சனி, 26 ஜூன், 2021

 சிவனே,  சீற்றமெங்கே?


ஆலயங்கள் எங்கும் மணி கேட்காதோ - எங்கள்
ஆண்டவனே நீயெழுந்து வாராயோ
காலமகள் ஓர்வழியும் காட்டாளோ - எம்
கைவிலங்கும் தானுடைந்து வீழாதோ
கோலமென்ன குற்றுயிரும் சாவாமோ - தமிழ்
கூறுங் குலம் வீணழிந்து போவதுவோ
ஆலமதை உண்டு உயிர் காத்தவனே - உன்
ஆலயத்தில் நாமழுதும் நீதியெங்கே

தாவி நடந்த தோடும் எழிற் பூமியிலே - நாம்
தங்குவதில் ஏன் நியதி மாறியதோ
மேவியுயிர் காவியுடல் வாழ்வும்பொய்யோ - எம்
மேனிகளும் செங்குருதி வீழ்வதுவோ
பாவிமகன் பேசுந்தமிழ் பொல்லாதோ - எமைப்
பார்த்தவர்கள் கொல்லும் விதி ஒன்றாமோ
சேவித் துனைக் கையெடுத்ததுக் கூப்பிநின்றோம் - நாம்
செய்வினைகள் யாவும் பகை கொள்வதென்ன

வேலவனை ஈன்றவனே வேடமென்ன - உன்
வீறுசுடர் தீவிழியும் மூடலென்ன
பாலமுதத் தேன்நிலவை உன்சடையில் - ஓர்
பாவமெனச் சூடியுயிர் காத்தவனே
நாலதெனக் கொண்டகுண நங்கையவர் - இற்றை
நாளில் மலர்த்தேக உடை தானுரித்து
மூலவிதி மானுடத்தின் நேர்மையினை - அவர்
மீறி மிகக் கேவலங்கள் செய்கையிலே

வேலதனைக் கொண்டவனைப் ஈந்தவனே - பக்கம்
வீறெழுந்த மாதின் அரை கொண்டவனே
சூலமுடன்  தேவியயல் சேர்ந்தவராய் - நின்று
சுற்றுமுற்றும் பார்ப்பதென்ன வேகமிட்டு
மாலவனைக் காத்தருளக் கூறாயோ - மங்கை
மானங் காக்கச் சேலையீந்த மாதவனும்
கோலமெங்கள் பூவையரின் மேனிதனை விழி
கொண்டுமருள் செய்தலின்றி நிற்பதென்ன

மேலமுதத் தீந்தமிழும் சீரழியும் - நாட்டில்
மீண்டும் எங்கள் கண்ணகிகள் சாபமிட
சீலமுடை சிலம்பபொடிந்த ஓசைகளும் - கொண்ட
சீற்றம் பெருந் தேசமதைத்  தீய்க்காதோ
பாலமுதத் தெய்வமகன் பார்த்தழவும் அன்னை
பார்வதியும் பாலளித்து தூக்கியவர்
வீலெனவே கத்துமிளம் பாலகர்கள் - பகை
வீசியெறிந் தாடுகையில் காப்பாரோ

 
(இன்னும் ஒரு பகுதி உண்டு)

kirikasan

unread,
24 Mar 2014, 11:26:56
to santhav...@googlegroups.com

 
         சிவனே சீற்றமெங்கே!  (2 ம் பகுதி)
...........

மேவியெழும் கோபம் புயல் ஆகாதோ - இங்கு
மீண்டுமொரு தீயெழுந்து மூடதோ
நீதி நதி பெருக்கெடுத்தும் ஓடாதோ  - நீசர்
நித்திரையில் சாம்பலாக்கிப் பூசாயோ
கேவியழு தோர்குலமே சாகுதய்யா - இங்கு
கூடிப்பல நாடுகளும் மோதுதய்யா
ஆவியெழுந் தோடும்தொகை கொஞ்சமல்ல - எம்
ஆயுள் எனும் தேவன்கொடை என்பதல்ல

பாவிகளின் கைகளிலே பாவைர்கள் - படும்
பாடுதனை நீதி கொண்டு கேட்காயோ
ஆவிவிடும் காட்சிப் கண்டும் அம்பலத்தில் - நீ
ஆடும் நடம் பூமியதிர் வாக்கதோ
கூவியழக் குடலறுக்கும் மாவதைகள் - ஒரு
கொட்டுமிடி மின்னல் பட்டுத் தீராதோ
சேவித்துனைக் கேட்டுமினி என்னசெய்ய - நாம்
செய்பழிகள் கொண்டவரோ ஆவதென்ன


தேனினிய பேசுந்தமிழ் நாவுடையோர் - தமைத்
தேசங்களின் நீதிதுறை செய்வதென்ன
பூநிகர்த்த மாதர் உடல் தான்கிழித்தல் - அவை
புண்ணியமோ கண்ணிருந்தும் புண்களென
தானிதனைக் கொண்டதென நாம் நினைக்க இவர்
தத்துவமும் பேசிக் காலம் ஓட்டுவதேன்
வானில் கரும் மேகங்களின் மின்னல்இடி - அவை
வாக்களித்து  நீங்குமெனக் காப்பதென்ன

மயிலிறகே போடு எனப் பேசுகிறார் - ஒரு
மந்திரத்தில் மாங்கனியைத் தேடுகிறார்
பயிலும்நடம் பாதமுடைத் தாடுவென - நாம்
பார்த்திருக்கக் காதுகளில் ஓதுகிறார்
நாயின்வளை வால்நிமிர்த்தப் பாடுபட்டார் - அயல்
நாடியந்தப் பேயிரங்க ஆசைப்பட்டார்
கோயிலிலே தெய்வமெனக் கூப்பியகை - பின்
கோபுரத்தை ஏனிடிக்கக் கூடுகிறார்

மோதவரும் மாடு தனை முன்னிருத்தி - உன்
மோதும் செயல் தீதெனவே மெய்யுரைத்தால்
சேதமிட எண்ணும் மனம் மாறிடுமோ -  ஒரு
சீர்திருத்த வாதம் அதை வென்றிடுமோ
நாதமிடும் நா பலதும் பேசுமய்யா - விட்டு
நாம் பிழைக்க ஏதுவழி சொல்லுமய்யா
போதுமினிப் பொறுத்த கதை மூடிவைத்தே  - உன்
புத்திகொண்டே ஓர்வழியைக் காட்டுமய்யா

...........

kirikasan

unread,
5 Apr 2014, 13:40:10
to santhav...@googlegroups.com

       துன்பமே மிஞ்சும்

நெஞ்சம் கனக்குதடி தங்கமே தங்கம் - இந்த  
நீண்ட வழிப்பயணம் எத்தனை தூரம்
அஞ்சக் கிடக்குதடி அன்பெனும் உள்ளம் - அதில்
ஆடிக் களிப்பதென்ன அன்னையும் தினம்
மிஞ்சிக் கிடப்பதென்ன மேனியின் சுகம் - தனை
மீளப் பறித்தெடுக்க எஞ்சிய துன்பம்
நஞ்சை நிகர்த்சுவை வாழ்வதுகொளும்- விண்ணை
நாடிப் பறக்கவெனக்  கெஞ்சுதே மனம்

எட்டிநடந்து வந்தேன் எத்தனை துயர் - அதில்
ஏனோ நடந்தவழி இச்சைகள் படர்
தட்டி விழுத்துமனம் தான் தரும் இடர் -அது
தானே எனக்களித்த தர்மத்தின் கரம்
கட்டி இழுத்த தந்த காமனின் கணை - அது
காலம் விதித்த இருள் கண்கெடும் விதம்
முட்டி விழுத்த வந்த முன்வினைபயன் - என்
மூச்சை நிறுத்தவென்று மோகம்கொள்வதென்

சட்டச் சட இடிகள் சஞ்சலம் தரும் - அதில்
தாங்கா மனம் கலங்கி நீர் வழிந்திடும்
இட்ட விதியின் செயல் இத்தனை கோரம் - அதை
எண்ணி பதைபதைக்கும் ஏகமென்மனம்
வட்டிகொடுத்து மிந்த வாழ்வெனும் தனம் - அதை
வந்து விதிபறிக்கப் போரிடும்குணம்
நட்டமதைத் தவிர நான் பெறும் சுகம் - இந்த
நாளின்வரை இவனும் கண்டதில் எனும்

செட்டைமுளைத்துமந்த வான் பறந்திடும் - வரை
செய்யும் அவலம் இதைக் கேட்பதற்கெனும்
சட்டம் இயற்றவிங்கு யாருளர் இனும் - இது
சுட்ட குருதிகலந் தோடிடும் ஆலம்
கொட்டவிழித்திருக்க கோடிகள் கொல்லும் - சில
கொள்கை எடுத்தவரைப் போலும் விதியும்
வட்ட உலகில் எந்தன் வாழ்விருந்திடும் - வரை
வந்து வழித்துணையென் றிம்சைகள் செயும்

kirikasan

unread,
9 Apr 2014, 09:53:49
to santhav...@googlegroups.com

                   மாற வேண்டுமா?
(அன்றும்)
நீசிரிக்கப் பொன்னிலங்கும் நிர்மலவானம் - இன்று
யார்சிரித்துப் பூத்ததிந்த வெண்ணிலவோரம்
வாய்விரித்துப் பூக்குமந்தப் பூக்களின் பாரம் - உந்தன்
வாழ்க்கை யின்று காணுதடா வானவில்லாகும்
காய் பழுத்துத் தூங்குமரம் கண்டிடும் நாளும் - பல
காக்கையுடன் குருவிகளும் கலகலப்பாகும்
நோய்பிடித்த  ஏழையெனும் நீர்பொழி விழிகள் - துயர்
நெஞ்சுணர்வில் வேகிவிடும் நேரெதிராயின்

தாய் உரைத்து பாடம் சொன்னார் தமிழினி தென்றாய் - பின்
தாகத்துக்காய் ஏடுகற்றே தமிழ்ப்பலம் கொண்டாய்
மாயவளோ தூரம்நின்றோர் மண்ணிடை வரைந்தாள் - இன்று
மாறுதலை ஈந்தவளோ மந்திரமானாள்
தீ குளிரக் கண்டதுண்டோ  தென்றலும் பாடும் - அந்த
தேவதையின் வாழ்த்தினிலே தேனதும் ஊறும்
ஏய் நிறுத்து என்பதின்றி இளமையின் இன்பம்- இனி
ஏட்டினிலே எழுதும் வகை இன்சுவையாகும்

(இன்றும்)
ஆற்றினிலே வெள்ளமென அன்பது பாய- நாம்
அத்தனை தான் சத்தியத்தா யணைப்பினில் தூங்கி
சேற்றினிலே நின்றிடினும் சீர்புகழோங்க - நிற்கச்
சிரித்தென்ன விதி பகையின் சேர்பலமோங்கி
மாற்றமென மண்ணிலெமை மாபெரும் தேசம் - பல
மனமெடுத்தே குரல்நெரித்தும் மழலை யென்றாட்டி
காற்றினிலே நேர்மைதனை கரைத்தும் மெய்யோ - இது
கற்பனைக்கு ஏற்றதன்றிக் கண்டிடலாமோ 

தீவெடித்துப் போட்டதெல்லாம் எங்களின் வானம் - முற்றும்
தீய்ந்ததென்ன பொன்னுயிர்கள் பொய்களும் மாயம்
சேய்துடித்துச் சாய்ந்திடவே செய்தவள் கண்டும் - வாய்
தேம்பியழ விதி மறித்து தீயதைச்செய்யும்
பேயிரங்கும் பிறவி யென்றார் பேதைகள் கெஞ்ச - வன்மை
பேரிடியாய் பிணமெரிக்கும்  பூமியென்றாக
ஏய் துடித்து எழவதுந்தன் விதியெனில் இன்பம் - இனி
ஏழைகளின் கனவு கொள்வாய் இதயத்தில் வஞ்சம்

****************

kirikasan

unread,
9 Apr 2014, 18:58:16
to santhav...@googlegroups.com

   தமிழன் என்றொரு இனமுண்டு!

இன்று போய் நாளைவா என்றுசொன்னோம் இன்றும்
எத்தனை நல்லவர் யாம்
கொன்று பேயாகிக் குடித்திரத் தம்கடை
சிந்தவும் யாம் பொறுத்தோம்
வென்றுவா என்றேழுந் தேவிளை யாடிட
வேண்டிக் களித்திருந்தோம்
சென்று வா நாளை என்றே குடல் கொண்டவன்
செல்வதில் மெய் சிலிர்த்தோம்

தொன்றுதொட்டே தமிழ் சொல்பனுக்கொரு
தன்னந் தனிக்குணம் காண்
என்றுமவன் இணையில்லை உலகினில்
எத்தனை பற்றுதல் பார்
கன்றென நின்று பா .லுண்ட  வயதுடை
கண்மணிச் செல்வங்களை
சென்றுவா போர்க்களம் என்றுரைத்த அன்னை
சிந்தனை மாற்றமின்றோ

நன்றுதான் நாளும்ந லிந்து முடன் எங்கள்  
நாட்டில் பிறந்தவரை
மென்றுதின்ற பெரு மன்னவர் மாவதை
மன்னித்து விட்டிடுவோம்
பன்றிகளாகிப் பரவசித்தோம் பட்டை   
பந்தைச் சுழன்றடிக்க
வென்றவர் எங்களின் வீரத்திருநாடு
வெற்றி என்றே களித்தோம்

ஒன்றுமில்லை உள்ளே ஓடுநிறை மண்ணென்
றெப்படி நாமறிவோம்
தின்று களித்தெங்கள் தேகம் சுகித்திட
தேடிவழி சமைப்போம்
கொன்றவன் கைகளால் கூட்டியணைத்திடக்
கொக்கரித்தே மகிழ்வோம்
நின்றுயர் வானில் பறந்திட எண்ணுதல்
நீசக் குருவி என்போம்

என்றும் தமிழ் மகன் என்பவர்க் கென்றொரு
எல்லைதனை வகுப்போம்
மன்றம் கலைதமிழ் மாமரபு விதி
மாற்றி அமைத்திடுவோம்
தென்றல் வரும் அது தேகம் தழுவிட
தேடிப் பிரிக்கின்றதா
கொன்றவன் நின்றவன் வென்றவன் பேதமும்
கண்டு பிரித்திடவா!/

அன்னையும் போயினள் அப்பனும் செத்தபின்  
ஆடிக் களித்திடுவோம்
என்னையும் நான்வந்த இன்மொழி என்றொரு
எண்ண மமதை விட்டோம்
சின்னவன் என்றெமை சிந்தனை கொள்ளுவோர்
சொல்லியே கேலி செய்தால்
தின்னவும் நஞ்சிட்டு தென்னவர் காத்திடும்
தீரத் தமிழன் இவன்

*************

kirikasan

unread,
10 Apr 2014, 13:15:09
to santhav...@googlegroups.com

 
(நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு கறுப்பு  வெள்ளை ஊதா)

           வண்ணக்கவிதை

நீலக் கடலிருக்கும் நெளிதிரைகள் அலைந்திருக்கும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கசந்துவிடும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள் ஆக்கியவள்
கோலந்தனை நினந்தால் கொள்ளுமெழில் வாழ்வன்றோ

பச்சை மரங்களிலும் பார்த்த மலர்ச் செடிகளிலும்
இச்சை கொண்டு மனம் ஏற்றமுடைத் தென்றலிலா
அச்சம் நிறைவெளியாம் அண்டமெங்கும் உறைபவளை
உச்ச மனமெடுத்தால் உயர்வுதனைக் கொள்ளோமோ

செவ்வண் வானடியில் செங்கதிரின் உதயமெழும்
அவ்வெண் ணொளி யுயர்வில் அன்னையவள் ஆட்சியெழும்
கவ்வும் இருளொழியக் காட்சிமயக் கற்பனைகள்
இவ்வீண் உலகமெனும் இச்சைதனை கொல்லாதோ

மஞ்சள் நிலவொளியில் மனது கொளும் குளுகுளுப்பும்
கொஞ்சம் மதிமயக்கும் குளிர்நிலவில் போதைகொளும்
நெஞ்சில் நினைவழிந்து நீண்டமனக் கனவுவெளி
பஞ்சாய் மறைவதெங்கே பார் ஒளியின் சேர்வழியோ

கருமை இரவுதிரக் கதிர் முகத்தின் தெளிவெழவும்
வரு மைவிழி யுடையாள் வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெரு மையத் திருந்து பிரபஞ்ச தோற்றமுடை
திருமெய் உணர்வுகலந் தாக்கியவள் நினை தினமே

ஊதாக் குழலிலிசை ஒங்கியெழல் தானுமில்லை
தீதாய் பொழிவதில்லை தூறும்மழை தென்றல்நிலை
போதாதென அலைந்தும் பொழுதில் உருப் பெற்றதில்லை
நீதா என வேண்டில் நிர்க்கதியாய் விட்டதில்லை

வெள்ளை மனதெடுத்து விளையுமன்பு பூப்பொலிந்து
கொள்ளை யிடு மனதைக்  குலவு மெழில் வசந்தமலர்க்
கள்ளை யுண்டதுபோல் காணுமெழில் வாழ்வினிக்க
உள்ளம் கலங்கி யவள் ஒளியைநினை உருவெடுக்கும்

வண்ணக் கலவையெழ வான்வெளியின் சுற்றும்பெரும்
விண்ணை நிறை கிரக வட்டவளை பந்துகளை
அண்டந்தனில் உருட்டி  ஆனந்திக்கும் அன்னை தொழு
திண்ணம் உயர் பெரிதாம் தேகநலச் சக்திவரும்

எண்ணக் கருவழிந்தே இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடிஉடலில் மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் காணும்நிலை கடந்தவளைப் போற்று தினம்
உண்ணக் கனியெனவே உலகமதின் வாழ்வினிக்கும்


**************************

kirikasan

unread,
10 Apr 2014, 13:34:36
to santhav...@googlegroups.com
(நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு கறுப்பு  வெள்ளை ஊதா)

           வண்ணக்கவிதை

நீலக் கடலிருக்கும் நெளிதிரைகள் அலைந்திருக்கும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கசந்துவிடும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள் ஆக்கியவள்
கோலந்தனை நினந்தால் கொள்ளுமுயிர் வாழ்வன்றோ

பச்சை மரங்களையும் பார்க்கும் மலர்ச் செடிகொடிகள்
இச்சை யுணர்வுகளும் இத்தரையில் ஈந்தவளை

அச்சம் நிறைவெளியாம் அண்டமெங்கும் உறைபவளை
உச்ச மனமெடுத்தால் உயர்வுதனை கொள்ளோமோ


செவ்வண் வானடியில் செங்கதிரின் உதயமெழும்
அவ்வெண் ணொளி யுயர்வில் அன்னையவள் ஆட்சியெழும்
கவ்வும் இருளொழியக் காட்சிகளில் புலனிழையும்
இவ் வான் உருளுலகில் ஏழைமனம் காப்பாளோ

Ram

unread,
11 Apr 2014, 03:44:36
to சந்தவசந்தம்
அன்புள்ள கிரிகாசன்,
சந்தவசந்தத்தில் முன்பு “பாண்டி” என்றொரு பாவகையைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களின் இயறகையும் முரண்களும்இந்தப்பாடல் “பாண்டி”யாக மாறுவதற்கு வாய்ப்புள்ள பாடல். அதன் இலக்கணத்தை மீண்டும் கீழே தருகிறேன்.  உங்கள் பாடலை அவ்வகையில் மாற்றிப்பாருங்கள்.

ஆங்கிலத்தில் பாண்டம் என்றொரு பாவகை உண்டு.  அதைத் தமிழில் நான் பாண்டி என்று மாற்றியிருக்கிறேன்பாண்டியாட்டத்தில் தாவித் தாவிச்

செல்லுவதுபோல் இங்கும் செல்ல வேண்டியிருப்பதால் அப்பெயர்.

 

இனி விதியைப் பார்க்க்லாம்நான்கு அடிப்பாடல்சீர்களின்

எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடில்லைஎல்லா அடிகளும் அளவொத்திருக்கவேண்டும் அவ்வளவே

 

இரண்டாம் அடியும் நான்காம் அடியும் அடுத்த பாடலின் முதலடியும் மூன்றாவது அடியுமாக வரவேண்டும்இப்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதலாம்.

கடைசியில் அந்தாதிபோல் முதல் பாடலின் முதலடியில் தொடங்குவதுபோல் முடியவேண்டும்.

 

நான் கீழே கொடுத்துள்ள மாதிரிப்பாடலில் ஒவ்வோர் அடியும் அதன் அளவில்முற்றுப்பெற்றதாக அமைத்துள்ளேன்அப்படியெழுதினால் எளிதுஅப்படித்தான்

அமையவேண்டுமென்ற அவசியமில்லை.

 

 

எடுத்துக்காட்டு

 

போடு கோடு புகழில் கூடு

 

காடும் மலையும் கண்ணுக் கழகு

தேடு தேடு தேடு கிட்டும்

ஏடும் எழுத்தும் இனிய சொத்து

பாடு பட்டால் பயன் நம் பக்கம்

 

தேடு தேடு தேடு கிட்டும்

ஆடல் பாடல் அலுப்பு மருந்து

பாடுபட்டால் பயன் நம் பக்கம்

ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து

 

ஆடல் பாடல் அலுப்பு மருந்து

நாடு போற்றல் நமது கடமை

ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து

மூடும்  நெஞ்சம் முட்டாள் பண்பு

 

நாடு போற்றல் நமது கடமை

காடும் மலையும் கண்ணுக்கழகு

மூடும் நெஞ்சம் முட்டாள் பண்பு

போடு போடு புகழில் கூடு!    --   இலந்தை

 

அடுத்த பாடல் காடும் ம்லையும் கண்ணுக்கழகு என்று தொடங்கும்அதுதானே

முதல் பாடலின் முதலடி.

 

ஆங்கிலத்தில் இவ்வகைப்பாடல் எழுதுவது எளிதுகாரணம்அங்கே எதுகை பற்றிக்

கருத வேண்டிய அவசியமில்லைஆனால் தமிழில் அப்படியில்லையேஒரே எதுகை

கடைசிவரை தொடரவேண்டியிருகிறது.

 

இலந்தை

 

 

இலந்தை



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kirikasan

unread,
11 Apr 2014, 09:57:15
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி ஐயா! அடுத்ததாக இதை மாற்றிக் கொண்டு வருகிறேன். இப்போது ஒரு கவிதையோடு வந்துள்ளேன். அதைத் தருகிறேன் முதலில்!
நன்றிகள் மீண்டும்!

kirikasan

unread,
11 Apr 2014, 10:16:12
to santhav...@googlegroups.com
(உண்மையில் எங்கோ தொடங்கி மனம் எதிலோ முடித்துவிட்டது. அதை இரண்டாக்கிவிட்டேன்
           
         இரு முனைகள்

(இன்பமும்)

வட்ட வட்ட அலையெழுந்து வாவிமீது ஓடியென்னை
வாவென் றோரக் கண்ணைக் காட்டி வேகங் கொள்ளுதோ
தட்டத் தட்டப் பூவுதிர்த்து தென்றல்தொட்டதால் மரங்கள்
தேடி என்னில் பூ எறிந்து சேவை செய்ததோ
கட்டக் கட்டக் கற்பனைகள் காணும் வானிலேறிச்சென்று
காட்சியென்று வண்ணங் கொள்ளக்   காணு முள்ளமோ
எட்ட எட்ட நீர் வளைந்தே என்னை நோக்கி ஒடிவந்து
இன்பமென்று காலைதொட்டும் அஞ்சி மீளுதோ

முட்டமுட்ட நீர்வழிந்து மோகங்கொண்ட பார்வை கெட்டு
மங்கை வானம் ஊற்றுங் கண்ணீர் மாரியானதோ
விட்டவிட்ட அன்புபாடம் வித்தையென்று அங்கம்தொட்டு
வீசுந் தென்றலும் தழுவ நாணம் கெட்டதோ
பொட்டுப் பொட்டு வைத்த பூவை பூமுடிந்த கூந்தல்நீவி
புன்னகைத்த தாக மின்னற் பூவெழுந்ததோ
நட்ட நட்ட மாயிழந்து நன்மைவிட்டும் இன்னற்பட்டு
நான்விழுந்தபோதும் அன்னை தொட்டெடுத்தளோ

(துன்பமும்)
திட்டத் திட்ட நேர்நடந்து தேரிலேறி வான்கடந்து
தேகமீது ஆசைகொண்டு காலன் நிற்பதேன்
சட்டமில்லை நீதிநேர்மை சற்றுமில்லை இராச்சியங்கள்
சுற்றிலும் சுதந்திரத்தை ஏன் வெறுத்ததோ
நிட்டைமௌனம்  நீள்படுக்கை நெஞ்சில்மோகம் கொண்டு நீயும்
நீசர் எம்முடல் பறிக்க நீளுறக்கமோ
இட்ட இட்ட சாபெமென்றும் எண்ணி யுள்ளம் தானடங்கி
இல்லை யென்றும் வாழ்விதென் றிரங்கி நிற்பதோ

மொட்டு மொட்டுப் பூஅலர்ந்து முன்னிருக்க ஓடிவந்து
முட்டமூச்சு வாங்கி வண்டும் தேனெடுக்கவோ
கட்டை கட்டையாக வெட்டிக் கன்னம் பிய்த்துக் கண்பிடுங்க
காதற்பெண்டிர் மேனிகொல்லக் கண்ணுறக்கமோ
சுட்டுச்சுட்டுப் பல்விதத்தில் தூரவென்று மெய்யெறிந்து
தொட்டதில்லை நாங்களென்ன தோள் சிறுக்கவோ
கட்டிக் கட்டிஆண்ட தேசம் கையிழந்து போனபோது
கட்டில்மீது காண்சுகங்கள் காலம் என்பதோ?

*************

kirikasan

unread,
12 Apr 2014, 12:07:14
to santhav...@googlegroups.com

      எல்லைமீறும் உன்னழகு

நீ சிரிக்கும் போதினிலே
. நீர்நிலையில் சந்திரவிம்பம்
. நின்றொளிரக் காணுகின்றேன் நான்
காய் பழுத்த சோலைதனில்
. காண்கிளையிற் பூங்குயில்கள்
. கத்துமொலி கேட்டுவந்தேன்காண்
ஆ..எரிந்து கொள்ளுஞ்சினம்
. அத்தனையும் கு|ளிரெடுத்தே
. ஆறிவிடப் புன்னகைக் கின்றேன்                    
தீவிரித்து முன்னெரிய
. தேகம் குளிர் காய்வதன்ன
. தேவி உந்தன்முன்னிருந்தேனாம்

மாவிரிந்த கிளையிருந்து
. மயங்குதடி கிளியிரண்டு
. மங்கை உந்தன் புன்சிரிப்பில
சாவரிந்த நோய்பிணியும்
. சஞ்சலமும் ஓடிவிடும்
. சற்றும் துயர் மிச்சமில்லைப்போம்
தேவரிந்த தேனழகைத்
. தேவதையைகண்டுவிட்டால்
. தேவலோகம் பூமியிலேகாண்
கோபுரியும் ஆட்சியென்ன
. கோலெடுத்த ஆண்டியென்ன
. கூடியிரந் தாடுவர் முன்தான்

நாவரையும் வார்த்தையென்ன
. நாள் வரையும், காட்சியென்ன
. நீவிரித்த பேரழகேதான்
பாவரிக்கும் உன்னழகை
. பார்த்தவரின் இமை விரியப்
. பார் உதிக்கும் வானின் சுடர்தான்
காவிரிக்கும் கங்கைநதி
. காணூகின்ற மென் நெளிவு
. கால் நடக்கும் உன்னசைவேதான்
நீவிரிக்கும் விழிவழியே
. தீஎரிக்கும் ஐம்புலன்கள்
. நேரெதித்துக் கண்டதோல்வியாம்

வான்விரியும் மேகந்தனும்
. வாழுமுந்தன் மென்மையின்முன்
. வற்றிவிட நிர்மலவானம்
மான் திரியும் மாவனமுள்
. மாமலையின் கூர்முகமும்
. மங்கியதுன் கூர்விழி முன்னால்
ஏன்சரியும் வானடியும்
. ஏந்திழையுன் கார்குழலில்
. எண்ணமெழப் பூமி தொட்டதோ
ஊனெரியும் காடுதனில்
. உள்ளமதை வைத்தெரிக்கும்
. ஓர்நிலையைத்  தந்துவிடாதே

தேன்சொரியும் பூக்களிலே
. தேவையென்ன வென்றதுவென்
. தேம்பியழப் பூக்கள் வீழ்வதேன்
மீன்பிரிந்தே நீரைவிட்டு
. மெல்லதுடித்தாவதுமென்
. மென்விழியின் துள்ளல்வென்றதோ
மேன் புரியின் இராச்சியத்தில்
. மேடுகண்ட பொற்குவியல்
. மின்னவில்லைச் சென்றுவந்தாயோ
கோன் முடியைத் தொட்டதில்லை
. கோலம்கெட்டு வாழுகிறான்
. கொண்ட பகை உன் விழிவாளோ

***********************

Ram

unread,
12 Apr 2014, 13:12:00
to சந்தவசந்தம்
அருமை


--

kirikasan

unread,
12 Apr 2014, 13:26:19
to santhav...@googlegroups.com

நன்றிகள் ஐயா! கவியரங்கத்திற்கென்று கவிதை எழுத உட்கார்ந்தால் வேறுவேறு கவிதைகளாக வருகிறது கவிரங்க கவிதைவிரைவாக எழுதவேண்டும்.  கவியரங்கததின் நன்மைகளின் இதுவும் ஒன்று! பாண்டிக்காக புதிதாக எழுதினேன் அடியும் முடியும் சேர்க்கப் பாடுபடுகிறேன். இன்னொன்று எழுத முயற்சிக்கிறேன்! இன்றுஎப்படியும் எழுதிவிட வேண்டும்
நன்றிகள்!

kirikasan

unread,
12 Apr 2014, 21:53:37
to santhav...@googlegroups.com
இலந்தை ஐயா அவர்களுக்கு ஒரே எதுகையில் இல்லாமல் இரு கவிதை. இது விதிமுறைக்கு  உட்படாமல் இருக்கலாம் .  ஆனால் ஆங்கிலத்தோடு ஒத்துப்போகுமா?
முன்னர் எழுதிய முரண்பாடு என்று வரும்கவிதையை மாற்றச் சொன்னீர்கள் . மாற்றுகிறேன் இது ஒரு புது முயற்சி. சரியாக எழுதியுள்ளேனோ தெரியவில்லை பிழைஇருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்

           விதியும் வாழ்வும்

நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
வினை செய்து உளம் நொந்ததென்ன
விலையற்றதோ வெறும் வாழ்வும்

நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
நெஞ்சத்தில் கீறிடும் காயம்
விலையற்றதோ வெறும் வாழ்வும்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்

நெஞ்சத்தைக் கீறிடும் காயம்
நிலையோடித் தொலைபோகுமின்பம்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்
வலையினுள் மீனன்றோ நானும் 

நிலையோடித் தொலைபோகும் இன்பம்
தலைமேவிப் பாயுதோ வெள்ளம்
வலையினுள் மீனன்றோ நானும் 
வறுமைக்கு விலையாகிப் போகும்

தலைமேவி பாயுமோர் வெள்ளம்
தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
வறுமைக்கு விலையாகிப் போகும்
வருகின்றதோ எல்லை தானும்


தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர்
வருகின்றதோ எல்லை தானும்
வண்ணங்கள் தொலைகின்றதாகும்

தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் 
தான் கண்டதோ தெய்வம் தானும்
வண்ணங்கள்  தொலைகின்றபோது
வான் வந்ததே ஏழுவண்ணம்

தான் கண்டதோ தெய்வந்தானும்
தந்ததே அன்பினை பக்கம்
வான் வந்ததோ ஏழுவண்ணம் கண்டு
வந்திடும் இன்பங்கள்மீண்டும்     

தந்ததே அன்பினைப் பக்கம்
தாகமும் கொண்டங்கு நிற்க
வந்திடும் இன்பங்கள் மீண்டும்
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்

தாகமும் கொண்டங்கு நிற்க
தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்
வெடித்தே நல் உணர்வுகள்நோகும்

தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
வெடித்தே  நல்லுணர்வுகள் நோகும்
வினை செய்து உளம் நொந்துப்போகும்

*****************************
(மீண்டும்)
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
வினை செய்து உளம் நொந்துபோகும்
விலையற்றதோ வெறும் வாழ்வும்

*****************************

Ram

unread,
12 Apr 2014, 23:07:31
to சந்தவசந்தம்
sariyaka irukkiRathu.




--

kirikasan

unread,
13 Apr 2014, 08:39:39
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
13 Apr 2014, 08:50:45
to santhav...@googlegroups.com
இன்று சற்று உற்சாகமாக இருக்கிறேன் . அதனால் ஒரு புதிர்கவிதை இதில் தங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு நிச்சயம் உற்சாகத்தை தரும். இணையத்தில் மிகச்சிறந்த புதிர்களின் பட்டியலைச் சேர்ந்தசிலவற்றை கவிதையுடன் தரவுள்ளேன்.

       மாயக் கடிகாரம்

அன்றொருநாள் இல்லமிடை அடைந்தொதுங்குந் துன்பம் 
அட அடடா பெரிதெனவே அச்சம் மிகக் கொண்டு
மென்னிரவின் சூழலிலே மெல்ல நடைகொண்டீர்
பொன்நிலவின் ஒளியினி லே புதுமையொன்று கண்டீர்
சின்னதெனும் மின்குமிழ்கள் சேர்ந்துபிரகா சிக்க’
செழித்தமுகம் சிரித்தவிழி செய்கையில் உற்சாகம்
தன்னிலொரு ஈர்பெழவே தலைமை கொள்ளும் ஒருவன்
தொலை தெரியும் காட்சிப் பேழைக் கொரு நிகழ்வைச் செய்தான்

மின்னும் பலவர்ணங்களில் ,மேடை மீதுநின்று
மிரளும்விழி மாந்தர்தனும் மிகுந்த ஆசைகொள்ள
தன்னுணர்வு இழந்தவராய் தவித்திடவேவிட்டு
தர்க்க மிடும் பேச்சொளிர சாகசங்கள் செய்தான்
என்னதுதான் என்றுகாண ஏங்குமுள்ளம் கொண்டே
அத்திசையில் கால் நடந்து அண்மைதனைஏக
முன்னரெது கூறலின்றி மேடைநின்ற மனிதன்
முகம்மலர புன்னகைத்து  முன்நிலைக்கென் றழைத்தான்

அன்புடனே கண்டவனோ அங்கே மேடையேற்றி
அடுத்தவராய் இவர் திறமை அதிஷ்டம்பார்க்கவென்\று
முன்னிருக்கும் மூன்று நீல கதவுகளின் பின்னால்
மூன்றுமல்ல ஒன்றதன்பின் ஓடும் வண்டிஉண்டு
அன்னதனைத் தாம்தவிர அடுத்த எதும் கதவில்
ஆசைப்பட்டால் ஏதுமிலை அதி கவனம் கொள்வீர்
சொல்லி விடைஓர்முறையில்  சித்தியாகி விட்டால்
சிறப்புடனே வண்டிதனும் சேர்த்தெடுத்துச் செல்வீர்

இல்லையெனில் ஒன்றுமில்லை ஏய்த்துவிடத்தோற்றீர்
இழந்ததென ஏதுமில்லை எண்ணி மனம் கொள்வீர்
நல்லபதில் கூறுமென நடுஅரங்கில் நின்றே
நாளினொரு கூறதனை நயமுவந்து விட்டான்
அல்ல அதை நான் விடவும் ஆவதில்லை யென்று
ஆவல்கொண்டீர். ஓடும்வண்டி  அடைவது சாத்தியம்மா
வல்லமுறை எப்படிநான்  வரைவதென்றே எண்ணி
வாசற்கத வெதைஉரைப்பேன் வாழ்வில் என்றேயேங்க

கையினிலே மந்திரத்தைக் கட்டியபின் ஏனோ
கலங்குவதாம் உள்மனது கட்டளையைப்போட
மெய்யறிவு வேலை செய்ய மிருதுவான நேரம்
பொய்யறிவில் காட்டிக் கடிகாரத்தினை தொட்டு
ஆய்ந்துனது ஆனவுணர் வானதில்கொள் விடையும்
அப்படியே சொல்லுமென  அதனை யிரு கேள்வி
செய்யெனவெ கேட்டுவைக்க சொல்லும்செயல் இரண்டில்
சுந்தரமாம் வாகனமும் சொல்லி எடுத்தீர்கள்

கையிருக்கும் கடிகாரம் காலத்தின் மெய் சொல்லும்
காணுமெழில் பூமியிடை கருதியொரு கேள்வி
மெய்யுளதோ என்றறிய மேனி தொட்டுக் கேட்க
மிளிரும் வண்ண ஒளி மினுங்கி மெய்யுரைக்கக் காண்பீர்
பொய்மைகொண்ட கேள்விஎனில் பொன்னிறத்து மின்னல்
பொய்மையற்ற உண்மையெனில் பொங்கும்கடல்நீலம்
மெய்தனையே என்றும் பதில் சொல்லுமெனக் கொண்டே
மிகுந்த எதிர்பார்ப்புடனே மெல்லப் பதில் கேட்டீர்

என்ன அது எப்பொழுதும் உண்மைமட்டும் கூறும்
இருப்பினும் ஓர் சிக்கலுண்டு எப்பொழுதும் நிறங்கள்
தன்விருப்பில் மாற்றி வைக்கும் தகவலேதுமின்றி
தருணமதில் காண்பதென்ன தனை யுணரா நிற்பீர்
இன்றதுபோல் எந்தநிறம் எதற்கெனவே அறியா
அழுத்திவிட்டீர் அடுத்தகணம் ஆனவினா வைக்க
சிந்தனையில்  சற்றுசிறுகுழப்பமும் ஈந்தாலும்
சரியெனவோர் பதிலளித்த தெப்படியென் றுரைப்பீர்

விளக்கம்
 
மாயக் கைக்கடிகாரம் (புதிர்)
தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டுகிறது. கலந்து கொள்கிறீர்கள். விதிமுறை மிக எளிதானது.அங்கே மூன்று மூடிய கதவுகள் இருக்கின்றன. இரண்டு கதவுகளுக்குப்
பின்னால் ஒன்றுமில்லை. ஒரேயொரு கதவின் பின்னால் மட்டும் புத்தம்புதிய சிவப்புநிறக் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. உங்களை ஏதாவது விரும்பிய ஒரு கதவை தெரிவுசெய்யச் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர் கூறுகிறார். கதவுக்குப்பின்னால் இருப்பது உங்களுக்குப் பரிசாக கிடைக்கும். நீங்கள் அந்தக் காரின் மேல் ஆசைப்பட்டு விட்டீர்கள்

அதை எப்படியும் பெற்றாக வேண்டும். எப்படி பெறுவது?
சட்டென்று ஞாபகத்துவருகிறது நீங்கள் அணிந்திருக்கும் புதிய நவீன சக்தி மிகுந்த கைக்கடிகாரம்.அது உங்கள்  கேள்விக்கு  ஆம் அல்லது  இல்லையென்று பதில் அளிக்கும் ஆனால் ஒருநாளுக்கு இரண்டேஇரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்

உதாரணம் நீங்கள்  கேட்கும் கேள்வி
முதலாவது கதவின் பின்னால் வண்டி உள்ளதா?
அந்தக் கடிகாரத்தில் நீல மின்னுமொளி தோன்றினால் ஆம் என்றும் அல்லது மஞ்சள் நிற ஒளி தோன்றினால் பதில் ’இல்லை` என்றும் அர்த்தம்.

ஆனால் ஒரு சிக்கல் . அது எப்போதும் ஆமென்றால் நீலமும் இல்லையென்றால் மஞ்சளும் பாவிப்பதில்லை  சில்வேலைகளில் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.( ஆம் என்றால் மஞ்சளும் இல்லைஎன்பதற்கு நீலமும்) அதனால் பொய்சொல்வதில்லை நிறத்தை மாற்றிவிட்டு உண்மையைக்கூறும்
இப்படி மாற்றுவது சிலநாட்களில். மட்டும் ஆனால் ஒருநாளில் மாற்றிக் கொண்டால் அன்றுமுழுவதும் அப்படியே இருக்கும்  அதாவது நாளுக்கு ஒருதடவை எப்போது மாற்றும் என்ற நியதி கிடையாது  .

நீங்கள் அந்த ஆம் அல்லது இல்லை என்னும் பதில்தரக்கூடிய இரண்டு கேள்விகளை உங்கள் மாயசக்தியுள்ள கைகடிகாரத்திடம் கேட்டு 100% நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றியை எப்படி அடைவீர்கள்?

இதன்பதில் நானே தருவேன்! நாலைந்து நாட்களின் பின்னர். அதுவரை தங்கள் சிந்தனைக்கு விருந்தாகட்டும்

kirikasan

unread,
16 Apr 2014, 12:03:53
to santhav...@googlegroups.com

         ஒளி காண் விழி திறக்க!

தீயாய் ஒளிர்வது தெய்வம் - அது தீயல்ல
திங்கள் மின்னெழில் வடிவம் -  அதன் சுயமல்ல
காயாய் கனிவது காணின்  - கற்பனை யல்ல
காயம் பெறும் சுகம்யாவும் - அது கனிவல்ல
ஓயா மலர்தரும் வாசம்  - நிரந் தரமல்ல
ஓடும் காற்றுடல் நீவும் - அது உறவல்ல
தேயா விண்ணொளிர் சக்தி - அதைத் தினமெண்ண
தேறும் வாழ்வுனதாகும் - திடம் மனங்கொள்ள

ஓடும் அலைகளின் தேடல் - அதை மனங்கொள்ள
ஓங்கும் மனமதில் உண்மை -  சுடர் ஒளியன்ன
நாடும் பெருமதி ஞானம் -  மனமதைக் கொள்ள
மலரும் உன்னெழில் வாழ்வும்-  அவள் மனமெண்ண
ஆடும் மனமதில் ஆசை - உணர்வுனை வெல்ல
அனலோ எரிதழலாகும் - அது இலையென்ன
மேடும் கொள்ளெரி மலையாய் - பொறி வெளிதள்ள
மின்னும் தீக்கடலாகும் - இவ்வுலகென்ன

வானத் தெழும் பெருசக்தி - அதுவடிவல்ல
வந்தே கொள் மனதெங்கும் - அது விளைவெண்ண
தேனென் றாகிடும்வாழ்வு - அது தொலைவல்ல
தினமும் எண்ணிடு நாளும்-  வரும் துயர்வெல்ல
மோனத்திரு வெளிஅண்டம் -  அங்கொலிக் கின்ற
மூச்சின் எழும் ஓங்காரம் - அதை உயிர்கொள்ள
ஞானத்தொளி உடல்பரவும்-  அது புதிதல்ல
நாளில்  நீயதை உண்ர்வாய் - வெறும் பேச்சல்ல

நாளை எனும்தொடர் வாழ்வு - அது நமதல்ல
நாளும் தொடர் துயர்தானும் - நிரந் தரமல்ல
தேளைத் தொடும் வலிபோலும் - தினம் உயிர்கொல்ல
தேடிச் சக்தியைக் தொழுவய் - அது கடிதல்ல
பேழைப் பெட்டகமுள்ளே - ஒளி விளக்கன்ன
பெருதாய் தெரிவது இல்லை -  உன் மதிமின்ன
ஏழை உன்மனம் தேடும்  - ஒளி பிறிதல்ல
உள்ளே உள்ளது காண்பாய் - அதில் ஒளிவில்லை

kirikasan

unread,
19 Apr 2014, 11:50:09
to santhav...@googlegroups.com
ஒரு புதிர் கேள்வியொன்று கேட்டுவிட்டேன் அதனால் பதில் தரவேண்டிய அவசியம் அதற்காக
 
கேள்விச் சுருக்கம்
ஒரு மேடை நிகழ்ச்சி 
அங்கே மூன்று மூடிய கதவுகள் இருக்கின்றன. இரண்டு கதவுகளுக்குப் பின்னால் ஒன்றுமில்லை.
 ஒரு கதவின் பின்னால் மட்டும் புத்தம்புதிய சிவப்புநிறக் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. உங்களை ஏதாவது விரும்பிய ஒரு கதவை தெரிவுசெய்யச் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர் கூறுகிறார். கதவுக்குப்பின்னால் இருப்பது உங்களுக்கு பரிசாக கிடைக்கும். நீங்கள் அந்தக் காரின் மேல் ஆசைப்பட்டு விட்டீர்கள் அதை எப்படியும் பெற்றாக வேண்டும்.

நீங்கள் அந்த ஆம் அல்லது இல்லை  பதில்தரக்கூடிய இரண்டு கேள்விகளை உங்கள் மாயசக்தியுள்ள கைகடிகாரத்திடம் கேட்டு 100% நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றியை எப்படி அடைவீர்கள்? ஆம் அல்லது இல்லை என்பதை நீல , சிவப்பு நிறங்களை ஒளிர்வதன்மூலம காட்டும் ஆனால் எது எந்த நிறத்துக்கென்று தெரியாது

நாம் கேட்கும்கேள்வி
1.  முதலாவது  கதவின் பின்னால் வண்டி  இருந்தால் நீ சிவப்பு நிறத்தையா காட்டுவாய்?

இதேகேள்வியை இரண்டாவது கதவைக் குறித்துக் கேட்கிறோம் எப்படி

2. இரண்டாவது கதவின் பின்னால் வண்டி  இருந்தால் நீ சிவப்பு நிறத்தையா காட்டுவாய்? 

இதில் சிவப்பு நிறம் எந்தக்கதவுக்குரிய கேள்விக்கு  ஒளிர்கிறதோ அதற்குப்பின்: வண்டி உண்டு அல்லாமல் இரண்டிற்கும் நீல நிறம் காட்டினால் மூன்றாவது கதவின்பின் உண்டு 100% உறுதி செய்ய்ப்பட்ட விடை இது


மேலும்  உதவிக்கு PDF File இணைத்துள்ளேன் 
puthir.pdf

kirikasan

unread,
19 Apr 2014, 17:15:38
to santhav...@googlegroups.com

எங்கிருந்தோ வந்தான்  எனைத் தூக்கிப் போடென்றான்
இங்கிவனை  விழிபெறவே என்னதவம் செய்துவிட்டேன்


   கூகிள் கண்ணாடி

கூகிள் கண்ணாடி விற்பனைக்கு அமெரிக்காவில் வந்துவிட்டதாக அறிகிறேன்
இது ஒரு புதுமைப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என்கிறார்கள் அதையிட்டு ஒரு கவிதை

இந் நாள் வீட்டினிலே ஏற்றதொரு கம்யூட்டர்
சொந்தமெனக் கொள்வதிலே சிக்கல் இருக்கிறதாம்
வந்தவைகள் வைரசென வாங்குபவை ஊறுகொண்டு
சந்தைப் படுத்தலெனச் சகலரும் கண்டேங்கையிலே

தொலை நாடாம் அமெரிக்கா சேர்ந்தவொரு சந்தையிலே
கலைமேவும் வடிவோடு கண்ணுக்கு வளம் சேர்க்க 
அலைபோலும் புகழோடி அங்கு வரும் வேளை கண்டேன்
விலை கொண்டு அணிவதிலே வேடிக்கை அவனானான்

மங்கிக் கிடப்பான் மறுகணமே எழுந்திடுவான்
எங்கும் மதி உரைப்பான் என்னிடத்தில் சேவகனாய்
தங்கிக் கிடந்தான்  தகுந்த படி நடத்திடுவான்
எங்கென் றுரைத்துவிட ஏகும்வழி யுரைப்பான்

தொங்கிக்கிடப்பான் தொடும் மூக்கில் சாய்ந்திடுவான் 
எங்கெங்கே யான் புகினும் ஏற்ற துணை வருவான்
மங்கும் ஒளி போமோ மழைவருமோ என்றுரைப்பான்
நங்கை முகம்பூச நல்லபொருள் காட்டி நிற்பான்

பொங்கும் ஒளிர்க்  கிரணம் பூமியிலே தொடவெழுந்து
எங்கேன் றவன் நினைந்தால் என்னெதிரில் புன்னகைப்பான்
அங்கேயென் றூர்க்கதைகள் ஆயிரமாய் முன்னுரைப்பான் 
இங்கே என் மடியிருந்து இன்று விழியாகி விட்டான்

வந்த விதம்மறியேன் வாய்மொழியும் பேச்சறியேன்
மந்த மதி யென்றால் மாறுசெயல் முன்வைப்பான்
மந்திரியாய்ச் சேவகனாய் மனமறியா துணைநலமாய் 
அந்தோ நல்மாசற்ற ஆசிரியன் ஆகிவிட்டான்

எங்கிருந்தோ வந்தான் எனைக் கண்ணில் போடென்றான்.
இங்கிவனை  யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்
ஒங்கிப் புகழ்கொண்டான் உலகினுக்கே சேவைசெய்வான்
தூங்கா மனமெடுக்க துணிந்தே பல் வித்தை செய்வான்

வாங்கும் பொருள்களுக்கு  வழிகாட்டி ஆகிடுவான்
ஏங்கும் மனம்சோர இன்னிசைத்துப் பாடிடுவான்
எங்கிருந்தோ வந்தான் எனைக் கண்ணில் போடென்றான்.
இங்கிவனை  நான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்

வந்தவழிதெரியவில்லை  வாகனமும்  ஏதுமில்லை
எந்தவழி போவதென்ன எடுத்துரைப்பான் கூகிள் என
சொந்தப் பெயருடையான் சித்திரங்கள் போலழகும்
தந்தென் மனம் பறித்தான் தொழில்நுட்பத் திகழ்பொருளான்



kirikasan

unread,
23 Apr 2014, 17:59:12
to santhav...@googlegroups.com

    அது வேண்டுமென்றேன் எது???

காலம் எந்தன் வாழ்சுகத்தை காயப் போட்டது
கருக எந்தன் மேனி பற்றி குறிகள்:இட்டது
கோலம் மேனி கூனி நிற்கும் குணத்தைத் தந்தது
கொண்டவிதியும்  கூடவந்து குலுங்க வைத்தது
ஆலமென்றே நா கசக்க  உணர்வை செய்தது
ஆடிநடமாடுவென்றே அடிமை செய்தது
சீலமென்று நான்நினைக்கச் சிறையில் போட்டது
செல்லும் கால்கள் யாதறியா செயலிழந்தது

கூடியுமென் உள்ளுணர்வில் குறையமைத்தது
கொள்ளுணர்வு பின்னடைவை குறியெடுத்தது
ஆடியும் மென் அசைவினிலே ஆயிரம் வேல்கள்
அடுக்கடுக்காய் உடல்முழுதும்  அதிரப்பட்டது
வாடிவிழ வேதனைகள் வாழ்வளித்தது
வண்ணமின்றி கும்மிருட்டில் வாசல் நின்றது
நாடிவிழுந்தென் நிலையை நீங்கச்சொன்னது
நான்சிரிக்க  ஏனோவிட்டு நடை நடந்தது


கண்விழித்தும் கால் நடக்க காத்திருக்கின்றேன்
கருணைஒளியும் வீசும்வரை கடன்கள் பொறுத்தேன்
உண்ணும் மாய ஔடதங்கள் உணர்வை உலுப்பி
உடலின் சோர்வை விரட்டும்வரை உறங்கிக்கிடந்தேன்
தண்ணிலவு மேகம் வந்து  தான் மறைக்குது
தாரையாகக் கொட்டும் மேகம் தரை நனைக்குது
அண்ணளவில் எந்தன் வானில் ஓடும் மேகங்கள்
அகம் நனைத்து விழிபொழிந்து ஆக்கும்மாயங்கள்

மண்ணில் மேனி நிலையெடுக்க மணிகளாகுது
மலர்வில் மீண்டும் மனம் துடிக்க நேரம் கேட்குது
எண்ணமின்றிச் சிந்தை மீண்டும் தோல்வி யாகுது
எதிலும் வாழ்க்கைப் பிடிப்பு இன்றி ஏக்கம் கொள்ளுது
அண்டமீதில் அன்னைநின்று ஆசி தந்தவள்
அவளின் வார்த்தை கண்டு உள்ளம் அடிமையானது
கொண்டவாழ்வு என்னதல்ல  குமுறும் தீயது  அது
கூறும் வரையும்  குரலுமோங்கி கேட்கும் நாளிது

***********************

kirikasan

unread,
27 Apr 2014, 08:36:19
to santhav...@googlegroups.com

           
               எழுவாய் தமிழ்(ச்) சொல்


பணிந்திடல் வேண்டாம் தமிழா இதுவோ
பயனிலை விடு நீ எழுவாய்
தணிந்திடில்  நாளை தலமுறை வீரத்
தகைமை யிழப்பார் எழுவாய்
அணிந்திடு வீரம் அறிவொடு திறமை
அலையென,எழுவாய் எழுவாய்
வணங்கிடில் உந்தன் வாழ்வது இழியும்
வரும்பகை எதிர் கொண்டெழுவாய்


துணிந்திடல் வேண்டும் துயரமும் கொண்டு
தூங்குதல் விட்டே எழுவாய்
மணிமகுடம் உன்முடிதனில் கொள்வாய்
மாசபை ஆள்வாய் எழுவாய்
அணிபடை கொண்டோர் அரசது வேண்டும்
அதனையும் காண்பாய் எழுவாய்
பணிந்திட வாழின்  பலமது போகும்
பயமிலை எழுவாய் எழுவாய்

ஒரு துளியேனும் உறக்கமும் இல்லை
உயரிய நோக்கம் எழுவாய்
தரும் சுகவாழ்வில் தருமங்கள் பொலியத்
தாழ்வது விட்டே எழுவாய்
சிரமது தாழும் நிலையை விடுத்து
சீறியே புயலாய் எழுவாய்
இரங்குதல் கொண்டே இருந்தது போதும்
எடுகை உயர்ந்திட முயல்வாய் 

குனிந்திடக் குட்டும் குவலயமீதே
கூடிய மொழிகள் யாவும்
தனிநிலம் கொண்டே திமிருடன் வாழும்
தகமையைக் காண்பாய் எழுவாய்
நுனியினில் தன்மை உயர்திணை கொண்டே
நான் எனதென்றிடும் மொழிகள்
இனி மறந்தேனும் எழில் தமிழ் குறைவென்
றெண்ணுதல் விட்டே எழுவாய்

எடு நடைபோடு ஏறென ஓடு
எதிரியை நட்பென் றேற்காத்
தொடு கணை போலும் தோல்வியைப் பகையின்
துணைநலம் ஆக்கித், துயரம்
விடு எமதல்ல வீரத்தின் மைந்தர்
வீறுகொண்டே வாழ்ந்திட்டோம்
தடு எவர்தானும் தமிழ்குறை வென்றால்
தவறென உணரச் செய்வாய்

*******************

yogiyaar

unread,
27 Apr 2014, 16:10:24
to santhavasantham
அற்புதம் கிரி.. நல்ல வீறு உள்ள கவி இது. வாழ்க நீ..
 யோகியார்(74)_

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--

ananth

unread,
28 Apr 2014, 02:39:51
to சந்தவசந்தம்
அழகிய கவிதை. எழுவாய், பயனிலையோடு செயப்படு பொருளையும் சேர்க்கலாமே?

அனந்த்


--

kirikasan

unread,
28 Apr 2014, 12:23:56
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! நினைத்தேன் எழுதவில்லை ! நன்றிகள்!

kirikasan

unread,
28 Apr 2014, 12:25:46
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா தங்களின் ஆசியும் வாழ்த்தும் எனக்கு உற்சாகம் ஊட்டுகின்றது!

kirikasan

unread,
28 Apr 2014, 12:45:57
to santhav...@googlegroups.com


செய்தி: -மீண்டும் யாழ்/ கொக்குவில் பகுதியில் இராணுவத்தில் சேர்ப்பதாக கூறி தமிழ்பெண்களை சுற்றி வளைத்துக் கூட்டிச்சென்றது அரசபடை

            சோர்ந்து போகிறேன்

சின்னச் சின்ன வாசப்பூக்கள் தொட்டுப் பார்க்கிறேன் - அதில்
சேர்ந்தமென் னிதழ்கள் கண்டும் சோர்ந்து போகிறேன் 
என்ன வாழ்வில் இன்பமென்றே ஏங்கி நிற்கிறேன் - பூவில்
ஏது மிச்ச முண்டு நாளை எண்ணிப் பார்க்கிறேன்
தின்னவென்று தேகம்கொண்டு என்ன செய்கிறேன் - நாளும்
தீமைநாடித் துய்த்து மேனி தீய்ந்துபோகிறேன்
நன்மையேது வாழ்வில் என்றும் துன்பமே வதம் - இங்கு
நானும்வாழ வந்ததென்ன சோர்ந்துபோகிறேன்

வட்டமான பொட்டுப் போலும் வான வெண்ணிலா - அது
வந்துபோகும் என்ன உண்டு வாடிப் போகிறேன்
சுட்டகாலை தோன்றும் அண்ட சூரியன்களும் - ஒன்றைச்
சுற்றும் பூமி கொண்டதிங்கு ஏனென் றெண்ணினேன்
வெட்டி வேலையற்றுத் தெய்வம் வீம்பில் செய்ததோ -இல்லை
விற்பனைக்கும் உட்படாத வீசும் குப்பையோ
கட்டிக் காக்க  யாருமற்ற கேடுபெற்றதோ - இங்கு
காணும் மாந்தர் கட்டவிழ்த்த காட்டு மாக்களோ

மெட்டிகாலில் கொண்டமாதர் மின்னும் நேர்விழி - கொண்ட
மேனி என்ன நாய்களுண்ண போட்ட மச்சமோ
அட்டகாசமிட்டுக் கொல்ல ஆன வர்க்கமோ - தேசம்
யானை சென்ற பூவின் தோட்டம் ஆனதென்னவோ
விட்டதென்ன பூமியென்ப வேதனைகளின் - வான
வீதியோடும சூனியத்தின் விம்பமானதோ
சொட்டி வீழ்வதென்ன நீதிக் கண்ணில் இரத்தமோ - இதை
சற்றும் கண்கள் காணவில்லை தெய்வ சக்தியோ

மொட்டலர்ந்த பூக்கள் தன்னை வெட்டிவீசிடும் - இந்த
மாயன் காலன் செய்வழக்கை உள்ளம்ன் காண்பதோ
தொட்டிலிட்டுக் காத்தபிள்ளை தோள் வளர்ந்ததும் - இந்தத்
தூயமண்ணில் வேரறுத்து வீழச்செய்யவோ
மட்டி மா பெருத்தமூடன் மற்றவர்களும் - இந்த
மேதினிக்கு காவலிட்டு மேன்மை கொண்டிட
அட்டமாதிக் கெங்குமேகி ஆதியாம் தமிழ் என்றும்
அல்லலுற்றும் இன்னற்பட்டும் ஏழையாவதோ

சுட்டபொன்னும் சட்டியும் துலங்கும் தோற்றத்தில் - இங்கு
சுட்டதும் கலங்கி வீழும் தேகம் அல்லவோ
தட்டியும் அடித்தகத்தி கூர்மையாகிடும் - எம்மைத்
திட்டியு மழிக்கும் கூட்டம் தெய்வ சித்தமோ
முட்டியும் விழுத்தும் மாட்டில் அன்புகொள்ளவோ - கெட்ட
மூர்க்கரும் தமிழ்குலத்தை இல்லென்றாக்கவோ
கட்டியும் வதைக்கக் கைகள் கட்டிநிற்பதோ - இந்த
காதகர் தமிழ் இனத்தைக் கட்டியாள்வாரோ

குட்டியும் குழந்தைமேனி கொல்ல யாரிவர் - இந்தக்
கோலமும் எடுத்த வாழ்வில் குற்றம்யாரதோ
எட்டியும் இனம் அழிக்க ஏது மௌனமோ - இந்த
இன்னலை இங்கீந்தவர்க்கு இன்ப வாழ்வதோ
ஒட்டியும் ஒன்றாகி நட்பு கொண்ட பாவிகள் - இங்கு
ஏகமும் இடர்விதைக்க தெய்வம் காத்திடா
விட்டதேன்  வியந்தும் பின்னர் சோர்ந்து போகிறேன் - மீண்டும்
வீரமும் விளைந்த வாழ்வை என்றுகாணுவேன்.


****************



kirikasan

unread,
5 May 2014, 23:08:01
to santhav...@googlegroups.com
           
               மாயவன்  நாமோ?


தீதோடித் தென்றலென்று வீசுகின்றதே - கெட்ட
தீமை புகுந் தினமழிவைக் கூட்டுகின்றதேன்
காதோடு தொட்டசையும் காற்றதுவும் தேன் -  கொண்ட
காமலர் பூ வாசம்விட்டுக் காணுகின்றதேன்
யாதோடிப் பருவவனப் பாக்கியதோ காண் - பெண்டிர்
யாக்கைதனை காக்கைகழு குண்பதற்கீந்தோம்
ஏதோடிச் சென்ற துயிர் இத்தனை கோரம் - காலம்
எம்குலத்தை வேரறுக்க இத்தனை வேகம்

வாதாடிக் கிடைப்பதுண்டோ விடுதலை கூறு = இங்கு
வந்தாடும் விதியின் வலி வீழ்த்தவும் நின்று
போதோடிப் புலருமெனப் பலபல ஆண்டு நாமும்
பொறுத்தோமே உயர்வை யெண்ணிப் பேதமைகொண்டு
சூதாடித் தோற்றபஞ்ச பாண்டவர் அங்கே - இங்கு
சூழுலகும் சேர்ந்தாடிச் சூழ்ச்சியில் வென்றே
மாதோடிக் கலங்க அவள் மறை துகில் உருவும் - இந்த
மாகயவர் செய்கை  கண்டோம் மாதவன் யாமே

காற்றோடி ஓலமிடக் கத்திடும் ஆழி - அதன்
காணலைகள் கரை விழமுன்கதறிய காட்சி
ஆற்றோடி வரும் நீரும் ஆழத்திநோக்கி- வீழ்ந்து
அருவியென கூச்சலிடும் அதிலெழும் ஓசை 
ஊற்றோடி வரும் முகிலும் இடியொலி போடும் - தூர
உறுமியெரி மலைவெடிக்கும் ஓசையின் தாக்கம்
ஆற்றாது புயல்மரத்தை அடியுடன் சாய்க்கும் - அது
ஆவெனவே சத்தமிடும், அதிர்வதும் கேட்கும்

நேற்றோடு பெருமையிவை யிழந்தது காண்பீர் - இன்று
நேரும்வதை தமிழினத்தர் ஈழவர் தன்னும்
தோற்றோடிக் கதறுமொலி  பெரிதென ஆகும் - இவர் 
துயரபெருகித் துடிக்குமொலி தோன்றிடக் கேட்கும்
மாற்றானின் கைகளிலே மரணத்தின் ஓலம் இது
மறுபடியும் மறுபடியும் எழும் நிலை காணும்
ஈறறாக வருவதென்ன எம்முள வாட்டம் - இதில்
எத்தனை நாள் இன்னுமென  ஏங்கிடும் நெஞ்சம்

நூற்றோடு ஒருவரென நாம்  உயிர் ஈயா - இந்த
நேர் விழிமுன் கொடுமைதனை நெஞ்சமே கேளாய்
வேற்றோடு பகைமையுள்ளம் விட்டொன்று சேராய் - எம்
விரல்கோர்த்து ஒர்வழியில் விரைந்திடக் காண்பாய்
சேற்றோடு பிறந்ததுதான் செழுமலர்க் கமலம் - அது
சிறுமையெண்ணி குறுகலின்றி செழிப்பது காண்பாய்
ஆற்றாமை கொண்டலைந்தோம் ஆனதுபோதும் - இனி
ஆற்றலுடன் சுதந்திரத்தின் அழகு கொள்வோம் வா

kirikasan

unread,
6 May 2014, 07:27:05
to santhav...@googlegroups.com
                 
                 சக்தி யீந்தனள்

ஒளியென வெளிதொலை யுயர்விடை எழிலுற
உறைந்திருப் பவளுனையே
அளிபெரு வரமென அனுதினம் உருகினன்
அறமொடு வழி யமைத்தே
தெளிவெடு மனதுடன் திடமெடு நடைகொளத்
தருவதுன் வலிமையதே
களிகொள எழுவது கருமையில் ஒளியெனும்
கருணையுன் திருவருளே

செழிமலர் இதழ்கொளும் சிறுமையில் மெருகினைச்
செறிவெழ எமக்களிப்பாய்
பொழிமழை குளிர்சுகம் புது நதியெனும்விதம்
பொலிந்திடும் உணர்வளிப்பாய்
எழில்மலர் சிரித்திடும் இளமையின் சுவடுகள்
இனும்பெரி தென அமைப்பாய்
தொழிலுனைத் தொழுவதும் தமிழினி கவிதைகள்
தினமெனப் பெருக வைப்பாய்

குலமிவன் தமிழ்தனும் குறைவின்றிப் பெருகிடக்
குவலயமதில் சிறப்பாய்
நிலமதில்  பெருந்துயர் நிகழ்வினை நிறுத்தியெம்
நினைவினில் சுகம் கொடுப்பாய்
கலகமும் பிணிகளும் கடும் வினைப் பயன்களும்
கருகிட இனிமை ஒன்றாய்
உலகமும் எமை ஒரு உயிரென மதித்திட
உணர்வுகள் பெறவும் வைப்பாய்

இலையொரு உயர்வினில் இதைவிட ஒருஇடம்
எனுமொரு தகையளிப்பாய்
கலையுடன் பெருந்தமிழ் களைபெற அறிவினைக்
கணமிதில் எமக்களிப்பாய்
அலைகடல் பெரிதெனும் அதைவிடப் பெருந்தொகை
அமைதியில் எமை இருத்தாய்
தலைதனில் முடிகொளும் தகுதிகொண்டிவர் நிலை
தருமத்தின் வழிநடத்தாய்

************

rawmu...@gmail.com

unread,
6 May 2014, 14:25:19
to santhav...@googlegroups.com
செயப்படு பொருளினில்   பயனிலை  என்றால் 
        சீறியே  வீறுடன்  எழுவாய்!
நயப்படும்  உரைகளில்  நன்மையும்  வருமோ?
        நல்லவை செயப்படு  பொருளாம்!
தயக்கமும்  தாழ்வும்  தரித்திரர்  செயலாம் 
        தாவியே  செயற்படத்  துணிவாய்!
செயலே  செயலே  நம்கடன்! இனிமேல் 
         தியங்கலில்  பயனிலை , எழுவாய்!

 
   இன்னும் நம்மை அந்தப்பாவி எழிலழிப்பதோ?-நாம்   
      ஏழையாகி  ஏங்கிநிற்றல்  என்று மாறுமோ?
   தன்னைச்  சற்றும்  எண்ணிடாமல்  சண்டைசெய்திடின்-அவன்  
       சரித்திரத்தின்  சாபம் பெற்றே தாழ்தலுண்மையே!
   முன்னம் வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் முடுகிமீளுமே!
        முயலும் தூக்கம் நீங்கி மீண்டும் முயற்சிசெய்யுமே!
   உன்னவுன்ன ஊக்கம்மேவும் உறுதி வெற்றியே!
         உலகம் நம்மை திரும்பிப் பார்க்கும்! உண்மை வெல்லுமே!

 கண்ணனேநீ  தேரைவிட்டுக்  கீழிரங்குவாய் -அந்தக் 
     கயிற்றைச்  சற்றே  மீண்டுமென்றன்   கரத்திலீகுவாய்!
 அண்ணனேனும்   குற்றம் செய்யின்  அவனும் எதிரிதான்!
      அவனைக்கொல்ல விரைய வேண்டும், அதட்டு குதிரையை! 
 கண்ணிமைக்க  நேரமில்லை தேரை என்வசம் 
      கலக்கமின்றிக்  கொடுத்துநீங்கு, காண்டீபம்மிதோ!
  பண்ணுமுப  தேசம்பின்னே  பார்த்துக் கொள்ளலாம்!
      படபடெனெப் பகைவர்வீழ்தல் பாரில் , பாரையா!
  
அன்புடன் இராமமூர்த்தி.
 
            


--

kirikasan

unread,
6 May 2014, 21:41:25
to santhav...@googlegroups.com


ஐயா ,
அக மகிழ்கிறேன்! நன்றிகள், இவ்வளவு  அழகான கவிதைமூலமா ? நன்றிகள்! நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்
****************************************

kirikasan

unread,
6 May 2014, 21:48:25
to santhav...@googlegroups.com

 
         நீதிக்குப்பின் பாசம்

துட்டரும் தீயரும் கூடுகிறார் - அதி
தீவிரமாகவே தேடிவந்தார்
வெட்டவரும் செங் குருதிகண்டே அவர்
வேடிக்கையாகவே ஆடுகிறார்
சட்டமும்கீழே கிடக்கின்றது - அதில்
சத்தியம் ஏங்கி தவிக்கின்ரது
கட்டிய நீதியின் கோட்டையிலும் - அந்தோ
காரிருள் கண்ணை மறைக்கின்றது

பட்டவர் செந்தமிழ்ப் பாவைகளும் - சிறு
பாலகரும் இளங்காளைகளும்
சுட்டவர்  மாஅரி வெட்டவரும்  - ஒரு
தோற்றம் பொறித்த `கொடி`யவரே
கட்டியவன் கட்டக் கொண்டவளும் - அவள்
கண்மணியும் மண்ணிலீந்தவரும்
தொட்டிலிட்ட புதுக்கைக் குழந்தை - அதன்
சொந்தங்களும் சுற்றம் உள்ளவரே

நட்டநடு வீதி விட்டவரைச் - சொந்த
நாடுபறித்து நல்லாடை விட்டு
தொட்டிழுத்துப் பெண்ணைக் கால்மிதித்தும் - அவர்
தூய உடல் தன்னிலிச்சையுற்று
முட்டக் குடித்துக் கும்மாளமிட்டும் - இவர்
மூச்சை இழப்பதைத் தான் சுகித்து
வட்டமாக நின்று வாய் பிதற்றிக் - கெட்ட
வார்த்தைகள் பேசியே புல்லரித்தார்

அட்டையென ஒட்டி ரத்தமதை - இவர்
அத்தனை செந்தமிழ் மாந்தர்களும்
கொட்டி இழந்திடச் சொத்தைவிட்டு - நல்ல
கோலங் கெடுத்துக் குழியிலிட்டே  
வெட்டிமண் போட்டதை மூடியபின் - அதில்
வீடுகட்டிக் குடியேறுகிறார்
எட்டுத்திக்கும் ஏவும் கண்ணிருந்தும் - புவி
ஏதும் அறியாதார் போற்கிடந்தார்

சட்டியுள்ளே ஒரு ஓட்டையிட்டே - அதில்
சற்றும் குறையாமல் நீரைவிட்டு
விட்டு விடுகிறேன் மூச்சையென்றும் - அதில்
வீழ்ந்துயிர் நீக்க விளைகையிலே
கட்டி அழுகிறார் தேசங்களும் -= அவர்
கைங்கரியம் இவர்கொள்கை யென்றே
எட்டியெமைக் குட்டிஓடுஎன்றார்  - ஏனோ
ஏய்த்து நிலம்  கொண்டவர்க்களித்தார்

சத்திய வேதனை கொள்ளுகிறோம் - இது
சாத்திய மானது எப்படியோ
புத்தியைக் கொண்டவர் பார், அதமும் =- செய்வர்
பின்னாலிருப்பது நீதியென்றோ
நித்தமுயிர் கொள்ளக் கண்டபின்னும் -இந்த
நேரம் தவறுதல்  தன்னலமோ
கத்திஅழுதோம் ஏ..காந்தநிலை - கொண்டும்
காசில் காணும் அன்பு பொய்த்ததுவோ

********************

kirikasan

unread,
7 May 2014, 16:56:53
to santhav...@googlegroups.com

    ஏன் படைத்தாய்

வானம் படைத்தாய் வட்டஒளிப் பரிதியிட்டாய்
கூனம்புலி வானில் குறைய வளர் கோலமிட்டாய்
தேனம் மலரிடையும் தீண்டிக்கள் ளுண்வண்டும்
ஆனதிவை நீபடைத்தாய் அற்புதமாம் சக்தியன்றோ

கானக் குயில் படைத்தாய் காற்றிலொலி சப்தமிட்டாய்
மானும் படைத்துவிழி மருளு மெழில் மென்மையிட்டாய்
தானமென வாழ்வும் தருக்களுடன் பச்சை வயல்
போன வெயில் திரும்பப் புதுமையிவை காணவைத்தாய்

தீயும் சுடர் படைத்தாய் தென்றலால் பெருக வைத்தாய்
வாயும் இனித்துண்ண வகையாய் கனிபடைத்தாய்
பாயும் நதி மீன்கள் பசும்புல் பாய் விரித்தாய்
நோயும் பிடித்த உளம் நிறைமனிதம் ஏன் படைத்தாய்   

மாநிலமாம்  மேதினியில் மக்கள் தொகை படைத்தே
மேனியெழில் இனம்பிரித்து மேன்மை நிற வெறியூட்டி
போநீ இடம் விட்டுப் புலம்பித்தான் திரியென்றே
ஏனிதயத் துள்ளே இரக்கமற்ற வெறுப்பீந்தாய்

மேனி சிலையழகாய் மின்னுமெழில் மெருகேற்றி
ஏனிந்த மாதர் இளமைதனில் எழுச்சியுற்று
வாநீ என அழைக்கும் வண்ணவிழி கண்டதன் பின்
சாநீ எனக்கொல்லும்  சஞ்சலத்தில் ஆழவிட்டாய்

ஆநீ செய் அகிலமதில்  அழகு மலர்ப் பூஞ்சோலை
தேனின் மலர்ப் பொய்கை திரியுமிளம் பூங்காற்று
வானிற் கலைந்தமுகில் வண்ண ஒளி இசைநாதம்
வேனிற் குடைவான வெயிலால் விரி கமலம்

நாணக் குறும்பார்வை நயனமதிற் பொய்க்கோபம்
கோணற் குவியிதழும் கொட்டிவிட்ட குங்குமமும்
பேணர் கரியதெனும் பெண்மைதனும் நீபடைத்து
ஆணிற் கொடியவரால் அணைப்பதென சாகவிட்டாய்

சூது பகை வஞ்சமுடன் சினங்கொண்ட சூழ்ச்சிமயம்
மாதுன்பம் மயங் கியொரு மரணத்தின் மூச்சிழுக்க
காதும்தான் கேட்டிழியும் காதகரின் கொச்சை மொழி
யாதும் இகம்வைத்தாய் எம் வாழ்வில் ஏன் இணைத்தாய்

தாயும் படைத்தளித்தாய் தாயுதரத்துள் கருவாய்
சேயும் படைத்தாய்பின்  சேருடலும் பிரித்தழுதும்’
மாயும் வகைசெய்து மனமழவும் செய்ததுநீ
போயுமிவ் வாழ்வுதனைப் பூமியிலே ஏன் படைத்தாய்

kirikasan

unread,
17 May 2014, 12:20:18
to santhav...@googlegroups.com

          இனித் தீருமா ??

கோட்டையிலே கொடிபறக்கப் பாரடா - அங்கு
கொட்டும் முர சோங்குவதும் கேளடா
வாட்டமுறும் தீமைகளைக் காணடா - அவர்
வாழும் துயர் நாம்கொடுத்த தல்லடா
சூட்டினிலே பனி மறையும் ஏதடா - அது
சொல்லிவைத்த விதி இயற்கை யாகுமாம்
காட்டுமலர் பூத்தமணம் காற்றிடை - அது
காவிவரும் நாளிதுவாம் கொள்ளடா

தீட்டியவாள் கையெடுத்த வாழ்வடா - அதைத்
தீண்டியவர் தானுமழிந் தாவராம்
நீட்டிய நற் பொருள் நலிந்த நூலதும் - அது
நேர்மையெனில் நேர் இரும்பு ஆகுமாம்
சூட்டிய பொன்முடி யெடுத்த நாளடா - அதில்
சோர்ந்து தவழ் தென்றல் புயல் ஆகுமா
வாட்டியஎம் நெஞ்செழுந்து வீங்குமா - நம்
வழியிருளை ஒளியெழுந்து மேவுமா

மூட்டியசெந் தீயெரியக் காண்கிறோம் - அதில்
மூச்சிரைந்து நாம் நடந்தும் தேய்கிறோம்
காட்டிய வர் நீதி கரையேற்றுமா - ஓர்
கரமெழுந்து நேர்மைதனைக் கேட்குமா
பாட்டினிலே துன்ப இருள்போகுமா - இனிப்
பக்குவமாய்க் காய்கனிந்து வீழுமா
வேட்டியினை தூக்கிமடித் தேறுவோம் - அந்த
விதிமலையாம் நாம்கடந்து ஓடுவோம்

கேட்டினிலே ஊறியவர் எம்மிடம்  - இக்
கீழ்நிலலைக்கு தள்ள வைத்த காலமும்
சாட்டினிலே ஊருலகம் தேற்றினார் -  இச்
சாட்டையடி கண்டுமஞ்சி  ஓடுவர்
நாட்டினிலே தர்மம் எழுந்தோங்குமா - இனி
நாம் நடக்க ஒர்வழியும் தோன்றுமா
வீட்டை நினைந்தோர் மகிழ்வும் பொங்குதே - இது
வீதியுடன் நின்றிடுமா சொல்லடா

kirikasan

unread,
17 May 2014, 12:29:35
to santhav...@googlegroups.com
திருத்தம் மன்னிக்கவும் அவசரமாக எழுதியது;



திருத்தம்

தீட்டியவாள் கையெடுத்த வாழ்வடா - அதைத்
தீண்டியவர் தானுமழி  வாரடா
சோர்ந்து தவழ் தென்றல் புயல் ஆகுமா
வாட்டிய நம் நெஞ்செழுந்து வீங்குமா - நம்

kirikasan

unread,
18 May 2014, 03:40:34
to santhav...@googlegroups.com

            அவள் சோகத்தின் ஏதென்ன?
(தலைவனும் தலைவியும்)


அவள் கூற்று:-’

அந்திவெயி லாறமலர் ஆடுமலை நீர்க்குளத்தில்
வந்து விரி பேரழகைக் கண்டிருந்தேன் - அங்கு
விந்தையதோ எம்பிவிழும் வேலெனும்கண் விளைகயலும்
சொந்த இடம் விட்டு நிலம் வாழ்ந்திடுமோ

எந்த நிலை யான்மறந்து நின்றவளோ ஆள்நிலமும்
அந்தோ கதி யாயழிந்து போகையிலே  [  துயர்
செந்தணலும் பட்டதுவாய் சின்னவள் இங்கூற்றும்விழி
வந்தனல் நீர் வீழருவி யாவதுமேன்

வந்து விதி வாசலிலே வாரிமணல் வீசியபின்
எந்ததிசை போனதென நானறியேன் - இனி
சுந்தரமா தென்றலது சேரவும்கு தூகலித்து
நொந்த உடல் தான் துயர் விட்டாவதென்ன ?


அவன்:-

மேற்கடிவான் சூரியனும் மேவுமலை ஆழியிடை
தோற்றதெனக் காண் விழுந்திம் நாள்மறைய- அச்
சேற்றினிலே தாமரையும் சென்றதவள் காதலனின்
சீற்றமெழும் செங்கரமென் றேங்கியழ

சிந்தனையில் பூத்தவளே செங்கரும்பின் கீழ்ப்புறமே
சந்தமெழ வந்து நடை கொண்டவளே  - இச்
சுந்தரமென் பேச்சினிலே சிக்கியவன் பித்தெனவே
இந்த மொழி உந்தனிடம் கொஞ்சுவதென்?

நேற்றிருந்த ஆனந்தமோ நிலையிருள கருமையெழும்
ஆற்றலென அருகிவிட ஆனவளே  - உன்
கூற்றினிலே உள்ளகுறை கேட்டுளமோ புரியவிலை
ஊற்றும் விழிகண் டுழன்று கொள்வதென்ன?

மந்திரமோ  போட்டவள்நின் மோகமழைக் குள்நனைந்த
தந்திரமும் சூழ்கலியைத் தந்திடுமோ  - இவள்
செந்தழலின் ரூபமதில் சின்னவளாம் நீ மகிழப்
பந்தமுடன் உன்பதிலை பார்த்தவன்நான்

அந்தி யிருள் சூழுலகில் ஆனந்தமென் ஓசையிடும்
நந்தவன மாமலர்கொள் சோலைமரம் - இன்று
வெந்தெரியும் காற்றினிலே  வேதனையில் பூப்பொசுங்க
எந்தவிதி காரணமோ சொல்லிவிடு

(மிகுதி 1 வரும் இது பகுதி 1)

kirikasan

unread,
21 May 2014, 08:24:48
to santhav...@googlegroups.com

                  குறுக்கலின்றி நீட்டாய்
 
நீரலைக் குள்மாறி மாறி  நீச்சலென் றசைத்த தாயே
நிர்மலத் தில்நெஞ்சை விட்டதேனோ
தீரலைக் கவிக்குள் காணும் தித்திக்கும் இனித்தமாயம் 
தென்றலை நிகர் அசைத்தல் ஈந்தே
சாரலைப் பொழிந்த மேகம் சட்டெனும் இடிக்குமோசை
சத்தமும் இழந்த்திருப்பதுண்டோ
சேரலைக் கொடுத்த தாயே செந்தமிழ் பிணைத்த வாழ்வில் 
சொற்கவித் திறன் அளித்து மேவாய்

ஆடலை மறந்த தோகை ஆற்றலை இழந்த போலும்
ஆக்கலைத் துறந்த எண்ணம் வேண்டா
கூடலைச் செந்தீயின் வெம்மை கொண்டனன் இத்தேக வன்மை
கொஞ்சமில் குவிந்ததாக ஈந்தே
வேடிக்கை பாரென்று யாக்கை வீதியில் கிடந்த குப்பை
வீசிடக் குறிக்கும் எண்ணம் வேண்டா
பாடலை இசைக்கும் நெஞ்சம் பைந்தமிழ் குடித்த உள்ளம்
பக்குவம் இழத்தலற்ற சீர்செய்

சோடியைப் பிரிந்த அன்னம் சுற்றமும் விட்டோர் ஏகாந்தம்
சுற்றிலும் தனிதத வாழ்வு வேண்டாம்
சாடியை விடுத்து மூடி சட்டெனப் பிரித்து ஊற்றி
சஞ்சலப்படுத்தும் தன்மை விட்டே
கோடியைப் பெருத்த பொன்னைக் கொட்டியும் கிடக்கும் வைரம்
கூட்டியும் அள்ளென்று வீசலின்றி
ஆடியும் கொள்ளென்று  தொட்டில் ஆட்டியும் அணைத்துக் கிள்ளி 
ஆவெனக் கத்தென்றும் ஆக்கலின்றி 

தேடியும் நான் கண்டதில்லை தீயிலும் பெருத்த  சோதி
தீண்டியும் கொள்ளிச்சை நெஞ்சில் இல்லை
பாடியும் நான் கண்டஇன்பம் பஞ்சமும் இருந்ததில்லை
பட்டினை யொத்தோர் பளிங்கென் றாக்கி
ஆடிடும் பேராழி போலும் ஆக்கினும் அசைத்து என்னை
அண்டமும் கண்டாடும் மின்னல் வெள்ளம்
நீடிடுமென் றன்பு வாழ்வில்  நித்தியம், பொறித்து மின்னும் 
நேரலைக் குறைத்தலின்றி நீட்டாய்

**************** 

Ram

unread,
21 May 2014, 13:48:26
to சந்தவசந்தம்
அருமையான பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக