சனி, 26 ஜூன், 2021

  பொய்மையும் வாய்மையுடைத்து


மின்னலெழுந்த மேல்வானிடையே கரு
மேகம் இடித்தது நெஞ்சதிர
பொன்னொளிஒன்றிடை மின்னமின்ன நானும்
பேச்சிழந்து முன்னே காணுகிறேன்
என்ன நடந்தது வானடியில் இரு       
கண்களும் கூசஇருள்மறைய
எந்தனைப் போலஇன் னோர் உருவம் அங்கு
எட்டிநடந்தண்டை ஏகக்கண்டேன்

முன்னேவியந்திட நின்றவனை - நோக்கி
மேலும்கீழுமெனப் பார்த்து நிற்க
சின்ன உதடுகள் மெல்ல விரிந் திடச்
சிந்திய ஏளனம் கண்டுகொண்டேன்
என்ன எனையொத்த மானிடனே நீயோ
எந்த உலகத்தின் சொந்தமென்றேன்
கன்னம் சிவந்திட வெஞ்சினத்தால் அவன்
காணும் திசையினில் கேட்டுவைத்தேன்

உன்னுளிருப்பவன் நானே என்றான் என்றும்
உன்னொடு சேர்ந்திவன் ஒன்றேயென்றான்
என்னைவிட்டும் நீயும் இல்லை யென்றான் என்றும்
என்னுயிரோ உந்தன் உள்ளே என்றான்
உன்னையு மென்னையும்செய்தவளோ இங்கே
உன்னிலே என்னையும் என்னிலுன்னை
உன்னதமாகவே வாழவைத்தாள் இன்று
உன்னையும் என்னையும் .இரண்டுசெய்தாள்

என்னையும் உன்னையும் ஒன்றிருத்தி அன்னை
இன்றுவரை செய்த அத்தனையும்   
இன்றோ ஈர்பாதையில் இட்டுச்செல்ல எண்ணி
ஏனோ ஒருவழிசெய் திணைத்தாள்
என்முகம் காட்டவென் றுன்முகத்தில் இங்கே
ஓடிவந்தே னென்று கூறி யவன்
உன்நிலை இங்கில்லை அங்கே என்றான் நானோ
அங்கில்லை இங்கென ஊடறுத்தேன்

செய்வது ஏதெனச் சித்தமதில் பெரும்
சிந்தனை பல்கிப் பெருகிடவே
பொய்யுரைத்தான் மேவிப் புன்னகைத்தான் பெரும்
போதைதரும் சொல்லில் பூசித்தவன்
மெய்யுரைத்தான் மேனிசந்தணமும் நல்ல
மாமலர் தீங்கனிச் சோலைமணம்
கையசைவில் தனும்காட்டியவன் அவை
காண என் மேனியில் தென்புசெய்தான்

கையை பிடித்தவன் அன்பினிலே அந்தக்
காட்சிகளின் வசம் மூழ்கிவிட்டேன்
பெய்குளிர்செய் மழை மேக த்திலே எந்தன்
போகு வழிகண்டும் பேதலித்தேன்
வெய்யிலிலே ஒருதோற்றம்கொண்டான் பின்பு
வெண்ணிலவில் மாறி வேறுசெய்தான்
செய்கையிலே மீண்டும் ஓர்தடவை என
சுற்றும் மண்ணிலே பிறந்துவிட்டேன்

இரண்டு எனம்பெரும் சக்திவகை அங்கு
ஈர்முனையில் எனைப்பேதமிட
கண்டு கொள்ளாய் சக்தி என்றவனின்எதிர்
காணூ வகை ஒருதீயழுந்தே
சுண்டுவிரல் காட்டிச் சின்னவனே யுந்தன்
தோற்றம்  இரண்டல்ல ஒன்றே யென்றாள்
இரண்டு கண்டாய் அது நூறு என்றாள் அது
நீயல்ல நீயெனும் நானேஎன்றாள்

சொல்லித்தரச் சொல்லில் சொல்லியவன் இவன்
சொல்லிற் பிழைசெய்யின் சொல்லின்வளம்
சொல்லடுக்கும் நிலைசொல்நிறுத்தி யெந்தன்
சொல்லும் திறன்கெடச் செய்துவிடு
சொல்லுவது எந்தன் செய்கையல்ல கொடும்
சொல்லுமல்ல இவை சத்தியம் காண்
சொல்லொடுத்தே இவன்  தீமைசெய்யினுடன்
சோதியினால் மேனி சுட்டுவிடு

பெய்திடித்த மழைஓய்ந்து விட ஒரு
பேரமைதி எங்கும் தோன்றியது
மெய்சிலிர்க்க உடல் புல்லரித்தே உடல்
மேவிடும் தீஎன ஊர்ந்துசெல்ல
கையெடுத்தே உயர் வான்பரப்பை  எண்ணிக்
காத்திடும் தெய்வமே நன்றிஎன்றேன்
செய்யெடுத்தே  கவி சொல்லுவெனும் உயிர்
செல்லடுக்கில் உணர்வூறநின்றேன்

kirikasan

unread,
19 Jan 2014, 17:07:32
to santhav...@googlegroups.com

          குப்பை மேனி

என்னநினைத்து மண்ணில் மாந்தர்
  இகழ்ந்து பிறர் நலனைப்பேசும்
தன்மை எடுத்தனரோ அறியேன்
  தவிக்கும் உளம்கொண்டு நின்றேன்
மின்னும் மகிழ்ச்சி கொண்டமுகமும் 
 மேனி மினுக்கும் விதம் கண்டால்,
இன்னும் குழந்தை மனம்தானோ
 இருக்கும் நிலை கிணற்றில் மீனோ

நேசமுடைத்த இந்த உடலும்
  நெய்யில் எரிதீயென் றுணர்வும்
கூசும் ஒளிகதிரி னுதயம் கொள்ளும்
  துயில் கலையக் காணீர்
கேசம் கலைந்தவிதம் வாயின்
   கிடப்பில் வழிந்தஎச்சில்  தோற்றம்
வீசும் வாடை சிறுநீரும்
   விளைந்து கழித்த வகையாவும்

காணச் சகிக்காத நிலையும்
  கண்டும் மனம்கொள்ளும் கர்வம்
நாணமெழும் குடலின் நாற்றம்
   நகமும் முடியும் கழிவாக்கம்
வீணாய் பூசிமெழுகேற்றி
   வியர்வை துடைத்து மனம் மாற்றி
ஆணும்பெண்ணும் கொண்ட அவலம்
   அழகுவாழ்க்கை எனும் மாயம்

மேனி கொளும் அழகை போற்றும்
  மாந்தர் குடல் புழுக்கள் வாழும்,
தேனின் உதடு கசப்பாகும் 
  தீனும் கிடந்து வாய் நாறும்
தானிவ் வுடலுணர்வு காதல்
  தன்னைத் தரும் இளமை இன்பம்
ஏனோ கழிவுகளின் இறக்கம்
  இருக்கும் பாதைகளின் மோகம்

கூடிக் கொண்டியற்றும் செயலும்
   குழந்தை  குடும்பமெனப் போற்றும்
ஆடி திரியுமிந்த உலகில்
   ஆகத்திமிர் பிடித்த நிலையும்
கோடியெனக் காலம்போயும்
   கொள்ளும் கனவுகலையாதோ
தேடித் திரிந்து பணம் கொண்டு 
   தேவையற்ற வழிபோவர்

சாலச் சிறந்த பொய்கள் கூறித் 
    தானே அழகென்றிவர் ஆடும்
காலக் கருமை கொண்டமனிதா
   கண்கள் திறப்பது மெப்போது
நீலம் நிறைந்த  விண்ணில் நின்று
 நீயும் சிந்தைகொண்டு பாராய்
கோலம் மனித வாழ்வெதுவோ
  கூட்டிக் கழித்தும் உண்மை பாராய்

பூமி யென்றசாக் கடையில்
   புழுக்களாய் நெளியும் மனிதர்
தாமிக் கழிவுஎனும் குருதி
  தன்னில் கிடந்தழியும் சதையும்
போமிவ் வுணர்ச்சி கொளும் பாவம்
   பிறரைக் கெடுக்கு மனபாவம்
நாமிவ் வழியில் சொல்லும்பொய்கள்
   நலிவு களவு பெருமச்சம்

ஆன தொரு வாழ்வைகொண்டு
  அகந்தை நிறைந் தயலைக் கெடுக்கும்
தானேஎனும் கர்வம் மீறித்
  தன்னில் வெறுமை எனும் ஞானம்
ஏனோ இதைமறந்து காணும்
  இயல்பு புரியவில்லை நானும்
வீணே உரைத்துமென்ன உலகில்
   விந்தை மனம் இருளின் குகையே

+****************

kirikasan

unread,
20 Jan 2014, 07:27:39
to santhav...@googlegroups.com
  அணைப்பின் துயரோ சுகமோ

நீரணைத்து நதிகுதித்துப் பாயுதம்மா - அங்கு
 நீள்கருத்த முகிலணைத்த வேளை குன்றில்
வேரணைக்க மண்நெகிழ்ந்து விட்டதாலே - நல்ல
 வீறெடுத்து மரம் வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட சேற்றுமண்ணில் - இன்று
  ஏற்றம்கண்டு நெல்நிமிர்ந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தோமம்மா - இந்த
   ஞாபகத்தை மேனி கொண்டவாழ்வின்போது

போரணைக்க வாழ்வணைந்த பூமிமீதில் - ஏன்
 போதணைக்க அன்னை கையில் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன   

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயே
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு மாற்றம் - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த மேனிதானவ்
வாறிணைந்து வாழும்போது விட்டுநிற்கா ஓர்
வேடிக்கை என்றேகம் துன்பம் செய்ததென்ன
சேறணைத்த மண்விளைந்த பூவென்றாகி  காலம்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

****************

kirikasan

unread,
21 Jan 2014, 20:23:27
to santhav...@googlegroups.com

             கனவுகளில் காணும் இன்பம்

கிண்கிணென்றே ஒலிக்கின்ற மணிகள்- கூடநின்றே
குளுகுளுக்கத் தொட்டோடும் காற்று -கண்மறைய
விண்ணிருந்து தூவுமெழிற் பூக்கள் - விழியகன்று
வெளுவெளுக்கும் வரைகாணும் காட்சி சுற்றிவர
பண்ணெழுந்து பாடலிசைநாதம் பக்கத்தில்
பாதமொலி கேட்டாடும் பூவை  ஆடலிடை
புன்னகைத்து கண்ணடிக்கும் பேதை -கண்டுமவன்
பூவெடுத்து நுகர்கிற காட்சி

மாலையிலே மஞ்சள் வெயில்மோகம் மனம்மயங்க
மணி முத்து வைடூர்யம் வைரம் எட்டிவைக்க
காலைத்தொடும் கனகமுடன் ரத்னம் கண்டெடுக்கக்
கோமேதகம் பக்கமெழில் நீலம் மரகதமோ
மேலைவைத்த தென்ன புஷ்பராகம் ஆசைதரும்
மேகலைக ளோடுஒட்டி யாணம் வெள்ளிமணி
மூலையிலே கொட்டிவைத்தகாசு கண்டுஅள்ள
மின்னுமவை கண்ணாடித் தூள்கள்

வெண்ணிலவு பொன்னொளிர்ந்த வேளை கண்சிமிட்டி
விளையாடிச் சிரிக்கும் விண்மீன்கள் பூமியிலே
தண்சுனையில் ஆடுமலை வேகம் கண்ணழகாம்
தூரத்தேபோகும் முகில் காட்சி இத்தருணம்
எண்ணமதில் ஏற்றமுறும் இன்பம் எழுந்துவிழும்
ஆழ்கடலின் ஓடுமலை போலும் எங்கிருந்தோ
கண்ணெதிரில் மின்னுகின்ற வானம் கடுமிருளில்’
கைதட்டும் ஆகாயப் பெண்கள்

போதைதரும் கனவுகளின் மிச்சம் தேன்மலராம்
பூவிரலில் நாதமிடும்வீணை புல்லரிக்கக்
கோதையவள் கைபிடிக்கும் மென்மை கைமலரக்
குவளையிலே தேன்கனியின் சாறு மூதறிஞர்
சூதுஎனும்  விளையாட்டில் ஆர்வம் சுற்றிநிற்க
துரியோதனன் தருமர்வாதம் ஆடவென
பாதகமோ பண்பறியேன் நானும் பார்க்கவிழி
பரிதாபம் தூக்கம் விடும் நேரம்

kirikasan

unread,
26 Jan 2014, 12:27:52
to santhav...@googlegroups.com
             சுடரே ஒளியே!

காலத்தின் சுடரே காணரும் விளக்கே காட்சியின் கருமுதலே
ஞாலத்தின் ஒளியே ஞாபகத் தாயே நானுன்னைக் காணேனோ
சீலத்தின் உருவே சிந்தனை வடிவே தீந்தமிழ் தருபவளே
கோலத்தை நானும் கண்ணொடுகாணும் காலமும் வாராதோ


நீலத்தில் தீயும் நெஞ்சத்தில் சூடும் நீயெனக் கண்டுகொண்டேன்
ஆலத்தில் சாவும் அன்னத்தில் வாழ்வும் ஆக்கி யளித்தவளே
சாலத்தில் பொய்மை சற்குணம் யாவும் வைத்தவள் நீயன்றோ
தூலத்தில் மென்மை தூரத்தில் தோற்றம் தேவிநீ கொண்டாயோ

காற்றொடு மூச்சாய் கண்ணிடை ஒளியாய் கற்பனையில் வாழ்வும்
தோற்பொதிஉள்ளே துன்பத்தின் தோற்றம் தந்தெமைச்செய்தாயே
சீற்றத்தில் ஆர்வம் செய்முறை தோல்வி சிறுமையில் உழலென்று
நாற்றத்தில் புரளும் நகைப்பினை கொள்ளும் நலிவையும் தந்ததென்ன

மாற்றத்து மூலம் மங்கையின் யௌவனம் மந்திரப் பொன்னழகு
வேற்றதன் ஆர்வம் வீறிட்ட போக்கு வித்திடச் செய்தவளும்
கூற்றுவன் கொள்ளக் குற்றத்தின் தீர்ப்பு கொள்கையும் செய்தளித்து
தேற்றலுமின்றித் தேகம் வதைப்பாய்  தீர்ப்புக்கள் இப்படியோ

சாற்றின் இனிமை சேரும் கரும்பாய் செய்துலகில் படைத்தாய்
ஊற்றெழும் உள்ள வெம்மை வெறுப்பு உள்ளத்தில் தோன்றவிட்டு
சேற்றினில் பூக்கும் செந்தாமரைபோல்  தேகத்தைச் செய்தவளும்
போற்செழும் பூவில் போதையை தந்தோர் போதில் கருகுவதேன்??
    **

kirikasan

unread,
27 Jan 2014, 00:37:47
to santhav...@googlegroups.com
நேற்ற்இருந்தாய்  இன்றிலௌயே வெண்ணிலாவேநீலவெளிமேக்த்திலேவெனிலவே
த்ஹ்ற்றிவிட்டால்பொன்னிலிர்வாஇய்நீதுள்ளிமிக்ல்தாவுகைஇம்ன் பிஉல்லிமனெ
சார்றுவதென் என்மந்தில் வ்ன்ன்ன்லவெசர்ரிநெஇலம்ப்ர்க்க்க்க்க் வேண்டும் என்னில்வ்

வீற்றிரெருட்ந்ஹ்மன்னகல்ம் பைந்தமிஅலி விடுமனிகோவிகடு வாந்தநடேஎ
தூர்ரியெமிகேவல்ல்ம்வெஇலாவெஇஎந்த துட்டாடகிசெஉய்ய்தென்ன கன்னில்நீரே
ஏர்ரிவைததீபஎங்கேவ்ன்னிலவெ இர்டுள்படந்தும்மூடி`யத்ந்ன் சொல்நிலாவே
ஆர்ரிவிடுகாரில்ல்யஙகங்கைஒலெஉல்ல அழகுகலி நீகிவிடுஅனைன்லே
***************************

இது என்ன புதுக்கவிதை என்று எண்ணிவிடாதீர்கள் என் நடுங்கும் கரங்களைக் கொண்டு மனதில் தோன்றும் ஒரு கவிதையை
கணினியில் உள்ளிடும்போது இப்படியாக இருக்கும். கவிதை வரிகள் ஊற்றெடுக்கும் போது நிறுத்தாமல் எழுதிமுடிப்பேன்  பின்னர் கவிதை எழுதி முடிந்ததும் வரிகளை ஆறுதலாக சிரமப்பட்டு திருத்துவேன்
சில வரிகள்என்னாலேயே புரிந்துகொள்ள முடியாமல் போய் கைவிட்ட கவிதைகள் பல உண்டு

இது கவியரங்க கவிதைக்காக முதலெழுதியது வரிகள் பின்பு மாற்றினேன் . இப்படி இன்னும் எத்தனைநாளோ ?
*************************

கண்கொண்டுபார்க்கவே கூசும் எல்க்கரியம்செய்டனோ கேட்கவேப்யாருஇம்
புன்கொட மனமாக் நொகும் ஹெகபுல்லரிதச்சமும் உய்ள்ள்அய்ட்ட்திலோடும்
விண்கொண்ட ஓல்ங்கல் தன்னுன்ம் விடுஇயத இர்அவ்போடு மரைந்திடப்பொகு
எண்ஓண்டு எழுதாஹ மொட்ஹ்தம் இஅவர் இருதிட்டைஅடமெங்குமானதெரத்டஹ்ம்

நடுநிசிநானங்குசென்ரேன்  அதுநடமாட் கூடதெரிஎஉந்திட்ட[ஓதும்
எடுஎன்ரு ப்டம்ச்வேண்டுமென்ரான் என் நிஒருநன்ப்ன் பயம்கொண் வீட்டிலே நின்ரான்
விடுஎன்ருநான் வந்துகொண்டேன் இதுவ்டியமுஜ்ன் எதுகொல்பேம் தெரியமல்நின்றேன்
சுடுகாட்டடின்மன்ம் வீச் நேங்குஇம் ஒன்ற்$உதிஎரியதிருளேஉடே திசையெங்கும் வெலியய

இதுதனேஎரிந்தொஇட்ட தேசம் இவ்வூரிஉலே ஒருவரிஉம் இலயின்ரு என்ரார்
புதுமைதான் எதநடிவவ்ந்தென் அண்டக் புற்நனூ ரெனும்வீஅர் நிலம்கான்வந்தேன்
எதுதனும் நான்கன்வில்லை இ8னி ஏதெனும்ப்-அயனில்லை என்ரானபோது
ம்எதுவாக ஒர் பிலை அழுதாளோ  அவல்ல் மெலியகுரல்கெட்டுஇதிடுகுறுநின்றேன்

சிறுகல்லைல் வரந்திட்ட கொட்டய் அவள் சிலையாக இருக்கின்ற போலொருதோர்ரம்
 வறுமைக்குல் வ்வட நின்ர்ராலே அவள் வன்னமுகம் தீயில் ஒளியாக மீஅன்
வெறேஉமைக்குல் கிட்நதிட்ட் மனைமிவல் வந்ததுஎவ்வாறு வழிகேடக் எண்ணி
குறுகிய்யும் குழைந்த உனரோடு அக்க்குமரிக்கு வய்அதன் உருவத்நெரிஉங்கி

ய்யரம்ம நீஎன்ருஜ்கேடென் இந்த்  இரவுகுல் நீ எங்கு வந்தயென்ரேகி
பாரம என்ரவந்தன்னை அவல் பலமக்சிரித்திட பாய்ந்தேபின்சென்ப்ரேன்
தூரம்நான் ஓடினால்கூட திகப்பில்லை அவல்ம்கொண்டசிஒரிப்பென்ரல்கோரம்
நீஅரைமாவிழிகொண்டுகான் வல்நிமிர்ந்திட்ட் விதமோ ஓர் நிகழ்வுஜ்குஎல்லை

kirikasan

unread,
30 Jan 2014, 10:46:09
to santhav...@googlegroups.com

*********************************************
!!!உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையேன் வெண்ணிலாவே - அந்த
நீலவெளி மேகத்திலே விண்ணுலாவியே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்து யார் மறைத்தார் கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதலுளம் கனிய வைப்பாய் காண்பவர்மீதே
சாற்றுமொழி வார்த்தை கொண்டேன் பொன்னின் நிலாவே- இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயே

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும் நிலாவே
சீற்றம்கொள்ளினும் ஈற்றில் ஒன்றிடு கொள்கைவிடாதே - நீ
சேர்ந்து நின்றிடு தீமைவென்றிடு விடிந்திடும்நாளே

............

பசுபதி

unread,
30 Jan 2014, 13:25:58
to santhav...@googlegroups.com
pAraattugaL ! 


2014-01-30 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.--

siva siva

unread,
30 Jan 2014, 13:59:26
to santhavasantham
Congratulations!


2014-01-30 kirikasan <kana...@gmail.com>:

Lalitha and Suryanarayanan

unread,
30 Jan 2014, 14:05:24
to santhav...@googlegroups.com
பாராட்டுகள் ! இன்னும் பற்பல விருதுகளும் பரிசுகளும் வேக வேகம் வந்து குமிக!
வாழ்க வாழ்க!

சிவசூரி.


2014-01-30 kirikasan <kana...@gmail.com>

கடிச்சம்பாடி

unread,
30 Jan 2014, 15:41:47
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

சங்கரன் 


2014-01-30 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
16 Feb 2014, 19:28:31
to santhav...@googlegroups.com

அன்புடன் அனைவருக்கும்
  வாழ்த்துக்கள் தந்ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டேன்|! இந்தப் பக்கத்துக்கே வரவில்லை . காரணம் விரைவில் கூறுவேன்||!

பாராட்டுகள் வழங்கிய பெரியவர்கள் அனைவருக்கும் இதன்மூலம் நன்றி  கூறிக்கொள்ளுகிறேன்
அன்புடன்ன் கிரிகாசன்

kirikasan

unread,
16 Feb 2014, 19:38:26
to santhav...@googlegroups.com

         இடை வேளை

நீலமலைதனின் ஓசைக்குயில் ஒன்று
நின்று பாடுது -அதன்
கோலக்குர லிசை கொள்ளும் அழகென்ன
காண ஏங்குது- தினம்
சாலச்சிறந்தெழில் காணும் மலர்சிரித்
தாடும் வேளையில்  - மனம்
காலக் கடலிடை ஆடும் அலை யெனக்
காணத் தோன்றலேன்

மேலைத் திசையினில் வானக்கதிர் மறைந்
தெங்கு போனது --அதில்
சோலை கொண்டமரம் மீதிலுள்ள குயில்
சோர்ந்து வாடுதோ - கதிர் .
மூலைத்திர ளிருள் முற்றும் அகன்றிட  
மெல்லத் தோன்றுமா - அங்கு
ஓலைத்திரை யசைத்தோடும் தென்றல் சுட்டு
உள்ளம் மாறுமோ

காணும் பொழுதயல் கற்பனை யென்றொரு
கானம் கேட்டது- அது
பேணும் சுகம்நெஞ்சில் பிள்ளை..மனதென
பேச வைத்தது - மங்கை
பூணும் மலர்த்தொடை பூவில் எழும் மணம்
போலும் நீரொடு குளிர்
வீணு முழன்றலை ஆடும் நளினமென்
ஆகும் வாழ்விது

நாணும் அழகொடு பூவை  முகமென
நாளின் வானடி தனும்
கோணும் வளை வில்லின் கோலமெனுமடி
கொண்ட செம்மையில் ஒரு
தூணும் இதுவெனத் தோன்றும் உரமொடு
தூய மன்னவன் தனை
காணும் நிலைகொண்ட காரிகையோ இந்த
கண்கள் மூடுமோ

கண்ணின் மணியெனக் காணக்கிடைத்தை
கண்ணும் காணு0மோ - பக்கம்
எண்ணி அணைந்தெங்கும் ஏகும்நிழல் தனும்
என்னை நீங்குமோ - ஒரு
தண்மலர்ச் சோலையில் தாவிமுயல் சென்ற
தன்மை யாகுமோ சொலும்
பண்ணில் சினமெழப் பாடும் தொழில்தனைப்
பக்கம் வைப்பதோ
****************

kirikasan

unread,
18 Feb 2014, 19:44:28
to santhav...@googlegroups.com

          சக்தியே தா சக்தி

சிந்தையிலே வந்த கவி சொந்தமுமல்ல -  அதை
விந்தையிதே தந்தவிதம் எந்தனுமல்ல
நந்தவனம் கொள்மலர்கள் தந்தவள் தானே   -இன்று
இந்தவகை சொல்லிடவும் செய்தவள்காணே
சந்திரனும் செங்கதிரால் மின்னுதல் போலே - சக்தி
தந்திடயான் இங்கொளிரும் தன்மை கொண்டேனே
அந்தகனும் கொண்டவிழி கண்டிடல் போலே - கவி
சந்தமெனக் கொண்டதிவன் ஒன்றெனக் காணே

எந்த ஒளி இன்றியிருள் சென்றதுமில்லை - அதை
தந்தசுடர் என்றுமுள தந்தமுமில்லை
பந்தமதில் நின்றதுதீ யணைந்தது போலும்   -ஒரு
அந்தமதை  யெங்களுடல் கொண்டிருந்தாலும்
சிந்தனையால் செந்தணலாய் வெந்திடுந் தேகம் -  உயிர்
வந்தவழி சென்றுயர்வான் சங்கமமாகும்
அந்தரவான் கண்டதுவென் சிந்தனை கூடும் - உயிர்
விந்தையெனும் செஞ்சுடரில் ஒன்றிடப் போகும்

மின்னுமொளி அன்னை உரு அற்றவளாமோ - அவள்
இன்னுமொளிர் சூரியனில் பற்பல தீயோ
கன்னங் கரு அண்டமதில் `கற்பனைக் கெட்டா - ஒரு
பொன்னுருவோ பூகம்பமோ பூந்திரிதானோ
வன்மைகொளோ மென்மையெனும் வெள்ளொளிர் தீயோ -உயர்
தன்மையிலே எண்ணங்களின் வெம்மை கொண்டாளோ
என்னகதிர் காண்விழியும் கண்குருடாகும் -  எனில்
பென்னம்பெரு தீயவளைக் கண்டிடலாமோ

சந்தணம் நல் வாசமிடும் இவ்விளை மேனி - வெறும்
கந்தகமாய் தீப்பிடித் தெரிந்திடும் வாசம்
சொந்தமில்லை என்றபின்பும் சந்தணம் பூசி - உயர்
சுந்தரமென் றாகுவிதம் சிந்தனைக்காமோ
மந்தமிதே இந்தநிலை விட்டிருள் நீங்க - ஒளிர்
உந்து சுழல் அண்டமதை ஆக்கிய சோதி
முந்தியவள் கொள்ளமுதல் இன்பமேவேண்டின் - அன்னை
சந்தமெழ  வாழ்வினிமை தந்திடுவாளே


kirikasan

unread,
21 Feb 2014, 09:11:40
to santhav...@googlegroups.com
ஒரு வானொலியில் கவியரங்கம் . தலைப்பு
’நட்பெனப்படுவது’

கவியரங்கத்தில் கலந்துகொள்ள வில்லை .ஆனால் தலைப்பு கிடைத்ததே எழுதிப்பார்த்தேன்


        நட்பெனப்படுவது


நட்பெனப் படுவது* நன்மைக ளானால்
  நட்புடை படுவது நன்மையைத் தாரும்
நட்பெனப் படுவது நன்மையென்றானால்
  நட்புடன் திகழ்வதில் நம்நிலை யோங்கும்
நட்பெனப் படர்வன நஞ்சென ஆனால்
  நட்டமும் நம்முடை நல்லுயிர்போக்கும்
நட்புடை தோழரு மல்ல ரென்றானால் **
 நாட்டினில் தீமைகள் நம்பலி கேட்கும்

நட்புடை தோளரும் மல்ல ரென்றானால்***
  நல்லவராகிடின் நம்முயிர் வாழும்’
நட்புடைத் தோளரும் வல்லமை கொள்ளின்
   நாட்டினி லின்பமும் நம்மினம் கொள்ளும்
நட்புடைத்தோழரின் ஒன்றிய மனதால்
   நாட்டமும் அன்புடன் நன்மை திகழ்ந்து
நட்டு வளர்பயிர்  காப்போன் அன்ன
    நாட்டை வளம் பெற நாமும் காப்போம்

நட்பெனப் படுவன மாக்களும் நாட்டில்
  நட்புடைத் தோழமை நாடியும் வந்தால்
நட்பெனப் படுவதை நல்குவர்  நாமும்
  நாட்டையிழந்திட நாதிகளாகி
நட்ட நடுத்தெரு காடென சொந்தம்
  நாட்டைப் பிடித்தவர் விட்டகுகைக்குள்
நட்பெனப் படுவன வஞ்சமிழைக்க
  நம்பியதால் பெறும் நிலைதிரி பெண்ணி

நட்பெ னுடுக்கை யிழந்தவன் கைபோல்
  நாட்டையிழந்திடும் வேளையில் பற்றி
நட்ட நடுங்கிய நாட்களும் போக
 நட்டமில்லைஎன நம்முயிர் துஞ்சி
நட்ட  மலர்ச்செடி பூத்த விதத்தில்        
  நட்பொடு குழுமிய நல்மனக் கூட்டம்
நட்புடைத்தே விரிதோளுடை நெஞ்சோர்
  நம்முடைத்தே எனக்காட்டி மண்மீட்பாய்


************************
இங்கே பிரித்துப் பொருள் கொள்க
* - நட்பென  படுவது (பட்டுப்போவது-- அழிந்துபோவது நன்மைகளானால்)
அதே அடியில்  === நட்பு உடைபடுவது

** நட்புடை தோழரும் அல்லர் என்றானல் - தோழமை அற்றவர்களானால்
 -  அ
***நட்புடை தோளரும் மல்ல ரென்றானால்-- நல்ல புடைத்த தோளைக் கொண்டவர்கள் மல்லர்களானால்

அடுத்த அடி
நட்புடை தோள் அரும் வல்லமை கொள்ளின்


நட்பெனப் படு ’வனமாக்களும்’ நாட்டில்
  நட்புடைத் தோழமை நாடியும் வந்தால்
நட்பெனப் படு ‘வதை’ நல்குவர்  நாமும்
  நாட்டையிழந்திட நாதிகளாகி

எனு கொள்க

kirikasan

unread,
21 Feb 2014, 13:47:22
to santhav...@googlegroups.com

         சந்தம் கண்ட விந்தை

பொருள் தந்தாள் பொருமிடவும் செய்தாள் - எனைப்
பூ தொடுத்து மாலை செய்ய விட்டாள்
அருளிலையே ஆயினும் யான் கண்டேன் ஒரு
அற்புதத்தை உள்ளுயிரில்கொண்டேன்
வருமொழிகள் வார்த்தை கண்டு நொந்தேன் - தலை
வாசற்படி மீதடித்து வீழ்ந்தேன்
அருமை அதில அழுதழுது சொன்னேன் - ஆகா
அத்தனையும் பூக்களென்று கொண்டேன்

பெரு உணர்ச்சி உள்ளமதில் ஓட  -  ஓர்
பிரளயமும் என்னிடையே ஆக
கருமை என இரவு கொண்டபோதும் - என்
கால் நடந்த பாதையிலே தீபம்
திருவென வோர்தெய்வம் காத்த போதும்  ஒரு
திருடன் என்றுபயம்  அளித்த வேறும்
உருகியதே நெஞ்சமதில் உண்மை-  அங்கு
உதிர மலர் கொண்டதென்ன நன்மை

உணர்வுகளில் தீயை ஏற்றி வைத்தாள் -  என்
உருவமதில் பேர் இணைத்து விட்டாள்
மணமெடுக்க பூவில் காற்று வீசும்  - அந்த
மாலைவெயில் கூடச் சுட்டுஆறும்
கணக்கினிலே கூட்டும் விதம் வேறு ஆயின்
கண்டபதில் ஒன்றுதானே கூறின்
துணி எனவே தெய்வம் தந்த சக்தி அதில்
தோன்ற வைத்ததோ இதற்கு நன்றி


கிரிகாசன்

kirikasan

unread,
21 Feb 2014, 21:45:07
to santhav...@googlegroups.com
          
          சக்தியின் ஊற்றே !!!

வித்தகிதேவி விதைத்தவள் நிற்கையில்
  வித்தினைக் குறையிடலாமோ
சத்தமும் தந்தவள் சத்தியமாகிட ச்
  சித்தமு ரண்படலாமோ
செத்தவனாகிக் கிடந்தவன் மீதொரு
  சக்தியைத் தந்தவள் தானே
எத்தனை நாளெனஎண்ணிய மேனியும்
  இத்தரை காண்கையி லேனோ

குத்தகை தந்தவள் கேட்கவிலை யெனிற்
 கொண்டதும் என்னுடை யாமோ
புத்தொளிக் கூடமும் பற்பல கீதமும்
  போய்க் கொள்ளென் றாக்கிய தேனோ
வித்தைகள் யாவையும் வேடிக்கையாக்கிட
  வேதனைப் படயிவன் யாரோ
நித்திய வாழ்விலை  நிற்கிறவரையிலும்
  நீயென்ன யாரெனலாமோ

புத்தகமோ பல பொற்கிழியோ இவன்
  போகும் வழிக்கினி இல்லை
சுத்தமெனும் மனம்கொண்டதென்ன ஒரு
  பித்தனைப் போலிவன் கல்லை
வைத்தவன் தட்டிச்சிலை வடித்தான் அந்த
 வானமே கலைதனுக் கெல்லை
எத்தனை எண்ணினும் ஏடுதனில் அவள்
  இட்டவை தானே கற்கை

பத்தெனக் கூறிப் படித்திடும் வேளையில்
  பத்தை யுணர்ந்திடவேண்டும்
புத்தியிலே ஒளி பட்டுவிடா தெனின்
  பத்தும் இருள்கொளப்  பார்க்கும்
சக்தியின் விண்ணொளி பட்டுவிடாதெனில்
  சந்திரனே மதி யென்றும்
எத்துறை யாயினும் ஏதுநடப்பினும்
  எம்மனம் சக்தியின் ஊற்றே !


(இது நான் யோசித்து எழுதவில்லை -கனகலிங்கம்)

kirikasan

unread,
25 Feb 2014, 09:35:24
to santhav...@googlegroups.com

  விதியை  மாற்றி எழுது

வெளுத்து வானடி சிவக்கின்றதே - அட
விழித்தே யெழு தமிழா
பளுத்த முகிலயல் விரைகின்றதே - அது
பதைத்த துடிப்பெடு வா
கழுத்தில் எதிரியும் கயிறிடவா - விழி
கறுத்து மழிவதுவா    
விழுத்து முடல் தனி உயிரெனவே - இவர்
விருப்பம் எனவிடவா

குளித்து விட எமதுதிரமதா - அதைக்
கொடுக்க மனமிசைவா
அளித்ததெது துயர் அகவலியா அதை
அடுத்துப் பிரிஉயிரா
களித்துஅவர் குலம் குதியிடவா அங்கு
கிழிப்பதெம துடலா
இளித்து சரியென இரந்திடவா  இது
இயற்கை யறமெனவா

விழித்தும் எழுவது எதுதினமோ அது
வரைக்கும் துயில் கொளவா
பழித்துக் கிடப்பது இறைமையதோ - அவர்
பறித்துச் செலவிடவோ
கொழித்து நிறைவது கொள் நிதியோ - அவர்
கொடுத்த வலி வதையோ
சுழித்து விழிகளைப் பெறுவதுவோ - உடல்
சிறுத்த உணர்வுனதோ

தெளித்த நீர்த்துளி அலையெனவே - மன
தெடுத்து நிரையினில் வா
பழித்த நிலை தமிழ்க்கேன் மனிதா - நிலம்
பறித்த வகை  சரியா
செழித்த தமிழ்நிலை சிறுத்திடவும் - நாம்
சிரித்துக் களித்திடவா
அழித்து மெழுத எம்தலை விதியை - நாம்
அடுத்து செயலிட வா

**************

kirikasan

unread,
1 Mar 2014, 23:18:36
to santhav...@googlegroups.com
                
        குரல்கள்

எங்கிருந்தோ சில பல குரல்கள்கேட்கின்றன:

காதலைப்பொ சுக்குவோ மெம்
 கண்கள் மூடிக் கொள்ளுவோம்
பாதகத் தருக்கள் மீது
  பாவை யென்னும் பூக்களை
மேதகைப் படுத்துவோரை
  மோதியும் முன்னேறுவோம்
பூ`தகத் தக`ப் பொன்மேனி
  பேசுவோரைச் சாடுவோம்


(கூட்டத்தில் ஒரு பெண் பாடுகிறாள்)

தட்டி இருகைகள் ஆடுங்கடி யிந்த
தாமரைப் பாதங்கள் தூக்கியடி தன்னை
எட்டி வைத்தே சுழன் றாடுங்கடி யிந்த
ஏந்திழை பூவையர் ஈனமென்றே யெண்ணிக்
கொட்டி நகைப்பவர் கூற்றினையே என்றும்
கொண்டவர் ஞானமும் குற்றமென்றே விரல்
சுட்டி கலந்திங்கே ஆடுங்கடி யவர்
சொல்லை மறுத்தின்னல் போக்குங்கடி

ஒட்டியுறவாடி கொண்டதென்ன ஒரு
உற்ற வலியுயிர் கொள்ளுதெனத் துணை
எட்டிக்கரம் கொண்ட இன்பமெலாம் இன்று
இல்லையெனில் இழிவாகிடுமோ சுயம்
விட்டு மறந்தொரு வாழ்வினையே கொண்டு
வீணில் கிடந்தனம் சேறுஎனில் அதை
கட்டி உடல்செய்த தெய்வம்மென்ன அதன்
காரணம் தன்னை இகழ்வதோடி


(அங்கே நிற்கும் ஒருஆணின் குரல் தொடர்கிறது~)

தேடிமுதுமையும் வந்திடலாம் இளஞ்
தென்றல் மறந்த பூவாகிடலாம் மனம்
ஆடி மகிழ்ந்திட்ட காலங்களை இன்று
ஆகாத தொன்றெனில் ஏதுநினை வதில்
சூடிமகிழ்ந்து வண்டாளும் மலர் தனைக்
கொண்டவள் கூந்தல் நுகர்ந்து மணம் அது
நாடியதேது என்றானந்தமும் கொண்ட
நாளும், மறப்பரோ ஞானப்பெண்ணே

தேகமதை நினைந்தாலும் பிழை அதை
தேடும் உணர்வினைக் கூறல்பிழை யெனில்
ஆகத் தமிழ் காதல் சொல்லவிலை யெனில்
ஆன முழுமை இழந்ததென்பேன் உமை
பாகனும் காதலை கொண்டவனே அவன்
பாசமகன் வேலன் தேடியதில் பக்கம்
ஏகமல்ல இரு தெய்வத்துணை கொண்ட
தேது இது குற்றம் குற்றமதோ

கூடிய தேவர்கள் இந்திரனும் அங்கு
கொண்ட ஒளிமுகச் சந்திரனும் பக்கம்
நாடியணைத்தது பெண்களன்றோ அவர்
நம்மில் உணர்வினை தந்தாரன்றோ நாமும்
ஆடிக் களைத்துடல் சோர்ந்திடலாம் அதன்
அற்புத சக்தியும்போய் விடலாம் உள்ள
மோடி வெறுப்பதில் நியாமுண்டோ அதன்
உன்னத சக்தியை தூற்றிடவோ

எங்கு மிருப்பது காதலொன்றே அதை
உள்ளம் நினைத்திடல் அன்பு ஒன்றே அதை
இங்கு படைத்தவர் தெய்வங்களே உயர்
வின்றி  காதல்கொளும் இச்சைதனை இழிந்
தங்கு பச்சைபச் சொல்லடுக்கி அதில்
தன்னும் மனம் கூசச் செய்வதெனில் அதை
நீங்குஎன நீதி கொண்டரைத்தல் தனை
நெஞ்சில் கொளல் நீதி என்றுரைப்பேன்

காந்த உணர்வெடுத் தோடிப் பசி கொண்டு
கைப்பிடித்தே இல்லம் தான்புகுந்து அவள்
கூந்தல் கொண்ட நறு வாசமெழும் தன்மை
கொண்டது ஏதென யாமறிந்து சில
மாந்தர் குலமெழ நாம்படைத்துப் பின்னர்
மாபெரும் வாழ்வினில் ஓய்வுகொண்டு மனம்
சாந்தமுறுமிந்த வேளையிலே காலச்
சக்கரம் ஓடிய பாதை தனில் கொண்ட

கூறும் உணர்வது  குற்றமெனில் அது
கொண்டபிழை வந்த சொல்லினிலா அங்கு
ஆறிக் கிடப்பது சாம்பலெனில் அதன்
ஆழத்திலே பூத்த தீயிருக்கும் அதில்
ஏறிநடக்கும்கால் தீய்க்குதெனில் அதில்
எந்த திசையினில் குற்றமென்பேன் வழி
மாறிநடப்பவர் மேற்பிழையா அங்கு
மாவெனப்பூத்த நெருப்பினிலா ?


******

kirikasan

unread,
6 Mar 2014, 02:58:41
to santhav...@googlegroups.com
      
           தென்றலே புயலாகும் தீரம் தா


தென்றலே வாராயோ தேடுவதென் எனைத்
  தீண்டவும் மாட்டாயோ -பக்கம்
நின்றவ ளன்னையும்  நீவிய கூந்தலை
  நீதொட்டுச் செல்லாயோ - இன்று
சென்றதென் வாழ்வினில் சீரிய தாம்மனச்
   செம்மையும் காணேனே - இங்கு
ஒன்றென நின்றனள்  உள்ளத்தில் மெல்லியள்
   உன்துணை கூடாதோ

கன்றென ஆவினைக் காணத் துடித்திடும்
  காலமும் கொண்டேனோ - இதில்
வென்றவர் செய்கையில் வீணில் கொடுமையை
  வீரமென்றார் நீயோ -அன்று
தென்றல் என்றாகிடத்  தேசம் நடந்ததென்
   தீப்புயல் ஆகாயோ -  அவர்
சொன்னது பொய்மைகள் சுடெழவோ புன்மை
 சுக்கு நூறாக்காயோ

மென்னலைப் பொய்கையின் மாமலர்மீதினில்
மேவிடும் மாலை யிருள் - அதைப்
பொன்னென ஆக்கிடப் போதை தரு மாலைப்
போதினில் மஞ்சள்வெயில்  நின்று
வென்றனர் இன்றென  வீரத்தமிழினம்  
வெற்றியைப்  போற்றி மனம் - கொண்ட
துன்பியல் நீங்கிடத்  தோழமை  கொள்ளுமோர்
தோற்றமும் காண்போமோ

மின்னிடும் வானத்துப் பொன்னிழை  தாரகை
முற்றும் ஒளிர்ந்துநிற்க- தெய்வ
சன்னதியில் கரம்  கூப்பித் தொழுதிட்டு
சேர்நுதல் நீறுமிட்டு  - நல்ல
பன்மலர்வாசமும் சந்தனமும் எழப் 
பாடியே இன்பமொடு - இனி
செந்தமிழ் நாவில் திறன் கொள்ளுமோ வந்து
தென்றலே கூறிவிடு

மென்றவர் உண்டதோ எங்கள் சுதந்திரம்  
மீண்டும் பிறப்பதெப்போ  -  இனி
ஒன்றெனக்கூடிட  எம்தமிழ் வீரமும்
ஓங்கி யொளிர்வதெப்போ - நீயும்
தென்றலே வன்புய  லாகிட தேசத்தின்
தொன்மைத்  தமிழினத்தை - இன்று
நன்றெனக் காத்திட நாட்டில் சுழன்றிடு  
நன்மையைத் தாராயோ

இன்று தவித்திடும்  என்னுயிர் தன்னதில்
ஏற்றமும் தந்து செல்லாய் - அந்தக்
குன்றில் உதிக்கின்ற சோதியும்போல்முகம்
சிந்திடும் புன்னகையில் - மனம்
ஒன்றிடல்போலிவள் மங்கைமகிழ்ந்திட  
மாபெரும் தூய்மைகொண்டு- சுழல்
தென்றலே வந்தெனைத்  தீண்டிச்சிலிர்த்திடத்
தீரமும்  தாராயோ

kirikasan

unread,
7 Mar 2014, 18:59:51
to santhav...@googlegroups.com


  பொறுத்தது பூமி ! பொங்குமோ ஆழி  ?


நீலத்திரைக்கடல் ஓரத்திலே   நானும்
நின்றிருந்தேன்  வரும்பேரலைகள்
ஞாலத் தரையென்னும் மேடையிலே எழில்
 நாட்டியமாடத் திரண்டுவந்தும்
சாலச் சிறந்திட்ட பாவங்களைக் கொண்டு
சற்று நெளிந்தலை ஆடிடினும்
ஓலத்தை  ஒத்தொரு கூக்குரலில் கடல்
ஓங்கி ஒலிப்பதும் ஏனோ என்றேன்

காலைக் கருக்கலும் நாள்விடிந்தும் கடற்
காரிகையே இன்னும் அச்சமென்ன
மேலைத்திசை விழுந் தாதவனும் அதோ
மின்னிக் களிப்பில்மீண் டேறுகிறான்
சேலை கறுப்பிளம் மேனி விட்டு உந்தன்
சிந்தை வருந்திய நேரம்கெட்டு
தோலைக் குளிர்கொள நீலமெனும் ஆடை
துள்ளும் எழிலுற  நீயுடுத்தே

ஆடும் இன்பம் விட்டு ஆனதென்ன  செம்மை
யாகி அவ் வாதவன் போற்றி நின்றாய்
மூடுவெயில் உந்தன் நீர்கவர்ந்தே அந்த
மேகவெளியினில் பஞ்செனும் வான்
ஓடும் அசைந்திட மென் துகிலாய்  முகில்
ஓங்கும் விதானத் திரை யமைத்தான்
கேடுதனைச் சொல்லி நெஞ்சலறியென்ன
கேட்டுநீதி எங்கும் வந்ததுண்டோ

என்றது மாழி  நீர்தா னெழுந்து அலை
ஓங்கிய வேகத்தில் கீழ்விழுந்து
பின்னிப் புரண்டிடும் தென்றல்தனை  யதன்
பக்கம் குளிரிடும்  தன்மையெண்ணி
மென்னுள்ளம் பீதியில் `அல்லலுறச் செய்து
மீண்டும்  மலர்வனச் சோலை சென்றே
கன்னம் தடவியும் பொன்மலரின்வாசம்
காற்றே கவர்ந்தேகும்  தன்மை கண்டேன்

எந்தன் கதையினைக் கேட்டறிவாய்  வானம்
 ஏறும் மதியன்று  தேய்ந்தழுதாள்
நந்தவனப் பூக்கள் சோர்ந்து விழ அதை
நாடிடும் வண்டு ரீங் காரமிட 
செந்தணல் ஆற்றிடத் தூவும் மழை கேட்டுச்
சோவெனக்  கொட்டிக் குமுறியதில்
நிந்தனை செய்வதில் ஆவதென்ன  இதை
நீயருகே வந்து கேட்டிடென்றாள்

நித்தம் அலைந்தும் திரை உயரும் ஒரு
நேரிய வாழ்வினைக் கொண்டிருந்தேன்
சுத்தம்  எனப்பல நன்மைசெய்வேன் இந்தச்
சுந்தர பூமியி ல் மானிடர்கள்
ரத்தம் வழிந்திட ச் செய்கொலைகல் தம்மை
ராஜ முத்திரை கொண்டாற்றுகிரர்
செத்துப்போ என்றே சிரசறுத்து தமிழ்
சொல்லும்  இனத்தைப் புதைத்தெரித்தார்

உத்தமன் ஆதவன் ஓடிவிழுந்தெழும் 
உன்னத பொன்னெழில் மாலையிலே
புத்துணர் வோடுயர் காலையிலே அப்
போதினில் வானம் செங்  கோலமிட
எத்தனை இன்பமென் றாடிதும் இன்று
ஏனோ மறைந் துயர்மேவியதாய்
குத்தியழித்திடும் செந்தமிழர் உடல்
 கொட்டும் உதிரம் கண்டஞ்சுதடா

அந்தியிலும் காலைப்போதினிலும் அந்த
ஆதவனின் எழில் செம்மைவண்ணம் 
செந்தமிழர் வீரம் காட்டுதென நானும்
தேகம் மிளிர்ந்திட மின்னலுற்றேன்
சிந்திவிழுத்தது நற்தமிழர் கொள்சு
தந்திரம்  வேண்டிய  செம்மைகண்டு
அந்தியும் காலையும்  ஏக்கமுற்றும் அது
ஆறாதெந் நேரமும்  ஆர்ப்பரித்தேன் 
                                 
சத்தியமே என்றும் வெற்றி கொள்ளும் எனச்
சாத்திரம் சரிதை நூல்களெல்லாம்
பத்திபல கொண்டு காண்கையிலே  இந்தப்
பாரில் நிகழ்வது வேறல்லவோ
ரத்தக்குளிப்பினில் போதைகொண்டு  இங்கு
வெட்டிக்களித்திடும் புல்லரினை
சத்தமின்றி இந்தப் பூமிவிட்டு அவர்
சுற்றும் விண்ணிற்கீ  ழெறிந்தாலென்ன

சுத்தமனங்கொண்ட பூமியென இந்தச்
சோதியெழும் இன்ப வானத்திலே
சித்தமெடுஎனச் சொல்லியென்ன  அதைச்
செய்ததில்லை கொண்டபுத்தியிலே
மொத்தமும் மண்ணெனப் போனதுவோ இந்த
மோச மிழைப்பவர் குற்றங்களை ’
அத்தனையும் இந்தப் பூமிதாங்கும் இந்த
ஆழக்கடல் ஓர்தினம்  பொங்குமம்மா

*****************

kirikasan

unread,
7 Mar 2014, 19:07:33
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும் இறுதிவரி

//ஆழ்கடல் ஓர்தினம் பொங்குமம்மா//

kirikasan

unread,
12 Mar 2014, 21:23:31
to santhav...@googlegroups.com

      எந்தன் நெஞ்சம்

சொல்லக் கொதிக்க வில்லை நெஞ்சம்  - ஒரு
சூடும் உணர்வுக் கில்லைப் பஞ்சம்
செல்லக் கருதும்வழி தேடும் - மனம்
சேரக் காலில் வலிவேண்டும்
மெல்லக் கறுக்கும் அடிவானம் -  அந்த
மேகத்திடை ஒளிரும் திங்கள்
இல்லைக் கருமை கொண்டதேனோ  - இது
ஏனோ அமாவாசை தானோ

பல்லைக் கடித்தும் சினமில்லை - இந்தப்
பார்வை அனல்பறக்கவில்லை
வெல்ல நிலையெடுக்கும் தன்மை - அந்த
வீறின் எழுச்சியிங்கே இல்லை
பொல்லைப் பிடித்தகுனி நடையும்  - அங்கு  
பேசுந் திருமொழியில் குழைவும்
கல்லை நிகர்த்த மனம் மீது  - இறை
 காணக் கொடுத்து வைத்ததேது

மல்லுக் குகந்த இளமேனி - அது
மாறிக் கிடக்கு துயில்மேவி
வில்லுகிணை கூரின்பார்வை  - அது
வெளுத்துக்கிடப்பதென்ன, மேனி
வல்லோர் எரியுந் தீகொள்ள  - உடன்
வாவென் றழைக்கும் விதி சொல்ல
கொல்லக் கணங்கள் எண்ணும்போது இங்கு
கொதிப்ப தெப்படியோ கூறு

முல்லைக் கொடிபடர்ந்து பூக்கும்  அதன்
மோகமலர் வழிவை நோக்கும்
செல்லக் கிளி யிருக்கும் கூட்டில் - அங்கு
திறக்கும்  கதவுமொருநாளில்
அல்லல் படும் உயிரென்றோடி  - அது
அடுத்த பெருவெளியை நாடி
இல்லம் எனும் உயிரின் ஜோதி  அதில்
இணையும் வரை கொதிக்கும் நெஞ்சம்

இடது வலதும் என ஓடும் -  பின்
இடமும் மாறிமேல்கீழும்
தொடவும்  உணர்வு குதித்தோடும் - பின்
தொலைவென் றிழுத்து  எங்குமோடும்
குடமும் எனக் கொள்ளும் குருதி அதை
கூட்டி இழுக்கும் விசை தூண்டி
நடமும் கொள் இதயம் சூட்டில் - ஒரு
நாளில் கொதித்திணையும் தீயில்

***************

kirikasan

unread,
13 Mar 2014, 13:01:43
to santhav...@googlegroups.com

          ஆடும் கலைஞன்


ஆட்டமென்ன ஆடும்வரை ஆடுவேன் -நான்
ஆண்டவன் கைப் பம்பரமாய்  சுற்றுவேன்
கூட்டமென்ன கூறினும் நின்றாடுவேன் - நான்
கொப்பிருந்து கொப்பில் தாவி ஓடுவேன்
நாட்டமென்ன ஞானமதின்  கூட்டுத்தான் - அந்த
நாள்வரையும் கேலி கூத்து ஆட்டம்தான்
வீட்டினிலே வெறுமை கண்ட வேட்கைதான்-  இன்று
வேதனையில்  விதி நடத்தும் வேட்டைதான்

கோட்டையிலே கூத்தடிக்கும் மன்னவன் - நான்
கொண்டதிலே சூனியத்தின் காவலன்
போட்டியிலே  புலமையற்ற நாவிலன் இன்னும்
பொய்மை கூறும் ஆற்றலற்ற கேவலன்
பாட்டினிலே ராகமின்றிப் பாடுவோன் -அவை
பார்த்திருக்கத் தப்புத்தாளம் போடுவோன்
வாட்டியவர் வெஞ்சினங்கள் கூட்டுவோன்  கொண்ட
வாழ்க்கையிலே  வேடிக்கைசெய் விநோதனன்

நாட்டியத்தில் நானு மோர்கோ மாளிதான் - நல்ல
நாலு கலை தேர்ந்திடாத  பாவிதான்
பூட்டிவைக்க ஏதுமில் லப்பாவிதான் - என்
புன்னகையில்  கோணும் மனம் நூறுதான்
சூட்டினிலே சோதிபெற்ற  மீதிநான்  - பதில்
சொல்ல வந்தால்நாஉழறும் பேடிதான்
ஆட்டிவைக்கும் சக்தி கொண்ட அன்புதான்  - அவள்
அரவணைக்கும்  வரையிலாடும் பொம்மைதான்

********************

kirikasan

unread,
13 Mar 2014, 19:49:33
to santhav...@googlegroups.com

             அன்பே இன்பத்தின் வழி

சினம் எழவே  தீமை போக்கும் சக்தி - எங்கள்
சிந்தையெலாம் கொண்டதவள் சக்தி
மனம் மெழுகா யாக்குவதும் சக்தி  - அந்த
மாய விநோதங் களவள் யுக்தி
கனமெழுந்து கொள்ளும் இட்ட சக்தி-  எம்மில்
காட்டுமன்பு தெய்வ இறைபக்தி
தினமெழுந்து வேண்டுவது  சித்தி - அதைத்
தேடுவதில் மனம்பெறுமாம் சுத்தி

எழுவதுவும் விழுவதுவும் அவளால்  - ஆயின்
எண்ணும்  மனம் கொள்வதென்ன நிகழ்வால்
அழுவதுவும் சிரிப்பதுவும்  அருளால் - அன்னை
ஆக்கத்திலே வாழ்வுகாணும் திருநாள்
உழுதமகன் உண்பதென தருவாள் - இல்லை
ஓய்ந்து கிடந்தால் முழுதும் கரிநாள்
பழுத்தகனி கசக்குதெனில் பழமா - குற்றம்
பறித்தவனின் கரமெடுத்த தவறா?

இருந்த விடின்  உயிர் உடலின்  சேர்க்கை - பின்
இருப்பதென்ன உடன் கருகும் யாக்கை
இருபதிலோ இரண்டு தசம் காணும் - உள்ளம்
இருப்பதிலே பொய்யில் மெய்யைக் காணும்
இருபதிலோ இல்லை இந்தக்கேள்வி - தானும்
இருபதியை விட்ட பின்னர் ஆவி      
இருளினுறை வானின் சக்திதேவி  -அதில்
இணைவதுண்டோ நானறியாப் பாவி

கரும்பினிலே அடி இனிக்கும் என்றார் - வாழ்வில்
காணும் சுகம் அடியிலன்று அன்பால்
அருவமெனும் உருவமற்ற  இறைவன் - தந்த
அழகியதோர் உணர்வு கொண்டு நிறைவான்
துருவம் இரண்டு கொண்ட திந்த பூமி - அதில்
துடி துடித் து ஓடும் வகை நீங்கி
அருகிருந்து ஆக்குமெண்ணம்  கொண்டு அன்பில்
ஆடிப்பாடு தோன்று இன்பம்நூறு

**********************

Ram

unread,
13 Mar 2014, 20:32:21
to சந்தவசந்தம்2013/11/28 kirikasan <kana...@gmail.com>

     பரிமாணம்

மாறும் உலகில் மாற்றம் ஒன்றே
மாறாதென்றே சொன்னார்
வேறும்பலவும் விதியும் மாறும்
விளைவை வாழ்வில் கண்டோம்
கூறும் பலவாய்த் தேகம் கொல்லக் 
கூடும் கூட்டம்  மாறாச்
சேறும் மிடையே நெளியும் புழுவின்
சிந்தை கொள்ளக் கண்டோம்

ஆறும் கடலும் அதிலேயோடும்
அலைகள் மாறக் காணோம்
நாறும் பூவும் நல்லோர் வாசம்
நாளும் கண்டோம் கொண்டோம்
சீறும் புலியும் சிங்கம் தவளை
சிறிதோர் சிட்டுக்குருவி
தேறும் மெலியும் திங்கள் செயலும்
திகழத் தினமும் கண்டோம்
        

ஏறும் போலும் நடைகொள் தமிழர்
இரங்கும் மாற்றம் கண்டோம்
நீறும் பூத்தே நிழலை விட்டே
.நெருப்பி லழியும் தேகம்
சாறும் புளியக், கனியாய் வாழ்வில்
சதையில் மோகம்கொண்டே
கூறும் போடும் மிருகக் கூட்டம்
கொடிதே மாறக் காணோம்

வீறும் கொண்டே வளையா நெஞ்சும்
விருந்தென் றெமனைச்சேர
தாறும் மாறும் சொரியும் குண்டின்
தாக்கம் அழியக் கண்டோம்
தூறும் மழையில் ஓடும்நதியும்
திரைக் கொள்கடலும் இந்நாள்
தோறும் ஓவென் றலறும் சத்தம்
தோன்றும் மாற்றம் காணோம்

ஆயின் உலகில் மாற்றம் ஒன்றே
மாறா தென்னும் போதில்
தாயின் அன்பும் தாரும் வாழ்வின்
தனமும் பொருளும் காணும்
நோயின் வகையும் நிற்கும் உயரம்
நீதி நேர்மை எண்ணம்
போயின் பத்தை தேடும், ஆசை
புலனும் மாறக் கண்டோம்

காயும் பழமாய்க் கனியக் கண்டோம்
காலத்தின் விஞ்ஞானம்
ஆய்வும் பயனாய் ஆக்கும் பொருளும்
அதனில் மாற்றம் கண்டோம்
தீயும் ஒளியும் போலும் அறிவில்
தெரியும் புதுமை வழியில்
ஒயும் வகையென்றில்லா கவிதை
இன்னோர் வளம்கொண்டலென்

புதுமை என்றார் பேச்சை வானில்
போகும் அலையென்றாக்கி
பதுமை போலும் நிழல்கள் ;ஆடப்
படமென் றுயிர்போற் செய்தார்
மதுமை விழிகள் கொண்டோர் ஆளும்
மாற்றம் உலகில் செய்தார்
இது மைகொண்டே எழுதும்கவிதை
இன்னோர் வகை கொண்டாலென்?

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அருமை

kirikasan

unread,
14 Mar 2014, 20:58:07
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள் ஐயா!

அன்புடன் கிரிகாசன்
*******************************************

On Thursday, March 13, 2014 7:32:21 PM UTC, Ram wrote: அருமை
 
2013/11/28 kirikasan <kana...@gmail.com>

     பரிமாணம்

மாறும் உலகில் மாற்றம் ஒன்றே
மாறாதென்றே சொன்னார்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

 
...

kirikasan

unread,
14 Mar 2014, 21:08:03
to santhav...@googlegroups.com

          சக்தியே வாழ்வு கொடு

வானாக்கி  வானத்தை வில்லாக்கி விண்மீது
வடிவாக்கி விசைகோள்கள்  உருவாக்கினாள்
தீநாக்கின் தீரம்கொள்  செழிவாக்கி  தீப் பந்தாய் 
தினம்காணும் சூரியன் உருவாக்கினாள்
தானாக்கி செய்வெப்பம் தணிவாக்கி இரவென்னும்
தன்மைக்கும் விளைவாக்கி தருமம் செய்தாள்
ஏனாக்கி இன்பத்தை இகம்மீது துன்பத்தை
இரண்டாக்கி வைத்தும்பின் இன்னல் தந்தாள்

தேனாக்கி தேன்கொள்ள மலராக்கி மலர்வண்ணம்
திகழ்கின்ற இதழாக்கி எழிலாக்கினாள்
பூநக்கி ஏனாக்கிப் போயுண்ணப் பசியீந்து புதிராக்கிப்
பூநொந்தும் உதிரச் செய்தாள்
ஊனாக்கி ஊன்வாழ உயிராக்கி உயிர்கொல்ல 
உண்மைக்கும் எதிராக்கி ஓரினத்தை
ஏனாக்கி விட்டாள் நல்  லினிமைக்குத் தமிழாக்கி 
இதயத்தைக் கொல்கின்ற  இழிவாக்கினாள்

மானாக்கித் துள்ளென்றும் மகிழ்வாக்கிக் கண்மீது
மருள்கின்ற மென்மைக்கு வித்திட்டவள்
மேனாக்கி மேன்மைகொள் குலமாக்கி கொள்ளென்று
மதுவின்பத் தமிழ் சொல்லக் குடிசெய்தவள்
கூனாக்கிக் குனிகின்ற விதமாக்கி வீழென்று
குழியாக்கிக் கொல்லென்று வகை செய்ததேன்
தீனாக்கித் தின்னென்றும் விலங்காக்கித் தமிழ்நங்கை
திமிர்காம வெறியர்க்கோ  பலியாவதேன்

ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்கொண்ட வாழ்வின்று
அடிமைக்கு நிகராக்கி அறங்கொல்லவும்
வீணாக்கிச் சிதையென்று வேட்கை கள் உருவாக்கி
விளையாடும் விதிவெல்ல வழிவிட்டதேன்
காணாக்கி டந்தென்ன கண்மூடி கொண்டென்ன
கரந்தூக்கி விழிகொட்டி கதறிக்கொண்டோம்
பேணாக்கீ ழ்விட்டெம்மை பிழையாக்கித் துவளென்று 
பூவாக்கிக்  குரங்கின்கை கொள்ளா காவாய்!

****************************

kirikasan

unread,
16 Mar 2014, 22:44:57
to santhav...@googlegroups.com
எனது கவிதைகளை  9 பகுதிகளாக பிரித்து
இணைய தளத்தில் ஏற்றியுள்ளேன்

பார்க்க
http://www.kuyilinosai.fulba.com

மறக்காமல் ஒருமுறையேனும் வந்து பாருங்கள்
http://www.kuyilinosai.fulba.com/

நன்றிகள் அன்புடன்
கிரிகாசன்

kirikasan

unread,
20 Mar 2014, 19:47:09
to santhav...@googlegroups.com
எனது கவிதை  webpage , தற்காலிக நிறுத்தம்.  மீண்டும் சில நாட்களில் வரலாம்
  கூட்டுக்குள் விதியோ


நாட்டுக்கு நல்லது செய்பவர் யாருளர்
வீட்டுக்குள் நீ கிடந்தால் - அவர்
போட்டுச் சிதைத்திடும் பூவையர் கண்டுமுன்
பாட்டுக்கு நீயிருந்தால் - இந்தக்
கேட்டுக்கு ஓர்முடிவுண்டோ எழுந்துசெல்
வாட்டும்துயர் களைந்தே -உள்
நாட்டுக்கு வாழ்ந்திடும் எம்மவர்காத்திடு
கோட்டுக்குள் எல்லைவைத்தே

கூட்டுக்குள் வைத்தவன் கொல்லும் தமிழ்இனம்
கொட்டுமிரத்த வெள்ளம் - ஓர்
நீட்டுக்கு ஆறென ஓடி நனைக்குது
நீதியின் கால்க ளையும் - அவன்
வேட்டைக்குத் தீனியென் றாகும் தமிழ் கணடு
வெஞ்சினம் கொள்ளலின்றி - வெறும்
சாட்டுக்கு நாமழு துள்ளம் மறந்திடில்
சாவது எம்மினம்தான்

வீட்டுக்குள் வந்தவன் வெற்றியென்றால் விட்டு
ஓட்டத்தில் நாம்போவதோ - அவன்
போட்டும் உடைத்திடப் பூக்களும் பிஞ்சதும்
பார்த்துக் கிடந்திடவோ - வெகு
சூட்டுக்குள் நெய்யென பற்றி எரிந்திடத்
தேகம் அழிவதுதான் - இறை
போட்டகணக்கென எண்ணம் கொள்ளாதுடன்
காக்க இணைந்துவிடு

பூட்டுக்குச் சாவியும் நீயல்லவோ திடம்
காட்டி நடைகொள்ளடா  - ஒரு
ஏட்டுக்குள் கீறிய எந்தச் சுரைககாயும்
கூட்டுக் கறிகல்லடா - வெட்ட
ஆட்டுக்கு மாலையை போடுவர் நம்பியுன்
ஒட்டத்தில் மாறலின்றி -  எங்கள்
நாட்டுக்கு நாளைய மன்னரில் நீயொன்று
நாட்டமெழக் கூடடா


Message has been deleted

kirikasan

unread,
21 Mar 2014, 22:05:07
to santhav...@googlegroups.com
இதற்கு முன்னுள்ளது  இதே கவிதை திருத்தம் கருதி நீக்கப்பட்டது
இந்தக் கவிதையும்  ஒன்றுமில்லாமல் (கரு)எழுதப்பட்டது

      இயற்கையும் முரண்களும்

ஓடித்திரிவது மேகம் உட்கார்ந் திருக்கும் மலைகள்
கூடிப் பேசிடும் கிளிகள் கொட்டும்பனி மழைத் தூறல்
ஆடித் திரிவதும் ஆறு அலைகள் தோன்றிடும் நூறு
தேடித் திரிவது வாழ்வை திசைகள் பலவென ஓட்டம்

வாடிச்சோர்வது பூக்கள் வானத் தீ மறை ஆழி
கூடிக்கொள் மலர்அல்லி கோலச் சுனை மதி விம்பம்
சூடிக் கொள்வது மாலை சுற்றும் காற்றிழை வாசம்
வேடிக் கைவிடி வேளை விடியாப் பாமரர் வாழ்க்கை

மூடிக் கிடப்பது மேகம் மெல்லப் பரவிடுங் காற்று
நாடித் தொழுவது தெய்வம், நன்மை விட்டுயர் துன்பம்
பாடித் திரிந்திடும் தென்றல் பட்டுச் சிலிர்த்திடும் மேனி
வாடிக்கை யிதுவென் றாகும் வாழ்வில் இச்சைகள் கூடல்

மாடிக், கூடமும் மஞ்சம் மரகதப் பட்டில் போர்வை
ஆடிக் களிப்பது தேகம் அனலை பூசிடும்  காற்று
கூடிக் காண்பது கொடுமை குறைந்தே போவது இளமை
சேடிப் பெண்ணவள் மீதும் சிலிர்க்கும் அங்கதன் பாணம்

சூடிக்கொள் மலர் மங்கை சுகமறியாப் பெண்லோலன்
வாடிச் சோர்ந்திடும் பூவாய் வன்மை துய்த்திடக் காமம்
வேடிக்கை யென்றவர் எண்ணும் விளைவில் பெண்மையின் அவலம்
நாடிசெல் புவிவாழ்வில் நன்மைக் குண்டோ வாழ்வும்

kirikasan

unread,
21 Mar 2014, 22:33:22
to santhav...@googlegroups.com
அங்கதன் பாணம் என்பது பிழை
அனங்கன் எனக் கொள்க

கிரிகாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக