூத்தமலர் கொண்ட
புத்தெழில் கண்டுநின்றேன்
ஆங்கே அவளென்னை அன்புடன்மேவிய
ஆந்தை விழியிரண்டால் - நல்ல
பாங்குடனே எந்தன் பக்கமணைந்திடும்
பாவனை கொண்டிருந்தாள்
வாங்கு மதியொளி வார்த்த முகமதில்
வாஞ்சையுடன் சிரித்தே - அந்த
ஏங்குமிளமதி ஏந்திழையாள் கரம்
ஏந்திய மாலையிட்டாள்
பொன்னெழிலாள் மகள் மேனி நளினமும்
பூங்கொடி தென்றல்தொட - அந்த
மன்னன் அரண்மனை மாடத்திலே மின்னும்
மாவிளக்கின் ஒளியில்
முன்னும் பின்னும் அசைந்தாடும் அழகுடன்
மோகினி ஆடிநின்றாள் - இது
என்ன விநோதமென் கண்கள் வியந்திட
எண்ணம் மயங்கி நின்றேன்
சொல்லத் தெரியவு மில்லை அவள்கொண்ட
செய்கையும் அன்பெழவே -அந்த
நல்ல மனதெழு நங்கைதனை இது
வென்னவென்றே வினவ
சில்லெனு மோடைக் குளிர்பரவ நல்ல
செந்தமிழ்ச் சொல்பவரே - இந்தக்
கல்லை கனிந்திட காணும் வகையின்னும்
சொல்லு கவிதைஎன்றாள்
நில்லாய்நீ யுமெந்தன் கையில் உருக்கொண்ட
கன்னிச் சிலையல்லவோ - இந்த
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்
31 May 2013, 01:03:02
to santhav...@googlegroups.com
" [...]விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்"
மிக அருமையான, உயிர்த் துடிப்புள்ள வரிகள்.
சங்கரன்
2013/5/30 kirikasan <kana...@gmail.com>
உயிர் கொண்ட சிலையொன்று
[...]
Swaminathan Sankaran
31 May 2013, 01:39:42
to சந்தவசந்தம்
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்
அருமை!
அனந்த்31 May 2013, 01:43:36
to சந்தவசந்தம்
அழகான், ஆழமான பலப் பல வரிகளில் சில:
செந்தேன் அமுதெனச் சொல்லியின்பம் - கொண்டே
சிற்றாடை மூடிய நோய்ப்பொதியை - இது
எந்தன் எனக்கூறி யாடியதை - எண்ணி
ஏனோ மனங்கொண்டு புன்னகைத்தேன்..
---
---
நீலநிறத்தொரு வானப்பட்டு - அதில்
நிற்குங் கோள்சூரியன் ஆனமுத்து - அங்கு
கோலமிட்ட மேகம் ஓடித்தொட்டு - ஒரு
கூனல் நிலவென்னும் தங்கத் தட்டு - இன்னும்
மேலே நட்சத்திர வெள்ளிப் பொட்டு - ஊடே
மின்னல் மழையென வைத்துகொண்டு - அந்தக்
காலதேவ தையும் என்னசெய்தாள் - இவை
காணல் பொய்யோ இதில் ஏது உண்மை?
31 May 2013, 11:45:26
to santhav...@googlegroups.com
-கவிதைக்காக வாழும் கிரிகாசன்
****************
31 May 2013, 11:47:37
to santhav...@googlegroups.com
- கவிதைக்காக வாழும் கிரிகாசன்
****************************
31 May 2013, 11:53:30
to santhav...@googlegroups.com
இயற்கையின் காதலன்
நீலவிதானத்து மேகத்தில் பொற்துகள்
நாணிக் கண் கூசலென்ன - எழில்
கோலமுகத்துடை வெண்ணிலவு என்னைக்
கொஞ்சிக் களிக்கையிலே
காலமிட்ட விதி காற்றுவந்தே என்னைக்
கட்டித் தழுவுகையில் - இந்த
ஞாலமிட்ட சதி நள்ளிரவுக் குளிர்
நம்மைப் பிரிப்பதென்ன
ஆழியிட்ட அலை ஓடிவந்து என்னை
ஆசையுடன் தழுவி - சில
நாழிவிட்டு என்ன ஆனதுவோ மனம்
நோகவிட் டோடலென்ன
தோளைத் தொட்டு முகில் தூவும்மழை எனைத்
தொட்டு சுகம்மளிக்க - அந்த
வாளின் வெட்டு எனமின்னல்வந்து கொண்ட
வஞ்சம் பிரிப்பதென்ன
போம் வழியே எனைப்போற்றி மலர்தரு
பூக்கள் சொரிந்து நிற்க - ஒரு
பாம்புவந்தே நடுப் பாதைநின்று எனைப்
பார்த்து சினப்பதென்ன
தீம்பழங்கள் கிளை தூங்குவன எனைத்
தின்னென்று காத்திருக்க - ஒரு
பூம்பொதியாம் அணில் பொல்லா மனங்கொண்டு
போய்எச்சில் செய்வதென்ன
துள்ளும்கயல் பொழில் தூங்கும் மலர்தனைத்
தொட்டுத் திரியுமலை - இன்னும்
வெள்ளிமலை அதன் வீரமென்னும் திடம்
வைத்திருக்கும் கடுமை
தள்ளி முகில் நடைசெய்யும்வானின்வெளி
தங்கரத சுடரும் -பெரும்
கள்ளினை கொள்மலர் கன்னி இயற்கையின்
காதலன் நானேயன்றோ
31 May 2013, 15:57:46
to santhav...@googlegroups.com
தள்ளி முகில் நடைசெய்யும் வானின்வெளி
தங்கரதச் சுடரும் - இவை
கொள்ளினி கள்மலர் கூடும்வண்டா மியற்
கையவள் காதலன் யான்
1 Jun 2013, 01:40:35
to santhav...@googlegroups.com
தமிழால் இணைந்தோம் (இதுவேறு -ஒரு கற்பனை)
பனிவிழும் இரவில் படரொளி நிலவில்
பதுமையென் றயலிருந்தாள்
கனிவிழும் தருவின் கலகல ஒலிபோல்
கலந்தொரு மொழியுரைத்தாள்
தனித்திடு முணர்வைத் தறித்ததில் மகிழ்வைத்
தழைத்திட வழி சமைத்தாள்
புனிதமென் மனதுள் புகுவழி அறிந்தாள்
பொறுமையை ஏன் இழந்தாள்
வெளியிடை இரவும் விடிந்தொளி பரவும்
வரை இணைந்துயர் பறந்தோம்
ஒளி நிலவேறி முகில்களில்தாவி
உலகமும் மறந்திருந்தோம்
களிமனங் கூடிக் கதைபலபேசிக்
கனவுகள்தனை வளர்த்தோம்
நெளிமலர் வாசம் நிரவிய தென்றல்
நிலையதில் அலைந்திருந்தோம்
தெளிமழை முகிலும் திணறிட இடியும்
தரைபட வரும் பொழியும்
துளியுடன் மின்னல் தொடும் புவியென்னில்
துடிபட உயிர் பிரியும்
ஒளிவர உறவில் எழும் வெளிபெரிதாம்
இரவதின் எதிர்வடிவம்
உளிபட பிரியும் இருவகை கல்லின்
உடைவென நாம்பிரிந்தோம்
நிலவுகள் சுடவும் மலர் தொட வலியும்
நனைபொழி லலைமனமும்
பலவித உணர்வும் படபட முறிவும்
பலியிட நிலை சரிந்தோம்
குலமகள் நினைவில் குறுகிய பார்வை
கொழுந்தெனத் தீபரவ
உலகமும் கொண்ட உயிர்வெறி போலும்
உழன்றிட உளம் துடித்தோம்
வகை யிதுவாக வசந்தமில் வாழ்வை.
வளமுடன் உருவமைக்க
பகைகொண்ட மனதில் பரிவெழும் வகையில்
பயனுறப் புதுமை செய்ய
முகைவிடும் மலராய் மறுபடி மலர்வில்
மனமதை தெளிவெடுக்க
புகையனல் அடங்க புனலெழும் குளிராய்
பெருந்தமிழ் தனில் இணைந்தோம்
தகைமையைக் கொண்ட தமிழெனும் அழகைத்
தரும் கவிதைகளைப் படித்தோம்
பகைமையும் மறந்து பைந்தமிழ் ஊற்றில்
பலசுகம் கொண்டலர்ந்தோம்
தொகையெனக் கவிகள் துலங்கிடும் கலைகள்
தொடரென தொடத் தொடவே
மிகையென மகிழ்வும் மின்னிடும் ஒளியும்
மெருகெழ கரமிணைந்தோம்
****************
4 Jun 2013, 22:02:46
to santhav...@googlegroups.com
சொல்லச் சொல்ல..
சொல்லைச் சொல்லிச் செல்வர் ஆவதும் உண்டு - அன்றேல்
சொல்லச் சொல்லிச் செல்வர் ஆவதும் உண்டு
செல்லச் சொல்லிச் செல்வர் ஆவதும் நன்றோ - அன்றேல்
சொல்லிச் சொல்லின் செல்வர் ஆவது நன்றோ
சொல்லைச் சொல்லிச் செல்வம் மேவிடவேண்டும் - அன்றேல்
சொல்லைச் சொல்லாச் செல்வர் ஆகிடவேண்டும்
சொல்லில் செல்லப் பேச்சாம் சொல்லும் வேண்டாம்- இன்னும்
சொல்லா சொல்வது ஆகிப்போவதும் வேண்டாம்
சொல்லைச் சில்லெனச் சொல்லக் காணுதல் நன்றே அன்றி
சொல்லைச் சுள்ளெனச் சொல்லக் காண்பது நன்றோ
சொல்லைக் கள்ளெனச் சொல்லிக் செல்வது வேண்டும் - அன்றேல்
சொல்லைத் தள்ளெனச் சொல்லிச் செல்வது நன்றே
சொல்லைச் சொல்லிட சொல்லக் கேட்பவர் வேண்டும் - அன்றி
செல்லச் சொல்லிட செல்லக் காண்பவர் வேண்டும் -
சொல்லச் சொல்லச் சொல்லல் செய்பவ ரின்றேல் அந்தச்
சொல்லைச் சொல்லா செல்லுதல் சொல்லிடில் நன்றாம்
சொல்லிற் சொல்லும் சொல்லும் வரைநீர் சொல்லும் - இவர்க்கு
சொல்லச் சொல்லச் சொல்லே சொல்‘வதை’ ஆகும்
சொல்லச் சொல்லச் சொல்வதை கேளா யாரும் - தம்வழி
செல்லிற் சொல்வதில் வேறோர் செல்வழி வேண்டும்
10 Jun 2013, 09:55:36
to santhav...@googlegroups.com
இலக்கியப் போர்
இதற்கு மறுப்புக்கவிதை தாராளமாக வரவேற்கபடுகிறது ! இது ஆழ்மனதிலற்ற இலக்கிய கருத்தெதிர்ப்பு
காட்டு மலர்களும் பூத்திருக்க - அந்தக்
கானகத்தில் இளம் மாலையிலே
கூட்டி மணம் கொள்ளும் காற்றுவர - அதன்
கூட இசையொன்று கேட்டிருந்தேன்
நீட்டிப் பரந்திட்ட வானத்திலே - எந்தன்
நெஞ்சுக் குதிரையை ஓடவிட்டேன்
பாட்டுப் பிறந்தது கற்பனையில் - அதைப்
பார்த்து நகைத்திட்டாள் காலப்பெண்ணே
ஏட்டில் எழுதும் உன் கற்பனைகள் - அட
எப்போதும் நற்கவி யாவதில்லை
போட்டுக் கிழித்தெறி குப்பையிலே - எனப்
பார்த்தே எனைக்கேலி செய்திருந்தாள்
வீட்டு அனுபவம் வீதிகடை - இன்னும்
வேறு சமூகத்தின் வேற்றுமைகள்
கூட்டி எழுது கவிதை என்றாள் - இந்தக்
கோலம் உன்கற்பனை வேறு என்றாள்
என்ன இதுவென்று ஏங்கி நின்றேன் - எந்தன்
எண்ணம் வடிப்பது இல்லையென்றால்...
வண்ண மலர்களும் உண்மையில்லை - அந்த
வானத்து வெண்ணிலா பொய்வடிவே
மண்ணும் மரமதும் கற்பனையே - இந்த
மாடும் குருவிகள் மாயங்களே
கண்ணில் காணுகின்ற வாழ்விதுவும் - வெறும்
காலம் செய்த மாயக்கற்பனையே
சங்கப் பலகையும் கற்பனையே - அதில்
சார்ந்த தமிழ் சொற்கள் கற்பனையே
பொங்கும் மொழிவளம் கற்பனையே -இந்த
பூமியும் யாவுமெம் கற்பனையே
கண்கள் காணும் வழி வாழுகிறோம் - அந்தக்
காட்சிப் பதிவுகள் மூளையிலே
எண்களும் கூட்டல் கழித்தலென - அது
ஏற்படுத்தும் விம்பம் வாழ்க்கையன்றோ
அன்னை அளித்தஇப் பூமியிலே நாமும்
ஆடி முடித்துப்பின் போகும்வரை
மின்னி மறையும் ஓர் கற்பனையே இந்த
மேனி அழிந்திடப் பொய்க் கனவே
சொன்ன விதிமுறை பார்ப்பதென்றால் இந்தச்
சோதி இணையு மக்காலம் வரை
சின்னசின்ன மனக் கற்பனைகள் வாழ்வில்
சொல்லும்கவி யாவும் பொய்ப் பதமே
***********************
10 Jun 2013, 09:57:22
to santhav...@googlegroups.com
கவிதை
கற்பனைகள் கவிதையென ஆகாவிட்டால்
கட்டுரைகள் ஆகிவிடும் கவிதைஎன்றால்
சொற்பதங்கள் சிந்துநடை போடல்வேண்டும்
சொல்லடுகில் அற்புதங்கள் செய்தல்வேண்டும்
விற்பனையை கவிதையிலே காட்டல் என்றால்
விலைமதித்துப் புத்தகத்தை விற்றல் அன்றி
கற்றவகை இலக்கியங்கள் காணும் எல்லாம்
கற்பனையை விட்டதெனில் நிற்குமாமோ
தண்டலையில் மயில்கள் நடமாடிநிற்கத்
தாமரைகள் ஒளிவிளக்கு தாங்குதென்னில்
கண்டதுமென் கவிதையிலே கற்பனைகொள்
களிப்புறு சொல்லடுக்கிலிது காணுதாமே
வண்டினத்தை கண்களென இன்றாசொன்னோம்
வண்ணமுகம் நிலவுஎன்றே கவிதைசொன்னார்
அண்டங்காக்கா கண்ணில் மைதீட்டவா
அழகுமலர் மல்லிகையை அம்புலியேதா
என்பதனை விட்டொழித்தே இலக்கியத்தை
எடுத்தாளின் இன்சுவையை நீக்கியன்றோ
நன்பழுத்த மாங்கனியை உப்பிலிட்டு
நறுக்கிப் புளியிட்டபின் காரம்சேர்த்து
இன்பமென் றுண்ணென்றால் இல்லையென்பேன்
இனிப்பு எனில் அது இனிக்க இனிமைவேண்டும்
என்னளவில் திசைமாற்றும் திருப்பமானால்
என்கவிதை கற்பனைகள் இழைந்துநிற்கும்
************************
Message has been deleted
10 Jun 2013, 10:47:48
to santhav...@googlegroups.com
மாற்றங்கள்
செழுமடி வானறு கொடுமழல் மேலிடை
விழும்பொழு தெழுமதி போலும்
பழுவடு மாவிடை பிளகனி போலினி
எழுமொரு வாழ்வது வேண்டும்
குளமிடை நீந்திடு வலையிட தான்பிடி
படுமுயிர் தான் படும்பாடும்
உளமதுநோபட உணர்வதுதேய்பட
உரிமைகள் குழியிடை மூடும்
மனமது மாஇருள் தொடுமடர் காடிடை
வருமுணர் வாகியபோதும்
கனவது நாளொரு தினமதில் பூத்திடும்
இனமென போய் விரிந்தாடும்
நனவினில் தேன்மழை பொழிநிலையாவது
எமதிடை மனமெடு ஞானம்
சனமுமாகிட விடிவெள்ளி தோன்றிடும்
சகலதும் சுதந்திரம் காணும்
முதுமலை மேவிய மழைமுகில் தூறென
விழிபொழி நீரெழும் போதும்
புதுமலர் தூவிட பெரிதெனும் வீரமும்
அது தர விடிவெழும் காலம்
எதுகுறை தாவியே பலதிசை ஓடிய
எமதவர் கூடிடவேண்டும்
இதுநிறை வேறிட எழுவது வீரமென்
றியல்பிடும் மாற்றங்கள் வேண்டும்
***************
10 Jun 2013, 23:28:27
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும்
பாவம் பலகாணும் படிநானும் நடைகொண்டால்
இதுபாரில் வெகுஞானம் தருமோ
கோபம் படுதாபம் அதிலோபம் இவையாவும்
மனம்கொள்ளின் எதுதானென் கதியோ
தூபம் இடும்போதும் பலபூவும் தரும்போதும்
ஒன்றும்புரியா மதிகாணும் குணமே
நாபம் தனிலோடும் அவள்கோபம் சினமாயும்
எனைநாளும் எழச்செய்தல் சரியோ
வேகம் அதில்யாவும் விலைபோகும் எனக்காணும்
அறிந்தாலும் இவையாவும் நடந்தே
தாகம் அவமானம் அதிகாரம் எனயாவும்
எனையாளும் அதுதானும் அவளே
தேகம் இதுதானும் இழிவாகும் பிணியாகும்
இருந்தாலும் இதன்வேகம் எதுவோ
மோகம் எதுதானும் இவன்பாகம் தனிலில்லை
இதுகாறும் இவள் சொல்லே எனதே
11 Jun 2013, 09:40:05
to santhav...@googlegroups.com
தீமை களையச் சினம் கொள்ளலாமா?
சினங் கொண்டான் சிவனென்றே
- செந்தீயின் கண்கொண்டோன்
- சிறுமையென் றோதலாமோ
மனங்கொண்டோர் நிலைதன்னை
- மாசபையின் முன்றலிலே
- மொழிந்திடத் தவறென்பதோ
வனங்கொண்டோர் குணங்கொண்டு
- வாழ்வின்று போகுங்கால்
- வகைசொல்லக் கணை கொள்வதோ
இனம்கண்டோர் சொற்பொருளும்
- இருப்பதெது பொய்யோ மெய்
- எடுத்ததை அலசல் நன்றோ
கரங்கொண்டான் மழுவேந்தி
- கையிலொரு வேல் சூலம்
- காண்பதும் கடவுளன்றோ
வரங்கொண்டே வாழவிடா
- வைகயத்து வதைசெய்வோர்
- வழிகாணச் சினந்தாரன்றோ
உரங்கொண்டே அடிமைத்தளை
- உடையென்றே எழுந்தவரும்
உள்ளத்தில் கொண்டார்சினமே
தரங்கொண்ட வாழ்வொன்றைத்
- தரணியிலே ஆக்கவெனத்
- தான் சினமுங் கொள்வாரன்றோ
இனங் கண்டு ஏற்பதுவோ
- இல்லையவை மெய்யென்று
- எடுத்துரைத்துப் பார்த்தபின்னர்
கனம் கொண்டதாயின் அக்
- கணம் கொண்டும் காற்றில்விடும்
- கருத்தற்ற தென்னில்விட்டும்
மனம் கொண்ட நெறிமுறைகள்
- மாற்றங்கள் தனையேற்று
- மாறிடுவோம் மாற்றிவைப்போம்
சினம்கொண்ட பொருள்கண்டு
- சீராக்கும் செயலாயின்
- சேர்ந்துநா முழைப்போம் வெல்வோம்
11 Jun 2013, 11:12:08
to santhav...@googlegroups.com
அன்பொடு வாழ்வோம்
குலவும் தென்றல் தருநல் மணமும் குருவிச் சலனமதும்
நிலவும் கலையும் முகிலும் அழகில் நெடுவான் நீள்விரிவும்
அலரும் மலரும் இளமைத் தனமும் அதனின் காண்பொலிவும்
புலரும் பொழுதும் புதுமைச் செவ்வான் புதிதாம் ஆதவனும்
வளையும் பிறையும் மறையும் முகிலும் வானக் கருமையதும்
துளையும் மூங்கில் நுழையும் வளியும் தொடரும் ஒலிதானும்
முளையும் வளரும் பயிரும் வயலும் கதிரும் கண்டுமனம்
விளைவும் எளிமை சுகமும் மனதில் மகிழ்வும் நாம்கொள்வோம்
பலரும் பணிவும் பயனும் பதிலும் பழகும் நட்புதனும்
உலரும் விறகும் எரியும் அனலும் அதுகொள் வெம்மையென
நலமும் அறியா நிலையும் செயலும் இலையாம் எனவாக்கி
உலகம் புகழும் உணர்வும் உரிமை எமதும் எனவாழ்வோம்
வலமும் இடமும் அறியும் மனதும் வரவும் இளமையொடு
பலமும் பதிலும் பலரின் மனமும் தெளியும் உணர்வோடு
கலகம் சுழியம் கணமும் சினமும் களங்கம் இலையென்றே
விலகும் இருளும் விடியும் உதயக் கிளர்வும் மனங்கொள்வோம்
மனமும் எளிதில் மருளும் கணமும் துயரும் தனதென்றே
கனமும் கடிதும் கருவம் கயமை காணும் பொருளாக்கி
வனமும் வளரும் உயிரின் குணமும் காணின் அதைப்போக்கி
தனமும் எழிலும் தகைமை பொருளும் தாங்கிச் செழிப்புறுவோம்
****************
11 Jun 2013, 16:30:18
to santhav...@googlegroups.com
விளையாட்டுத் தொல்லை (கற்பனைக் கவிதை)
என்தம்பி என்அன்னைக் கோர்செல்லப் பிள்ளை
இளமையில் தமிழன்னை தனைவேண்டி அன்பை
தன்னென்று கொள்ளவும் தமிழ்வந்துமுன்னே
தரை வீழும் மழை என்று நனைகின்ற தென்ன
பின்னும் தமிழ்பேசும் பெரியோரின் முன்னே
பிழைகொண்டு தமிழ்பாடும் மழலைக் குழந்தை
இன்னும் நற்கலைவண்ண எழில்பூத்த சோலை
இதிலாடிக் களிக்கின்ற இவன் செல்லப் பிள்ளை
பள்ளிக்குச் செல்லாத பாங்கோடு நின்றும்
பருவத்தே பயிர்செய்து வளம்காணும் பிள்ளை
அள்ளித்தா என்றாலும் அள்ளியே தருவான்
ஆகா இனிப்பென்றால் அதனையும் இடுவான்
துள்ளித்தான் ஓடுவான் தொலைதூரம் செல்வான்
தீந்தமிழ்ப் பாட்டொன்று தினம்கொண்டு வருவான்
கள்ளத்தனம் ஏதும் கொண்ட நெஞ்சில்லை
கற்பனை மட்டும்தான் காண்கின்ற தொல்லை
எண்ணத்தில் எண்ணற்ற எண்ணுவான் இன்னும்
இல்லையென்றால் அங்கு இருக்குதா மென்பான்
வண்ண த்தில் பேச்சாயும் வார்த்தையில் ஜாலம்
வைத்து ஒன்றுள்ளதை இல்லை யென்றாவான்
திண்ணம் இதோ சொன்ன பொய்தானே என்றால்
பொய்யில்லை அன்றுண்டு இன்றில்லை யென்பான்
கண்ணுக்குள் காண்பதோ கனவென்ற கோடி
கற்பனைகள் நிஜமென்று கதைகூறும் சேதி
மண்ணாக பொன்மேனி மாறு என்று வந்தால்
மகனென்று தாயிடம் கரமேந்தி நிற்பான்
எண்ணெண்று எண்ணாமல் தந்தாள் நிறைந்து
இளமைக்கு ஒருபிடி உரம்கொண்டு சேர்ப்பாள்
அண்டத்தைக் காக்கின்ற சக்தியின் பிள்ளை
அதனாலோ தீகொண்டு எரிகின்ற உள்ளே
மண்மீது வாழ்நாளில் செய்பாவம் தானோ
மலருக்கு தேனின்றி தீசுட்ட மெய்யோ
*********************
11 Jun 2013, 16:53:16
to santhav...@googlegroups.com
இதன் பொருள்:
1.
நாம் சொல்லி நல்வழிப் படுத்தலாம் . அல்லது கூட்டத்தில் வேறொருவர் மூலமாக
அவருக்கு நன்வழிகாட்டி அவரைக்கொண்டு அக்கூட்டத்தை நன்வழிப்படுத்தலாம்
அதைவிட்டு காரியத்தை கெடுத்து நிறுத்திவிடலாமா? (விட்டு செல்லச் சொல்ல)
அப்படியல்லாமல் நன்மைவழிகாட்டி நற்பெயர் பெறுவதே நன்று (சொல்லின் செல்வர்
என்ற புகழ் பெறுதல்)
2.
நன் நெறிகளை கூறி நல்வழிப்படுத்தி மதிப்பை பெற்றிடல்வேண்டும். அல்லது ஒன்றும்
கூறாமலேயே இடத்தைவிட்டு நீங்கிடல் வேண்டும். பிழையான வழிமுறைகளைக்கூறிச்
(செல்லப் பேச்சு- மழலைப்பேசு ) செல்லக்கூடாது.
அதேபோன்று சொல்லக் கூடாதவற்றை தீயன கூறிச்செல்லுதலும் கூடாது (சொல்லா சொல்வது)
3.
அறிவுரை கூறும்போது சில் என்று குளிரும் வார்த்தைகள் கொண்டு கூறவேண்டும்.
சுள் ளென்று மனதைக் குத்தும் வார்த்தைகளால் அறிவுரை சொல்லக்கூடாது.
அறிவுரைகளை தேன்போன்ற வார்த்தைகளால் (கள்- மது)
சொல்வது நன்று. இது முடியாவிட்டால் அவற்றைக் கைவிட்டுசெல்வதே நன்று
4. அறிவுரை சொல்லும்போது அதை கேட்ப்பவர் இருக்கவேண்டும். அதுபோல்
அதன்வழி கேட்டு நடக்கும் மனிதர்கள் வேண்டும். அப்படி நடக்காதவர் இருக்கும் பட்சத்தில்
( சொல்லச் சொல்லக் கேளாதவர் இருப்பின்) அவ்விடத்தில் சொல்லாமல் செல்வதே நன்று.
5. சொல்லும் வரை நீங்கள் சொல்லுங்கள் . நாங்கள் எண்ணியதைத்தான் செய்வோம் என்பவர்கள் இருந்தால்.
இவர்கள் முன் திரும்பத் திரும்பச்சொல்லும் வார்த்தை அவர்களை துன்புறுத்துவதாக அமையும். திரும்பத் திரும்ப
சொல்லும்போது யாரும் கேட்காவிட்டால் நாம் சொல்லும் முறையை மாற்றி வேறு வழியை
கைக்கொண்டு சமூகத்தை திருத்த முயற்சிக்க வேண்டும்
11 Jun 2013, 17:12:43
to santhav...@googlegroups.com
அருமையான கருத்து அழகானக் கவிதை
With regards
SuganthiVenkatesh
--
11 Jun 2013, 23:21:35
to santhav...@googlegroups.com
முருகப் பெருமானை சிறுவனாகக் கற்பனை செய்து எழுதினீர்களா?
SuganthiVenkatesh
SuganthiVenkatesh
--
15 Jun 2013, 12:55:26
to santhav...@googlegroups.com
நன்றிகள்! முருகப் பெருமானையல்ல! இதைக் கற்பனையாக எழுதினேன். ஒருவரையும் பொதுவாக குறிப்பிடவில்லை ! Mr.X என்று வைத்துக் கொள்வோம்
15 Jun 2013, 13:00:52
to santhav...@googlegroups.com
தீப் பொறி
பயிரென்ப நீருண்டு மண்ணோடு சேர்ந்து
பசுமைகொண் டுயர்வளர்ந் தோங்கும்
உயிரென்ப இறைதீயின் பொறியொன்று மேனி
இணைந்தின்ப வாழ்வென்றும் ஆகும்
கயிரென்று பிணைக்கின்ற வகையாகும் பாசம்
கடலென்றே எமை மூடினாலும்
தயவென்று தான்சக்தி அவளேற்றிப் பாடு
தரும் வாழ்வில் படகென்ற மீள்வு
நிலம்மீது நின்றாலும் சுழன்றோடும் பூமி
நிலைபோலும் நாம் கொண்ட வாழ்வும்
அலைகின்ற தென்றாலும் அகங்கார எண்ணம்
அதைமேவி இருள்கொண்டு மூடும்
வலைகொண்டே நாமள்ள வரும்மீனைப்போலும்
வரையின்றி கோபங்கள் தாபம்
தலைகொண்டு ஒளிமங்க புலனாசை தூண்டும்
தவித்தோடி செய் துன்பமாகும்
உலகென்ற துருவாக்கும் இறைசக்தி அன்பால்
எரிகின்ற நெருப்பென்ற சூடு
பலம்கொண்டு தீபொங்கி வெடிக்கும் கண்ணூடு
பாய்ந்தோடும் எரிகுன்றின் நீறு
நிலந்தானும் நீள்வானம் பேரண்டமெங்கும்
நெருப்பொன்றே நிறைசக்தி யாகும்
கலங்காதே உன்மேனி தீகொண்டபோது
காணும் உன் னுயிர்சக்தி யோடு
அன்னை கொண்டா ளந்தத் தீகொண்ட வெம்மை
அகங்காணும் ஞானத்தின் செம்மை
இன்னும் உன்னுடல்மீது சுடுகின்ற தேது
இது இன்றில் பிணமாகும் கூடு
தன்னாசை சிற்றின்ப தணிவென்ற தோடு
தகர்வாகும் உடலென்றபேறு
பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசை சுட்டு
புகழ்மேனி அழியும் பூப்போன்று
உள்ளத்தில் நல்லாசை நேர்மைக்கு பாதை
உருவாகும் அறம்கொண்டமேன்மை
கள்ளத்தில் மனம்நாடும் காட்டற்றுவெள்ளம்
கயமைக்கு துணைபோகும்நெஞ்சம்
வெள்ளத்தில் புகழோடு விளையாடி மோதி
விரயத்தில்உயிர்கொல்லும்யாவும்
அள்ளிச் சென்றாலும் உன் ஆத்மாவின்சோதி
அதுகாணும் அந்தத்தின் கூறு
19 Jun 2013, 20:10:16
to santhav...@googlegroups.com
என்ன கொடுமை தாயே
செங்கரும்பும் கைப்பதென்ன தேனருந்த பொய்ப்பதென்ன
செந்தமிழைத் தந்தவளே தாங்கிடுவேனோ
அங்கமெலாம் நொந்துருகி யான் எரியும் மெழுகெனவே
ஆவியென்று காற்றிடையே போய்விடுவேனோ
மங்குமொளி மாலையிலே மரம்நிறைந்த சோலை மலர்
மாறியிதழ் வாடிவிழும் காணுகின்றேனே
வெங்கனலில் வேகிடும் மெய் விட்டுயிரும்போவதெனில்
வேதனைஏன் விடியும்வரை விடைசொல்லு தாயோ
சிங்க நடை கொண்டிருந்தேன் செந்தமிழில் சந்தமிட்டேன்
செந்தணலில் போட்ட புழு என்றிடல் ஏனோ
எங்கும் இருள் செல்லும்வழி ஒன்றொளிர நீ இணைத்தாய்
இன்றுமனம் மாறியதேன் இடர் களைவாயோ
செங்கமலம் பூத்திருக்க செல்லும் அலை நீர்சுமக்க
சந்தணமாய் வாசமிடும் தென்றலும் நீவ
தெங்கினிடை சரசரத்து தென்னை யிலை ஆடமுகம்
திங்கள் இடைதான் மறைந்து சென்றிடும்வேளை
சங்கொலியும் சாமரையும், தந்துமலர் பூச்சொரிந்து
சங்கரரின் கோவிலிடை மந்திரமோத
அங்க மெலாம் மண்புரண்டு ஆடிவருந் தேரடியில்
ஆடவரும் பெண்ணும் நலம் கொண்டிட வேண்ட
பங்கினையே பாதிதர பாம்பணிவோன் மேனியிடை
பாகமதைக் கொண்டவளே பாசத்தினாலோ
இங்கிவனின் மேனியினை இததரைக்கு ஈந்துவிட
எண்ணியதால் இக்கொடுமை இழைத்திடுவாயோ
நோகுதடி மேனி உயிர் நொந்தழலில் வாடுதடி
நெஞ்சினிலே ஈவிரக்கம் கொண்டுவிடாயோ
போகுதடிஆவி பிரிந்தோடுதடி நான்மறுத்துப்
போட்ட தடைதானுயிரைக் காப்பதுமெய்யோ
வேகுதடி என்இதயம் வேதனையும் பெருகுதடீ
வெறிபிடித்து உயிர்வதைக்கு ஆவதும் ஏனோ
ஆகுதடிநாளிதெனின் அள்ளிஎடு என்றவன்யார்
எமனை விட்டு எனையெடுக்க இசைந்திடுவாயோ
19 Jun 2013, 20:30:44
to santhav...@googlegroups.com
வேண்டும் தனிமை
நல்லதொரு வாழ்வெடுத்திட வேண்டும் - அங்கே
நறுங்கனிகள் சுவைமிகுந்து பொலிந்த தருவேண்டும்
எல்லையற்று விரிந்திருந்திடவேண்டும் - சோலை
இளங்குயில்நான் இசைபடித்தே வலம்வரும்நிலை வேண்டும்
இல்லையெனத் துயர் இருந்திட வேண்டும் - அங்கே
ஏழ்மையுடன் இயலாமை இடமிழந்திடவேண்டும்
வல்லதொரு மனமெடுத்திட வேண்டும் - இனி
வருவதெல்லாம் இன்பமெனும் வளங்கொழித்திடவேண்டும்
கற்கும்மொழி தமிழ் நிறைத்திட வேண்டும் - பல
காவியங்கள் இலக்கியங்கள் கரைகடந்திட வேண்டும்
பொற்சிலையாய் தமிழ் ஜொலித்திட வேண்டும் - என்
பூஜையென்று கவிதையெனும் பூச்சொரிந்திட வேண்டும்
பற்றினிலே நானிழைந்திட வேண்டும் - தமிழ்
பாவையுந்தன் காலடியில் பணிபுரிந்திட வேண்டும்
உற்றதுயர் ஒன்றிலை யெனவாகும் - என்
உள்ளமதில் உனைநினைத்தே ஓங்கிடும் நிலைவேண்டும்
தேன் தமிழில் சுவைநிறைந்திட நாளும் - நான்
தீந்தமிழில் பாவளித்திட நீமகிழ்ந்திடவேண்டும்
வான் எழுந்து நான்பறந்திடும் இன்பம் - இவ்
வையகத்தில் வாழுகின்றவேளை கண்டிடவேண்டும்
ஏன்தமிழே எனை வருந்திடும்வாழ்வில் - எதில்
இன்பமது கொள்ளுவை யென்றியல் புணர்த்திட வேண்டும்
ஊன் உயிரும் சேர்ந்துழன்றிடும் நாளில் - என்
உடல்தனிப்பின் உயர் ஒளியில் ஒன்றுசேர்ந்திட வேண்டும்
22 Jun 2013, 13:01:47
to santhav...@googlegroups.com
எத்தனை நாளின்னும் ?
தொட்டுத் தொட்டழைந்து மெங்கள் தோலிற் சேறுபூசியெம்மைத்
திட்டித்தீர்க்க வாயடத்த தேனையா - நம்
தோலிற் பட்டதென்ன செய்யக் கூறையா
கட்டிக்கட்டி மெய்புரட்டிக் கால்பதித்துச் சீரழித்து
தட்டித் தாளம் போட்டவர்க்கு வாழ்வையா- நாமோ
தாழ்வுகொண்டு வாழும் ஈன சாதியா
எட்டி எட்டிக் கால்கள் வைத்தே ஏற்றங்கொண்டு நாம்நடந்து
கிட்டஏக உச்சிமலை பாரையா - அது
கிடுகிடுத்தே அனல்வெடித்த தேனையா
நட்டநடு வீதிவைத்து நாலுதேசம் பார்த்திருக்கக்
கொட்டி நச்சுக் குண்டெறிந்தும் மௌனமா - இந்தக்
கூட்டத்துக்குப் பேரும் என்ன கூறையா
பட்டுப்பட்டே உத்தரித்த பாவமின்னும் தீரவில்லைக்
கொட்டும் ரத்தம் இன்னுமின்னும் தேவையா - நாமும்
கொண்ட துன்பம் நிற்கும் ஆண்டு கோடியா
தட்டித் தட்டித் தீயிலிட்டுத் தாளமிட்டே ஆடவிட்டுத்
தட்டையேந்திப் பிச்சையுண்டு வாழவா - வீரன்
தங்கத் தமிழ் என்ற வார்த்தை தேய்வதா
நிட்டை மௌனம் நிர்மலத்தில் நீண்டதோர் தவங்கிடந்து
கட்டியழும் பெண்கள் பார்த்துச் சொல்வதா - இது
காலந்தந்த கோலமென்று கூறவா
செட்டை இரண்டடித்து வானிற் செல்லுகின்ற பட்சிதானும்
வட்டமாகச் சேர்ந்து சுற்றக் காணையா - நாமும்
வானக்கூட்டம் போலஒன்று சேர்வமா
திட்டமிட்டுக் குருவிசுட்டு தென்னந்தோட்டந் தீயிலிட்டுக்
கட்டிவைத்த மனைசிதைக்கக் காணவா -எங்கள்
கையிலொன்று மில்லையென்று நோகவா
பட்டுரத்தி னத்தையிட்டுப் பாவிஎன்னைத் தம்பியென்று
கட்டிமுத்தம் தந்தபோது கண்களும் - மூடிக்
காலனின் கயிற்றை மாலை என்பதா
பொட்டுவைத்துக் காதிற்பூவைச் சுற்றிவிட்டுச் செல்வதென்ன
விட்டு நீயும் வீறெழுந்து கொள்ளடா - இந்த
விந்தையென்ப தெங்கள் பக்கம் வீணையா
நட்டுவைத்த சிற்பமென்று நாளும் சோர்ந்திருத்தல் விட்டு
எட்டிக்கால்கள் வைத்துசெல்லக் கூடையா - நாமும்
ஏறுபோல் நடந்துவீறு கொள்வமா
\\\\\\\\\\\\\\\
23 Jun 2013, 05:43:25
to santhav...@googlegroups.com
வணக்கம் கரிகாலன்,
சுட்டிச் சுட்டிக் காட்டும் பாடல்
சோகமென்ற போதும் சுட்டு
தட்டிக் கேட்க வைக்குதையா தமிழனை -அவன்
தாழ் திறத்தல் என்று இன்னும் தெரியலே
தூங்குவதே வாழ்க்கை என்றும்
சோம்பலதே சொர்கமென்றும்
ஏங்குவதில் இன்பம் காணும் ஏழையை -எந்த
எரியைக்கொண்டு எழுப்புவதோ புரியலே
கூவுவதெம் வேலை இனி
விடியும்போது விடியும் என்னும்
சேவல் குரல் மங்குதையா தெருவிலே -ஒரு
சிறு சுடரும் தெரியவில்லை கிழக்கிலே
எப்படியும் இம்மலையைச்
சிற்றுளிகள் பிளந்து விடும்
தப்பிதமே இன்றிவரும் நாளினில் -நல்ல
சாதனையைக் காண்போம் நந்தம் வாழ்வினில்.
அன்புடன் புலவர் இராம மூர்த்தி
2013/6/22 kirikasan <kana...@gmail.com>
24 Jun 2013, 03:41:28
to சந்தவசந்தம்
>> எப்படியும் இம்மலையைச்
சிற்றுளிகள் பிளந்து விடும்
> தப்பிதமே இன்றிவரும் நாளினில் -நல்ல
>சாதனையைக் காண்போம் நந்தம் வாழ்வினில்.
நொந்த உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும் சொற்கள் கொண்ட அழகிய பாடல்.
அனந்த்
பி.கு. கிரிகாசன் கரிகாலன் ஆனது ஏன்? :-))
2013/6/22 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>
வணக்கம் கரிகாலன்,சுட்டிச் சுட்டிக் காட்டும் பாடல்சோகமென்ற போதும் சுட்டுதட்டிக் கேட்க வைக்குதையா தமிழனை -அவன்தாழ் திறத்தல் என்று இன்னும் தெரியலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக