சனி, 26 ஜூன், 2021

 


             கனவோ கற்பனையோ 
(ஏக்கம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லையே)

பூப் பறித்தேன் மாலைசெய்தேன் பூவைக்குச் சூடப்
பொன்னிழையில் கோர்த்துவைத்தேன் பூவெழில் கூட்ட
தோப்பினிலே மாலையிளந் தென்றலும் வீச
தேவியவள் முன்நடந்தேன் சேதியும்கூற
காப்பிருந்த கைகளிலே காயமும் சேரக்
காணொருநாள்  கூடுமென்ற கற்பனைவாழ
மூப்பெடுத்த மனதுடனே மாலையும் சூட்ட
முன்னிருந்த தேதுமில்லை மாலை மண்வீழ

காற்றினிலே வந்த குரல் கானமும் பாடக்
கண்கள் முன்னே காண் அழகோ ஓவியமாக
விற்றிருந்தாள் வண்ணமலர் பொய்கையும் ஆட
வெற்றிஎன்றே தோன்றியது வேதனை போக
ஈற்றினிலே கண்டவளை என்வசமாக்க 
இன்ப உணர்வோடி மனம் இச்சையில் பூக்க
ஏற்றிடுவாய் என்றணைக்க எந்திழை கொள்ள
ஏதுமில்லை நீரில் விழுந் தேன்குளிர்மேவ
 
கோவிலிலே நின்றவளைக் கண்டதும் மாயை
கொள்ளைஎழில் கோணுமிதழ் குறுநகை பூக்க
ஏவிமனம் கேளெனவே என்னையும் தள்ள
ஏதெனநீ  ஏய்ப்ப தென்றும் இல்லை இன்றாக
பாவிமனம் பட்டதுயர் பனி யெனக் காய
பார்த்திடடி எழும்கதிரே பட்டெனும் கன்னம்
தாவியதில் கிள்ளிவிடத்  தென்றலில் கூடி
தேய்ந்துருவில் மாறிநின்றாள் சிற்பமென்றாகி

வெள்ளி மணிப் பொற்சதங்கை விண்ணிடைஆக்கி
வீதியெங்கும் ப்ட்டு விரித் தின்பமும் கூட்டிக்
கொள்ளையெழில் பூநிரவிக் குங்குமம்  வாங்கி
கூடிவரும் வேளையவள் கன்னமும் ஆக்கி 
வெள்ளைப் பசும் பால்கொதிக்க வைத்ததும் ஆற்றி
வீடுமனை தூய்மை செய்தே விளக்கொளி யேற்றி
அள்ளி யணைத் தானந்திக்க ஆசையும் கூட்டி
அந்தி வரக்காத்திருந்தேன் அன்பதைக் காட்டி

கள்ளநிலா முற்றத்திலே காய்ந்தெனை வாட்டக்
காணும் எழிற்தென்றல் மணம் கற்பனை சேர்க்க
முள்ளெனவே நோகுமுடல் முப்புரமாக்கி 
மூவிழியோன் புன்னகையில் முற்றிலும் தீய்த்த
உள்ளெரிவில் உன் நினைவில் உன்மத்தமாகி
உயிரையும் நீ வாட்டுவதென் உன்நிழல் வேண்டி
கொள்ளைஎழில் கொண்டவளே கங்கையில்கூடிக்
கொள்ளும்,குளிர் விட்டெரித்துக் கொல்வதென் உயிரே !


**********************

kirikasan

unread,
22 May 2014, 10:38:42
to santhav...@googlegroups.com
ஈற்றில் வரும் அடி  மாற்றினேன்~

:கொள்ளைஎழில் கொண்டவளே கங்கையில்கூடிக்
 கொள்குளிரை விட்டெரித்துக் கொல்வதென் போடி

கிரிகாசன்

kirikasan

unread,
23 May 2014, 10:04:06
to santhav...@googlegroups.com
இலந்தை ஐயா அவர்களுக்கு இதைத்தான் குறிப்பிட்டீர்கள் என் எண்ணுகிறேன். அதனால் மாற்றியமைத்தேன்


  ஏன் படைத்தாய்  


வானக்குடை விரித்தாய் வண்ண ஒளித்தீயமைத்தாய்
தானப் புவி சுழல்வில் தண்மைகொளக் கடலமைத்தாய்
கூனம்புலி வானில் குறையவளர் கோலமிட்டாய்
தேனம் மலரிடையில் தித்திக்கக் செய்தாய் பின் 

கானக் குயில் படைத்தாய் காற்றிலிசை கூடவைத்தாய்
மானும் படைத்துவிழி மருளுமெழில் மென்மையிட்டாய்
தானமென்றெம் வாழ்வைத் தந்தாய் தருப் பொலியும் 
கானகம் படைத்தேனே  காண்விலங்கு நாட்டிலிட்டாய்

தீயும் சுடு வெயிலும் துள்ளும் மீன் வாழ்சுனையும் 
மேயும் பசு பச்சைநிலம் மேவியெழும் பட்சியினம்
நீயும் செய்தாய் தென்றல் நிற்கா தலையவிட்டாய்
ஆயுதமும் கையேந்தி அறமழிப்போர் ஏன் படைத்தாய்

வாயும் இனித்துண்ண வகை பலதும் கனிபடைத்தே
பாயும் நதி மீன்கள் பசும்புல்லில் பாய் விரித்தாய் 
காயும்நில வொளியில் காதல் மனம் உருகவைத்து
நோயும் பிடித்த உளம் நின்றவரைச் சிதைக்க விட்டாய்   

மாநிலமாம் மேதினியில் மக்கள் தொகை படைத்தே
மேனிநிறம் பலதாக்கி மேன்மை இன வெறியூட்டி
போநீ இடம் விட்டுப் புலம்பித்தான் திரியென்றே
ஏனிதயத் துள்ளேஇவ் விரக்கமிலா வெறுப்பீந்தாய்

மேனியெழில் சிலையாக்கி மின்னுவகை மெருகேற்றி
ஏனிந்த மாதர்வர இளமைதனில் எழுச்சியுற்று
வாநீ என அழைக்கும் வண்ணவிழி கண்டதன் பின்
சாநீ எனக்கொல்லும்  சஞ்சலத்தில் ஆழவிட்டாய்

ஆநீ செய் அகிலமதில்  அழகு மலர்ப் பூஞ்சோலை
தேனிலங்கு பூம்பொய்கை திரியுமிளம் பூங்காற்று
வானிடையே திரிமுகிலும் வண்ண ஒளி இசைநாதம்
வேனிற் குடைவானத் தெரிவெயிலால் விரி கமலம்

நாணக் குறும்பார்வை நயனமதிற் பொய்க்கோபம்
கோணற் குவியிதழும் கொட்டியதோர் குங்குமமாய்
பேணர் கரியதெனும் பெண்மைதனும் நீபடைத்து
ஆணிற் கொடியவரால் அணைத்து முயிர் சாகவிட்டாய்

சூது பகை வஞ்சமுடன் சினங்கொண்ட சூழ்ச்சிமயம்
மாதுன்பம் மயங் கியொரு மரணத்தின் மூச்சிழுக்க
காதும்தான் கேட்டிழியும் காதகரின் கொச்சை மொழி
யாதும் இவர்க்கென்றே எம்வாழ்வில் ஏன் இணைத்தாய்

தாயும் படைத்தாயத் தாயுதரத் துள் கருவாய்
சேயும் படைத்தாய் பின்  சேருடலும் பிரித்தழுதும்’
மாயும் வகைசெய்து மனமழவும் செய்தவளே
போயுமிவ் வாழ்வுதனைப் பூமியிலே ஏன் படைத்தாய்

*******************

kirikasan

unread,
24 May 2014, 08:42:16
to santhav...@googlegroups.com
கவிதையால் கிடைக்கும் இன்னொரு பயன்  இதைக்கண்டதும் எழுந்த கவிதை

                 கவிதை

கவிதை வெற்றுக் கவியென்றல்லக் காட்சிப் புலனின் நாதம்
கவிசொற் கூட்டம் அல்ல இதயக் கதவின் விரியும் ஓசை
கவிதை உள்ளத் தென்றல் நீவும் கரங்கள் மீட்டும் வீணை
கவிதை குயிலின் கத்தும்ஓசை கற்பனைப் புரவிப் பயணம் 

கவிதை சொல்லக் கனமும் ஆறும் கவிதை உள்ளத் தென்றல்
கவிதை இன்பக் குறுகுறு சலனம் காட்டாற் றின்வீழ் சத்தம்
கவிதை குளநீர்ச் சலனம் காதற் பெண்டிர் கண்நேர் வீச்சாம்
கவிதை உள்ளத் திமிறல் துள்ளும் கன்றின் மனஉற் சாகம்

கவிதை ஜல்ஜல் ஆடும் பெண்ணின் காலின் சதங்கை நாதம்  
கவிதை காற்றின் குளிர்மென் தடவல் காலைப் புலர்வின் கீதம்
கவிதை காட்டின் குவிமென் மலரில் கள்ளாம் இனிமை கொள்ளும்
கவிதை கனியை கொந்தும் கிளியின் கலகல ஓசைச் சத்தம்

கவிதை நாட்டின் வீரம் காணும்,கயமை நீக்கும் தீரம்
கவிதை காதல் உள்ளத் துளைசெய் காமன் கைவில் லம்பாம்
கவிதை சொல்லக் குழந்தை மார்பில் காணும் இன்பத் தூக்கம்
கவிதை நிலவின் பால்வெண் ஒளியாம் கற்பனை வானின் விண்மீன்

கவிதை உள்ளக் கூச்சல் கத்தும் கடிதென் துன்பக் கதறல்
கவிதை மனதின் ஓலம் துயரில் காணும் உயிரின் அச்சம்
கவிதை மரணக் கைகள் தீண்டக் காலன் கைமணியோசை
கவிதை மீண்டும் உயிரின் பிறப்பிற் காணும் சிசுவின் அழுகை

கவிதை கோவில் நெடுவான் உயரக் காணும் மணியின் ஓசை
கவிதை ஆற்றின் ஓட்டம் வீழும் காட்டாற்றின் சோ ஓசை
கவிதை மனதை ஈர்க்கும் காந்தம் கவிதை ஆழ்ந்தோர் மௌனம்
கவிதை ஞானச் செம்மை யூட்டம் கற்பனை காண்விண் ணோட்டம்

கவிதை காற்றின் வருடல் கண்ணில் ஊறும் இன்பத் தூறல்`
கவிதை மாயத் தொலைவான் ஆழம் காணாத் தோற்றும் மின்னல்
கவிதை வண்ணத் துகளின் வீச்சு காலத் தின்பேர் விருட்சம்
கவிதை வானக் கருமை மேகம் காணும் இடியின் சத்தம்

கவிதை தண்மைச் சுனைநீர் அலையின் சலனம் சிலிர்க்கும் ஓசை
கவிதை நோய்தீர் ஔடதம் உள்ளச் சோர்வை நீக்கும் குடிநீர்
கவிதை வளரும் செடியின் தளிராம் காணும் மென்மை வடிவம்
கவிதை உள்ளம் என்றும் பிள்ளை கையில் கொள்வாய் பொம்மை

ananth

unread,
24 May 2014, 16:32:15
to சந்தவசந்தம்
அருமையான கைக்கிளைக் கவிதை. பாராட்டுகள்!

.. அனந்த்

ஏதெனநீ  ஏய்ப்ப தென்றும் இல்லை *எ*ன்றாக; வீதியெங்கும் *ப*ட்டு

kirikasan

unread,
27 May 2014, 09:25:02
to santhav...@googlegroups.com
நன்றிகள்  ஐயா1 மனம் நிறைந்த நன்றிகள்!

kirikasan

unread,
27 May 2014, 09:40:14
to santhav...@googlegroups.com
இது ஒரு வழமைக்கு மாறான கவிதை. என் தேசத்தைவிட்டு அப்பால் பார்க்கிறேன் கடுமைக்கு காரணம் ஆற்றாமை ! இதுவும் கைவிட்டு எதிராகப்போய்விடுமோ என்ற அச்சம்! பகையோடு சேர்ந்து கடந்த  காலம்போல் குழியில் போட்டு மூடிவிடுவார்களோ என்ற ஐயம் . கடிந்து கொள்கிறேன். என் உணர்வுகளை ஒழிவு மறைவின்றி உங்கள் முன்வைக்கிறேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

 உறவுமோடி உணர்வுமோடி
 
கண்மூடிக் கண்ணெதிரே
  காணுகின்ற காட்சிதனில் களங்கமோடி
பண்ணும் செயல்பொறுத்துப்
  பாவியெனச் சாவதுவோ பகலுமோடி
விண்காணும் இருள் வந்து
  விளைகின்ற வாழ்வதிலே இரவுமோடி
மண்மீது செய்பாவம்
  மறைப்பதென மறைத்ததெனப் பரந்துமோடிக்

கூடியுங்கு லாவவொரு
  குற்றமற்ற கோஅருகிற் குறைவாமோடி
ஆடிநடங் கொள்ளவென
  ஆளறுத்துக் கூச்சலிடும் அரக்கன் நாடித்
தேடியுங் கைகூட்டியொரு
  தேவமகன் வாவுந்தன் திருப்பாதங்கள்
கூடியுமென் தேசமதில்
 குறுநடையில் சத்தமிடக் கொள்ளல் நன்றே

தேசநிலை தூய்மையுறும்
  தேடிவரும் பேரின்பம் திகழுமோடி
நீசமனக் கொலைபுரிவாய்
  நின்செயலில் நிறைவழியுங் குருதியோடிப்
பாசமணிக்  கரங் கொண்டாய்
   பற்றியிவன் பதவிகொள்ளச் சிறப்புமோடி
வாசங்கொள் தீமைகளும்
 வாசல்வழி ஓடுமென நினைந்துமோடி

செங்டலென் றாக்கியவன்
  சிரசறுக்க உயிர்வாங்க தொகையுமோடி
எங்கிவனோ எமனெனையும் 
  இருத்தியொரு புகழோங்கி பெரிதுமாகி
பங்காளி யென்றாகிப்
  பகையாகி எனைவென்று பதவிபெற்றே
வங்கக் கடலிடையே
  வைத்தபுகழ் விண்பரவு வகையென்றஞ்சும்

மின்னலெழ இடியிடிக்க
  மேகங்கள் கறுத்தூற்ற வெள்ளமுமோடி
பின்னியெழும் நீரலைகள்
  பேசாமற் புறமோடிப் பேராறாகி
தன்னிலையில் கூடவெனச்
  சாகரத்தை நினந்தோடும்  அயலர் நாமும்
நின்னருளில் கூடவரும்
  நிலைதானும் வளமோடு சிறக்குமென்றே

பஞ்சாகும் மென்மேனிப்
 பச்சைக்கு ழந்தைகளும் படுகோரத்தில்
அஞ்சாது துண்டாக்கி
  அவலமெழக் கதறியவர் அறுத்துமூடி
நஞ்சான கையுடைமை
  நாட்டினொரு வேந்தனையே நலமும்கூடி
வஞ்சகனாம் கொலைபுரிவோன்
   வாழ்த்தியெனைக் கொள்ளென்ற விருப்பமோடி

பற்றியிழுத் தன்கரத்தில்
  பச்சைக் குருதிகரம் பற்றுவதோடி
வெற்றியென ஈர்மனமும்
    வேளைதனில் கூடுவதென்  வெறுப்புமோடி
சற்றேனு மீவிரக்கஞ்
  சாராக் கொடும்மகனை விருந்துமூட்டி
உற்றதொரு பாசமென
  உரைப்பதென்  உறவற்றால் உரமும்போமோ?

குற்றமதைப் புரிந்தவனாய்க்
  கூண்டிலிட்டு வழக்கென்று குறித்து நோக்கி
மற்றும் பல்தேசங்கள்
  மருந்தைநோய் கொள்வோனும் மாந்தவைத்தே
சுற்றிலும் நெருங்கியிவன்
  சொல்லுவழி யென்றொருகால் செய்யும்வேளை
அற்றவனாம் பாவமிவன்
  அறியான் மடியிருத்தி அணைத்து நீவி

விட்டதுமென் வேந்தேகால் 
   விற்றதென்ன விலைபேசி மனுவின் நீதி
சுட்டெரித்த ஈழத்தில்
  தூதுவனைக் கொண்டவரின் செயலைப் போற்றி
விட்டெறிந்த சிலம்போடி
  வெடிக்கக் குடைசாய்ந்த வீரத் தேசம்
துட்டரையும் பக்கமிட்டு
  துணைசேர்த்தே அழுக்கடையத் தேவையென்ன ?

rawmu...@gmail.com

unread,
27 May 2014, 14:10:56
to santhav...@googlegroups.com
வருமோடி விடிவென்பால் தருமோடி! 
        வாக்குறுதி பலிக்குமோடி!
பெருமோடி வித்தைஎனப் பேசாமல் 
     விடை எமக்கே தருமோ மோடி?
கருவோடுங்  கொடியுறவும் கரவாகிக் 
       கரைந்திடுமோ? கண்ணீர் மாற்றும் 
தெருமோடி  வித்தையெலாம் சிறுவருக்கே! 
         இதைத்தெரிந்து கொள்ளுமோடி?

வானகத்தின்  வைகுந்தம்  வழிபடுவோர் 
          வாழ்வுரிமை! வாழும் நாட்டின் 
தீனர்களும் திக்கிழந்தே சிறுமையுறின் 
           தீப்பரவச்  சீற்றம் காட்டி 
மானமதைக்  காப்பவனே மாலவனாம்!
           இதை அவனும்  மதிப்பானோடி!
ஈனர்களை  அடக்கிஎமை  இனியேனும் 
            காத்துவழி காட்டு மோடி!

அரசியலின் லாபமதை லாபியினால் 
          அளவிட்டே அதிகா ரத்தின்
முரசொலித்தல்  தகுமோடி? மூலையிலே 
          கிடப்போரின் முகத்தைக் கண்டே
அரவணைத்தல்  தகுமோடி? யாரேனும்  
          அவர்க்கு  ரைத்தல் நடக்குமோடி?
கரவொலிகள், புகழ்வெளிச்சம்  தரும் மயக்கம்,
        மிகவிரைவில்  கலையுமோடி?
    
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.



kirikasan

unread,
28 May 2014, 00:29:57
to santhav...@googlegroups.com
ஐயா மிக்க  மகிழ்வும் நெகிழ்வும் தோன்ற நன்றி கூறுகிறேன் அழகான கவிதைமூலம் கருத்தூட்டுவது  தேன்குழைத்த அமுதமாக உள்ளது.

நன்றிகள்!

கிரிகாசன்
****************************************************
Message has been deleted

kirikasan

unread,
28 May 2014, 21:52:22
to santhav...@googlegroups.com
மேலே காணப்பட்ட கவிதைசந்தம் சரியாக இல்லாததால் நீக்கிவிட்டு  இதை  எழுதினேன்


           பெண்களும் ஈழமும்
 
மனமோடி விளையாடத் தமிழோடு இசைபாடி
மகிழ்வோடு வாழ்ந்திருந் தோம்
கனமாகிப் படுநெஞ்சம் கலிகாண விதிகூடிக்
கவலைகொண் டஞ்சுகின் றோம்
தனமோடித் தொலைந்தாலும் தலைபோகும் நிலைவிட்டுத்
தவிப்பின்றி யமைதிகாண
இனமெங்கள் தமிழ்பேசும் ஈழத்து மாந்தரிவர்
இன்பத்தைக் காண்பதெப்போ

தினமோடி யெழுஞ் சூர்யன் தீயென்று சுட்டாலும்
திகழ் வாழ்வின் உயிர் ஊட்டமே
மனமோடி பகைவன் கை மறந்தே கைக்கொண்டாலும்
மதிகொண்டு செயும்காலையில்
சினந்தோடித் தவறென்னும் செய்குற்றம் பிழைதன்னைச் 
செய்வோனை அறம்வேண்டிடில்
கனவுகாண் குடிமக்கள்காத்திட்ட கடவுளிவர்
கருணை குரு எனவாழ்த்துமே

உயிரோடிப் படுந்துன்பம் உறவென்ற நிலைமாறி
ஒரு வாசலொளி தோன்றுமா
பயிரோடி வி|ளைகின்ற பாங்காக எம் வாழ்வும்
பயமின்றிச் சுகம் காணுமா
மயிலோடி நடமாட முகிலோடி நீர்தூற 
மலர்மீது தழுவுங் காற்றாய்
சுயமாகத் திரிகின்ற  நிலைகொண்டு பரந்தோடும்
சுதந்திரந் தனைக் கொள்வமா

       (அழகிய வாழ்வு )

சுனைநீரின் அலையாடச் சுருள்கூந்தல் அலைபோலும்
துவண்டோட எழில் பூத்திடும்        
தனை நீருள் மறைந்தாடும் தாமரைகள் பூமகளிர்
திருவதன அழகேந்திடும்
கனிவாழை நினைவூட்டக் காணுமா துளை பழமும்
கனிந்து வெடித்தான தோற்றம்
பனி காற்றிற் நடுவேயோர் பருவத்து இளமங்கை
பார்த்து நகை பூத்ததாகும்      
 
பூதாவி வண்டோடப் பூவையவள் விழியோடிப்
போவதெங் கென்றுபார்க்க
போதாது விரையென்ற பிரம்பாட நடைகாளை
பூட்டிய ச தங்கை யொலியும்
தாதா தெய் என்றாடும் தமிழ்மங்கை போலாக
தருமாவின் கனி பெண்ணவள்
காதோரம் படர்கன்னம் கன்றிச் சிவந்ததெனக்
கிளி நின்று தடுமாறிடும்

எழிலோடிப் பொலிகின்ற இன்பவாழ் விதுபோலும்
ஈழத்தில் பெண்டிர்காண
தொழிலே வன்கொலையாகித் தினந்தோறும் புரிகின்ற
தீந்தமிழ் எதிரிதானும் 
குழல்சூடும் மலர்மங்கை கொடியாகிப் படர்கின்ற
குடும்பத்தின் ஆணிவேரை
முழுதாயும் வேர்வெட்டி முற்றாக வீழ்த்தும் விதம்   
முடிவாகிப்  போவதெப்போ?


******************************************* 

kirikasan

unread,
6 Jun 2014, 22:40:21
to santhav...@googlegroups.com

        இனியோர் பிறவி வேண்டாம்

சப்தமிட்டும் வானெழுந்த சக்தி .
சட்டெனப் பரந்துமெங்கும் ஓடிக்
குப்பெனப் பிடித்த தீயும் மின்னிக்
கொண்டதோ வெடித்த சத்தங்கூடி
இப்பெருத்த அண்டம் ஊது சக்தி
ஏகமாய் விரிந்ததென்ன காணீர்
வெப்பமும் வெதுப்புடைந்து தீயில்
விண்ணெனும் அகன்ற வேளை நாடி

அப்பனை அவர்க்குமேலே  ஐயன்
அங்கவர்க்கும் மூதை யானவர்க்கம்
இப்புவிக்குள் வைத்துஒட்டி நில்லென்
றெத்துணை விசித்திரங்கள் செய்தாள்
சொப்பனம் கொடுக்குமின்பம் போலே
சுற்றியும் மலர்கொள் சோலையாக்கி
தப்பெனும் நினைவெடுத்தும் கூடி
தத்தியும் நடக்கும் பிள்ளை யாக்கி

வித்தை9கள் புரிந்த நாமும்கொள்ள
வேண்டியும் இருத்திவிட்ட தென்ன
அத்தையும் கொடுத்த மாமன் பெண்ணை
ஆசையில் இழுக்கும் கண்ணின்காந்தம்
இத்தரை விழுந்த வீர்மார்பும்
இச்சையில் உருண்டதாகக் காணும்
அத்தனைபொருள் பொன் மேனியாசை
ஆங்கெமக் கென்றீந்து மண்ணில் விட்டாள்

ரத்தி னச்செங் கம்பளம் விரித்து
ராஜமா நடை நடந்த போலும் -[
அத்தனை பொற்காசின் மோகம்கூடி
ஆசையில் விளைந்த பெண்மைநாடி
புத்தியும் இழந்து பொய்மை பேசிப்
புல்லரித்துக் காண் சுகங்கள் மேவி
நித்திரைக்குள் போயிருண்டதாக
நேர்ந்திடு மிவ்வாழ்விலென்ன மீதி

சுற்றிலும் கருத்த பேய்கள் கூடிச்
செய்யெனக் குரல்கொடுக்கத் தேடிப்;
பற்றியும் இழுத்து கொன்ற மாந்தர்
பாரிலே இவர்க்கு நாமம் வேந்தன்
கற்றலும் மறந்த கண்கள் ,மூடி
காணு,மிவ்  கொடுகோல் கையில் பற்றி
சிற்றுடல் சிதைக்க சேர்ந்துமாடி
செய்மனக் குரோத மன்னர் காணீர்

சித்தமும் கொண்டாடும் இன்பந்தேடி
சிந்தனை, குரங்கென்றாக மாறி
உத்தரிக்கவென்று பாவம்தேடி
உள்ளதும் நல்சக்தி விட்டு கூடி
சுத்தமும் மறந்தழுக்கை வேண்டி
சுந்தரன் எனக் கனத்தில் ஊறி
இத்தரை மறந்து போகும் நாளும்
என்றெனக் கென்றேதும் எண்ணமின்றி

கற்றதும் கரங் கொடுக்க வில்லை
கண்டதும் படித்த ஞானமில்லை
செற்களி லுரைத்த முன்னைச் சான்றோர்
சுட்டிடும் தீயென்ப கேட்கவில்லை
நற்குணம் நலிந்தவாழ்வில் கூடி
நர்த்தனன் தன்மங்கை மேனிபாதி
உற்றவன் உதைத்து மண்ணிலாட
ஓர்பிடிக்குள் சாம்பலாகும் செந்தீ

இத்தரை கொள்வாழ்வு மென்ன வாழ்வோ
எச்சுகம் நிலைத்திங்கு யாவும்
தித்திக்கும் எனச்சுவைத்த மாயை
தென்றலில் விழுந்தலைந்த பூவை
ஒத்திடக் கிடப்பதென்ன வாழ்வில்
எத்தனை எடுத்தும் பாவம் உச்சம்
சத்தியம் இப்பாழ் கிடங்குப் பூமி
சுற்றிமீள் பிறக்கும் வாழ்வு வேண்டாம்

...............................

rawmu...@gmail.com

unread,
7 Jun 2014, 05:00:23
to santhav...@googlegroups.com
வேண்டுமடா இப்பிறவி மீண்டும் -இந்த 
வேதனைதீர்  காலம் காண வேண்டும்
மாண்டுவிட்டால் மார்க்கம் எளிதாமோ?-இங்கு  
மறுபடியும்  நாம்பிறக்க  வேண்டும்!
ஆண்டவனின் சுடலையாட்ட மெல்லாம்-நம 
தகத்தினிலே சுகம்கொடுக்கும்! ஆமாம்! 
மீண்டுமன்னை நம்மை ஈன  வேண்டும்!-இனி 
விரைவுடன்நாம்  எழுந்து நிற்க  வேண்டும்!

காளியவள் சூலம் கையி லேந்தி -அந்தக் 
கயவர்தமைக் குத்திக்கொல்ல வந்தாள்!
கூளியுடன் சேர்ந்த தோழியோடே -பெருங் 
கொலைக்கருவி  பலவும் ஏந்தி நின்றாள்!
மூளிமனம் கொண்டுமுன  காதே!- வெறி 
மூர்க்கமுடன் மூச்சில் தீயை மூட்டு!
காளகண்டன் ஆணையிட்டு  விட்டான்!-உன்றன் 
கையுயர்த்தி  வீரமதைக் காட்டு!

மீண்டும் மீண்டும் நீபிறக்க வேண்டும்!-ஏங்கி 
மெலிதல் பாவம் என்றுணர்தல் வேண்டும்!
யாண்டும் நமைக் காக்குமன்னை  ரூபம் - அதோ 
அங்குமிங்கு மெங்கும் தோன்றல் காண்பாய்!
தூண்டிநமைத்  துரத்துகின்ற  துன்பம் - இனி 
தூரத்திலே  போய்மறைதல்  காணாய்!
சீண்டலைநீ  பொறுத்ததெலாம்  போதும் -புது 
சென்மத்திலுன் னாசைநிறை  வேறும்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் - என்னும் 
எண்ணமதைத்  திண்ணமுறக் கொண்டே 
தின்று விளையாடலே நம் செய்கை -நம் 
தேச கவி பாரதியின் ஆணை!
கொன்றிடும் பொய்க் கூத்தெலாமே  மாயை!-இந்தக் 
கொள்கை நமக்குண்டு! இனிமேலும் 
நின்று நிமிர்ந் தெழுவதேநம்  வேலை!-இதை 
நெஞ்சினிலே வை! இதுவென்  ஓலை !
அன்புடன் புலவர் இராமமூர்த்தி 
  

--

கடிச்சம்பாடி

unread,
7 Jun 2014, 05:52:29
to santhav...@googlegroups.com
அருமையான கருத்து. ஊக்கம் தரும் கவிதை. பாராட்டுகள்.

சங்கரன்

ananth

unread,
9 Jun 2014, 19:10:15
to சந்தவசந்தம்
கிரிகாசன், புலவர் கவிதைகள் அருமை. புலவரின் கவிதையில் நம்பிக்கை சுடர்விட்டெரிகிறது.

அனந்த்


2014-06-06 23:00 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
வேண்டுமடா இப்பிறவி மீண்டும் -இந்த 
வேதனைதீர்  காலம் காண வேண்டும்
மாண்டுவிட்டால் மார்க்கம் எளிதாமோ?-இங்கு  
மறுபடியும்  நாம்பிறக்க  வேண்டும்!
ஆண்டவனின் சுடலையாட்ட மெல்லாம்-நம 
தகத்தினிலே சுகம்கொடுக்கும்! ஆமாம்! 
மீண்டுமன்னை நம்மை ஈன  வேண்டும்!-இனி 
விரைவுடன்நாம்  எழுந்து நிற்க  வேண்டும்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் - என்னும் 
எண்ணமதைத்  திண்ணமுறக் கொண்டே 
தின்று விளையாடலே நம் செய்கை -நம் 
தேச கவி பாரதியின் ஆணை!
கொன்றிடும் பொய்க் கூத்தெலாமே  மாயை!-இந்தக் 
கொள்கை நமக்குண்டு! இனிமேலும் 
நின்று நிமிர்ந் தெழுவதேநம்  வேலை!-இதை 
நெஞ்சினிலே வை! இதுவென்  ஓலை !
அன்புடன் புலவர் இராமமூர்த்தி 
  
2014-06-07 2:10 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:

        இனியோர் பிறவி வேண்டாம்

சப்தமிட்டும் வானெழுந்த சக்தி .
சட்டெனப் பரந்துமெங்கும் ஓடிக்
குப்பெனப் பிடித்த தீயும் மின்னிக்
கொண்டதோ வெடித்த சத்தங்கூடி
இப்பெருத்த அண்டம் ஊது சக்தி
ஏகமாய் விரிந்ததென்ன காணீர்
வெப்பமும் வெதுப்புடைந்து தீயில்
விண்ணெனும் அகன்ற வேளை நாடி


kirikasan

unread,
14 Jun 2014, 08:48:16
to santhav...@googlegroups.com
அன்போடு கருத்து கூறிய புலவர் ஐயா அவர்கட்கும்,  கடிச்சம்பாடி ஐயா அவர்கட்கும், அனந்த் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
14 Jun 2014, 08:53:19
to santhav...@googlegroups.com

            மாற்றமில்லை!

வாழ்ந்து கெட்டது போதுங் கொள்ளடி சக்தி - இந்த
வான்வெளியினில் நீபடைத்ததென் வையகம் சுழன்றோடி
தாழ்ந்து நிற்குது தன்நிலையினில் மாறி - வெறும்
தங்கம் பூசிய தகதகமிளிர் தகரப் பந்தென மாறி
சூழ்ந்து கொண்டதென் சுற்றிலு மிருள் மூடிச் - சுவை
செங் கரும்பதன் அடிமுடிந்திட நுனியிவர்க்கென ஆக்கி
வீழ்ந்தே விட்டுயிர் ஆயிரமெனக் கோடி - இவர்
வீணென இனம் சாகுமிந்நிலை விட்டது கரம் மாறி

ஆழ் மனதினில்நோய் பிடித்தவர் கூடிப் - பகை
ஆற்றிடும் செயல் துயரெழுந்திட அகமுடன்புறம் மூடி
மூழ்கிவிட்டது நீரிடை முழு மேனி இதில்
மோகங் கொள்ளெனும் முறைமைகள்தனை விதி கெடுத்தது மாறி
பாழ் மனதினில்  வாழ்எனு மிச்சை கூட்டி - அன்னை
பார்வதிமகன் கோவில்கள்தமை பார்த்துருகிட நாடி
சூழ்விதி கொளக்காத்திடு மெனப்பாடி -  அதில்
சொல்லி யும்விழி பார்த்திருந்தவர் கூடிக் கொன்றது பூமி

ஆனந்தமென ஆடிடும்  பெரும் உலகம் - அதில்
அத்தனை சுக வாழ்வுகொண்டனர் ஆயினும் தமிழ்சொர்க்கம்
தேனந்த சுவை போலிருந் தது வாழ்வு - அதில்
தித்திப்பென்பது தீயருக்கென தீந்தமிழ் கசப்பாக்கி
ஏனந்த வகையானது மெனஎண் ண - உளம் 
மேற்றதென்பது தீமை என்றிடின் தேகம்கொள்வதும் இம்சை
வானந்த அளவாயினும் கொள் இன்பம் - தர
வைத்தவளதை மற்றவர்கொள விதி தமிழ் உயிர்நெருட

நாளெழுந்திடுங் காலையின் கதிர்கண்டே - நாம்
நல்லொருமையில் கொள்சுதந்திரவாழ்வெனக் காணென்றே
வாளெடுத்தெமை விசிடும் பகைகண்டும் - நிலை
வாய்த் திடுமென நேர்விழிகொள வந்தெதிரிகள் ஓட்டி
தோளுரம்கொளத் தீண்டிடும் ஒர் நாகம் இனும்
தீயனும் பெரும்யானை யும்வரச் சிங்கத்தின் முற்தோன்றல்
ஏழைகள் செலும் பாதையில் விட்டேங்கி - துயர் 
ஏற்றிவைத் திடர்கூட்டிக் கொண்டெமை இம்சை செய்வதுமேனோ

வாழ்வுனை அழித்தேகுவம் எனும்கொள்கை - இந்த
வான்பரப்பினில் நீபொறித்திட்ட வையகம் கொண்டாட,
பாழ்படுத்திட வேகம்கொண்டிவை காணீர் - இது
பேயுறைந்திடும் பூமி யென்றிடல் பேச்சினில் தீதில்லை
மாளென முழுத் தேசமும் வலிதாரின் - இந்த
மான் புனலென வான்கதிரெழும் கானலை உளம்நம்பி
வாழ்ந்திடு விதியாகிடும் நிலைகாணின் - எந்தன்
வார்த்தைகள் தனில் மீள்பரிவுற மாற்றிடமனம் எண்ணா!


*********************

kirikasan

unread,
20 Jun 2014, 12:26:17
to santhav...@googlegroups.com

        வருத்துதல் ஏன் அன்னையே!
 
நினதருள் பலமொடு தினமதை பெறுவித
நினைவொடு தொழுதிடினும்
மனமது மகிழ்வெழ மடியிலினில் தலையிரு
மகனெனக் களிகொளினும்
கனமது முடியினில் கடுகள விலையெனக்
கலகலவென மகிழ்ந்தும்
எனதுள மதனிடை எது வொரு நெருடலை
எழுபட முயலுவதோ

வழிபடும் பொழுதுனை வருவது நலமெனும்
வளம்பெரு கிடவிருந்தும்
விழிகளில் பெருகிடும் ஒளிதனும் குறைவிலை 
வியன்பெறு வகை தெளிந்தும்
பழிகொள அயலிடை பகையிலை உறவுகள்
பனிமலர் மெதுமையெனும்
வழிபெற நிலையெடு வகைதனும் கொளமனம்
வருந்துவ திடையினிலேன்

பொழிலிடை அவிழ்மலர் புதுஇதழ் விழிபெறப்
புனர்வுறு மனமிழைந்தும்
ஒழிதுயர் உலகமும் உனதெனும் சுவைமிகு
உணர்வொடு  குரல்எழினும்
களிபெரு கிடவதை கறைபடு முடைதனும்
கடுகென எடைகொளினும்
நினைவெழு முளதிடை நிகழ்வது மெது தினம்
நெருடலைத்  தருநிலையேன்

விழுவதென் இனமிவர் விலகிடும் உரிமைகள்
விடுதலை கனவெனிலும்
குழுவென உயர்குல குணமுடை தமிழரின் 
குலவழி பிறந்தனெனும்
தழுவிடும் இனிதமிழ் தகைமையில் உயர்மொழி
தலைமுறை யிதில்பெரிதும்
நழுவிடப் பிறமொழி நடுவினில் வருவதும்
நகையல்லப் பெருந் துயரேன்

முழுபொழு திசைவுடன் முகைநறு மணமலர்
முதிர்விட லெனமுகமும்
விழுவது சரமலர் விருதுகள் புகழென
விருந்துகள் பலபெறினும்
கழுவினில் எரிபடும் கயமையின் உணர்வொடு
கவலைகள் மனம்கொளலேன்
தொழுதிடு முயர்தமிழ் துயருறும் நிலமெனில்
துவைபடு மனவதையேன்

விழுமலர் கொடிதனில் வெகுஎழி லுறவிதழ் 
விரிந்திட இருந்திடினும்
தழுவிடக் கொடிபடர் தருஇலை யெனிற்தனி 
தவித்திடு நிலைமனமும் 
எழுதுசொல் மொழியெனும் இனிதமிழ் அழகுடன்
இருந்திட மனம்மலர்ந்தும்
முழுஇனம் அழிவுறும் நிலைதனில் கரம்தரும் 
மனதுடன் எவரில்லை யேன்



***************************** 

kirikasan

unread,
22 Jun 2014, 12:31:12
to santhav...@googlegroups.com
அன்றும் இன்றும்

      இது அன்று எழுதியது தலைப்பு கீழே உள்ளது தான்.  சீரமைத்து புதிதாகக்கியுள்ளேன் இரண்டு பகுதிகள்

            இன்னொரு பிறவி வேண்டாம்



நீலவிண்ணில்மின்னு மாயிரம்தாரகை
  நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி அண்டமாயக் குழம்பினில்
  காற்றில் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளே நெருப்பதன்
  ஊடே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்றொரு ரீங்கார ஓசையில்
  காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
  தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்து
 வான்துகள் கொட்டிச் சுற்றிவர
வெப்ப  மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
  வீச்சில் கரும்குழி உள்ளுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்று தொலைகின்றேன்
  கொண்ட துயில் விட்டதிர்ந் தெழுந்தேன்

காணும் பகற்கன வாலெழுந்து வானிற்
  கண்முன் பறக்கும் முகில்களினை
ஆளாய்க் குரங்காய் அதிசயமாய் பெண்ணின்
  அற்புதமான வடிவெடுக்கும்
மீளக் கலைந்து முருக்குலைந்து பஞ்சாய்
  மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
  கூடியோர் தேவதை வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
  ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்று ஏனோ
  இந்த மண்ணில் வந்து யான் பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
  எங்குசென்றே மீளமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
  ஆழவிண் ணின் வெளி கண்டதென்ன

வானைப் பிரபஞ்ச மாக்கிவிரித் ததில்
  வண்ண குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்றே இருப்பதன்
  ஏதுமென்ன வென் றறிந்துளயோ
ஆவிதுறந் ததும்அண்ட வெளியினில்
  யாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
  தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
  சூழும்  பெரும்வெளி சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
  செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்துக்க திர்வளர்ப்போமது
  நீங்கப்பசி அன்னம் உண்பதற்கு
கல்லுடைத் தில்லமும் கட்டிவைத்தோம் குளிர்
 காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
  ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
  மேன்மையுண்டோ பயனேது என்றேன்
தொல்லையிலாதொரு வாழ்வுக் கென்றேபல 
  தோன்று விஞ்ஞானக கருவிகண்டோம்
பல்லினமாய் திறன்கொள்ளும் கணனியும் 
  பார்க்கத் தொலை வண்ணக்காட்சி செய்தோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
  அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
  நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
    ஏனோ நீதி தர்மம் கேட்பதில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
  கத்தி எடுப்பவன் தானே இறை


(மிகுதி வரும்)

kirikasan

unread,
4 Jul 2014, 18:49:08
to santhav...@googlegroups.com


     நம்பிக்கை வானில் உதிக்கிறது

நான் நடக்கும் பாதையெங்கும் நல்லொளித் தோற்றம் - அதில்
நர்த்தனஞ்செய் ஏந்திழையர் நளின சந்தோசம்
தேன்குரலில் பாடுமிசை தென்றலில் சேரும் -அந்தத்
தீந்தமிழின் ராகமழை தித்திப்பை யூற்றும் 
கானகத்து நீள்மரங்கள் காற்றினிலாடும் - என்
கால்நடக்கப் பூஇறைத்துக் களிமிகுந்தாடும் 
தேன் சுவைக்கப் பழுத்தபலா  தீஞ்சுளை கொள்ளும் - என்
தேவை பசிநீக்கவெனத் தாழ்ந்தடி தூங்கும்  

வான் தெளித்த நீர்சரங்கள் வந்தெனில் வீழும் - அவை
வாடிமனம் சோர்ந்துவிடா வந்தெனை நீவும்
ஏன் நடந்தகால் அடடா இம்சையில் நோகும் -  என
ஏற்றமலர் பூம்படுக்கை இயற்கை யுண்டாக்கும்
மேன்மைகொண்ட  தமிழிசையின் மெல்லிய ராகம் - அது
மேளதாள ஒலியெடுத்து மின்னிசை கூட்டும்
தான்நடந்த அன்னநடைத் தண்ணிலவாளும் - ஒளி
தாவிவழி மூடுமிருள்  தன்மையைப் போக்கும்

கண் நிறைந்த காட்சிகொண்ட கற்பனை ஊற்றில் - பெரும்
கரைபுரண்டு துள்ளும்நதி கால் தொடக் காணும்
மண்ணுருண்ட பூமிபசும் மரகத புல்லில் - நல்ல
மகிழ்வெடுக்கப் பாய்விரித்து மலர்களைத் தூவும்
எண்ணி யெதென் தேவையென இயம்பிடமுன்னே - என்
இமைவிழிக்க முன்னெழுந்தும்  என்கரம்சேரும் 
தண்மைகொள்ளும் அலையெனவே தரைபடவீழும் வாழ்வு
தாங்கும் திரை ஓங்கியெழும் தன்மையில் ஓங்கும்

பொன் ஒதுக்கும் மனமறியாப் பூவையர் கூடி - மனம்
போதைகொளும் புன்சிரிப்பில் பிறந்திடும் மாயம்
புன்மை நாசம் பேரழிவுப் போக்குகளற்றே - ஓர்
புத்துலகச் சூழலிலே பிறந்திடும் வாழ்வில்
அன்பு கொண்ட நெஞ்சமொன்று அன்னியமற்றே - எந்தன்
அன்னைபோலும் பக்கமிருந் தணைத்திடக் காணும்
பன்மையாகப் பரவசமும் பாதியென்றாகும் துயர்
பனிபடர்ந்த வேளை கதிர் படும் நிலையாகும்

**************************

pbalakrishnan1

unread,
4 Jul 2014, 21:27:38
to santhav...@googlegroups.com
அருமை! - அரிமா இளங்கண்ணன்

On Fri, 04 Jul 2014 22:19:10 +0530 wrote

>

நம்பிக்கை வானில் உதிக்கிறது
நான் நடக்கும் பாதையெங்கும் நல்லொளித் தோற்றம் - அதில்நர்த்தனஞ்செய் ஏந்திழையர் நளின
சந்தோசம்தேன்குரலில் பாடுமிசை தென்றலில் சேரும் -அந்தத்தீந்தமிழின் ராகமழை தித்திப்பை
யூற்றும்கானகத்து நீள்மரங்கள் காற்றினிலாடும் - என்கால்நடக்கப் பூஇறைத்துக் களிமிகுந்தாடும்தேன்
சுவைக்கப் பழுத்தபலா தீஞ்சுளை கொள்ளும் - என்தேவை பசிநீக்கவெனத் தாழ்ந்தடி தூங்கும்
வான் தெளித்த நீர்சரங்கள் வந்தெனில் வீழும் - அவைவாடிமனம் சோர்ந்துவிடா வந்தெனை நீவும்ஏன்
நடந்தகால் அடடா இம்சையில் நோகும் - எனஏற்றமலர் பூம்படுக்கை இயற்கை
யுண்டாக்கும்மேன்மைகொண்ட தமிழிசையின் மெல்லிய ராகம் - அதுமேளதாள ஒலியெடுத்து மின்னிசை
கூட்டும்தான்நடந்த அன்னநடைத் தண்ணிலவாளும் - ஒளிதாவிவழி மூடுமிருள் தன்மையைப் போக்கும்
கண் நிறைந்த காட்சிகொண்ட கற்பனை ஊற்றில் - பெரும்கரைபுரண்டு துள்ளும்நதி கால் தொடக்
காணும்மண்ணுருண்ட பூமிபசும் மரகத புல்லில் - நல்லமகிழ்வெடுக்கப் பாய்விரித்து மலர்களைத்
தூவும்எண்ணி யெதென் தேவையென இயம்பிடமுன்னே - என்இமைவிழிக்க முன்னெழுந்தும்
என்கரம்சேரும்தண்மைகொள்ளும் அலையெனவே தரைபடவீழும் வாழ்வுதாங்கும் திரை ஓங்கியெழும்
தன்மையில் ஓங்கும்
பொன் ஒதுக்கும் மனமறியாப் பூவையர் கூடி - மனம்போதைகொளும் புன்சிரிப்பில் பிறந்திடும்
மாயம்புன்மை நாசம் பேரழிவுப் போக்குகளற்றே - ஓர்புத்துலகச் சூழலிலே பிறந்திடும் வாழ்வில்அன்பு
கொண்ட நெஞ்சமொன்று அன்னியமற்றே - எந்தன்அன்னைபோலும் பக்கமிருந் தணைத்திடக்
காணும்பன்மையாகப் பரவசமும் பாதியென்றாகும் துயர்பனிபடர்ந்த வேளை கதிர் படும் நிலையாகும்
**************************



--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

kirikasan

unread,
5 Jul 2014, 11:33:49
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா , 0தவறை உணர்கிறேன் சமுதாயத்துக்கு உற்சாகம் தரும் கவிதைகளில் கவனம்  செலுத்துவேன். நன்றிகள்

kirikasan

unread,
5 Jul 2014, 12:41:52
to santhav...@googlegroups.com

         மரங்களைப் போற்றுவோம் 

மரங்களைப் போற்றுவோம் மனிதர்களே இம்
மாபெரும் உலகினிலே
வரமென வாழ்வினைக் கொண்டனவோ அவை
வளர்முறை உயர்வடிவே 
தரங்கெட தலைகொய்யும் தன்மையில்லை அவை
தரணியில் நடப்பதில்லை
இரந்திடும் குணமதற் கிருப்பதில்லை அவை
இகழ்ச்சியில் சிறுப்பதில்லை

செருக்கொடு உரமென நிலைத்த நிலை அவை
சிறுப்பது நிகழ்வதில்லை 
இருப்பினும் உரிமையை இழப்பதில்லை வளர் 
எழுச்சியில் மரப்பதில்லை
கருக்களை பிரசவம் செய்வதில்லை அவை
கழிவென்று வியர்ப்பதில்லை
விருப்பொடு நிழல்தர மறுப்பதில்லை அதன்
விருந்துகள் இனித்தசுவை

செருப்பென எதிரிகள் மிதிபொருளாய் அவை
இருப்பது நிகழ்வதில்லை
குருகலை எனப்பயில் குணமுமில்லை மனக்
குழப்பமும் கவைலையில்லை
அருங்குணம் அறிவினில் சிறிதெனிலும் அவை
அறங்கெட  நடப்பதில்லை
வரும் புயல் எதிர்ப்பினும்  வலிமையுடன் அவை
வாழ்குணம் மனிதர்க்கிலை

நெருப்பெழ மனிதரின் உணவு செய்தே பின்னர்
நிரந்தரமிழந்துவிட
இருப்பெனமிகுந்தவை எரித்துவிட அதை 
இடுவது விறகெனவே
விருப்பொடு கனிபழம் தந்தபின்னே எமை
விரைந்திடு முடிவுவரை
தருபொருள் மரமெனும்  தரணியிலே பெரும் 
தயவுடை கொடை தருவே

அருவருப்புடன் ஒரு அங்கமில்லை அவிழ்
அழகிய மலர்கள் அவை
கருக்கொள்ள  இரவுகள் கனப்பதில்லை அவை
கயமையில் முடிவதில்லை
தெருக்களில் இருப்பினும் தோயும் மழை அவை 
தரும் குளிர் பிணிகளில்லை
சுருக்கமென் றுரைத்திடின் சிறப்புடனே அவை
செழித்திடும் உயர்நிலையே

*****************

kirikasan

unread,
16 Jul 2014, 20:28:37
to santhav...@googlegroups.com
சற்று உடல்நலப் பாதிப்பு தேறிவருகிறது! மீண்டும் வருவேன்

      கரம்தா தேவி

புழுவின் வதையும் புனலின் அலைவும்
மெழுகின் உருகும் மிதமென் தகையும்
கழுவின் அமர்வும் கரவின் கேடும்
பழுவின் சுமையும் பார்க்கின்றேன் நான்

எழுமின் இடியும் இடரும் தென்றல்
முழுவன் புயலாய் முயலும் விதியும்
தழுவும் தீயின்  தகிப்பும் வாடும்
அழகின் மலராய் அடியே னாமோ  

எழுதும் கோலை எடுக்கும் கைகள்
பழுதும் கொண்டோர்  பயனைப் போலும்
தொழுதும் உள்ளம் துன்பம் குறையா
அழுதும் கண்கள் சிவக்கின்றேன் யான்

விழுதும் அற்றோர் பழமை தருவின்
விழுமோ என்றோர் வியப்பின் தரமும்
உழுதுண் மகனின் உரிமைத் தனமாம்
கழி மண் சேறாய் காணல் தகுமோ

நிழலுமற்றோர் நிலைமை தரவா
அழலின் உணவாய் அழியும்படியா
மழுவும் உடுக்கை மறுகைக் கொள்ளும்
தழலின் விழிகொள் தலைவா எண்ணம்

பழமும் கனியப் பனிமண் வீழும்
கழனிக் கதிரும் காலம் நீங்கும்
வழுவில் கணிதம்வைத்தே அண்டம்
சுழலும் சக்தி சொல்லாய் காப்பாய்

pbalakrishnan1

unread,
16 Jul 2014, 23:23:19
to santhav...@googlegroups.com
தேவியின் திருவருள் உங்களுக்கு உண்டு என்பதைக் காட்டுகிறது கவிதை! - அரிமா இளங்கண்ணன்,
லாஸ் ஏஞ்சல்ஸ்

On Wed, 16 Jul 2014 23:58:44 +0530 kirikasan wrote

kirikasan

unread,
17 Jul 2014, 02:05:54
to santhav...@googlegroups.com


உண்டு ஆனால் இதுஏன்

தென்றலை ஊதென்று தள்ளியவள் இந்த
தேகத்தை ஊதியும் கொள்ளென்றவள்
இன்றலை என்றென்னை விட்டது மேன் - உள்ள
இன்பங்களைக் கொன்றும் விட்டது மேன் 
குன்றலை பூந்தென்றல் கொண்டுருத்தி - பல
கோடிமலர்களை  புல்லிறைத்து
அன்றில்லை இன்றும் அயரவைத்துப் -பின்னர்
ஆதவன் கொண்டடல் சுட்டது ஏன்

மன்றினில் சொல்தமிழ் மாறியதோ  - இல்லை
மாபெரும் அண்டத்தின் மாயவளோ
கொன்றிடில் ஓர்தினம் கூச்சலெழும் -இது
கூடியெனைத் தினம் கொல்வதுஏன்
தின்றுமே தொண்டையில் சிக்குமன்னம்  உள்ளே 
சென்றிடவும் இல்லை வந்ததில்லை
என்றும் உயர்துன்பம் தந்துவிட்டாள் இது 
இப்படி யென்னையும் வாட்டுவதோ

வாழ்வதும் மேலுயர் வென்பதெல்லாம் ஒரு
வண்டியின் சக்கரம் சுற்றுவதாய்
வீழ்வதும் வீழ்ந்து மெழுந்த பின்னர் ஒரு 
வேடிக்கையாய் சுற்றக் காணுகிறேன்
ஆள்வதும் அன்னையென் றாகிய பின் அந்த 
ஐவிரல் கள்குவித் தாதரவாய் 
வேள்வியில் இட்டொரு நெய் உருகும் தன்மை
வீட்டெனைக் காத்திட வேண்டுகிறேன்

அள்ளவும் நேரற்றுப் போகவில்லை அந்த 
ஆழ்கடலும் குறைகாணவில்லை
துள்ளும் இதயத்தின் உள்ளநிலை  அது
துன்பமெனச் செயல் கொள்ளும் நிலை
புள்ளினம் போகின்ற வானத்திலே  எங்கு 
போயிருந் தாளோகண் காணவில்லை
அன்னையென என்னை அள்ளியணைத்  - திங்கே
ஆறுதல் கூறிட யாருமில்லை
 

kirikasan

unread,
17 Jul 2014, 07:17:32
to santhav...@googlegroups.com
          இன்னும் கொஞ்சம் கொஞ்சம்

பொன்னெடுத்துப் போடச் சொன்னதில்லை - வாடும்.
பூத்தொடுத்த மாலை கேடகவில்லை
மின்னுகின்ற பட்டில்ஆடை கொண்டே - எந்தன்
மேனியெங்கும் போர்க்கக் கேட்கவில்லை
தின்னவென்று வெல்லமிட்டுப் பொங்கி - அதில்
தேனை வார்க்கக் கேட்கவில்லைத் தாயே
என்னை யிந்தப் பூமி கொண்டு சுற்றும் - போதில்
இன்னலை உவக்கும் வாழ்வு கேட்டேன்

தென்றல் வீசும்சா மரைகள் கொண்டே - இந்தத்
தேக வெம்மை ஆற்றக் கேட்கவில்லை
மன்றம் ஒன்றமைத்து மன்னனாகி - வாழ
மண்டபங்கள் ஏதும் கேட்கவில்லை
ஒன்றி ஆசை கொண்டு தேக இன்பம் - காண
ஓர்கிழத்தி யன்றிக்கேட்டதில்லை
வென்று பூமி என்னதென்று  ஆடும் - அந்த
வேடிக்கை உணர்வு கேட்டதில்லை

குன்றின் மீது கோபுரங்கள் கட்டி - அங்கு
கொண்டு வைத்துகூடி யாடிக்கண்டு 
நின்ற தேரில் தூக்கிவைத் துருட்டி - சுற்றி
நீளுருண்ட பாதை  ஓடவிட்டு
சந்தசமு மிசைத்த பாடல்  சொல்லி - உன்னைச்
சற்றிணைத்த கைகள் கூப்பி நிற்கும்
விந்தையை மறந்ததாலே இன்று - என்னை
வேதனைக் கென்றாக்கினாயோ சொல்லு

அன்பு கொண்ட ஆவியொன்று தந்தாய் - அதில்
ஆவிநோத சூட்சுமங்கள் செய்தாய் 
தென்பு தந்து தேடு வாழ்வையென்றே - எட்டு
திக்குமோடி தெய்வம் காணச் சொன்னாய்
என்பின்மீது இச்சை தந்திறைச்சி - அதில்
ஏறியோடும் இரத்தவாடைபூசி
நன்மையோடு தீது செய்யும் எண்ணம் - தந்து 
நானிலத்தில் வாழவிட்டபின்னர்

புன்னகைத்து நானுவந்த போது - என்னைப்
போயிருந்து கூறு வார்த்தையென்றாய்
என்ன கைத்து இச் சிறப்பை விட்டாய் - நீயும்
ஏழைமீது வன்முகத்தைக் கொண்டாய்
சின்னகை துடித்து காற்றில் ஆட - ஓர் 
சித்திரம் வரைந்து காட்டு என்றாய்
பன்முகைத்த பூவின் வாழ்வென் றீந்து - என்னை
பரிகசித்து நின்றதேனோ சொல்லு

தன்னலத்தில் கேட்கவில்லைத் தாயே - நேர்மை 
தாண்டியும் நடக்கவில்லை பாரேன்
முன்நிலத்தில் சுற்றும் பம்பரத்தை - எந்தன்
மேனிகொண்டு ஆடவிட்ட பின்பு
மென்குளத்தில் நீரலைந்து காண - அதில் 
மீண்டும் கல்லெடுத்து வீசக் காணும்
இன்னலுக்கு என்னை ஆக்கவேண்டாம் - தேவி 
இன்னும் கொஞ்சம் வாழ்வென் றீயக்கேட்டேன்

*************

kirikasan

unread,
17 Jul 2014, 07:24:51
to santhav...@googlegroups.com
திருத்தம்
 
மேனியெங்கும் போர்க்கும் ஆசையில்லை
Message has been deleted

kirikasan

unread,
19 Jul 2014, 02:09:04
to santhav...@googlegroups.com


         பரிபூரணமாக உடல் வேதனை மறைந்தது. ,மிக உற்சாகமாக இருக்கிறேன்

              
             நன்றிகள் அன்னையே!!
 
தென்னைமரங்கொண்ட தோப்பினிலெ ஒரு
சின்னக் குடிசையம்மா -அங்கு
தென்றல் வந்து தினம் தொட்டணைக்க மனம்
தீயழ கெண்ணுதம்மா
கன்னம் வழியும் ஓர்சின்ன குழந்தையின்
உள்ளக் கவலையம்மா -அது
என்ன விநோதமோ உன்னை நினைக்கையில்
இல்லையென் றாகுதம்மா

அன்னை முகம்தன்னில் உந்தன் ஒளிகண்டு
புன்னகை கொண்டிருந்தேன் -அதில்
அன்பெனும் தன்நிலை காண அளித்தவள்
இன்றரு கில்லையம்மா
சொன்ன சொல்  எப்படி உன்னையடைந்தது
மின்னற் பொறிகளென்றா - இந்தத்
தன்னிலை கெட்டவன் தானுயர்வாகிடும்
தன்மை கொடுத்தாயம்மா

சின்னக் குழந்தையும் கொள்ளக் கருவினில் 
அன்னை வயிற் றுதைக்கும் - அது
பின்னர் பிறந்ததும் பெற்றவர் கொஞ்சிட 
இன்னும் நெஞ்சில் உதைக்கும்
அன்னை மனம்கொண்ட அன்புபெருகிட  
அள்ளி அணைப்பதெல்லாம் -இந்த
சின்னச் செயலதில் உள்ளங் கன்றி என்றும் 
அன்னை வெறுப்பதுண்டோ

முன்ன மறிந்திட வில்லையிது புது
மேதினி யென்றறிந்தேன் -இதில்
வன்மையுடன் பல நன்மைகளும் கொண்டு
வட்ட சுழல் நிலையாம்
    தன்னில் அலைந்திடும்  இந்த மண்ணில் வந்து
    தத்தித் தவழுகிறேன் - எந்தன்
சின்ன விழிகளில் மின்னிஎழும் சக்தி
செல்ல உணர்வு கொண்டேன்
 
கண்கள்முன்னே பலகாட்சிகளின்பெரு
வண்ணக் கலவை மயம்’- இதில்
உண்ணும் கனிதனை  இட்டதருவினில்
   ஓசையிடும் குருவி
   எண்ணமினித்திட இன்னிசை தந்துமே
விண்ணில் பறக்கும்படி -அதை
திண்ணமுடன் மகிழ்ந்தாட விதித்தவள்
தேடிச் சுகமும் தந்தாள்:!


 *************************************

kirikasan

unread,
1 Aug 2014, 19:03:20
to santhav...@googlegroups.com

       
 

      ஒளி  தேடும் உள்ளம் 

வெண்ணொளி கொள்ளெரி வெய்யவனின் கனல்
வீறுடன் எழுமோர்காலை
கண்ணொளி முன்விரி காட்சிகட் புலனிடை
கைதொட மீட்டிடும் வீணை
மண்ணிடை தோன்றிடும் மாயவி நோதங்கள்
மெல்ல விரித்தியல் அன்னை
எண்ண மெனும் ரதம் ஏற்றிவிட்டாள் மனம்
ஏறிக் கடந்தது விண்ணை

மண்ணிடை பூத்தன மாமலர்கள் மது
மாந்தியதோ மனபோதை
பெண்ணின் துணைதரும் பின்னல்இயற்கையின்
பாசமெனும்  நீரோடை
தண்மை தனில் சுடும் தாகம்,எடுத்திடும்
தன்மை யுடன் இகவாழ்வை
எண்ணியுளம் சிலிர்த் தோடிப் பறந்திடும்
இன்பமிதோ எனும்வாழ்வை


சுண்ண மெடுத்திடை பூசியதாய் நடை
சோர்ந்து கிடந்திடும் மேகம்
வண்ணமலர்ப் பொழில் வாவியில் நீந்திடும்
வட்ட அலைத்தா மரையும்
கிண்ண மதில்தொடக் கொட்டியதாய்ச் சிமிழ்
குங்குமச் செவ்வடிவானில்
திண்ணமெடுத் தழல் தீயெரி வானிடைச்
செம்மைகண்டே அசைந்தாடும்

புள்ளினம் துள்ளிடுங் காலை  புதுமணம்
பொங்கும்  சுதந்திரக் காற்றும்
அள்ளியிறைத் திடுநீரும் வயலிடை
ஆடும் கதிர்களின் நாணம்
கொள்ளை யிடும் மனமாற்றம்  அதனிடை
கூவும்குயில்களின் தோட்டம்
எண்ணவுள்ளே மனம்கொள்ளுந் துயர்விட
இன்பமென்றேமனம் ஆடும்

துள்ளி விழும் அலைக் கூட்டம் கரைதனை
தொட்டகணம் விட்டோடும்
வெள்ளி மலைகளின் வீறும் கொள்திடம்
வேண்டியதோ மனதீரம்
தெள்ளென நிர்மல வானடியோரத்தில்  
தோன்றிடுதோ மழைமேகம்
.உள்ள கலை உணர்வோங்க இயற்கையின்
ஓங்குமொளி தனை வேண்டும்
 
....................

pbalakrishnan1

unread,
1 Aug 2014, 19:32:08
to santhav...@googlegroups.com
அருமை. இனிய சந்தப்பா.-அரிமாஇளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்
On Fri, 01 Aug 2014 22:33:23 +0530 kirikasan wrote

kirikasan

unread,
10 Aug 2014, 07:03:49
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!  மிகவும் நன்றிகள்!!

kirikasan

unread,
10 Aug 2014, 07:09:00
to santhav...@googlegroups.com

         இடைவெளி


தமிழ்தனை மறந்திடத் தரவுகள் மறுத்திடும்
தகமையைப் பெறுவதுண்டோ
குமிழென அலையிடை கொளும் வடிவுடைவென
குறுகியும் சிறுப்பதுண்டோ
அமிழ்திலுமினியது அகமதில்  சுவைதமிழ்
அவனியில் வெறுப்பதுண்டோ
நிமிர்ந்திட சிலதடை நினவுகள் கழிகின்ற
நிதர்சன இடைவெளியோ

பலவித நினைவுகள் பறிமுதலிட விதி
பகலிடை ஒளிநிலவாய்
புலமைகள் சிறுபட புதுமைகள் தலைப்பட
பொழிதொன்று கழிகிறதோ
குலமொளிர் மனமதின் குணநலம் புரியுதல்
குறையெனை இருந்துவிடில்
சலசல அலைகளில் சதிரிடும் ஒலியென
சலனங்கள் எழும் இதுவோ

வலதுகை எழுதிட வருவது இடதுகை
வரைமுறை அறிவதில்லை
பலமது புஜம்கொளப் பதறிடும் பாதங்கள்
பகைவனுக் குலகல்லவோ
நலமென இருவிழி நடுவழி இடர்தனை
நிகழ்வினில் புரிவதுண்டு
விலகியும் ஒருவிழி வெறுமையை காணென
விலைதரும் செயல் அழகோ


துலங்கிடும் ஒளியது தரும் பொருள் மறைத்திடின்
தொலைவது எழிலுலகே
நலமொடு இருப்பது நடந்திட அருள்தனை
நல்குவ தவள் தனியே
கலகல சிரிப்பெழக் குழந்தையின் குணமல்ல
கொடுவெயி லெரிகிறதே
சில சில அமைதிகள் செறிவென இருந்திடில்
சடவென அதிர்வெழுதே

வழித்துணை யல்லப் பெரு வழக்கமென் றிணைந்தபின்
வகுப்பது கழித்தலொன்றே
குழிக்குள்ளும் விழுத்திடும் குவலயத்திடை மனம்
கொடுப்பது கரமல்லவே
விழிப்பது விழியல்ல வெகுமன மெனிலதை
விகடமென் றெடுத்திடவோ
செழிப்பது பயிரெனில் சிறிதெனும் உயிர் வகை
சிரித்திட நசுக்குவதோ

////////////////////////

Ram

unread,
10 Aug 2014, 07:35:37
to சந்தவசந்தம்
நலமாக இருப்பதறிந்து மகிழ்ச்சி. உங்கள் உடல் நலத்தின் தன்மை உங்கள் கவிதைகளில் தெரிகிறது. வாழ்க!

இலந்தை


--

yogiyaar

unread,
10 Aug 2014, 09:21:29
to santhavasantham
உடல்நலம் பெற்றபின் எழுதும் கவி சூப்பர்!
யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



2014-08-10 10:39 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:

--

kirikasan

unread,
10 Aug 2014, 18:26:34
to santhav...@googlegroups.com
கவியோகி வேதம் ஐயா அவ்ர்களுக்கும், இலந்தை ஐயா அவர்களுக்கும் ,


‘மிக்க மிக்க நன்றிகள்  ஐயா! இதுபோல் அவ்வப்போது ஒரு சிறிய வார்த்தை  சொல்லிப் போனாலும்  பெருந்தீயை  கவிதைக் கனலை என்னுள்ளேமூட்டிவிடும். அதற்கு மிக்க மிக்க நன்றிகள்!

kirikasan

unread,
10 Aug 2014, 18:55:04
to santhav...@googlegroups.com
     
        அறிவொடு துணி!

சிட்டுக் குருவிக ளாகிக் களித்திடும்
செல்லக்குழந்தைகளே - துயர்
பட்டுத்தெளிந்திடல் பயனன்று முன்
பார்த்துச் செல்வீரே
தட்டுபடுவது கல்லென்றால் அதில்
தாங்கா வலிகொண்டு
கிட்ட கால்செலும் நிலை முன்னே அக்
கேட்டைத் தவிருங்கள்

சொட்டுங் குளிர்மழை மேகம் வரும்- அதன்
சில்லென் றுணர்வோடு
விட்டுத் தெளித்திடும் நீர்த்துளிகள் - அது
விந்தை மகிழ்வாக்கும்
சட்டசடவென இடி முழங்கும்  அதைச்
சற்றும் எதிர்பாரா
அட்டத் திக்கிலும் கதிகலங்கப்  புயல்
அமளிப் படுத்திவிடும்

மொட்டும் பூக்களும் நிறைசோலை தனும்
மேதினி வாழ்வல்ல
வட்டப் பூவிடை தேனுண்ணும் ஓர்
வண்ணப் பூச்சியதன்
பட்டுபோலும் மென்மைகொளும் எழில்
பாங்கும் இதுவல்ல
முட்டித் துயர்தரு மாவிலங்கும் வழி
முன்னால் தெரியும் பார்

தொட்டுக் கொண்டபின் தொலையும் என்றே
தீமைக் கரு`மை`யில்.
விட்டுக் கைகளை மாசாக் காதே
விளவைப்  பார் தீமை
கொட்டிக்  கரங்களில் திட்டுதிட்டென
கொள்ளும் அடையாளம்
பட்டுப் பாடென ஆகிய பின்னால்
பயனென் இலையாகும்

முட்டக் கொம்பொடு  மோதும் எருதுவும்
மூர்க்கத்துடன் வாரில்
கிட்டத் தெரிந்திடக் கட்டிப்புரள்வதை
கைகொண்டால்  நீயும்
நட்டந் தனையே நல்கும் விலகிடு
நாளும் பொழுதோடும்
திட்டந்தனை நீமாற்றிக் கையெடு
தெரியும் இலக்காகும்

அச்சம் படுமிடம் ஆயின் அஞ்சுதல்
அறிவுக் கிடமாகும்.
துசசம் செய்ததை தூசென்றெண்ணிடில்
துயரம் வரக்கூடும்
உச்சம் எதிரியின் பக்கமென்றிடில்
உள்ளத் தெளிவோடு
நிச்சயம் வெற்றி என்றோர் வழியை
நிறுத்தி உள்தேடு

அச்சமென்பது மடமையெனில் அது
அறிவின் துணையோடு
உச்சிப்பெரு வெயில்  எரியும் அதுபோல்
உள்ளக்கனல்கொண்டு
பச்சை புல்வெளி பரவும் காற்றும்
புயலென் றாதல்போல்
நிசயம்வெற்றி உனதே கேள்நன்
நெறியிற் வாழ்வாக்கு

pbalakrishnan1

unread,
10 Aug 2014, 19:40:55
to santhav...@googlegroups.com
செல்லக் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை.- அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்

On Sun, 10 Aug 2014 22:25:07 +0530 kirikasan wrote
--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

pbalakrishnan1

unread,
10 Aug 2014, 19:43:23
to santhav...@googlegroups.com
நன்று! - இளங்கண்ணன்

On Sun, 10 Aug 2014 10:39:03 +0530 kirikasan wrote

kirikasan

unread,
11 Aug 2014, 20:29:45
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!  மிகவும் நன்றிகள்!!




kirikasan

unread,
11 Aug 2014, 20:34:59
to santhav...@googlegroups.com


    துள்ளும் மனம்

தேனைக் குடித்தபின் தீந்தமிழ் ஓடையிற் 
 துள்ளிக் குதித்தவனாய் - சிறு 
மீனைப் பிடித்திட மேனி  துடிப்பதாய்  
 மெல்ல நடுங்குகிறேன் - புள்ளி
மானைத் துரத்திடத் தாவுமழகொடு
 மஞ்சள் வெயில் பரப்பில் -அந்தி
வானைக் கறுத்திடும் மேகம் பரவிடத் 
தோகையென் றாடுகிறேன் 

சேனை பருத்தி நெல் சூழும் வயல்வெளி 
 சிங்காரப் பாட்டிசைத்தே - வரும்
தீனை உண்ணவென கூடும் குருவிகள் 
 தேங்கிக் கலகலக்க - வளை
கூனை எடுத்துமக் கொண்ட கலயத்தைக்
 கொஞ்ச இடையில் வைத்தே - வரும்
பானை அணைத்தவள் பாவை ஒருத்தியின் 
 பாங்கி லசைந்து நின்றேன்

பூனையைப் போல் மெதுவாக நடந்துமே 
 புல்லரித்துச் சிலிர்த்தேன்- கணம் 
ஆனையைப் போற்பெரி தாயும் அதிர்நடை
 ஆக்கியும் அச்ச மிட்டேன் - இனிப்
பூநெய்யை உண்டதோர் பொல்லாக் கருவண்டாய் 
 போதையில் சுற்றுகிறேன் பின்னே
சீ..நய்..நய்..நய் யென்று சின்னமதிக் குரங்
 காகிச் சிரித்துநின்றேன்

ஏனையனே இன்றோ இத்தனை ஆவேசம் 
 என்றவர்க்கோ பதிலாய். - ஒரு
பேனைக் கொண்டோர் சிறு பாவைக் 
 கிறுக்கியின் பாட்டென வைப்பவளை - இதழ்
தேனை கொண்டோர் மலர் செய்தவழ் போதெழில் 
  தோன்றுமந் நூலிடையில் - கண்டு
நானை விரல்பற்றும் நாளைக் காண வேங்கி
 நெஞ்சம் துடித்தேனென்றேன்                                                                            

...............
இப்படிப் பொருள் கொள்க

பேனைக்(எழுதுகோல்) கொண்டோர் சிறு `பா`வைக் 
 கிறுக்கி இன் பாட்டென வைப்ப, வளையிதழ்
தேனை கொண்டோர் மலர் செய்து அவிழ் போதெழில் 
  தோன்றுமோர் நூல் (புத்தகம்) இடையில் கண்டு
நான் ஐவிரல்பற்றும் நாளைக் காண வேங்கி
 நெஞ்சம் துடித்தேனென்றேன்

pbalakrishnan1

unread,
12 Aug 2014, 00:48:16
to santhav...@googlegroups.com
பேனைக் கொண்டோர் சிறு பாவைக் கிறுக்கி - அருமை. - அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்

On Tue, 12 Aug 2014 00:05:02 +0530 kirikasan wrote

>

துள்ளும் மனம்

தேனைக் குடித்தபின் தீந்தமிழ் ஓடையிற்துள்ளிக் குதித்தவனாய் - சிறுமீனைப் பிடித்திட மேனி
துடிப்பதாய் மெல்ல நடுங்குகிறேன் - புள்ளிமானைத் துரத்திடத் தாவுமழகொடுமஞ்சள் வெயில் பரப்பில் -
அந்திவானைக் கறுத்திடும் மேகம் பரவிடத்தோகையென் றாடுகிறேன்
சேனை பருத்தி நெல் சூழும் வயல்வெளிசிங்காரப் பாட்டிசைத்தே - வரும்தீனை உண்ணவென கூடும்
குருவிகள்தேங்கிக் கலகலக்க - வளைகூனை எடுத்துமக் கொண்ட கலயத்தைக்கொஞ்ச இடையில்
வைத்தே - வரும்பானை அணைத்தவள் பாவை ஒருத்தியின்பாங்கி லசைந்து நின்றேன்
பூனையைப் போல் மெதுவாக நடந்துமேபுல்லரித்துச் சிலிர்த்தேன்- கணம்ஆனையைப் போற்பெரி தாயும்
அதிர்நடைஆக்கியும் அச்ச மிட்டேன் - இனிப்பூநெய்யை உண்டதோர் பொல்லாக் கருவண்டாய்போதையில்
சுற்றுகிறேன் பின்னேசீ..நய்..நய்..நய் யென்று சின்னமதிக் குரங்காகிச் சிரித்துநின்றேன்
ஏனையனே இன்றோ இத்தனை ஆவேசம்என்றவர்க்கோ பதிலாய். - ஒருபேனைக் கொண்டோர் சிறு
பாவைக்கிறுக்கியின் பாட்டென வைப்பவளை - இதழ்தேனை கொண்டோர் மலர் செய்தவழ் போதெழில்
தோன்றுமந் நூலிடையில் - கண்டுநானை விரல்பற்றும் நாளைக் காண வேங்கிநெஞ்சம்
துடித்தேனென்றேன்
...............இப்படிப் பொருள் கொள்க

பேனைக்(எழுதுகோல்) கொண்டோர் சிறு `பா`வைக்கிறுக்கி இன் பாட்டென வைப்ப, வளையிதழ்தேனை
கொண்டோர் மலர் செய்து அவிழ் போதெழில் தோன்றுமோர் நூல் (புத்தகம்) இடையில் கண்டுநான்
ஐவிரல்பற்றும் நாளைக் காண வேங்கிநெஞ்சம் துடித்தேனென்றேன்




kirikasan

unread,
15 Aug 2014, 07:24:37
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! என்றும்போல் இன்பந்தரும் சொல்  நன்றிகள்!!

kirikasan

unread,
15 Aug 2014, 07:42:00
to santhav...@googlegroups.com
            தமிழ் காப்போம் வா (ஈழத்துக்கான கவிதை)

தமிழுக்கும் அழகென்று பேர் - இன்பத்
.  தமிழ்கொண்ட எழில் காலை அவிழ்கின்றபூ
தமிழின்பம் மலருக்குள் தேன் - அந்த
.  தமிழ் வாழ்வில் நலிவுற்றுப் குறைகண்ட தேன்
தமிழர்க்கு மறம்கொண்ட தோள் - அந்தத்
.  தமிழ் என்பர் உணர்வுக்குள் தடுமாற்றம் ஏன்
தமிழெங்கள் உயரன்புத் தாய் - எந்தத்
.  தவறின்று நிலைகுன்றத் தருந்துன்பமேன்

தமிழின்ப வாழ்விற்கு வேர் - அந்தத்
.  தீரமிக்க வேர்தன்னும் திறன் விட்டதேன்,
தமிழன்க வரிமானின் நேர் - அந்த
.  தரமின்றிங் கிலை மானம் தனைவிட்டதேன்
தமிழர்க்கென் றொருதேசமில் - அந்தத்  
.  தமிழ் சொல்லும் உறவுக்கு உலகெங்குமில்
தமிழ் கொஞ்சும் மழலைக்கும் நல் - வாழ்வின்
.  தரமென்ற நிலையற்றும் அகதிக்குள்நில்

தமிழ் கொண்ட இசையின்பம் பூந் - தென்றல்
  துளைகொண்ட மூங்கில்கண் தருமோசை காண்
தமிழ் எங்கள் மனம்கொண்டதேர் - விண்ணில்
  தொலை சென்று மதுவுண்ணும் கருவண்டை நேர்
தமிழ் என்ற இனம் வண்ணப் பூஞ் - சோலை
   தவழ் கின்ற இளந் தென்றல் தருமின்பக் கா
தமிழ் என்ற உயர்வெண்ணம் பார் - இன்று
   தரைமீது உதிர்கின்ற மலர் என்றதேன்

தமிழ் எங்கள் உரிமைகொள் வான் - அந்தத்
.  திரள்பஞ்சு முகில் கொஞ்சும் நிலவென்று காய்
தமிழ் இன்பச்சுடர் வானத்தேர் - தன்னில்
.  தடையின்றி உருண்டோடும் ஒளிவெள்ளத்தீ
தமிழ் என்னுமொழி காணும்நல் - உயர்
.  தலைமைக்கு நிகரான இடம்கொள்ளும் நாள்
தமிழென்னும் தாய் வாழ்வுக்காய் - நல்ல
.  தகமை கொள் இறைமைக்கோர் வழி செய்ய வா

தமிழின்ப ஒளி கொள்ளும் நாள் - அன்று
.  தருகின்ற உணர்வோங்கும்  சுதந்திரம்காண்
தமிழ்பேசும் மாந்தர்க்குள்ளோர் - ஒன்றித்
.  தலைமை கொள் ளரசொன்றைஉருவாக்கலாம்
தமிழன்பின் நிலைகொண்ட நாம் - இந்தத்
.  தரணிக்குள்  தமிழேற்றி மலர் தூவலாம்
தமிழென்னு முணர்வோடுகை = பற்றித்
.  தருமின்னல் பகையோட்டி தமிழ் காக்க வா!

***************

kirikasan

unread,
19 Aug 2014, 12:50:31
to santhav...@googlegroups.com


இன்று உறவினர் ஒருவரின் இழப்பின் நிமித்தம் இது எழுதப்பட்டது

 

விதி வலிது


காணாத தொலைவிருந்து வந்தோம் - இந்தக்

காட்சியிலே மெய்மறந்து நின்றோம்

பேணாத பூமரங்கள்போலும் - மண்ணின் 

புழுதியிலே வீழும் பூக்களானோம்

ஆணாகப் பெண்களாக வந்தே உள்ள

ஆசை கொண்டலைந்து தேடி நின்றோம் 

வீணாகப் போகுமிந்த வாழ்வில் - என்ன

வித்தை கற்றும் போகுமுயிர் மீட்கோம்.


கண்ணிரண்டும் மூடுவதில் துன்பம் - இந்தக்

காயமெனும் சேர்க்கைவிடில் துக்கம்

அண்ணளவில் ஏறெத்துப் பார்த்தால் - புவி

அத்தனைக்கும் உள்ள விதியாகும் 

விண்ணிலெழும் போதுயிரும் சென்றே 

வீடடைந்ததாய்  நிலைமை தோன்றும் 

கண்ணறியாப் பேரொளியிற்கூடி 

காலமென்னும் தேவன் கொள்ளும் வாழ்வு


தண்மையொளி தந்தவரோ தேகம் 

தானிணைந்த மூச்சினோட்டம்போதும்

உண்டு களிதுற்ற தெலாம் நீக்கு

ஓடிவா இப்போ தென்றாணை யிட்டால்

எண்ணமதின் விடுதலை நம் தேகம் 

இல்லையென்று தீயெழுந்து மூடும்

மண்ணுலகில் மானிடத்தின் வீழ்ச்சி 

மறுபுறத்தில் மாயைவிட்ட காட்சி


எண்ணுவதில் உண்மைகொண்டு காணின் 

இதுவலவோ நன்மை கொண்டதாகும்

புண்ணெழுந்த வேதனைகள் போயும்

பிணியழுத்தும் தாகம் கொண்டதேகம்

எண்கடந்து எல்லை யற்றவானின்

ஏகமான தெய்வம் காணும்வேளை

பண்ணிய நற்பணிகளோடு பாவம்

பலகடந்து வெண்மையொளி சாரும்


kirikasan

unread,
23 Aug 2014, 13:31:39
to santhav...@googlegroups.com

        அன்பால் உலகை மாற்றலாம்


யார்க்கும் அன்பெனும் தோற்றம் மனிதிடை
  யாக்கும் பெருவித மாற்றம்
சேர்க்கும் புவியிடை வாழ்க்கை தனில்துயர்
  சீற்றம் மறைந்திடக் காற்றும்
நீர்க்குள். அலைதனை நீவும் சுகமெழ
  நேரும் இனிமைகொள் வாழ்வும்
வேர்க்கும் மேனியில் வீசும் தென்றலும்
  வேம்பின் நிழல் சுகமாக்கும்

ஊக்கம் விழிகளில் ஏக்கம் உயர்வுறும்
  நோக்கம் பலமுடன் நாளும்
ஆக்கும் செயல்தனில் தேக்கும் மகிழ்வினை
   யாக்கும் அவை சபையேற்றும்
பூக்கும் உணர்வுகள் கேட்கும் மணிகளும்
  ஆர்க்கும் பெருமைகள் சேர்க்கும்
காக்கும் மனம் சினம் நீக்கும் நிலை புகழ்
  போர்க்கும் வெற்றிகள் ஆக்கும்


கூக்கு எனும்குயில் பாட்டும் கூவிட
  கேட்கும் மயில் நடம் ஏற்கும்
தாக்கும் விசமுடை பாம்பும் தன்நிலை
   போக்கும் மறந்தயல் ஆடும்
தேக்கும் மூங்கிலும் தேங்கும் நிலமதில்
  திங்கள் ஒளிபுகக் காணும்
ஆக்கும் அமைதியும் ஆற்றல்தனை மலை
  ஆகத் திடமென மாற்றும்  

 
பூக்கும் மலர்களின் வாசம் புகமனம்
   மீட்டும்  வீணையை ஒக்கும்
தூக்கம் கொள்விழிபார்க்கும் கனவுகள்
   தோற்றும் எதிரிடை நாளும்
மாக்கள் வனமதும் ஆகும் மனங்களில்
  மாற்றம்பெறும் சுகமாகும்
தீய்க்கும் உணர்வுகள் ஆற்றும் தண்பொழில்
  நீர்க்கும் நேர் நிகராக்கும்


தாக்கம் உறும்மனம் யார்க்கும் அன்பெனும்
  வாக்கும் முதன்மையை தாரும்
வீக்கம் எனில் உளவாக்கும் உறுதிகள் 
  கூர்கொண்டிலக்கினை ஆக்கும் 
தீக்கும் மிருள்தனை ஓட்டும்வகை துயர்
  போக்கும் மனம் கனிவாக்கும்
நாக்கும் சொல்தமிழ் ஏற்றம் பெற உழைத்
  தாற்றும் நிலை பெறவேண்டும்

kirikasan

unread,
26 Aug 2014, 23:48:02
to santhav...@googlegroups.com

                   சொர்க்கம் எங்கே?
 
பச்சைவிரித்த புல்மீதிருந்தேன் பனி
    கொட்டக் கொட்டக் குளிராக
பால்நிலவின் ஒளி வீசியது எழில் 
    சொட்டச் சொட்டச் சுகமாக
இச்சைகொண்டோர் வெள்ளை மேகம் நிலவினை 
     விட்டுத் துரத்திடக் காண
என்னே அழகவள் ஏய்த்துவிட்டாள்  நிலா   
     ஏக்கத்தில் மேகம்விட்டோட

அச்சமுடன் தனிநின்ற நிலவினை
   ஆகா எழிலென்றே  விண்மீன்
உச்ச மகிழ்வொடு கண்சிமிட்ட அந்த
   உல்லாசக் காட்சியைக் கண்டேன்
இச்சகம் மீதினில் மட்டுமேன் இன்னமும் 
   இத்தனை இன்னலும் துன்பம்
நச்சு நினைவுகள் தீமைகளோடிந்த
  நாளில் உலகென்னும் வண்ணம்

உள்ளம் நினைந்திட முன்னே ஒர்பேரொளி
  உச்சிவா னின்றென்னில் வீழ
ஒசையற்றே இருள் போலும் விண்ணாழத்தின் 
  உள்விழுந்தேன் கணம்போல
எள்ளி நகை கொள்ளல் போலும் சிரிப்பொன்று 
  எங்கோஅசரீரி ஆக
என்னே நினைந்தனை மானிடனே இவ்
  வர்த்தமற்ற வாழ்வேயென்றாய்

கொள்ளமுடியாத துன்பமென்றாய் இதோ
   கொள்ளினிமை யென்று சொல்ல
கொள்ளை அழகுடன் காண்பிர பஞ்சத்திற் 
   குள்ளே பறந்து விழுந்தேன்
தெள்ளெனக் காணும்நல் வண்ண கலவையின்  \
   திட்டெனும் மாயப் புகைசூழ்
திக்கறியாவோர் ஆழத்தினுள்ளே
   திணறிக் கணத்தில் விழுந்தேன்

பள்ளிச் சிறுவனும் பக்கத்துக் கோவிலில் 
  பார்த்த வாண வெடிக்காட்சி
பற்றியெரி அழல் பட்டு விரிப்பினில்
  பெற்ற அழகைகைக் கண் கொள்ள
புள்ளீயிட்ட துகளோடிப் பலமின்னும் 
  பிரபஞ்ச தூசினுள் மேனி
பட்டுமினுங்கிய போது அயல்பூத்த 
 பல்லரும் சூரியன்கண்டேன் 

உள்ளேகருங்குழி யொன்றிழுத்தல் போலும் 
  ஓர்கணம் என்னைமறந்தேன்
துள்ளி ஓசையிட தொம்மெனல்கீழ் விழுந் 
  துள்ள இடம்சொர்க்கம் கண்டேன்
வெள்ளை மணல் நல்ல வீசும் இளங்காற்று
   வீதியெங்கும் துய தோற்றம்
உள்ள வரை இங்கு வாழ்ந்துபார் உன்மனம்
  உண்மை அறியும் என்றேண்ணி

(வேறு)

எழுந்து நின்றேன் விழிகொண்டுகாண
  என்முன்னே சிறுகூட்டம்
அழுந்து மனதுடன் உணர்வுகளற்ற 
  அதிசய மனிதரைக் கண்டேன்
பழுத்த கனிகளும் பரவிய நெல்வயல் 
 பறவைகளின் சிறுகூட்டம்
முழுமை நிறைவுடன் பசுமையும் கொண்ட 
   முன்னேகாண் அரும்சொர்க்கம் 

இழந்த நிலையுடன் இருந்த முகமதை 
   எவரும்தவறா கொள்ள
விழைந்த செயலெது விளம்பீரென்றேன் 
   விரைந்து பதில்சொலக் கேட்டேன்
விழுந்தாய் பின்னே எழுந்தாய் நீயும்
   வீழ்ந்ததனாலே எழுந்தாய்
விழுந்து விடாமல்இருந்தால் நீயும் 
   விரும்பொ எழுவதும் உண்டோ

குழந்தையின் மனதாம் புரிவேனல்லேன் 
  புரிந்திடகூறும் என்றேன்
புரியாவண்ணம்  பேச்சுண்டாயின் 
   புரிபவர் புரிந்திடக்கூடும்
புரிந்திடல் இல்லா தில்லை யாயின் 
   புரிவதென் றொன் றிலையாகும்
இரவது ஒன்று இருந்தால் தானே 
   இர்வியின் உதயம் தோன்றும்

இரவென்றில்லை என்றால். பகலும் 
  இயற்கையும் இல்லாதொழியும்
பரவும் ஒளியில் பரவசம் தோன்றா
  பார்க்கும்விழிகள்கொள்ள
விரவிய பனியும்குளிரும் நெகிழும்
 வியன்தரு பூவின் மலர்வும்
சுரக்கும் தேனின் துளிவண்டாடும் 
  செயலும் குளிர் காற்றில்லை 

இரக்கும் ஆண்மை ஏவல்பெண்மை 
  இதனைக் காணும் இரவே
பரந்த தோளும் பகைமுன் வாளும் 
   பெரும் வீரம் பகல் கொள்ளும்
குரங்கின் தாவல் குறும்புமனமும் 
 கொண்டால் இன்பம்காணும்
அரவம் ஆடும் அழகை ரசிப்போம்
  ஆடும் மயிலும் வேண்டும்
 
 
துன்பமில்லா தின்பம் இல்லை 
   துயரில்லா மகிழ்வில்லை
இன்மை இன்றேல் இருத்தல் விளையா 
  எதிர்மை சக்திப் பிறப்பே
புன்மைவாழ்வில் பொலியின் நன்மை 
  பிறக்கும் வாழ்வின்சுவையும்
அன்பை வேண்டின் அகத்தில் வெறுப்பை 
   அறிதல்வேண்டும் என்றார்

இன்பமுண்டு துன்பமில்லை 
  எங்கள் உலகில் என்றும்
வன்மையில்லை வாழ்வின் நேர்மை 
 வகையில் குறைவேயில்லை
தன்மை உணர்வில்  தாழ்வே இல்லைத் 
 தீமைஇன்னல் அறியோம்
நன்மை ஒன்றே நாமறிவோ மதில்
 நாளும் நலிந்தே போனோம்

இன்பம் கொண்டோம் என்பார் இங்கே 
  இன்பம்மட்டும் உண்டாம்
துன்பம் அறியோம் அதனால் இன்பம் 
  தருமோர் மகிழ்வைதெரியோம்,
அன்பை மட்டும் கொண்டோம் அதனின் 
  ஆழம் எதென்றறியோம்
துன்பம் இருந்தால் தருவாய் மனிதா  
  துயரம் வேண்டும் என்றார்

சொல்லும்செயலில் உண்மை மட்டும்
  சொல்லிப் பேசக்கற்றோம்
வல்லா திக்கம் இல்லா  தொன்றாம் 
  வருந்தல் அதனால் அறியோம்
வன்மை மென்மை வலிமை மெதுமை 
  வந்திணை ந்தாலே இன்பம்
தன்மை அறிவாய் எதிர்வாம் முனைகள்
 தானொன்றாகும்  காந்தம்

ஆணும்பெண்ணும் இணைதல் இன்பம் 
  அறிவும் மூடத்தனமும்
கோணும் உடலும் குறையும் அழகும்
 கொள்வோர் மனதில் காதல்
காணும் பெரிதோர் திறமை மாற்றம் 
 கண்டால்தானே விளையும்
பேணும் வாழ்வில் பிறழ்வே இணையும்,
  பிரிவும் சேர்வும் வாழ்வாம்
 
*********************

kirikasan

unread,
27 Aug 2014, 00:27:30
to santhav...@googlegroups.com
அன்போடு பெரியவர்களுக்கு!

இசையின் நுட்பம் அறியேன் இருந்தாலும்  வீட்டில் பிள்ளைகளுக்காக வாங்கிய கீபோர்ட் கவனிப்பாரற்றுக் கிடக்கவே எ]டுத்து வாசித்துப்பர்த்தேன். இணையத்தின் பின்னணி இசையுடன் பாடும் குர்லுக்கான வரிகளை
கீபோட்டில் நோட்ஸ் உதவியைகொண்டும் youtube ந் உதவியுடனும் வாசித்தேன் எப்படி உள்ள்து சகிக்க முடிகிறதா]?




kirikasan

unread,
27 Aug 2014, 22:05:42
to santhav...@googlegroups.com
           பிரிவு நிலை வேண்டாம்

உறவுகள் இருந்திடில் பிரிவிருக்கும் இந்த உலகத்தின் நியதியடா-
ப்றவைகள் பறப்பது வியப்பில்லையே அது பருவத்தின் செயலுமடா
மறப்பது மனிதனின் இயல்பாகும் அதில மனங்கொள்ளக் குறைகளில்லை
இறப்பது அன்பென இருந்துவிடில் அதிலிருப்பது மகிழ்வில்லையே

சிறப்பது வருங்கால் தித்திக்கலாம் அதில் சிரித்திடு கவலையில்லை
பிறப்பது மனதுள் பெருமையெனில் அதில் பணிவெடு கனமுமில்லை
துறப்பது நற்குணம் உண்மை நிலை யெனில் துயரத்தின் தொடங்குநிலை
கறுப்பது உறவினில் கடுமைகொளின் அந்த காரணம் தெரிதல்முறை

உறுப்பது ஊனமென்றிருந்தாலும் அதில் உயிருண்டு பேதமில்லை
நறுக்கிய இறகுடன் நடனமிட மயில் நகைப்பதில் நீதியில்லை
திறப்பதும் உயிரின் வாசலினை அதன் திறவுகோல் அன்பு வலை
அறத்தொடு கொள்வதும் அழகுஎனில் அதில் அடுத்து தியாகநிலை

உறவுகள் தமைரை நீரின்நிலை கொளல் உயர் பெரு ஞானநிலை
குறைகளை நீக்கிடப் பேசும்நிலை அதில் குறுகிட ஏதுமில்லை
விறைத்திட சிலைமனம் வீண்கவலை அதில் விருப்புடன் திறகதவை
பிறப்பது புரிந்துணர்வான கலை அது வேறில்லை சொர்க்கம்நிலை
.................

kirikasan

unread,
28 Aug 2014, 11:23:15
to santhav...@googlegroups.com

காதலும் வீரமும்

காலையில் போருக்குச்சென்றவன் மாலைக்குள் வந்துவிடுவான் என எதிர்பார்க்கிறாள். தோற்றுவிடுவான் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் இரவாகி அடுத்த நாட்  காலை விடிந்தும் வாராதது கண்டு உயிர்துடிக்கிறாள்

 
மாலையும் இரவும் அதிகாலைப் போதும் 
.      --மதி மயங்கினாள்

மாலையி ருண்டென்ன மல்லிகை பூத்தென்ன
மங்கைமன மிசைபாடி யென்ன 
சோலை மலர்மணம் சேருந் தென்றல் வந்து
செல்லும்வழி உடல்நீவி யென்ன
மேலை வானச் செம்மை போயிருள மணி
மாடத்தகல் விளக்கேற்றி யென்ன
நாலைக் குணம்கொண்ட நங்கை விட்டுப் போரை
நாடிச்சென்ற மன்னன் காணவில்லை

மாலையிட்டே மணங் கொண்டவனோ தனின்
மார்பில் இடம் தந்தே கையினில்செங்
கோலைப் பிடித்தர சோச்சுபவ னெதிர்
கொண்ட பகைமுடித்துன் னிடத்தில்
நூலை இடைகொண்ட நேரிழையே இருள்
நீங்குமுன் கூடுவன் நேரிலென 
வேலைக் கை கொண்டுமே வீறெழச் சென்றுமேன்
வெற்றி முரசொலி கேட்கவில்லை

ஊரைப் பகைத்தென்ன உண்ண மறுத்தென்ன
ஓசையின்றி உள்ளம் கேவியென்ன
கூரைக்கொள் வாள்நிகர் கொண்ட விழிகளில்
கூடும் நீர் கன்னத்தில் சுட்டுமென்ன
போரை நிறுத்தடி போதுமென மங்கை 
பூவடி மீது கை பற்றியவன்
தேரை அடுத்தொரு தீரர் படையுடன்
தேடிச்சென்றவழி தேறவில்லை

வானம் சிவந்தென்ன வண்ணப்பூப் பூத்தென்ன
வட்டக்கோலம் வாசலிட்டுமென்ன
தேனம் மலர்கொண்டு  தென்றலில் ஆடியும்
தேவை கடந்தெழில் கொண்டுமென்ன
மோன நிலைதன்னில் மூடும் விழியின்றி 
முற்றும் துயில்விட்டு காத்துமென்ன
போன வழியின்னும் போரைமுடித்தபின் 
பூவை அணிந்தில்லம் சேரவில்லை

காலை விடிந்தென்ன காகம் கரைந்தென்ன
கங்கை போலும்விழி பொங்கியென்ன 
சேலை யணிமாது செவ்விதழ்கோணியே 
திஙகள் முகத்தொளி சோர்ந்துமென்ன
பாலை அருந்தவும் பக்கமாகக் கனி 
பார்த்திரவு வைத்துக் காத்துமென்ன
பாலைவனமெனும் பாஙகில் வெறிச்சோடிப்
பார்க்கும் வழி காய்ந்து காணுவதேன்

வீணை இருந்தென்ன  வித்தைகள் கற்றென்ன
வெள்ளிச் சலங்கைகள் பூட்டியென்ன
நாணமுடன் உடை பூண்டுமென்ன  அதில்
நர்த்தன மாடும் மெய் காத்துமென்ன
பாணம்,தொடுத்திடும் பைங்கிளி தூயநல் 
பாசமெழ மனம் காத்திருந்தும்
ஆணை யிடும் மன்னன் அந்தபுரத்திடை
ஆவலெழச் சேரக் காணவில்லை

ஓலை படித்திட உன்னத மாம்மொழி
யோங்கித் தமிழ் சொலும் காதலுடன்
சோலைக் கரும்பதன் சாறு பிழிந்ததில் 
சொட்டும் தேனை இட்டதாய் உவந்து
காலைக் கருக்கலில் சொந்தமென எழில்
காணும் மலர்கொண்டை சூடிநின்றும்
வாலைக் குமரியின் வாசமெழும் கூந்தல்
வந்து கலைத்திடக் காணவில்லை

********************** 

kirikasan

unread,
29 Aug 2014, 16:16:33
to santhav...@googlegroups.com
இந்த இழை இதோடு முடிவடைகிறது ...தொடராக இனி

இதழ் நெகிழும் மலர்வனம் இதில் எழுமோ கவிமணம் 
\
\என்னும் இழை திகழும்

yogiyaar

unread,
29 Aug 2014, 19:34:05
to santhavasantham
நல்ல கருத்துள்ள தத்துவப்பாடல். வாழ்க கிரிகாசன்.
 எங்கள் ஷண்முகக்கவசத்திற்கு தீபாவளி மலருக்காக
 ஒரு அழகிய முருகன் பாடல் 24 வரிக்குள் அனுப்புவீராக. பிரசுரிக்கப்படும்,
2)-
 அதுபோல் நம்ம சிவா, சுகந்தி வெங்கடேஷ், பசுபதி, அநந்த், இலந்தை முதலியாரும் இன்னும் ஒரு வாரத்தில் கருத்துள்ள பாடல் உடனே அனுப்புக. இது ஆசிரியர் (கவசம்) வேண்டுகோள் இன்று.( சிறப்பான (on any topic)  மிகப்புதிய-பாடல் ஆக இருத்தல் வேண்டும்.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக