தமிழன்னை துயரம்
வானை முகிலை வண்ணப்பூவின் வாசம் போற்றுகிறேன்
மீனைத் துள்ளும் நீரின் அலைகள் மேவும் எழிக் கண்டேன்
தேனை வண்டைத் தின்னும் அழகைத் தினமும் பாடுகிறேன்
ஏனய்யா வென் துன்பம் கண்ணிற் தெரியாநிலை யென்றாள்
மானும் அழகு, மதியும் அழகு, மனையும் மகிழ்வன்பும்
கூனும் வானத் தடிவெண் கதிரின் கோலம் தனுமழகு
தானும் புதிதாய் தலையை ஆட்டும் தாமரையும் அழகு
நானும் அழகென் றறிவற்றோதும் நிலையே பெருமிழிவு
பூநில் நிரைமுன் புவியின் சுழலும் போதை தரும் வாழ்வும்
ஆநில் லென்றே ஓடும் குழந்தை அழகும்அரன் இல்லம்
பாநில் சந்தம் கொண்டே பாடும் பாடல் இசையாவும்
வாநில் காணாய் அழகே ஆயின் வாழ்வாம் எனதல்ல
தேயும் நிலவாய் தேய்ந்தேன் நாளும் தேசம் ஒன்றில்லை
சாயும் பலமும் சார்ந்தோர் இனமும் சாகும்நிலை தொல்லை
மாயும் கலையும் மாளும் புகழும் மாற தெனில் எந்தன்
ஓயும் குரலும் உள்ளத்திடமும் உதவிக் கெவரில்லை
மொழியின் கலவை கரியைஅள்ளி முகத்தே பூசுவதும்
அழியென் றரசன் அங்கேபாராய் அழகு தீவோரம்
வழியில் வந்த மூதோர் கலையும் வாழும் பண்பாட்டு
விழியென்றாகும் மண்ணின் தடங்கள் வினைசெய்தழிகின்றான்
உயிரும் உறவும் தமிழின் சின்னம் உள்ளோர் கோவில்கள்.
பயிரும் நிலமும் தமிழர் வயலும் ப.ண்பாட் டா தாரம்
துயிலும் இல்லம் யாவும்அழிய தெருவில் தமிழ்மக்கள்
வயிற்(றி)ல்நெருப்பை கட் டக்கொள்ள வந்தே தள்ளுகிறான்
அழியும் ஒருநாள் ஈழம் இல்லை ஒன்றே மொழியாகும்
பழியும் பாவம் நிறையா தொடரும் படரும்திசையாவும்
வழியும் தொடர வானில் நீரில் வலிமை பலமாகும்
அழியும் தமிழன் திடமும் அருகில் அருமைக் குழந்தைகாள்
நிலை பார் எனது நிச்சயமாம் நான் நிரந்தர அடிமையடா
கலையைக் கவிதை கண்டேன் வீழும் அழிவை என்செய்வாய்
பலியென் றாகும் நிலையை மாற்றும் பாதை தனைவிட்டு
மலிவை அழகென்றோதும் உந்தன் மனதைத்தொட்டுப் பார்
கடலுமில்லை கரையுமில்லை காவல் எமதில்லை
திடமும் கொண்டோர் பேசும் பேச்சுத் திண்மை யதனெல்லை
முடமென்றாகும் மொழிகள் பலவும் மூர்க்கத் தனத்தோடு
இடரைத் தார என் செய்வேன் பார் இதுவென் நிலையென்றாள்
************
3 May 2013, 13:53:49
to santhav...@googlegroups.com
காதலெனும் சாவினிலே எனும் தலைப்புக்கு எழுதியது
காதலெனும் சாவினிலே
மாலையிளங் காற்றணைந்து மேனிதொட நாணுகிறேன்
மன்னவனே ஏன் பிரிந்தாயோ
சோலைமலர் வாசமெழச் சேதி வரும் காலையெனச்
சிந்தைபகை கொள்ள நின்றாயோ
பாலைவன மாயுடலும் பால்நிலவில் தீயெழுந்து
பாவையெனில் தீங்கு செய்வதேன்
ஓலைபல நானெழுதி உத்தமரே தந்துமென்ன
ஊமை விழியாகி நிற்பதேன்
காலைஅலர் பூநிதமும் காண வண்டை ஏங்கியழும்
காற்றும்துணை தேடிஓடிடும்
மாலை நிலா தன்துணையை மௌனமுடன் தேடிவரும்
மாற்றமில்லை தேய்ந்துபோவதும்
மேலைக்கடல் நீர்த்திரைகள் மேனிசுருண் டோடிவரும்
மீண்டும் விழும் காண ஏங்கிடும்
தோலை எழில் பட்டிதமும் சுட்டெரிக்கும் நீபிரிந்தால்
தேவியெனைச் சா அணைத்திடும்
சோலைதனில் பூமலர்ந்தும் சூடமனம் நாடவில்லை
சோகமெழக் காணுகின்றேனே
சேலையிலே காற்றுமெனை சீண்டிவிடத் தொட்டிழுத்துச்
செய்வதுமென் கேலியும்தானே
நாலைக் குணம் கொண்டவளோ நாணமதை விட்டொழிந்து
நாளுமுனைத் தேடுகின்றேனே
வாலைமகள் வாய்திறந்து வாஎனவே பாடியுமென்
வாழ்விலிது காதலென் சாவோ?
3 May 2013, 14:00:49
to santhav...@googlegroups.com
அஞ்சலி ஒரு அன்னைக்காக
நீரினில் தீவந்து பற்றலாம்
நெஞ்சினுள் தீ பற்றிக் கொள்ளுதே
வேரின்றிப் பூமரம்வீழலாம்
விட்டுயிர் பூவுடல் வீழவோ
நேரின்றித் தெய்வமும கொள்வதும்
நீர்வற்றக் கண்ணீர் வடிப்பதும்
பாரினில் எம்மினப் பாடுதான்
பார் இதில் நீதியோ வேறுதான்
எங்களின் அன்பெனும் தெய்வமே
இன்னும் இதயத்தின் உள்ளேநீ
தங்கியிருக்கையில் தாங்குமோ
தாயே பிரிந்திடல் ஆகுமோ
பொங்குது கண்களில் நீரெல்லாம்
போதுமென்ற தினி இல்லைத்தான்
வெங்கனல் இட்டதாய் வாழ்வுதான்
வேகும் மனதென்றும் சோகம்தான்
போவது வாழ்வி லெல்லோரும்தான்
போகுமிடம் தெரியாதுதான்
ஆவதுஒன்றென ஆயினும்
ஆண்டவனே இது நேரமா
பூவது வாடிடும் மட்டும்நீ
பூமரத்தில் விட்டதில்லையே
நாவதுவற்றக் கதறினோம்
நாளிலெம் தாயைப் பறித்ததேன்
கூனியுடல்கொண்டவேளையா
கொண்டுநடந்திடப் பாரமா?
ஏனிங்கு கூற்றுவன் வந்தனன்
ஏதும்கேளா தன்னைகொண்டனன்
தானிதை நேர்மையென் றோதவா
தாங்கவில்லைத் துயர் பாரய்யா
மேனிதுடிக்குது கேளய்யா
மீண்டுமன்னை விழி காண்போமா
கோடிஒளிமின்ன வான்வெளி
கூடிஒன்றாடிடக் கோள்களும்
ஓடிச் சுழன்றிடப் பூமியும்
உள்ளே உயிர்களின் வாழ்வையும்
ஆடிநடம் புரிஆண்டவா
அத்தனையும் செய்தாய் வீணடா
நாடி அன்புகொண்டே வாழ்ந்திட
நல்லவரை விட்டதில்லையே !
7 May 2013, 09:03:41
to santhav...@googlegroups.com
அலைவாழ்வில் மலைபோலும் திடமான கலைதா
மணிநாத கலை சந்தமெழ ஆடும்சிவனோடு
மலைவாழும் அருள் பார்வதி - உனை
அணிபாத மதில்வீழ்ந்தும் அழகான தமிழ்கூறி
அறம் மேவ வரம் கேட்டனன்
தணியாத மகிழ்வோடு தலைமீதுபெரும் பாரம்
தனைநீக்கு உளமானதில் -இனி
பிணியாதல்இலதாகப் பெருவான வழிமீது
பறந்தோடும் மகிழ்வாகச் செய்
தணியாத திரையாடு விரியாழி பெருநாகந்
தனைவென்று அணையாகவே - தன்
பணியாக துயர்நீக்கும் பதியான கலைநீல
படர்வண்ண மொடுநின்றவன்
துணிவோடு இணைபாத மடிகாணு மலைதேவி
துயர்காண அதையோட வை
பிணியான துவழ்கின்ற பெறுமானம் தவறென்று
பிறைவாழ்வை முழுதென்றுசெய்
கணிபாட மொடுகல்வி கலைதாரும் குலதேவி
குளிர்தாம ரைமீதிலே
அணியாகக் கரமேந்தும் ஒருவீணை யிசைபாட
அருள் தானு முளம் வேண்டவும்
துணிவான தனையீந்தும் மணிமாலை பொருள் தாரும்
மலைதேவி அலைமங்கை போல்
பணிந்தேன் நல்லுயிரோடு பலகால வாழ்வேங்கும்
பயனீந்து கலை தா வாணி!
*************
7 May 2013, 09:19:12
to santhav...@googlegroups.com
கவிதைகள் அனைத்தும் இங்குள்ளன. (ஒரு குறிப்பிட்டளவு ஈழக்கவிதைகளைத் தவிர) அவற்றின் தொகுப்பு
6 பகுதிகளாக http://tamilvimbam.com (www இல்லாமல்) ல் காணலாம். வருகைக்கு நன்றிகள்!
8 May 2013, 17:27:01
to santhav...@googlegroups.com
வெண்ணிலவே வாராயோ!
நேற்றுவரை நீயிருந்தாய் வெண்ணிலாவே - இன்று
நேசமின்றிப் போனதெங்கு வெண்ணிலாவே
தூற்றியுனைத் தேயவிட்ட தார் நிலாவே - உன்னைத்
தூக்கியவர் வைத்த முடி விண்ணில்தானே
தோற்றுவ தென்றான பின்னே வெண்ணிலாவே -நீயும்
தோழமை கொண்டோடி வாராய் வெண்ணிலாவே
பாற்குவளை கொட்டியதாய் வெண்ணிலாவே - வந்து
போர்க்கு மிருள் நீக்கி ஒளிர் கொள்ளுவாயே!
பூத்திடும் நற்சோலைமலர் வெண்ணிலாவே - உந்தன்
பூ முகத்தைப் போலிருக்கச் காணுவேனே
கூத்திடும் தென்னோலை நீவும் காற்றும் தானே உந்தன்
கோலவண்ணம் மாற்றமுகில் தள்ளினானோ
சாத்தி வைத்த கோவில் தெய்வம் கண்டிடாதோ - உன்னைச்
சஞ்சலத்தில் நீக்கி அருள் செய்யும்தானே
நீ(த்)திரும்பவந்து ஒளி பொங்கும் வானே - முகில்
நீங்கிய பின் எந்தன்மனம் உண்ணும் தேனே
சாத்திரங்கள் தேவையில்லை வெண்ணிலாவே - உன்னில்
சத்தியமாய் காதல் கொண்டேன் வெண்ணிலாவே
ஆத்திரங்கள் கொள்ள வேண்டாம் பொன்நிலாவே - மனம்
ஆற்றுமொரு புன்சிரிப்பு கொள்ளும் நாளே
தோத்திரங்கள் சொல்லி வைத்தேன் வெண்ணிலாவே - அந்த
தெய்வம் விழி பார்த்துவிடும் இந்த நாளே
பூத்ததில் கள் உண்ணவரும் வண்டு போலே - துயர்
போக இன்பம் நாடிவரும் வெண்ணிலாவே
நீர்த் துளிகள் பார்வைமீது வெண்ணிலாவே -அதை
நீயும் கொள்ளத் தேவையில்லை வெண்ணிலாவே’
பார்த்திரு நல் லின்பத்தோடு வெண்ணிலாவே - நீயும்
பாதைகண்டு போகும் நிலை கொள்ளுவாயே
ஆர்த்தெழும் பல் புள்ளினங்கள் செல்லும்போதே - அதில்
ஆனந்தமென்றாவது போல் வெண்ணிலாவே
சேர்த்துனது துன்பமெல்லாம் போகும் காணே! - நீயும்
செல்லுகின்ற வான் தெளிந்துகொள்ளும் பாரேன்
**********************
8 May 2013, 18:22:58
to santhav...@googlegroups.com
/பாற்குவளை கொட்டியதாய் வெண்ணிலாவே - வந்து
போர்க்கு மிருள் நீக்கி ஒளிர் கொள்ளுவாயே!/ ரசிக்க வைக்கும் வரிகள்...
/சாத்திரங்கள் தேவையில்லை.../ பாரதியை நினைவூட்டும் வரிகள்... (சாத்திரம் பேசுகின்றாய் கண்ணம்மா...)
/சாத்தி வைத்த கோவில் தெய்வம் கண்டிடாதோ.../ நல்ல கருத்து, நல்ல காட்சி!
அழகான பாடல்... நல்ல ஓசைநடையுடன் அமைந்துள்ளது...
நன்றி,
அன்புடன்,
விஜய் :-)
9 May 2013, 18:13:27
to santhav...@googlegroups.com
அன்புடன் கிரிகாசன்
**************
9 May 2013, 18:28:19
to santhav...@googlegroups.com
வேல்முருகா வேளையிதோ?
நீள் மகுடம் ஏந்திதமிழ் நிலம்பிரித்தும் ஆண்ட இனம்
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
ஆள்திறனும் ஆற்றலுடன் அரசுகொண்டு ஆண்டகுடி
அந்நியர்க்கு அடிமைகளாய் வாழ்வோ
தோள் வலித்த தீரமெழும் தீந்தமிழர் இனமழித்துத்
தூயகுலம் வாழ்வழித்த தீயர்
கேள்நல் லூரில் வாழ்முருகா சுற்றித் தீவினைகள் ஆக்கும்
சூரனைச் சம்ஹாரம் செய்ய வாநீ!
ஊழ்வினையோ ஈழமதில் உள்நுழையும் பாவியினம்,
ஊரழித்துக் காணிநிலம்கொள்ள
யாழெடுத்து மீட்டிடவோ யாரி்டம்கால் வீழ்வதுவோ
யாரிவர்கள் தொன்மை மறத்தீரர்
வாள் எடுத்துச் சொந்தஇன வாழ்வைவந் தழிப்பவனை
வீழ்த்தவென வேட்கை கொண்ட மன்னர்
தூள் கிளப்பும் நூறுகதை தொன்மைபெருங்காவியத்தில்
தேடி நாம் படித்த துண்மை யன்றோ
சேல்விழிகொள் மாதர்குலம் சீரழித்த காட்சியெலாம்
சேர்த்து வைத்து பார்த்த விதியேனோ
வேல் பிடித்த வினையழிக்கும் வள்ளிமணம் கொண்டவனே
வெற்றி என்ப துன்சினத்தில் உண்டு
சூல்தரித்த பெருவயிறும் சுட்டொழிக்கும் கீழ்இனத்தர்
சொல்லிஒன்று சேர்ந்துநிற்கக் கண்டும்
பால்வடித்த வாயினரும் பாவையரும் தாயவரும்
பலிகொடுத்தும் ஒன்றுசேரல் விட்டோம்
உயிர்எடுத்துச் சிரிசிரித்தும் உண்மைதனைப் புதைத்தவராய்
உறுதிகொண்டு காணும் பகையங்கு
வயிறெரிந்த உலகமிது வயிரமென்னும் ஈரமற்ற
வாணிகத்து நேசங்களை காத்து
கயிறெறிந்து காலன்வரக் கட்டித்தொகை யென்றனுப்பக்
கடனுமுண்டோ எழுதி வைத்ததேது
உயிர்பறிக்க மாவுலகும் இசைபடித்து ஆடுகையில்
எம்கடமை என்ன வந்து கூறு!
***********
9 May 2013, 18:39:28
to சந்தவசந்தம்
உளமானதில் -இனி
பிணியாதல்இலதாகப் பெருவான வழிமீது
பறந்தோடும் மகிழ்வாகச் செய்
பிணியாதல்இலதாகப் பெருவான வழிமீது
பறந்தோடும் மகிழ்வாகச் செய்
உளத்தில் மட்டுமல்ல உடலிலும் பிணியாதல் இலதாகப் பெருமாட்டி காக்கட்டும்
இலந்தை10 May 2013, 12:44:21
to santhav...@googlegroups.com
அன்னை சக்தியின் அருளுடன் கூடி!
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்
10 May 2013, 12:52:01
to santhav...@googlegroups.com
கண்டதென்ன? !!
நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’
நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன்
ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன்
உறங்கும் விழியுள் இருளைக் கண்டேன்
நாரை கண்டேன் நாணல் புதருள்
நெளியும் பாம்பும் நில்லா துள்ளும்
தேரை கண்டேன் தமிழாம் அன்னை
தேசம் காக்கும் திறனைக் காணேன்
வானைக் கண்டேன் வானில் வில்லாய்
வண்ண ஏழும் வளையக் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் ஒளியும்
தேயும் வளரும் தன்மை கண்டேன்
பானை வயிற்றில் பலரைக் கண்டேன்
பாவை சிரிக்கும் அழகைக் கண்டேன்
ஏனோ எந்தன் இன்பத் தமிழ்மண்
இறைமை காக்கும் வழியைக் காணேன்
தேரைக் கண்டேன் தெய்வக் கோவில்
திகழும்தீபம் ஒளிரக் கண்டேன்
தாரை யாகக் கொட்டும் மழையும்
தரையில் நெளியும் நதியும் கண்டேன்
வேரைக் கொண்ட மரமும் கிளையில்
விளையும் கனிகள் தூங்கக் கண்டேன்
ஊரைக் காக்கும் தெய்வம் மட்டும்
உண்மை கொண்டே இரங்கக் காணேன்
வாழ்வைக் கண்டேன் வளமும் கண்டேன்
வாழும் மனிதர் சிரிக்கக் கண்டேன்
தாழ்வில் லாத்தலை முறையென் றங்கே
தளைத்தே ஓங்கும் தகமை கண்டேன்
வீழ்வே இல்லை வெற்றிக் களிப்பும்
வேற்றாம் மொழியில் கண்டேன் ஆயின்
ஆழ்ந்தே உறங்கும் அமைதிக் கணமும்
அன்னை மண்ணில் காணேன்! காணேன் !!
**************
10 May 2013, 13:16:25
to santhavasantham
அருமை ஐயா
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
- ”இனியாவது செய்வோம்” -
.துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
10 May 2013, 20:27:28
to santhav...@googlegroups.com
அன்புடன் கிரிகாசன்
10 May 2013, 20:46:40
to santhav...@googlegroups.com
சூரிய கிரகணம் (ஒரு கற்பனை)
அந்தர வானொளி செங்கதிரோன் அன்று
அம்புலியின் முன்னே வந்தது - அது
சிந்தை குளிர்வண்ணச் தேன்மதியே இது
செய்யத் தகுமோ சொல் லென்றது
அந்தியிருள் கவிந்தான பின்னே நீயும்
அள்ளியென் பேரொளி பற்றியே - நிதம்
சிந்துவ தென்ஒளி சந்தன மாயதில்
சிந்தை மயங்கினர் மாந்தரே
மந்திரமோ கறைமேனி கண்டுமிந்த
மாந்தர் உனைப்புகழ்ந் தேற்றலும் - அவர்
எந்தனொளிப் பிரகாசம் தனைக் கண்டே
ஏனோ பழி சொல்லித் தூற்றலும்
விந்தையன்றோ நிலை வெண்ணிலவே இது
வேடிக்கை உந்தன் விளைவதே - அவர்
வெந்தன மேனி ஆ..வெய்யில் கொடுமைஎன்
றெந்தன் ஒளிவிட்டே ஓடுவர்
அந்தோ காண் ஆதவா என்னியல் மேனியும்
அத்தனைபொன்னெழில் கொண்டதாம் - ஆகா
உந்தன்ஒளி யேது வெம்மையன்றோ அதில்
உன்னத தண்மையெங் குள்ளது
நிந்தனை வீணுன தென்றநிலா சொல்லில்
நீலவிண்ணில் வெயில் சுட்டது - இது
சுந்தரம்தான் மதிகெட்டவளே கறை
சிந்தையிலும் உண்டாம் என்றது
தந்திரமாய் பிரகாசம்கொண்ட ஒளி
தன்னை எடுத்தது பொய்மையா - அல்ல
சொந்தமென பெருமிந்த உலகமும்
சொல்லும் வகைதனும் பொய்யிதா
சிந்தை மயங்கிட செந்தமிழர் உன்னைச்
சின்னவள் என்னரும் காதலி - அவள்
பிந்தியவள் இளந்தங்கை நிலாவெனப்
பந்தமுடன் உனைக் கூறுவர்
மந்திரமோ என்னமாயமிட்டாய் இந்த
மண்ணிற் கவிஞான வல்லவர் -தினம்
உந்தனுடல் பிறைகொண்டு நலிந்திட
உள்ளம் கலங்கி உருகுவர்
செந்தமிழில் பல பாஇயற்றி யுனைச்
சொந்தமெனக் கொண்டு பாடுவர் - என்ன
விந்தையிது நானு மெண்ணி வியந்தனன்
வெண்ணிலவே இதைவிட்டிடு
மந்த ஒளியெழும் சந்திரனில் மனம்
முற்றும் மனம் கோணி நின்றது - ஒளி
இந்தளவு திமிர் கொண்டவனை இங்கு
என்னசெய்வதென்று நின்றது
உந்தனுளம் இவள் கொண்ட நலிவெண்ணா
உன்மத்தம் கொண்டிங்கு வந்ததோ - இவள்
எந்த பணியென இட்ட இயற்கையின்
ஏவலைச் செய்பவள் என்றது
எந்தன்முன் தேடிநீ வந்தபொழுதினில்
அந்தோ புவியிருள் கொண்டது - இதோ
சந்தன மேனிமுன் உன்னொளிகெட்டது
சென்றுவிடு என்று சொன்னது
உந்தன் பிர காசம் சின்னவள் முன்னிலை
இல்லை யென்றாக்கிய அன்னையே - அவள்
வந்து என்மேனியில் பொன்னிறம் தந்தனள்
வாழி இயற்கைதாய் என்றது.
***************
12 May 2013, 01:54:03
to santhav...@googlegroups.com
மயங்கும் புவி வாழ்வு
தேன்குடத்தை ஊற்றியதாய் தேகஉணர் வாக்கி மெல்லத்
தித்திக்கும் இன்பங்களைத் தந்ததுயார்
வான்விரித்த நீலப் பட்டு வந்து நிறை மேகந் தொடும்
வெண்ணிலவின் தண்ணொளியில் வேகுதுபார்
தானழியத் தாகம்கொண்டு தாவுமின மாகித் தொட்டு
தூங்குகிளைத் தோன்றலென அல்லுற்று
ஊன் படர்ந்த தோலில் பட்டு உள்ளிரென்று நோவை வைத்து
இன்பமென்று வாழவிட்டு ஏய்த்ததுமேன்
மான் கிடந்து அம்புபட்டு மாவதையில் நீரும்விட்டு
மென்விழிகள் சோரலென்று காணுவதாய்
ஏன்கிடந்து அல்லல்பட்டு இல்லையென்ற துன்பப்பட்டு
எண்ணிலாத வேதனையும் கொள்ள வைத்தான்
நான் நடந்து பாதைவிட்டு நள்ளிரவில் தீபங்கொண்டு
நட்ட நடுக்காட்டில் வழி தேடுகின்றேன்
வான் நடுவில் சீ றலிட்டு வீழும்பெருந் தீயைவிட்டு
வந்தஇடம் ஏதறியா வாழுகிறேன்
மேலிருந்து ஆசைப்பட்டு மேனிசொல்ல மானம்கெட்டு
மீட்ட வந்த வீணை என்று பேரும்வைத்து
காலிருந்து உச்சிமட்டும் கண்டதென்ன காதல் சுட்டு
காயிலவம் பஞ்செனவே வானெழவும்
வாலறந்தும் பட்டம்விட்டு வானில் பெரும் துள்ளலிட்டு
வீழுமெழும் மேடுபள்ள வாழ்க்கைதனைப்
போலிதுவும் சொர்க்கமென்றும் பூசொரிந்த சோலையென்றும்
பாலையாகி தீதழிக்கப் பேசுவதேன்
காலையிட்டுக் கைகள் தொட்டு காணுங் கண்கள் மாயமுற்று
காதலின்பின் ஆவதென்ன காலமெல்லாம்
ஆலையிட்ட செங்கரும்பு ஆக்கிவிட்டு சாறிழந்து
அங்கமெங்கும் நோய் பிடித்துத் துன்பமுற்று
சூலையென நோவில்கெட்டு சுற்றமவர் பாசம்விட்டு
சொல்லமுன்பு போகுமிடம் முழுஇருட்டு
வேதனையை நீக்கிவிட வேண்டுமெனில் நாளும்தொட்டு
வேண்டியழு சக்தியிடம் வாயும்விட்டு
17 May 2013, 02:04:10
to santhav...@googlegroups.com
இயற்கை வண்ணம்
இயற்கை அன்னை வரைந்ததோ இவ் வழகுக் காட்சிகள்
வயற்கரைகள் அழகுச்சோலை வளர்ந்த பூவனம்
நயமெழுந்த ஓடைநீரும் நடன தோகையும்
அயலிருக்கும் அழகு கண்டு அடிமையாகிறேன்
நிலவிருக்கும் நடுவிலோடி முகில் மறைத்திடும்
கலகலக்கும் குருவிக்கூட்டம் காற்றில் ஓடிடும்
சலசலக்கும் அருவிவீழ்ந்து சத்தம் போட்டிடும்
பலதினிக்கும் காட்சிகாணப் பார்வை வீறெழும்,
தொலைவிற் பஞ்சு மேகம் பெண்ணைப்போல மாறிடும்
தொலைந்து பின்பு முயலைப் போல திரிந்து வேறிடும்
கலைவடிவம் காணும்கண்முன் காட்சிதோன்றிடும்,
நிலை இதுவும் இதயவானில் தேனை ஊற்றிடும்
பல மரங்கள் படர்கிளைகள் பறவை கூடிடும்
இலதெனவே இயற்கைகொண்டு உறவை நாடிடும்
நிலமதை மிடகன்னி சிறியமானும் அருகில் துள்ளிடும்
மிச்சமின்றி இன்பவாழ்வும் மெல்ல தோன்றிடும்
அழகுமனை பூஞ்செடிகள் அகன்ற விண்ணிலே
பழகும் பஞ்சு முகில்க ளோடப் பரவும் நிர்மலம்
விளங்குமெழில் விந்தைகொண்டு விடிவைநோகிடும்
இளங் கிளிகள் இன்ப வானில் எழவும் நாள்வரும்
17 May 2013, 02:12:34
to santhav...@googlegroups.com
// நிலமிடையோர் சிறியமானும் அருகில் துள்ளிடும்//
என்று கொள்ளுங்கள் நன்றிகள்
18 May 2013, 12:01:55
to santhav...@googlegroups.com
அதன் நினைவாக....
எமக்கு வேண்டும்!
பொன்னிழந்தோம் பொருளிழந்தோம்
- பூவையரின் தூய்மை கெட
- பொட்டிழந்தோம் பொங்குதமிழ் வாழ்வும்
தன்நிலையைத் தன்மானம்
- தாற்பரியம் தலைமையுடன்
- தலைமேற் பொன்முடியிழந்து நின்றோம்
என்னபயன் எடுத்ததாளும்
- இதயத்தே துணிவிருந்தும்
- ஏய்ப்பவர்கள் காட்டியநீள் விரலில்
தொன்மை தொடர் தீரர்திடம்
- கொண்டதெனத் தோளிருந்தும்
- துன்பமதைக் கொண்டலைந்து தோற்றோம்
கண்ணிழந்தோம் காலிழந்தோம்
- கயமையுந்தன் தலைவிரிக்கக்
- கன்னியரும் காளைய ரிழந்தோம்
மண்ணிழந்தோம் மானமுடை
- மகனோடு மகளெனவே
- மனையாட்டி, மாசற்றோர் நிலமும்
எண்ணிழந்த தொகையிலெதை
- இழந்தோமென் றறியாமல்
- எல்லாமே விட்டவராய் நின்றோம்
விண்ணெழுந்த தெய்வமுடன்
- வருமென்றே எண்ணிவரும்
- விடையிழந்து வறுமைகொண் டுழன்றோம்
மண்ணிருந்து மழலையென
- மாதாவின் மடிதூங்கி
- மகிழ்வுடனே தமிழ்க் கதைகள் பேசி
வெண்ணிலவில் விளையாடி
- விடுகதைகள் பலகூறி
- வீடென்று கோபுரமாய் கொண்டு
தண்மைதரும் பனிபெய்ய
- தகிப்பெழுந்து வெயில்காயத்
- தாவாரத் தூறல்மழை கொட்ட
கண்ணிரண்டு கண்டுமனம்
- களிகொண்ட நாளெல்லாம்
- காற்றோடு போனதடா இன்றோ
பெண்ணுமழப் பிள்ளையழப்
- பிணம்புரளப் பேச்சின்றி
- பார்த்தழுது வாழுமொரு வாழ்வும்
எண்ணமெலாம் என்னுயிரும்
- இருப்பதுவோ போய்விடுமோ
- எடுத்தநடை விண்ணுலகின் வழியோ
கண்வழியக் காதடைக்கக்
- கடையும்வயி றூடுபசி
- காற்றில்வரும் சங்கொலியோ கேட்க
அண்ணளவில் ஆவிவிட்டே
- ஆகவொரு நடைப்பிணமாய்
- அன்னை தமிழ்தேசம் விட்டுநின்றோம்
பொன் வேண்டாம் பொருள்வேண்டாம்
- போனநிலம் வேண்டுமதைப்
- பிறன்கரத்தி லிருந்தெடுக்க வேண்டும்
என்வேண்டாம் என்றாலும்
- இறைமைதனைக் கொண்டவொரு
- இடம்வேண்டும் எனதுரிமை வேண்டும்
மன்னர்களின் மாளிகையும்
- மணிமண்ட பம்சேர்ந்த
- மலர்க்காவும் குளிர்ச்சுனையும் வேண்டாம்
அன்புடனே அரவணைத்தே
- அன்னையரும் பிள்ளைகளும்
- அமைதிகொள்ளத் தமிழர்நிலம் வேண்டும்
***************
21 May 2013, 16:25:46
to santhav...@googlegroups.com
தம்பி தலை நிமிரடா !
தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
வாழ்விலேதும் மீதமாகுமா
பாயெடுத்து தூங்கவா பாவைமேனி ஆளவா
பட்டுடுத்து ஆடிப்பாடவா
நோயெடுத்து வீழவா நூறுகாலம் ஆயுளா
நிற்பதோ தீமேலே காலடா`
தாயெடுத்துக் கையிலே தீந்தமிழ்ப் பாலூட்டியே
தங்கவிட்ட திங்கு மேனடா
பேயெடுத்த கோலமும் போதைகொண்ட கள்ளரும்
புன்மை செய்யநீ முடங்கவா
காயமிட்டு வெட்டவும் காலினா லுதைக்கவும்
காண இன்னும் பேடி நாமோடா
நீயெழுந்து கேளடா நீதி தேவன் பார்வையை
நீள்கறுப்பு துண்டுமூடுமா
தூயஅன்னை செந்தமிழ் தீங்கில்லாத வாழ்வுடன்
தேசமொன்று தாயகம் அதில்
வேய இட்ட வேலியும் வீடுஎன்ற கோவிலும்
வேண்டுமென்று கூடிநில்லடா
தோயஎன்ன வான்மழை தூங்க என்ன மாவனம்
தேய அன்ன வெண்ணிலாவென
மாய வாழ்வு வாழென மந்திரத்தை போடுவர்
மாற்றமென்று மாண்டுபோவதா
தேய் மனம் துரத்தவும் தேசமெங்கள் மீட்கவும்
தேடிநூறு காலில் வீழ்வதா
பேய்குணத் திலோடவர் பிள்ளையென்று வாயிலே
போடும்பிச்சை தின்று வாழ்வதா
மாய்மனத்தின் மாயங்கள் மாறு நீ கரத்தெடு
மற்றதென்ன விட்டுநின்றதை
தீயென்றாக்குத் தீமைகள் தேசம்மீள் சுதந்திரம்
தேவை தீயைபோல் எரிந்திடு
21 May 2013, 16:41:44
to santhavasantham
வாழ்க ஐயா .....
உங்களின் வழித்தடம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் ... தொடர்ந்ததால் வந்ததிந்த வரி
தீயில் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயுள்
பழுத்துவரும் தங்கமடா நாம்.
பழுத்துவரும் தங்கமடா நாம்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் : http://www.flickr.com/photos/duraian/
21 May 2013, 17:06:11
to santhav...@googlegroups.com
ஒரு திரைப்படத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டிய அருமையான வரிகள்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
22 May 2013, 02:26:26
to santhav...@googlegroups.com
அருமை! எனதல்ல இறையவளின் தடம். தொடருங்கள்! நன்றிகள் கோடி
அன்புடன் கிரிகாசன்
*************
அன்புடன் கிரிகாசன்
22 May 2013, 02:28:40
to santhav...@googlegroups.com
மிக்க நன்றியுடன் தங்கள் பாராட்டில் மனம் வேகம் கொள்ள உணர்கிறேன் ! நன்றிகள் ஐயா!
அன்புடன்
கிரிகாசன்
அன்புடன்
கிரிகாசன்
22 May 2013, 02:35:21
to santhav...@googlegroups.com
பொறுமையின் எல்லை
போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை
உண்மையென்று நம்பி ஓடாதே பக்கம்
தீதும் இனித்திடக் காணும் - அதை
தின்ற பின்பே வலி கொள்ளும் உதரம்
யாதும் பெரும் நிழலாகும் - இந்த
ஞாலம் ஒலிபெற்றும் உள்ளிருள் காணும்
கட்டியே காலுடன் கையும் - சுட்டு
காட்டிய தேகங்க ளெத்தனை கண்டோம்
மெட்டி அணிந்திட்ட மாதர் - உடல்
மீது குதித்திடும் பேய்களும் கண்டோம்
கொட்டிக் குடித்துக் கூத்தாடி - அவர்
கொச்சைமொழி கொண்டு நம்மவர் காட்டி
திட்டித் தமிழினம் சாய்க்க - நாமும்
திக்கெட்டு மோடித் திசைபல கொண்டோம்0
அத்தனை தேசங்கள் யாவும் அன்பில்
அத்தை நான் மாமனென் றண்டையில் வந்தார்
கத்திக் கதறி யழுதோம் - அவர்
காப்பது போற்பல வேடங்கள் கொண்டார்
பொத்திப் பிடித்திட வெள்ளம் - அது
பிய்த்துக் கொண்டோடிடும் நம்மவர்நெஞ்சோ
உத்தமம் தானென்ற போதும் - இன்னும்
எத்தனைநாள் பெட்டிப் பாம்பென வாழும்
சத்திய மேமுடி வாகும் - இது
சாத்தியமோ எமைக் கொன்றொழித் தாலும்
வித்தாய் முளைத்தெழும் மண்ணில் - இது
வெட்டி யழித்திட வேர்புதி தாகும்
எத்திசை போயிருந் தாலும் - நாமும்
ஈழமெனும் அன்னை தேசத்தின்பிள்ளை
வைத்த அன்புமனம் கூடும் - எமை
வாரி பிடித்துமண் வைத்துக் கொண்டோடும்
எத்தனை பேச்சுக்கள் கண்டோம் அவை
அத்திப் பழமென சொத்தைகள்தானோ
கத்தி சொருகிட வந்தோர் - பலர்
கட்டிய ணைத்துப்பின் காரியம் கொண்டார்
சொத்திக் கால் பச்சைமரத்தில் - ஏறிச்
சொர்க்கம்நடை கொள்ள உத்தியும் கூறி
வைத்தவர் வாழ்த்த நடந்தோம் வழி
வானமல்லக் கீழே பாதாளம் கண்டோம்
வைத்தியம் பார்த்திட வேண்டும் - தம்பி
வக்கிர உள்ளங்கள் வாதத்தை தீர்க்க
புத்தி கொண்டு திட்டம்போடு - கோடி
புண்ணியமுண்டு நீஒன்றாகக் கூடு
எத்திசைதா னிருண்டாலும் - காலை
ஏறும்சுடர் தன்னில் விண்ணொளி தோன்றும்
மொத்தம் விடிந்திட வேண்டும் - எங்கள்
முந்தைத் தமிழர்பொற் காலமே வேண்டும்
செந்தமிழ்ப் பாவெழவேண்டும் - பெண்கள்
சிந்துபடித் தின்ப நாட்டியம் செய்ய
வந்திருந்து குழலூதிச் - சிலர்
வாயசைத்தே தமிழ்க் காவியம்பாட
சந்தணமும் மலர் சோலை - தனில்
சார்ந்த மலர்மணம் வீசிடும் காற்றில்
சொந்த நிலம் என்றுஆடி - மக்கள்
சுந்தரமாய் விளையாடிட வேண்டும்
***********
22 May 2013, 18:24:15
to santhav...@googlegroups.com
இலைதொடு மலர்விடும் தென்றலும் ஒரு
இமைதொடும் துயில்மறு விழிகளும் - விரி
வலையிடை புகமறு குளிரலை- இதழ்
விரியிதழ் மணம் கெடு மலர்வனம் - உரு
கலையினும் எழிலறு கருங்குழல் -இனி
கனிகொள மனம்துற பறவைகள் - இவை
நிலைகொள்ளக் காணினும் காணலாம் - உயிர்
நிறைந்திரு தமிழின்றி வாழ்வுமோ
மலையிடை வீழ்ந்திடும் நதிமகள் விண்
மதிதன்னை மறைத்திடும் கார்முகில் - கற்
சிலையெனில் இழந்திடும் நடையெழில் - ஒளி
சிதறிட பிரிந்திடும் இலைபனி - தன்
குலைதனை இழந்திடும் முதிர்கனி - மெய்
குறைபட எமைவிடும் உயிர்தனி - நற்
கலைதனும் எழுமியல் தமிழினி - ஓர்
கணம்தனும் பிரிவிலை உயிர்இனி
தமிழெனில் சுவையொடு இளமலர் - தனில்
தருமது இனிதெனும் நிகர்வளம்
குமிழ் எழ அலையுடன் விரிமலர் - அதில்
குறு விழி அசைவதென் குடியினம்
அமிழ்ந்திடும் அலையிடை மீன் குலம் - அவை
அருஞ்சுவை யெனக் கொள்ளும் கொக்கினம்
எமதிரு விழிகொளும் நகர்ந்திடும் - அதன்
எழில்சொலத் தமிழென்று மினித்திடும்
23 May 2013, 08:27:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக