சத்தியதீயே என் அன்னையே
சக்தி சக்தி சக்தி என்று கத்திக் கூறடா - அந்தச்
சத்தியத்தின் ரூபமுந்தன் பக்கம் பாரடா
பக்தி பக்தி பக்தி கொண்டு நித்தமோதடா - உந்தன்
பக்கம் நிற்கும் பாவமோடிச் சித்தியாமடா
எக்கதிக்கும் அன்புகொண்ட அன்னைமேலடா - நின்னை
சக்தியுள்ள நற்கதிக்குள் சேர்ப்பளாமடா
திக்கனைத்தும் ஆளும்தெய்வம் புத்திவேண்டடா அன்னை
தக்க அன்புகாட்டி உன்னை காக்கும் தீயடா
மத்தியன்றி அண்டமேவி நிற்பளாமடா - என்றும்
மாலைகாலை தோன்றும் வீழும் சூரியன்களில்
வைத்திருக்கும் வெம்மை சொல்லில் தேவிதானடா - நின்று
வஞ்சம்தீது வாழ்வில் தீய்க்கும் அன்னை யாமடா
சித்தி மேன்மை செல்வம் யாவும் சக்திதானடா அன்பு
சொத்து வாரிக் கொட்டுமின்ப வாழ்வின் தாயடா
பக்தி யோடு நீநினைக்கக் கற்றுக் கொள்ளடா - உன்னைப்
பார்க்கும் அன்னை சக்தி கண்கள் பாசம் கொண்டடா
நீர்தெறித்த போது நிற்கக் காணும் தண்மையும் - பின்பு
நீவும் காற்று மேனிதொட்டுப் பேசு மின்பமும்
யாரெழுந்தும் செந்தமிட் சொற் பாவிசைக்கவும் - அங்கு
நானும் மெய் மறந்துமாவி சேர்திருக்கவும்
போர்எடுத்த வாழ்வில்போது போற்றி அன்னையும் - வீரம்
பொங்கும் நேரம் பொங்கப் பொங்கப் புத்துணர்வையும்
மார்பில் வைத்துப் பாட்டிசைத்து தூங்கு மன்னையும் - கொண்ட
மாமகாநம் சக்திகொண்ட மாற்ற மல்லவோ
மத்(தி)யவான மண்டலத்தின் மாபெரும் ஒளி - மேற்கு
மஞ்சள் வண்ணத் தீகுழம்பின் மாலை காணொளி
வித்தைகள்பு ரிந்துகாணும் வெள்ளைத் தீயொளி - இன்று
வேகமென்னி லோடும் சூர்யப்பாதை போம்வழி
சித்தங் கொண்டு சேவித்தன்பு சொல்லு பாரினி - இந்தச்
சுற்றும் பூமி அற்பவாழ்வில் செல்லும் நோய்பிணி
உத்தமிக்கு உன்மனத்தைப் பக்தியோடளி - இனி
ஓங்கும் வாழ்வில் உண்மைகாணு மில்லை வேறினி!!
----------------
17 Jul 2013, 22:25:57
to santhav...@googlegroups.com
காலம் சொல்லட்டும்
சிரிக்கட்டும் சிந்தைதனுள்
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
எரிக்கட்டும் ஏங்குமுளம்
இடர்படவே எரிக்கட்டும்
கரிகொட்டும் வகையாய் என்
கவி சமைந்துபோனாலும்
சரிகெட்டும் போவேனோ
சரித்திரமும் முடிவாமோ
விரிக்கட்டும் விண்ணிற்பல
விழிசிமிட்டும் தாரகைகள்
சரிக்கட்டும் சஞ்சலங்கள்
சாய்ந்தலைந்து வீழும்வரை
வரிக்கட்டும் விதிபலவும்
வாழ்முறையில் வரைகோடும்
இருக்கட்டும் இவையெதுவும்
என்னுலகிற் கில்லையம்மா
உரைக்கட்டும் உள்ளறிவோ
உன்னதமும் யாதெனவே
அரைக்கட்டும் அதில் அன்பை
அற்றதென ஆற்றிடையே
கரைக்கட்டும் கரையுடைந்து
காட்டாறு வெள்ளமென
விரையட்டும் விரைந்தாலும்
வீறழிந்து போகாதே
புரைகட்டும் புண்ணாயின்
புதுமருந்து போடட்டும்
அரைக் குட்டும் அனல்பேச்சில்
அழுந்திமனம் வேகாது
முறைகெட்டும் நடைகொண்டால்
முழுதா யணைத்துவிடில்
மறை காட்டும் அன்னையவள்
மடிதூங்கி எழுவேனே
உறைக்கட்டும் உண்மை மனம்
ஓடியொரு நாள்தெளியத்
திறைகட்டும் செயலொப்ப
தேவைகளில் நலங்காண
உறையெட்டும் வாளெடுத்து
உண்மைகளைத் துயில் கலைத்தால்
அறங்கொட்டும் வாழ்வமைந்தே
அன்னைவரங் கிட்டாதோ
17 Jul 2013, 23:21:40
to சந்தவசந்தம்
அன்புள்ளா கிரிகாசன்,
நான் உங்கள் இந்த இடுகையை இதற்கு முன் ஏனோ பார்க்கத் தவறிவிட்டேன். இதற்கு முந்திய இடுகையின் இணைப்பைச் சொடுக்கினால் கோப்பு நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முந்தைய கவிதையோடு தொடர்புபடுத்திப் படித்தால்தன் என்ன சொல்ல்வருகிறீகள் என்பது தெளிவாகத் தெரியும். அதைப்படிக்கத போதும் இந்தக்கவிதையின் ஓட்டமும் நடையும் என்னைக் கவருகின்றன.
வாழ்க!
அன்புடன்,
இலந்தை
18 Jul 2013, 00:58:27
to santhav...@googlegroups.com
நான் நீக்கியது எனது சொந்த வாழ்க்கை வரலாறு. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை . இருப்பினும் முழுவதுமாக PDF Fie ஆக்கி இங்கு போட்டுள்ளேன்.
http://www.mediafire.com/view/9dfo5hjibgy5j6a/vaazhkkai.pdf
இங்கே உள்ளது
அன்புடன் கிரிகாசன்
21 Jul 2013, 20:52:17
to santhav...@googlegroups.com
தற்போது இங்குநிலவும கோடைகால வெயில் திடீர்மாற்றத்தால் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கிறேன்
நடுக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை. உடல் தளர்ந்து காணப்ப்டுகிறது கவிதை மனதுக்குள் வந்தாற்கூட அதை கணினியில் உள்ளிடுவது கஷ்டமாக் உள்ளது.
ஐந்து விரல்கலும் தாங்கள் எண்ணம்போல விரும்பிய எழுத்துகளை அழுத்துகின்றன அதனால் கொஞ்சநாட்களுக்கு என்னுடைய கவிதை குறைவாகவே இருக்கும்
மீண்டும் நலமாகும்போது ஓரிரண்டு வாரங்களில் உடல் வெப்பத்திற்குப் பழக்கபட்டுவிட்ட்தும் தொடர்வேன்
22 Jul 2013, 00:02:44
to santhav...@googlegroups.com
விரைவில் குணமடைந்து கவிதைச் சோலையில் மலரும் உங்கள் கனவுப் பூக்களை இங்கே காண வேண்டும் என்ற விருப்பத்துடன் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்.
சங்கரன்
22 Jul 2013, 01:48:48
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! வருவேன் ! தங்கள் வாழ்த்துக்களின் வலிமையோ மீண்டும் ஒரு பெரியமுயற்சியுடன் நுழைகிறேன்!
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
22 Jul 2013, 01:54:04
to santhav...@googlegroups.com
உயிர்ப்பு
ஓடிவிடவா என்ற துயிர் எழுந்து கேட்கும்
ஓ..விடுவனா என்ப துடல் சினந்துநிற்கும்
தேடிவரவா என்று தீ கடைக்கண் பார்க்க
தேவையில்லைப் போவென்று தென்றலதை ஊத
ஆடிவிழவா என்றே அசையுமிரு காலும்
ஆனந்த நடனமிடும் அழகுடலும்கண்டும்
பாடிஒரு கவிஎழுத பாவியிவன் முனையப்
பாரடா இவனையென பரிகசிக்கும் விதியோ
மூடிவிடவா என்று மூச்சுப்பை கேட்கும்
மோகமுடன் ஆசைவிழி மூச் சென்று அடக்கும்
மாடியினில் வாழுபவன் மதியிழந்து தூங்க
மாயமனம்கூறுங்கவி மழைநின்றதாக
வாடிவிழும் பூஎனவே வாழ்வு இதுகண்டால்
வசந்தம் மலர் தேடியிவன் வானம் புகுவானோ
நாடி விழுந்தாலென்ன நடை தளரவில்லை
நான் வணங்கும் சக்தியவள் நலம் பெற்று வருவேன்
காலைமலர் பூக்கவில்லை கனவுகளும் வெறுமை
கனியிழந்த சோலைமரம் காக்கை பட்சியில்லை
சோலைக்குயில் கூவவில்லை சுற்றிவருங் கோவில்
சுடர்தீபம் ஆடுவது சுழல் காற்றின் தொல்லை
வாலைமகள் பாடுங்குரல் வயற் காற்றிலில்லை
வந்த இளங் காற்றும்முகம் வருடும் குணமில்லை
மாலையிருள் சூழின்ஒளி மறைவதென்ன புதுமை
மறுபடியும் உதயம்வரும் மகிழ்வுகொள்ளக் காலை
****************
22 Jul 2013, 02:00:07
to santhav...@googlegroups.com
எழுத முடியாத நேரத்தில் உங்கள் கவிதையை ஒலி வடிவில் பதிக்க முடியுமா?
மனம் தளர வேண்டாம். தமிழைத் தவிர வேஎறு மருந்தும் உள்ளதா. விரைவில் குணம் பெறுவிர்கள்
With regards
SuganthiVenkatesh
Sent from my iPad
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
22 Jul 2013, 03:44:32
to சந்தவசந்தம்
உங்கள் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. வரும். புதுவிடியல் மலரும்.
இலந்தை
22 Jul 2013, 04:32:07
to santhav...@googlegroups.com
"நாடி விழுந்தாலென்ன நடை தளரவில்லை
நான் வணங்கும் சக்தியவள் நலம் பெற்று வருவேன்"
நான் வணங்கும் சக்தியவள் நலம் பெற்று வருவேன்"
"மாலையிருள் சூழின்ஒளி மறைவதென்ன புதுமை
மறுபடியும் உதயம்வரும் மகிழ்வுகொள்ளக் காலை"
மறுபடியும் உதயம்வரும் மகிழ்வுகொள்ளக் காலை"
அற்புதமான, உயிரூட்டமுள்ள வரிகள். இந்தத் தன்னம்பிக்கை உங்களை குணமாக்கி விடும்.
சங்கரன்
22 Jul 2013, 16:55:31
to santhav...@googlegroups.com
இல்லையம்மா, இது ஒவ்வொரு வருடமும் வரும் காலம்மாற்றப் பாதிப்பு..தேறிவருகிறேன் நன்றிகள் !
அன்புடன் கிரிகாசன்
22 Jul 2013, 16:58:53
to santhav...@googlegroups.com
நிச்சயமாக ஐயா மனதில் வலு உள்ளது . 1000 கவிதைகள் குறிக்கோள். இப்போது 500 தானே முடிந்தது
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
22 Jul 2013, 17:03:27
to santhav...@googlegroups.com
ஐயா சக்தியிடம் சொல்லிவிட்டேன் 1000 கவிதைகள் முடிக்கமுதல் எதுவும் தீயன அணுகாது காத்தல் வேண்டும்
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
22 Jul 2013, 17:05:56
to santhav...@googlegroups.com
துயர் ஏன் குயிலே!
வெல்ல வல்ல பெரும் வீரர் தமிழ்க்குலம்
வெல்லு மென்றே இசைத்தா(அ)ய் குயிலே
வெல்ல வல்ல என இன்று திகழ்வதும்
வேதனை கொள்வதும் ஏன் குயிலே
சொல்ல வல்லமொழி செந்தமிழம் என்று
சொல்லி நின்றாயடி சின்னக்குயிலே
சொல்ல வல்லயிது கொல்லும் இனமொழி
கொல்லென சொல்விதி யேன் குயிலே
இல்லை குறைவற்ற செல்வம் தமிழெனும்
இன்பம் நிகரற்ற தோ குயிலே=
இல்லை குறை, யற்றுச் செல்வர் தமைவிட்டே
ஏய்த்துப்பறி யென்பரேன் விதியே
எல்லையற்ற பலதொன்மை கலைநூலாம்
எங்கள் பெருதேட்டம் தீய்க்கையிலே
சொல்லி யினமொழி கல்வியழிக்கவும்
சேர்ந்தனர் என்பதும் காண் குயிலே
கல்லை வைத்துப்பல கட்டும் சிற்பக்கலைக்
கூடங்களும் கலைக் கோ(ஒ) புரங்கள்
வல்ல கடவுளை வேண்டிய போதுள்ளம்
வற்றியதோ அருள் சொல்லு குயிலே
நெல்லை விதைத்ததை நீர்விட் டறுத்ததன்
நீக்கி உமிகளைந் தாக்கிய சோறு
இல்லை இவர்க்கென ஆகும்நிலைதனை
என்ன நீதிகேட்டுச் சொல்லாய் குயிலே
தொன்மைத் தமிழ்நல் லிலக்கியப்பாடல்
தோம் தீம் தரிகிட நாட்டியத்தோடு
பின்னலிடுங் குழு பெண்கள் கோலாட்டம்
பேசி மகிழ்ந்திடும் பாமரமக்கள்
மென்மைஉள மன்பு கொள்காத லர்கள்
மேதினி யெங்குமே ஆனந்தமாக
இன்பமெடுத் தியல் பெய்திடும் போதினில்
என்தமிழ் மக்களுக் கேனிந்தப் பாடு?
******************
30 Jul 2013, 08:18:50
to santhav...@googlegroups.com
மீண்டும் குளிர்ந்தது காலை
மழைபொழியுது இடியிடிக்குது
மனங் களிக்குதடி - இது
மாரி காலம் போலத் தூறி
மலர் உதிர்க்குதடி
குழை பறிக்குது குருத்து டைக்குது
குருவி கத்துதடி .- மெய்
கூதல் ஆக்கி ஊதுங் காற்று
கோணச் செய்யுதடி
பழைய சாளரக் கதவு காற்றில்
படப டக்குதடி - அதைப்
பார்த்துப் பூனை பயந்து நடுங்கிப்
பதுங்கிச் செல்லுதடி
குழைந் துருட்டிய மணலை நீரும்
கொண்டு போகுதடி - பின்
குறையில் விட்டுதன் கோலம் மாறிக்
குதித்துப் பாயுதடி
தூறல் கொட்டுது தூர மின்னுது
தொலைவிற் சத்தமடி - இது
தூக்கி வாரிப் போட்டு மனமும்
துடிக்கச் செய்யுதடி
மாற லற்றது மலையில் நீரும்
மீள்பெருக் கமடி - அது
மளம ளென்றிடை ஓடிப் பாறை
மறைவில் துள்ளுதடி
கூற லென்னது குரங்கு மனதும்
குறுகுறுக் குதடி - இந்தக்
கொட்டும் மழையில் குதித்தே யாடக்
கொள்ளு தாசையடி
மீறல்கொண்டொரு காற்று வந்திடை
மரம் உலுப்புதடி - அது
மிரள வைத்தொரு மனதி லச்சமும்
மேவச் செய்யுதடி
சோலை மரங்கள் சிலுசி லிர்த்திடச்
சொட்டும் நீரையடி -அவை
தோளிற் பட்டதும் சிறுவர் கூட்டம்
துள்ளும் மான்களடி
காலைச் சுற்றிய சேலை பற்றிடும்
கன்னிப் பெண்ணொ ருத்தி - அவள்
கவனம் நீரில் கால் சறுக்கிடாக்
காக்கும் எண்ணமடி
நூலைப் போன்றிடை வெள்ளிக் கம்பியின்
நீளத் தூறலடி - அது
நெஞ்சிலாக்கிய இன்ப மென்னது
நினைவுச் சாரலடி
காலை பூவெனக் காணும் மனதில்
களிப்பை ஊட்டுதடி - மெல்லக்
காற்ற டித்திடக் கன்னம் சில்லெனக்
காணும் முத்தமடி
வேலை செய்திடப் போகும் மனிதர்
வியர்வை போனதடி - அவர்
வேகும்மனதில் விடியல் பூக்கள்
விருப்ப மூட்டுதடி
சாலை பக்கத்தி லாடும் மரங்கள்
சற்று லுப்புதடி - துளி
சேர்ந்து வீழ்ந்திடப் பறவைகூட்டம்
சீற்றம் கொள்ளுதடி
நாலை மூன்றொடு கூட்டிப் பார்த்திட
ஏழு வந்ததடி - இந்த
நாளில் மீண்டுயிர் கொண்டு வாழெனும்
நேரம் வந்ததடி
பாலை வெம்மணல் நீர்பொழிந் தெனப்
பார்க்க இன்பமடி - இந்தப்
பாவி யுள்ளமும் பாட்டெ ழுதிடப்
பார்த்துக் கொட்டுதடி
---அன்போடு கிரிகாசன்
***********************
30 Jul 2013, 13:54:04
to santhav...@googlegroups.com
அருமை, கிரிகாசன்!
மீண்டும் குளிர்ந்தது காலை
மழைபொழியுது இடியிடிக்குது
மனங் களிக்குதடி - இது
மாரி காலம் போலத் தூறி
மலர் உதிர்க்குதடி
30 Jul 2013, 14:38:38
to santhav...@googlegroups.com
மிக இனிமையான பாடல்கள், கிரிகாசன்.
பாராட்டுகள்.
சங்கரன்
31 Jul 2013, 11:33:53
to santhav...@googlegroups.com
பசுபதி ஐயா அவர்களுக்கும், சங்கரன் ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!
31 Jul 2013, 11:54:38
to santhav...@googlegroups.com
ஒரு வயலின் வீணை அரங்கேற்ற நிகழ்வுக்கு வாழ்த்துக்கவி எழுதினேன் அதை மாற்றிப் பொதுவாக
இசை மீட்டும் இதயங்களுக்காக என்று இங்கு தருகிறேன்
இசை மீட்டும் இதயங்களே!
கலைப் பூக்கள் புவிமீது மலர்கின்றதோ - நல்ல
கனிவான இசைநாதம் எழுகின்றதோ- நிகர்
இலையேதும் இதைவெல்ல எனுமோசையோ - அதில்
இளநெஞ்சம் புகழ் பூக்க ஒளியாகுதோ -கடல்
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ - மனம்
அறியாத இறையன்பு வரம் காணுதோ - எங்கும்
விலையற்ற வெகு தொன்மைத் தமிழ்வாழுமோ - அன்பு
விளைகின்ற அருஞ்செல்வம் மிகையாகுமோ
வலை கொண்ட கயல் ஏங்கும் உணர்வானதோ - இசை
வடிவத்தின் புலமைக்கு மனமேங்குதோ - என்றும்
தலைகொண்ட எண்ணத்தின் விளைவாகவே - இந்தத்
தருமத்தின் நிறைவாழ்வு தனை மாற்றுமே - இன்பக்
குலை போன்று பழம் இங்கு குவிந்தாலுமே - உள்ளக்
குரங்கான ததன் கையின் மலர்மாலைபோல் - என்றும்
நிலைஎன்ப தடுமாற்றம் நிகழாமலே - வாழும்
நேர்கொண்ட கலைவாழ நெறிகொள்ளுவோம்
கலைதேரும் உளம்கொள்ளும் பெருமாற்றலில் - சிறு
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும் -அங்கு
சிலைதன்னும் எழுந்தாடும் சிறப்போங்கிடும் - ஓசை
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும் - உணர்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும் - குளிர்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும் - காணும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்
தொலைவானில் தெரிகின்ற கதிரோங்கவே - இருள்
தொடும் வாசல் நிறையின்ப ஒளிச்சேரலாய் - இந்த
புலைகாணும் பெருஞ்சோர்வும் பிறிதாகட்டும் - எழும்
புதிதாகும் ஒளித்தூண்டல் பெரிதாகட்டும் - ஒரு
தலை காலும் தெரியாமல் தடுமாறிடும் - நிலை
தவிக்கின்ற இருள் ஓடி ஒளி மேவட்டும் - பசும்
இலைகொண்ட செழுமைக்கு இணையாகட்டும் - உள்ளம்,
இன்பத்தின் மலர்காடென் றெழில் தேடட்டும்
அழகான இசைக் காடு மரவங்களாய் - என்றும்
அவரூதும் இசைகேட்டு மனமாடட்டும் - அலை
எழவீழ அதுவாக்கும் இரைகூச்சலும் - கொண்ட
உயர் ‘வான ஓங்கார’ இசையேற்றமும் - ஒரு
முழமென்ப வளர்தெங்கும் மிகுந்தானதே - என்று
மெருகேறும் இசைபொங்கி மெல நீளடட்டும் - இனி
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும் - இசை
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!
*************
31 Jul 2013, 14:23:15
to சந்தவசந்தம்
மிக அருமையான நடை, சந்தம், ஓட்டம்.
கீழ்க்காணும் இடங்களில் ஓசை நீள்கிறது
பழைய சாளரக் கதவு காற்றில்
குறையில் விட்டுதன் கோலம் மாறி kuRaiyil vittuk koolam maari
கவனம் நீரில் கால் சறுக்கிடாக்
காக்கும் எண்ணமடி
இலந்தை
31 Jul 2013, 14:53:25
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பாக அமைந்துள்ள கவிதை.
"கடல்
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ - மனம்
அறியாத இறையன்பு வரம் காணுதோ"
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ - மனம்
அறியாத இறையன்பு வரம் காணுதோ"
"வலை கொண்ட கயல் ஏங்கும் உணர்வானதோ "
"கலைதேரும் உளம்கொள்ளும் பெருமாற்றலில் - சிறு
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும் -அங்கு
சிலைதன்னும் எழுந்தாடும் சிறப்போங்கிடும் - ஓசை
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும் - உணர்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும் - குளிர்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும் - காணும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்"
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும் -அங்கு
சிலைதன்னும் எழுந்தாடும் சிறப்போங்கிடும் - ஓசை
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும் - உணர்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும் - குளிர்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும் - காணும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்"
"இனி
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும் - இசை
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!"
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும் - இசை
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!"
- என்ற வரிகள் மிகவும் அருமை!
சங்கரன்
31 Jul 2013, 20:31:59
to santhav...@googlegroups.com
இந்த வழுக்களை திருத்திக்கொள்கிறேன்.
//பழைய வாசற் கதவு காற்றில்
படப டக்குதடி - //
மற்றயது....
//குறையில் விட்டதன் கோலம் மாறிக்
குதித்துப் பாயுதடி//
இன்னொன்று..இது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்படி திருத்திக்கொள்கிறேன்
//கவனம் நீரில் கால் வழுக்கிடும்
காக்கும் எண்ணமடி//
இதுவும் சற்று திருத்துகிறேன்..
//நாளில் மீண்டுமென் வாழ்வொளிபெறும்
நேரம் வந்ததடி//
நன்றிகள் ஐயா!
31 Jul 2013, 20:34:32
to santhav...@googlegroups.com
மிக்க மிக்க நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
31 Jul 2013, 21:53:43
to santhav...@googlegroups.com
புள்ளினங்கள் ஆர்க்குமெழிற் பூமணத்தில் காற்றிழையும்
வெள்ளிமலை மீதுறங்க வந்த முகில் நீர்பொழியும்
கள்ளமிலாப் பூக்கள்பல காற்றிலுதிர்ந் தாடிவிழும்
வெள்ளிரதம் ஏறிமனம் விண்ணலைந்து போதைபெறும்
தெள்ளெனும்நீ ரோடையதில் திகழுமெழிற் செழுமலர்கள்
அள்ளிவருந் தென்றல்குளிர் ஆக்கிடமெய் குளுகுளெனும்
துள்ளிவிழும் மீன்கள் தமைத் தூயமகள் வதனவிழி
எள்ளிநகை யாடுமென எழுந்தகணம் நீருள் விழும்
கள்ளியதன் முள்ளெனவே காரிகைதம் கூர்விழிகள்
உள்ளிருந்த மௌனமெனும் ஓர்மொழியின் ஓசை தர
நள்ளிரவின் திங்களொளி நாற்திசையும் பனிமலரின்
கொள்ளையிடும் வண்ணம் மனம் கொண்டிருக்கச், செந்தமிழின்
இன்னிசையும் காற்றில்வர எழும் ஒலியில் சிலுசிலுப்பு
புன்னகையைப் போலுதிர்த்த பெருமரங்கள் இலைச்சலனம்
அன்னம் சுனை நீந்துமெழில் அதன் அசைவில் எழுமலைகள்
சின்னஒலி செய்தலைந்து சோர்ந்து விழும் மண்மடியில்
பின்னிருந்து மீண்டுமெழும் பேதமைகொள் சிறுஅலைகள்
தன்னிழந்த வகைநடந்தும் தவழுமெழில் பொய்கையிலே
மென்னிதழ்கள் வாடிமனம் விரகமுற்ற தாமரைகள்
என்ன இவன் சென்றகதிர் எங்குளனென் றையமுற
மின்னுமொளித் தாரகைகள் விடியும்வரை கண்சிமிட்டும்
தன்னிலையும் விட்ட இருள் தலைமறைந்தும் உருவழிய
என்னவெனக் கேட்ட சுடர் எட்டியெழும் செவ்வானம்
தன்மையிலே செம்மைகண்டு தாவிஎழும் புள்ளினங்கள்
பொன்கதிர்கள் பூமியினைப் பொழுதணைத்துச் சேதிசொல்ல
அன்னை தமிழ் அருங் குறளும் அவ்வை சொன்ன நல்வழியும்
சின்னவர்சொல் குரலினிக்கத் தென்றலதை வாங்கிவர
தென்னையிடை நீள்இலைகள் இன்னும் மெருகூட்டிவிட
மன்னவரின் ஆட்சியிலே மாந்தர்குறை கேட்டொலிக்கும்
பென்னம் பெரு முரசொலிக்க பேசுங்குரல் விண்கலக்க
பன்னசாலை உள்ளிருந்து பரம்பொருளை வேண்டுபவர்
முன்னொலிக்கும் தெய்வ இசை முழுதெழவே ஆனந்தமே
****************
1 Aug 2013, 06:12:32
to santhav...@googlegroups.com
காலைப்பூ பனிகுளிராய் கதிரவனின் ஒளிக்கீற்றாய்
மாலைப்பூ மணம்வீசும் மல்லிகையாய் மயக்கவரும்
சோலைக்கா வண்டினங்கள் செவிபாயும் மெல்லிசையாய்
பாலைவனச் சோலையென பாட்டையும்நான் கண்டேனே
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
1 Aug 2013, 07:46:37
to santhav...@googlegroups.com
மன மகிழ்வோடு நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
1 Aug 2013, 08:10:56
to santhav...@googlegroups.com
வாழ்வில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள்
என்னதான் இன்று அனுபவத்தோடு கவிதை எழுத முடிந்தாலும் அன்றைய நாளில் எதுவுமே தெரியாமல் திடீரென தூக்கத்திலிருந்து கண்விழித்துபோல
ஒரு மிரட்சியுடன் உணர்வுமிக எழுதிய கவிதைகள் வித்தியாசமானவை
இதுவும் சுமார் 3 வருடங்களுக்குமுன் எழுதியது, என்கவிதைகள் ஒரு பெண்ணின் உள்ளத்தை தொட்டு சலனம் ஏற்படுத்திவிடவே என்னை பாராமலேயே அன்புகொண்டாள் . அவள் எண்ணத்தைப் புரியவைக்க என் வயதைக் குறிப்பிட்டு எழுதியபோது அதிர்ச்சியுற்றாள். அவளின் சோகமான கவிதைக்கு பதிலாக இது
மனம் காணும் துயர் மாற்று!
நிலவுகாயுது தனிமையிலே -அந்த
நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன்
உணர்வுக்கு தீயெதுவோ?
கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
மறந்திடு விரைவினிலே
தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
குடிசையின் வெறுந் தரையே
காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
தினம்தினம் உலவிடுமே!
சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
நிஜமெனும் வாழ்க்கையதே!
வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
காணவும் முடியலையே
நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன்
உணர்வுக்கு தீயெதுவோ?
கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
மறந்திடு விரைவினிலே
தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
குடிசையின் வெறுந் தரையே
காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
தினம்தினம் உலவிடுமே!
சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
நிஜமெனும் வாழ்க்கையதே!
வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
காணவும் முடியலையே
நீண்டநாட்கள் அந்த இணையப்பக்கம் அவளைக் காண முடியவில்லை. பின்ன்ர் ஒருநாள் நலம் விசாரித்தாள் அப்போது எழுதியது
ஞானப்பெண்ணே!
வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!
யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே
கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!
வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்னே
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!
*************
1 Aug 2013, 18:28:42
to சந்தவசந்தம்
வரிக்கு வரி கற்பனை வளம் கொண்டு பொழியும் பாமழையில் திளைத்தேன். மழையில் நிகழும் காட்சிகளைத் துள்ளுநடையில் தந்த அற்புதமான படைப்பு.
அனந்த்2 Aug 2013, 10:14:12
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசரே,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
உங்கள் கவிதையைப் படித்தேன். இயற்கை எழிலை ஆற்றொழுக்காக நடையில் சொல்லிய விதம் அருமை. இரண்டு திங்களுக்குப் பின்னர் நானாகவே தட்டச்சு செய்து பின்னூட்டமிட்ட கவிதை உங்களுடையது. கள்ளியதன் முள்ளெனவே காரிகைதம் கூர்விழிகள் - மிகவும் சுவைத்தேன். இவ்வரிகளை.
//மின்னுமொளித் தாரகைகள் விடியும்வரை கண்சிமிட்டும்;
தன்னிலையும் விட்டயிருள் தலைமறைந்தும் உருவழிய
என்னவெனக் கேட்டசுடர் எட்டியெழும் செவ்வானம்
தன்மையிலே செம்மைகண்டு தாவியெழும் புள்ளினங்கள்// மிகவும் அழகான வைகறையின் சொல்லோவியம். வாழ்த்துகள்.
தன்னிலையும் விட்டயிருள் தலைமறைந்தும் உருவழிய
என்னவெனக் கேட்டசுடர் எட்டியெழும் செவ்வானம்
தன்மையிலே செம்மைகண்டு தாவியெழும் புள்ளினங்கள்// மிகவும் அழகான வைகறையின் சொல்லோவியம். வாழ்த்துகள்.
சுவைஞன் என்ற வகையில் எனக்குப் பட்டதைச் சொல்கிறேன்; தவறாக எண்ணல் வேண்டாம்.
தெள்ளெனும்நீ ரோடையதில் = இதனை தெள்ளியதோ ரோடையதில் என்றிருப்பின் நன்றாக இருக்குமோ?
தெள்ளெனும்நீ ரோடையதில் = இதனை தெள்ளியதோ ரோடையதில் என்றிருப்பின் நன்றாக இருக்குமோ?
உள்ளிருந்த மௌனமெனும் = உள்ளிருந்த மோனமெனும் என்றிருப்பின் இன்னும் சுவைக்குமோ?
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
5 Aug 2013, 18:37:24
to santhav...@googlegroups.com
அன்புடன் கிரிகாசன்!
*******************************
5 Aug 2013, 18:40:10
to santhav...@googlegroups.com
நன்றிகள் Ananth ஐயா அவர்களுக்கு!
மனதிலும் பெரு ம\ழை பொழிந்தது!
5 Aug 2013, 18:52:36
to santhav...@googlegroups.com
அன்புடன் இராஜ தியாக ராஜன் ஐயா அவர்களுக்கு உங்கள் மனம்
நிறைந்த பாராட்டுகளுக்கு நன்றிகள்
இரண்டு திருத்தங்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். தெள்ளெனும் நீரோடை யில் திருப்தியில்லாமல் இருந்தது தங்கள் தரவினால் மகிழ்ச்சியடைந்தேன்.
/உள்ளிருந்த மௌனமெனும்/ என்பதற்குரிய மாற்றமும் கவிதையில் புகுத்திக் கொள்கிறேன்
நன்றிகள்:
அன்பினோடு கிரிகாசன்
5 Aug 2013, 19:30:32
to santhav...@googlegroups.com
எல்லாம் பெண்தானே!0
மெல்லச் சிவந்திடும் அடிவானம் - அதில்
மேலே எழுந்திடும் கதிரோனும்
சொல்லக் கடிதெனும் பெரும்பாவம் - நிறை
சுற்றும் புவியிடை வர அஞ்சி
வல்லப் பெரிதொரு மலையோரம் - அதன்
வீசும் கதிர்களைப் சிறிதாக்கி
முல்லைப் பூநிறம் காண்முகிலுள் - தன்
மூளும் தீயினை மறைதெழுந்தான்
வல்லோர் சிறகொடு நெடுவானம் - தனில்
வாழ்வைச் சுவையெனத் தினம்காணச்
செல்லும் குருவியின் விழிதானும் - அச்
செவ்வா னழகைக் கண்டஞ்சி
அல்லல் தருமொரு ஆவேசம் - தனும்
அடிவான் கொள்ளக் காரணமென்
இல்லைப் புவியென ஆக்கிடவோ - என்
இடர் நேரும்என விழிமூட
நல்லின் கனிபிழி திராட்சைமது - அதன்
நடுவே மிதக்கும் உருள்பனியும்
மெல்லச் செவ்விதழ் வாய் வைக்கும் - முகில்
மேலைகுமரியும் உண்ணல்போல்
அல்லிக் குளமிடை அணைதென்றல் - அதன்
ஆசைத் தழுவலில் தரு இலைக ள்
சல்லச் சலசல என்றாட - அச்
சலனம் கண்டே மேற்கினிலே
வெள்ளைச் செறியதி பிரகாச - மனம்
வெந்தே தகித்திடும் வெய்யோனும்
கொள்ளை எழில்தரும் புவிமாதின் - கண்
கூடிக்களித்திடும் மனதோடு
அள்ளக் குறைவில அதிபோக - எழில்
அணங்கைக் கண்டவன் அறிவின்றித்
தள்ளி திணறிடத் தொட்டார் போற்- தன்
தகிக்கும் கதிரால் தொட்டிருக்க
அன்னோர் அழகிய காலையிலே - விதி
ஆக்கும் வினைதான் பொழுதாக்க
இன்னோர் நாள்வீண் என்றோர் தாள் கை
எடுத்தே கிழிக்கும் நாட்காட்டி
முன்னே நடப்பதும் அறியாத பல
மொழியிற் பிளவுறு நிலமாந்தர்
தன்னைத் தான்பெரி தென்றெண்ணி - இத்
தரையை உதைக்கும் கால்கொண்டு
இல்லத்துணை நலம்பெரிதாக - இவர்
எண்ணிக் கொள்ளினும் பிறிதோர்பெண்
செல்லாத் தகவிழந்துருள் காசாய் - இச்
செகம்மீ தவருயிர் வெறும் காற்றாய்
கொல்லத் துணிவுடன் கைகட்டி - அவர்
காணும் தூய்மையைக் கெடுத்தவர்கள்
இல்லதரசியின் விழிமுன்னே - இவர்
எப்படி காணுவர் இயல்பாமோ
சொல்லத் தகையில வெறும் வாழ்வில் - முடி
சூடும் பூவென அழிதேகம்
இல்லை எனமுடி வுறும் நாளும் - இவ்
வியற்கை எனுங்குறுங் கனவோடும்
நெல்லைத் தின்றதில் வளர்தேகம் - தனில்
நீரை வார்த்திடும் உணர்வேகம்
தொல்லை தருகினும் சுகம்தேடி - இத்
தொலையும் இருளிடை சுழல்பந்தில்
கண்ணைக் குருடென வைத்தண்டம் அதில்
காணத் தனை மறை சக்தியவள்
பெண்ணிற் சுகமெழ அவள்போற்றிப் பின்
பேசற் கிழிதெனும் கொடுமைசெய
வண்ணக் குலமாம் விழிமாந்தர் தனை
வாழக் கண்டனள் எதனாலே
மண்ணிற் கலியொடு மென்மேலும் இம்
மாதர் குலம்கெட என் செய்வோம்
மென்மைப் பூவெனக் காணிதயம் - அதில்
மின்னல் போலிடை எழுங்காதல்
தன்னைப் பெரிதென மனமெண்ணும் - கடுந்
தகிக்கும் வெய்யோன் செயலாகி
பின்னிப் படர்கொடி மீதுள்ள - பல
பூவைக் கருக்கிடும் வெய்யோனாய்’
வன்மைப் புயலெனும் வீச்சத்தால் - அவ்
வாழ்வைக் கருக்குதல் எதனாலே
பொன்னும் பொருளும் பூவேண்டாம் = இப்
பூவைதானும் பொன்னேர் காண்
தின்னத் திகட்டா தேனமுதம் - என்
தேவை இவளென் றுயிர்காத்து
இன்னோர் பெண்மற் றினமென்றால் - அவள்
இம்சைசெய்து சீரழித்து
சின்னப் பாவைஉடல்குறுக - அவள்
சிதைவில் ஆனந்தம் கொள்ளுவதென்.
*************
5 Aug 2013, 19:37:18
to santhav...@googlegroups.com
சலனம் கண்டே கீழத்திசையில் //
என வரவேண்டும் . தவறுக்கு மன்னிக்கவும்
6 Aug 2013, 12:29:05
to santhav...@googlegroups.com
மீண்டும் பார்ப்போம்
கடலில் கலந்த நதி
சொல்லினியத் தமிழ்அமுதச் சுவைகவிகள் செய்தேன்
சுற்றி நறுந் தேன்துளிகள் சேர்த்தினிமை கொண்டேன்
பல்திசையும் பார்த்தெவரும் பாவினிமை கண்டே
பேசுவதென், பார்த்துவிடப் பயணமொன்று கொண்டேன்
இல்லையொரு வேளையிதில் என்றுமனம் வாடி
இட்டவிதி இவ்வளவே என்று சோரும் வேளை
செல்வழியில் ஓர்திசையில் செந்தமிழ்ப் பூஞ்சோலை
சீருடன்நற் சந்தமிடும் செழுமை தனும் கண்டேன்
மெல்லெனவே உள்நுழைய மேதினியி லிதுபோல்
மேன்மையுறு அன்புமன மில்லையெனக் கண்டேன்
வல்லமைகொள் விழியுயர்த்தி வைக்குமொரு மேடை
வானளவு நிற்க அதில் வார்த்தை கூறிநின்றேன்
அல்லலுற்ற என்மனதை ஆற்றுமெழில் கூற்றும்
அன்புமொழிப் பேச்சினையும் அங்கு கண்டு நின்றேன்
புல்முளைத்துப் பேர்விருட்சம் போலுயர்த்தும் வித்தை
பிறைநிதமும் வளரஒளிப் பரிதியென ஆனேன்
கல்செதுக்கிச் சிற்பஎழில் காணும்கலைக் கோவில்
கலைமகளின் கமலமிருப் பிவர்கவிஞர் நாவில்
வில்லெனவே ஏழுவண்ண முள்ளஉயர் வானில்
விரைந்துதவழ் துச்சி ஏறும் வெய்யவனின் பாங்கில்
நல்லொளியும் வீசஅதில் நான்வியந்து நின்றேன்
நறுமணத்தின் சுகமிழைந்த வசந்தமதைக் கண்டேன்
பல்லுடைக்கும் கவிபடைக்கும் பாடலடி செய்வேன்
பா புனைந்து நானுமிங்கு பகிர்ந்தளித்து நிற்க
மெல்லிசைகள் மீட்டுமின்ப வீணையொலி கேட்டேன்
மேவுமெழில் கூட்டுமின்ப நாதஇசை கேட்டேன்
சல்லெனவே சலங்கையொலி, சங்கீதமென் னோசை
சற்றிடையே விட்டுவிட்டு சொற்கவிதை மேடை
நில்லெனவே உள்ளமெனை நிறுத்திவிட்ட திங்கே
நீர்குதித்து ஓடும்நதி சென்றஆழி யொன்றே
பல்கலைஞர் ஒன்றிணையப் பக்கமிது நன்றே!
பாரினிலே இல்லைநிகர், பாடுந்தென்றல் அன்றோ!
6 Aug 2013, 16:29:31
to santhavasantham
ரொம்ப அருமையான ஓட்டமுள்ள உயிர்த்துடிப்புள்ள கவிதை.. கிரி..வாழ்க நீ,
யோகியார்
வாழ்க அனைவரும் வளமுடனே
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017
2013/7/30 kirikasan <kana...@gmail.com>
8 Aug 2013, 09:15:13
to santhav...@googlegroups.com
மிகவும் மகிழ்ந்தேன் ஐயா தங்கள் வாழ்த்து என் உயிரோடு கலந்தது. நன்றிகள்!
அன்புடன்
கிரிகாசன்
****************
அன்புடன்
கிரிகாசன்
8 Aug 2013, 09:21:58
to santhav...@googlegroups.com
தினம் வாடும் மலரே சிரிப்பதெப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக