வெள்ளி முளைத்ததடி வானில் - வரும்
வீசும் குளிரெடுத்த தென்றல்
உள்ளங் குலைக்குதடிதோழி - மனம்
ஊஞ்சல் என அலைவதோடி
எள்ளை நிகர்த்த சிறு அன்பும் - அவர்
எண்ணம் எடுத்த துண்டோ தோழி
மின்னல் அடித்த மழை முகிலும் - விட்டு
மேகம் வெளித்தென்ன போடி
அன்றோர் முழுநிலவின் ஊடே - ஒரு
ஆலமரத்தின் கிளைமேலே
கன்னம் உரசும் இரு குருவி - தனும்’
காதல் இசைபடித்த வேளை
பொன்னே உனைவிடுத்துப் போகேன் - இது
பொய்மைப் பிதற்றல் அல்ல உண்மை
நின்னைப் பிரியினுயிர் மாயும் - என
நெஞ்சம் பொய்யுரைத்துப் போனார்
கண்ணில் கண்கள்தனும் கலந்தே - இவள்
காணும் எழில் உலகின் விந்தை
பெண்மை விழிகள் கொண்டஅச்சம் - அது
பேசும் இளங் கவிதை முற்றம்
மண்ணின் மனித குலத்தூடே - இவள்
மங்கை திருமகளின் தங்கை
எண்ணம் கலந்து விட்டேனென்றான் - இன்று
என்னைப்புறம் விடுத்து நின்றான்
புன்னை மரநிழலும் வேகும் - அந்தப்
பேடைக் குயிலினிசை நோகும்
தென்னைக் கிளியிரண்டு பேசும் - எனை
திங்கள் தனை நிகர்த்தள் என்றும்
தன்னந்தனி உலவும் தென்றல் - அதன்
தங்கை எனமுறையும் கூறும்
சொன்னோர் விதம் அழகு தானோ - எந்தன்
சொந்தம் ஏகாந்த மாமோ
வெண்ணை வடித்த சிலை நானோ - அது
வெம்மை தனில் உருகும் மன்றோ
தன்னைப் பழிப்பர் செயல் கண்டும் - புவி
தாங்கிக் கிடத்தலென, நானும்
மன்னிக்கத் தோன்றுதடி தோழி - இதை
மானம் சிறுத்த மன்னன் காதில்
திண்ணமுரைத்து விடுதோழி - உடல்
தீயில் கருக முதல் தோழி!
எள்ளி நகைப்பர் தெரு வெங்கும் -ஊர்
இறைந்து கிடக்குதடி தோழி
கள்ள நகையும் இதழ் கொண்டே - எனை
காணின் புறமுரைக்கும் கூட்டம்
அள்ளி அனல் தெறிக்கும் கண்கள் - அந்த
அன்னை வழங்கவில்லைத் தோழி
உள்ளம் குமுற விழிமூடி - நான்
ஓசைகெட அழுவதோடி
*****************
15 Sept 2013, 10:59:46
to santhav...@googlegroups.com, kirikasan
இப்படி ஒரு படம் தந்து `கனி உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது~ என்பது போல் ஒருதலைப்பு கண்டேன் ஓர் இணையத்தலத்தில் பிரந்தகவிதை
கனிகல் உண்போம்
மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் நற் கனிமீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடும்
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே
தீங்கனிகள் தின்றிடத் தித்திப்போங்கும்
தினமுண்ண உடல்கொண்ட தீரம் சிறக்கும்
மாங்கனியோ முக்கனியில் முதலென்றாகும்
மாசுவையில் மேன்மையுற மகிழ்வைத் தாரும்
ஆங்கிவைகள் இனித்திருக்க இன்னாகொள்ளும்
அறிவிலதென் றொருசெயலைச் செய்யலாமோ
தீங்குகளும் எமைச்சேரும் தின்னத் தசைகள்
தீமை எழும் தெரிந்தும்பின் உண்ணலாமோ
வேல்கொண்ட முருகனோ நாவற்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட அவ்வைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை எனவேண்டத் தமையன் கொண்டான்
காலமது மாறியதாம் உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்!
************
கனிகல் உண்போம்
மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் நற் கனிமீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடும்
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே
தீங்கனிகள் தின்றிடத் தித்திப்போங்கும்
தினமுண்ண உடல்கொண்ட தீரம் சிறக்கும்
மாங்கனியோ முக்கனியில் முதலென்றாகும்
மாசுவையில் மேன்மையுற மகிழ்வைத் தாரும்
ஆங்கிவைகள் இனித்திருக்க இன்னாகொள்ளும்
அறிவிலதென் றொருசெயலைச் செய்யலாமோ
தீங்குகளும் எமைச்சேரும் தின்னத் தசைகள்
தீமை எழும் தெரிந்தும்பின் உண்ணலாமோ
வேல்கொண்ட முருகனோ நாவற்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட அவ்வைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை எனவேண்டத் தமையன் கொண்டான்
காலமது மாறியதாம் உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்!
************
15 Sept 2013, 11:22:58
to santhav...@googlegroups.com, kirikasan
இன்னல் முடிவதெப்போ?
நீரோடிப் பூத்த விழி நெஞ்சோடு கொண்டதுயர்
நீங்காது இருப்பதென்ன நித்தியமாமோ
ஊரோடி நிலம் பெயர்ந்து உறவோடு வாழ்பவரை
உலகோடி வென்றநிலை உண்மைகள் யாதோ
பாரோடி வானில் வரும் பட்டெரியும் தீயின்மழை
போடும்குறி வீழஉயிர் துடிதுடித்தாலும்
சேர்ந்தோடும் உலகமன்று சென்றோடி உதவியதால்
சிரசோடு கொய்ததிலும் பங்குண்டுதானே
பேரோடு பிறந்தகுலம் பெருமானம் கொண்டஇனம்
போராடிச் சாயவென விதிகொள்ள லாமோ
யாரோடு பழிசுமந்தோம் யார்வாழ்விற் குடிகெடுத்தோம்
ஊரோடு தீயைவைத்தும் எரித்ததும் ஏனோ?
தேரோடும் வீதியெங்கும் தமிழோடிக் கலந்தநிலை
தடைபோட்டும் ஒதுக்கிவைத்துத் தலைகொள்ளலாமோ
நேரோடி வளர்ந்ததெல்லாம் நிழலோடி மறைத்துவிட
நெஞ்சோடிப் பரந்தஇருள் வெளுப்பதுமென்றோ
மார்போடும் மடிமீதும் மலர்போலும் மழலைகளில்
மணியோசை நாதமெனக் குரல்சொலும்தமிழைச்
சீரோடும் ஒளிசிறந்த செழிப்போடும் வாழ்வமைந்த
செல்வவள நாடுதனைக் கொண்டிருந்தோரை
கூரோடும் வாளெடுத்து கொடுகோர ஈனச்செயல்
கொண்டுயிரும் மண்பறித்த கொடுமையைக்கேட்க
நீர் கங்கைகொண்டவனே நெய்கூந்தல் மாதவளின்
நேர்பங்கன் எம்நிலைத்தை நீவகுக்காயோ
ஆறோடு சேர்ந்த அலை அடித்தோடி யலைந்துகெடும்
ஆனலும் எங்கள்துயர் அந்தங் கொள்ளாதோ
பேறோடும் பெருமைகளும் பெற்றவராய் நாமிருந்தும்
பின்னிருந்து விதிமுடிக்கும் விளைவுகளேனோ
வீறோடு வீரமெனும் வெற்றிதனும் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமுமெழுந்து வீழ்த்திடலாமோ
ஏறோடி உயரஎழு இருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்களிக்காதோ
15 Sept 2013, 12:03:07
to santhav...@googlegroups.com, kirikasan
மன்னிக்கவும் திருத்தம்
நீரோடிப் பூத்த விழி நெஞ்சோடு கொண்டதுயர்
நீங்காது காண்பதென்ன நித்தியமாமோ
ஊரோடி நிலம் பெயர்ந்தும் உறவோடு வாழ்பவரை
ஊரோடி நிலம் பெயர்ந்தும் உறவோடு வாழ்பவரை
உலகோடி வென்றநிலை உண்மைகள் யாதோ
பாரோடி வானில் வரும் பட்டெரியும் தீயின்மழை
போடும்குறி வீழஉயிர் துடிதுடித்தாலும்
சேர்ந்தோடும் உலகின்விதி சென்றோடி உதவியதால்
சிரசோடு கொய்ததிலும் சேர்ந்தவராமோ
சிரசோடு கொய்ததிலும் சேர்ந்தவராமோ
19 Sept 2013, 09:47:18
to santhav...@googlegroups.com, kirikasan
கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் என்னும் கீதத்தைகொண்ட
ஒரு தாய்மொழி தமிழ்கல்வி நிலையத்தினரின் விழாவுக்கு
கண்ணிரண்டு காட்சிதனைக் காணக்கொண்டும்
கலையுடனே கல்விதனைக் கற்கும்பேறில்
எண்ணிரண்டு விழிமேலாய் அறியாமைக்குள்
இருள்போக்கிப் பொருள்காண எடுத்தோர்களே
கண்ணிரண்டு நல்லொளியில் காட்சிகண்டும்
கருவிழியும் இமைமூடக் கறுப்பே தோன்றும்
மண்ணிலொளி வேண்டுமெனில் மங்காதென்றோர்
மதிகாணும் சுடரோங்கும் விடியல் வேண்டும்
எண்ணிரண்டு அடியெடுத்து முன்னேவைப்பீர்
ஏடெழுதும் கையாலே எம்மை நாசம்
பண்ணுபவர் கொட்டத்தை அடக்கும்வண்ணம்
பாரினிலே இன்தமிழைப் பரவல் வேண்டும்
தண்ணிலவின் ஒளிபாயத் தாயின்தேசம்
தன்னிலொரு செங்கீத மொலிக்க வேண்டும்
விண்ணிலுறை சக்திதனை வேண்டியின்று
விடிவுக்காய் கண்ணயரா உழைக்கவேண்டும்
பொன்மணிக ளெம்நாட்டிற் பொலிதல்வேண்டும்
பொல்லாதோர் விதிமாற்றிப் புதிதா யாளும்
நன்மதியும் நீளோங்க நாடும் வேண்டும்
நாற்திசையும் எல்லைகளைக் காத்தல் வேண்டும்
பன்மொழிக ளூடுதமிழ் பெருக்க வேண்டும்
பாரில் தலை சிறந்ததாய்ப் பண்பும் வேண்டும்
மன்னனென எம்தமிழர் கையில் செங்கோல்
மறமெடுத்து வழிநடத்தும் மாண்பும்வேண்டும்
அன்னைமடி மீதுதலை வைத்தேகாணும்
அன்புதனும் வேண்டும்நல் லமுதம் உண்டே
பொன்னிலவும் ஒடிவரப் போர்க்கும் மேகம்
புன்சிரிப்பி னோடுகண் டுறங்கல்வேண்டும்
நின் மனதில் அச்சம்விட் டுயரும் எண்ணம்
நேர்மையுடன் தமிழ்காக்கும் நினைவுஞ்சேர
சின்னவனே சிந்தையிலே ஒன்றாய்க் கூடி
சிறப்போடு செயலாற்றும் செழுமை வேண்டும்
************
ஒரு தாய்மொழி தமிழ்கல்வி நிலையத்தினரின் விழாவுக்கு
கண்ணிரண்டு காட்சிதனைக் காணக்கொண்டும்
கலையுடனே கல்விதனைக் கற்கும்பேறில்
எண்ணிரண்டு விழிமேலாய் அறியாமைக்குள்
இருள்போக்கிப் பொருள்காண எடுத்தோர்களே
கண்ணிரண்டு நல்லொளியில் காட்சிகண்டும்
கருவிழியும் இமைமூடக் கறுப்பே தோன்றும்
மண்ணிலொளி வேண்டுமெனில் மங்காதென்றோர்
மதிகாணும் சுடரோங்கும் விடியல் வேண்டும்
எண்ணிரண்டு அடியெடுத்து முன்னேவைப்பீர்
ஏடெழுதும் கையாலே எம்மை நாசம்
பண்ணுபவர் கொட்டத்தை அடக்கும்வண்ணம்
பாரினிலே இன்தமிழைப் பரவல் வேண்டும்
தண்ணிலவின் ஒளிபாயத் தாயின்தேசம்
தன்னிலொரு செங்கீத மொலிக்க வேண்டும்
விண்ணிலுறை சக்திதனை வேண்டியின்று
விடிவுக்காய் கண்ணயரா உழைக்கவேண்டும்
பொன்மணிக ளெம்நாட்டிற் பொலிதல்வேண்டும்
பொல்லாதோர் விதிமாற்றிப் புதிதா யாளும்
நன்மதியும் நீளோங்க நாடும் வேண்டும்
நாற்திசையும் எல்லைகளைக் காத்தல் வேண்டும்
பன்மொழிக ளூடுதமிழ் பெருக்க வேண்டும்
பாரில் தலை சிறந்ததாய்ப் பண்பும் வேண்டும்
மன்னனென எம்தமிழர் கையில் செங்கோல்
மறமெடுத்து வழிநடத்தும் மாண்பும்வேண்டும்
அன்னைமடி மீதுதலை வைத்தேகாணும்
அன்புதனும் வேண்டும்நல் லமுதம் உண்டே
பொன்னிலவும் ஒடிவரப் போர்க்கும் மேகம்
புன்சிரிப்பி னோடுகண் டுறங்கல்வேண்டும்
நின் மனதில் அச்சம்விட் டுயரும் எண்ணம்
நேர்மையுடன் தமிழ்காக்கும் நினைவுஞ்சேர
சின்னவனே சிந்தையிலே ஒன்றாய்க் கூடி
சிறப்போடு செயலாற்றும் செழுமை வேண்டும்
************
20 Sept 2013, 11:20:01
to santhav...@googlegroups.com, kirikasan
தங்கையின் கோபம்
சுடரெனும் இருவிழி சுடுவதில் பெறுவது
சுகமெனும் மன உணர்வோ
படமனம் உயிர்தனும் துடிஎனத் துவள்வது
பனிமலர் படவெயிலோ
மடமனம் எனதுள்ளம் மதியினை மறந்திட
மகிழ்வல்லத் துயர்தருமோ
திடமுற நினதுரை தெளிவுறச்செயச் செயல்
திசைமறு வழி கொளுதோ
கடபெருந் துயரல்லக் கருவிழி சிறுமழை
கருதிடும் தருணமிதோ
சடசட என உயிர் செயலதில் மறுகிடச்
சரிமனம் அருள்பெறுமோ
சுடரெனும் அறிமதி சிலவரு மிரவுகள்
சிறிதெனும் பிறை கொள்ளுமோ
இடரினைக் களைவதும் இளமனதிடயுள
இறையவள் சக்தியன்றோ
குடமுள்ளே ஒளிபெற அகல்விளக் கிடுவது
குறுகிய அறிவல்லவோ
கிட இதுதவறென எதுவித மறிவனோ
கிளி பலனுரை கொள்ளவோ
அட மதுரமு மெனஇனிசுவை உளதெனில்
அதுவுமுன் மனதல்லவோ
இடமன திடையுரம் வலியுடன் உறுதியும்
எழுவது பிறகல்லவோ
புடமிடும்பொருள் பொன்னும் பொலிந்திடு மெழிலெனில்
புரிவது முறையல்லவோ
விட அதில் பெருமதி வருவது நிதியெனில்
விலைமிக அதிகமல்லோ
கடமன மிடர்தனுங் கனிவொடு தொடர் நினை
கடவுளின் தரவல்லவோ
அடஇவன் பலசொல்லும் பொழுதினில் உளதெது
அகமதில் மகிழ்வல்லவோ
***************
சுடரெனும் இருவிழி சுடுவதில் பெறுவது
சுகமெனும் மன உணர்வோ
படமனம் உயிர்தனும் துடிஎனத் துவள்வது
பனிமலர் படவெயிலோ
மடமனம் எனதுள்ளம் மதியினை மறந்திட
மகிழ்வல்லத் துயர்தருமோ
திடமுற நினதுரை தெளிவுறச்செயச் செயல்
திசைமறு வழி கொளுதோ
கடபெருந் துயரல்லக் கருவிழி சிறுமழை
கருதிடும் தருணமிதோ
சடசட என உயிர் செயலதில் மறுகிடச்
சரிமனம் அருள்பெறுமோ
சுடரெனும் அறிமதி சிலவரு மிரவுகள்
சிறிதெனும் பிறை கொள்ளுமோ
இடரினைக் களைவதும் இளமனதிடயுள
இறையவள் சக்தியன்றோ
குடமுள்ளே ஒளிபெற அகல்விளக் கிடுவது
குறுகிய அறிவல்லவோ
கிட இதுதவறென எதுவித மறிவனோ
கிளி பலனுரை கொள்ளவோ
அட மதுரமு மெனஇனிசுவை உளதெனில்
அதுவுமுன் மனதல்லவோ
இடமன திடையுரம் வலியுடன் உறுதியும்
எழுவது பிறகல்லவோ
புடமிடும்பொருள் பொன்னும் பொலிந்திடு மெழிலெனில்
புரிவது முறையல்லவோ
விட அதில் பெருமதி வருவது நிதியெனில்
விலைமிக அதிகமல்லோ
கடமன மிடர்தனுங் கனிவொடு தொடர் நினை
கடவுளின் தரவல்லவோ
அடஇவன் பலசொல்லும் பொழுதினில் உளதெது
அகமதில் மகிழ்வல்லவோ
***************
20 Sept 2013, 12:38:16
to santhav...@googlegroups.com, kirikasan
எழுதித் தொலைத்த கவிகள் (கணனி பழைய சேமிப்புக்குள் தற்செயலாகக் தட்டுப்பட்டது
2010ல் எழுதியது
பாராட்டுக்கள் இன்பம் தரும்
மகிழ்வான இதயங்கள் கண்டு - என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மைபோலும் - என்
முகம்மீது புன்னகை இழைந்தோடச்செய்யும்
குழைவான கனிவான எண்ணம் - அதைக்
கொள்வதே பலகோடி வரமான தொன்று
மழையோடி மணல்மீது சென்று - அது
மறைந்தோடி இருந்தாலும் மண் ஈரமன்றோ
குழல் ஊத விரல் மூடல் வேண்டும் - அக்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு - என்றும்
அதனாலே புடம்போடபொன்னென்ப தாகும்
விழிகூறும் கதை நூறு பொங்கி - அதில்
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி -இன்று
அதைமீறி எழுகின்ற தீயாகி நில்லு
தொலையாது நிலவான தெங்கும் . - அது
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும் -இக்
கலையான நிதம்வந்து கற்பனைகூட்டும்
மலரான தெழில்மாலை பூக்கும் -இதில்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும் - வரும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்
பெருவானில் குயிலோசை கேட்கும் - அது
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும் - நிலா
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்
2010ல் எழுதியது
பாராட்டுக்கள் இன்பம் தரும்
மகிழ்வான இதயங்கள் கண்டு - என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மைபோலும் - என்
முகம்மீது புன்னகை இழைந்தோடச்செய்யும்
குழைவான கனிவான எண்ணம் - அதைக்
கொள்வதே பலகோடி வரமான தொன்று
மழையோடி மணல்மீது சென்று - அது
மறைந்தோடி இருந்தாலும் மண் ஈரமன்றோ
குழல் ஊத விரல் மூடல் வேண்டும் - அக்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு - என்றும்
அதனாலே புடம்போடபொன்னென்ப தாகும்
விழிகூறும் கதை நூறு பொங்கி - அதில்
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி -இன்று
அதைமீறி எழுகின்ற தீயாகி நில்லு
தொலையாது நிலவான தெங்கும் . - அது
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும் -இக்
கலையான நிதம்வந்து கற்பனைகூட்டும்
மலரான தெழில்மாலை பூக்கும் -இதில்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும் - வரும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்
பெருவானில் குயிலோசை கேட்கும் - அது
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும் - நிலா
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்
23 Sept 2013, 07:57:06
to santhav...@googlegroups.com, kirikasan
கற்பனை என்னும் மாயை
கற்பனை என்றொருகோட்டை - அங்கு
கால காலமாக வேட்டை
கொற்றவனாய் தினம் கூடும் - அந்தக்
கோல அரண்மனை மாடம்
பற்றுடனே பணியாற்றும் - பல
பாவைகளின் எண்ணக் கோலம்
வற்றும் நிலை யற்ற பொய்கை அது
வந்து சுற்றிக்காணும் வண்ணம்,
பொற்சுடர் மின்னி விளங்கும் - அதில்
பொய்களின் இராச்சியம் ஓங்கும்
விற்பனை மொத்த அறிவாம் - அங்கு
வீரிட்டழும் உண்மை தானும்
கற்குகை யாகினும் வாழும் - உள்ளம்
காணும் அரண்மனை வாசம்
புற்தரையிற் பனி மேவும் - அங்கு
போதையின் நித்திரை காணும்
கண்கள் கூசும் ஒளிவெள்ளம் - அங்கு
காற்றில் மிதக்கும் நல்வாசம்
கொண்டவர் மேனி சிலிர்க்கும் - மனம்
கொஞ்சிக் களித்திடு மின்பம்
வெண்ணிறப் பூக்கள் மலரும் - வந்து
வீழ்ந்தநட் சத்திரம் மின்னும்
எண்ணம் கிறங்கித் தவிக்கும் - அது
எங்கெல் லாமோ சென்று மீளும்
செண்டில் மலர் வண்டு ஆடும் - பக்கம்
சித்திரங்கள் நின்று பேசும்
தண்டினில் ஆடுந்தா மரை - மன
தாகமெழுங் கதிர்க் கண்கள்
மண்டல மெங்கணும் யாவும் - உன்
மாண்பு தனைப்பேசிப் போற்றும்
கண்டதெல்லாம் கையிற் கொள்ளும் - அந்தக்
கற்பனை சாத்தியமாகும்
தூவும் அடைமழை கூடும் - அது
சொட்டும் நீரையல்லப் பூவும்
தாவும் மரம் தொங்கியோடும் - அது
தானு மெந்தன் மனமாகும்
நீவி அலைத் தென்றல் சுட்டும் சில
நீல மலர்கெட்டு வீழும்
நாவிலிசை உயிர் கொள்ளும் அதில்
நர்த்தன மாடிடும் உள்ளம்
பேயின் கூச்ச லிடும் சத்தம் - அது
பிய்த்து வீசும் மன அச்சம்
நாயின்ஓ வென் றொரு ஓலம் - அந்த
நாழி கத்தும் இருட்கோட்டான்
தேயும் நிலவுடை தோற்றம் - கணம்
தேகம் உறைகின்ற கூச்சல்
மாயும் எண்ணங்களில் மாற்றம் - உடன்
மானிட வாழ்வின் மரணம்
தேவைகளின் வெறும் சூன்யம் - இனி
தேனில்லை வாடும்மென் பூக்கள்
சாவை அணைத்திடும் கண்ணில் - அது
சஞ்சல மற்றதோர் தூக்கம்
தேவியின் கூடும் தீவாசம் - மனம்
தீங்கில்லா என்றிடக் காணும்
ஓ,விளை யாட்டிவை யாவும் என்
உள்ளத்தின் கற்பனையாகும்.
Message has been deleted
24 Sept 2013, 01:54:27
to santhav...@googlegroups.com, kirikasan
முதலில் இந்த வீடியோ பார்வைக்கு
http://youtu.be/uVoIaeJwEas
வெற்றியா தோல்வியா
தென்றலும் தோள்தொட்டுச் சொன்னது சேதியை
தீந்தமிழ் வென்றதென்று - இனி
என்றெம துன்பமும் தீருமோ சொல்லடி
எம்பகை போனதென்று
வன்மையும் தீதெழ வாசலில் நின்றது
வக்கிரம் கோரம்கொண்டு - இனி
நன்மையும் வந்திட நல்லவர் கையினில்
நாடு கிடைப்பதென்று
சந்தணம் மென்மனம் கொண்டவரும் இனிச்
சென்ற தம் பாதைநின்று - அந்தச்
சுந்தரனின் மகாசிந்தனை யோடிவர்
சம்மத மென்று கண்டு
பந்தமுடன் கொடிபற்றுவரோ இல்லை
பற்றினை ஈழம்கொண்டு - உயிர்
சந்தியில் ஊஞ்சலுமாடிடும் எம்தமிழ்
சொந்தங்கள் காப்பதுண்டோ ?
வெந்தன மேனிகள் வீடுகள் தீயென
வைத்தவர் வாழக்கண்டும் - அவர்
சிந்தனை மேவிய செய்கையுண்டோ சுக
ராஜ விருந்தை உண்டு
பந்தியிருந்தவர் செய்கையில் வந்துமே
பற்றுமோ தீயெழுந்து - இனி
எந்தமுறை கொண்டும் எண்ணுவதோ இவர்
இத்தனை நாளும்கண்டு
தந்திரம் செய்கிறோம் மந்திரமாம் ராஜ
மார்க்க மிதுவுமென்று - ஒரு
வெந்த புண்ணில் வேலைவீசி நிற்றலின்றி
வேதனை செய்தவரை
பந்த பாசமுடன் பாரினில் நீதியைச்
பார்க்க உலகைக் கண்டு -மிச்சும்
சந்ததியும் தப்பி மண்ணில் உயிர்வாழ
சாத்தியம் ஆக்கலென்று?
24 Sept 2013, 13:02:21
to santhav...@googlegroups.com, kirikasan
சிதம்பர சக்கரம்
சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன
சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ
பக்தி கொள்ளும் கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்து விட்டதன்பாடோ
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிநான்கும் சுற்றிவந்தும்
வேண்டுமெங்கள் வாழ்வுகாணும் வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் போற்றிவாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ
உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா அன்னை தம்பி தங்கை ஆசையோடு கூடியாடி
ஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்
அக்கா அன்னை தம்பி தங்கை ஆசையோடு கூடியாடி
ஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ
எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிரமா தித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ
அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கலுக்கு நீர்குடிக்க வேண்டியவர்க் கீதலன்றி
விட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்திடல் ஏனோ
அக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை
அத்துமீறீ வந்திடுமென் றானது கனவே
சுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ
எத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து
என்னசுகம் கெட்டவர்க்கு சுற்றிடுமுலகே
அத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா
ஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ
விட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்திடல் ஏனோ
அக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை
அத்துமீறீ வந்திடுமென் றானது கனவே
சுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ
எத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து
என்னசுகம் கெட்டவர்க்கு சுற்றிடுமுலகே
அத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா
ஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ
---------------------
---------------------
26 Sept 2013, 22:06:40
to santhav...@googlegroups.com, kirikasan
என்ன சொல்லுது
சிட்டுகுருவியும் குக்கிருக் கூவென
என்ன சொல்லுது - அது
ஒட்டி உறவுடன் உண்மைவழி கண்டு
உயரச் சொல்லுது
எட்டப் பறந்திடும் பருந்து வானில்
என்ன சொல்லுது - அது
ஒட்டப் பகை தொலைத் துன்னத வீரம்
உள்ளெடு என்குது
பட்ட மரத்தினில் வெட்டுக் கிளியிருந்
தென்ன சொல்லுது - அது
பட்ட துயர்தனை விட்டு விடுதலை
பெற்றிடச் சொல்லுது
முட்டி நிலவினைத் தொட்டுமறை முகில்
என்ன சொல்லுது - அது
வட்டக் குறைநிலா வளரும் தேயும்
வாழ்க்கை என்குது
நட்டநடு வெளி யோடும் நதியலை
நர்த்தன மாடுது - அது
எட்டிப் பாறைதனை விட்டுக் குதித்தென்ன
சேதி சொல்லுது
சொட்டிக் கண்ணீர் விட்ட சோகம் தவிர்த்திட
சொல்லி நீதியின் - பெரும்
சட்டக் கதவினைத் தட்டித் திறந்துகேள்
நீதி என்றது
சுட்டவெயில் உயர் வானத்திடை வந்து
என்ன சொல்லுது - அது
பட்டப் பகல்மதி கெட்ட நிலைவிட்டுப்
புத்திகொள் என்குது
துட்டரின் பொய்யினை நம்பியவர் உள்ளே
தோன்றிடும் மாயையை - விட்டு
ஒட்டவிழித்தெழு என்றொரு தென்னை
உயர்ந்து நிற்குது
பட்டுவண்ணப் பூச்சி என்னசொல்லிச் சுற்றிப்
பறந்து செல்லுது - அது
விட்ட வாழ்வின் நிறம் வேண்டுமெனச் சொல்லி
விரைந்து போகுது
இட்டுக் குயில் விட்ட முட்டை பொரித்திட
காகம்கண்டது - அது
குட்டிக் கலைத்த தன் கொள்கை எடுவெனக்
கூறிக் கத்துது
பட்டை கிழித்து வெஞ் சூரியன் பட்டுமே
பார்த்த சந்தணம் -அது
தொட்டவர்கை மணம் பெற்றதுபோற் புகழ்
தேடச் சொல்லுது
மட்டுமுன தெழில் மாபெரும் தேசத்தில்
மலரும் விடுதலை - அதைக்
கட்டியமை இன்பம் கொத்தெனப் பூத்திடும்
காணச் சொல்லுது
27 Sept 2013, 23:55:48
to santhav...@googlegroups.com, kirikasan
நடு ஆற்றில் கைவிடுவோமா?
கலையோடு அமுத தமிழ் கற்குமிளஞ் சிறுவர்காள்
கதையொன்று சொல்வேனாம் கேளீர்
அலைந்தோடி வாழ்கிறோம்ஆழிதிரை போலிங்கு
அமைதிக்கு ஏன் வாழ்வில் பஞ்சம்
தலைபோகும் நிலையாகத் தீதெமைக் கொள்ளவே
தாங்கா நிலம் விட்டலைந்தோம்
மலைபோலத் துன்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம்
மலைத்துமே மலைபோலும் நின்றோம்
அழகுசெந் தாமரைகள் ஆடிடும் குளநீரில்
ஆதவன் மின்னிடும் வண்ணம்
பழகுசெந் தமிழ்கொண்ட பைந்தமிழ்ப் பாவொன்றைப்
பாடுங் குரல், இளங்குயிலின் கீதம்
உழவு செய் துண்டவனோ உல்லாசங் கொண்டயலில்;
ஊய்..ஊய் என்றோட்டி உழுமழகு ம்
குழவியதன் கூட்டிலே தேன்சொரிந்து கீழுற்ற
குடித்துமே கூத்தாடும் மந்தி
எழம் அழகு ஈழத்தி லிருந்ததா மெம்வாழ்வும்
இனித்திட இனித்திடப் பாகாம்!
வளவுவயல் தோட்டமுன் வாய்க்கால் வரம்புடன்
வற்றிய குளத்திலோர் தவளை
முழமெழுந்து பாய்கின்ற முயலோட பாட்டாக
முன்வீட்டில் குழந்தையழும் சத்தம்
முழவொலிக்க வீதிவரும்குமரன்திருக் கைவேலும்
முந்நான்கு கண்பார்த்தே அருளும்
நிலவினொளி வீழ்முற்றம் நிர்மலத்து வானங்கீழ்
நீட்டியகை சோற்றுருண்டைஅம்மா
கலகலத்துப் பேசுமொலி கனிவான உள்ளமதில்
கனவெழுந்த தூக்கமும் கண்டோம்
மலமலென விடிபொழுதும் மலர்களதன் வாசமெழ
மனம்பூத்த நடை, பள்ளிசெல்லும்
பலசிறுவ ரென்றுசிறு பயமற்ற சீர்வாழ்வும்
பளிங்கென்ற நீரோடைகாணும்
இருந்தநிலை ஒன்றுண்டு இன்பமுடன் வாழ்ந்தின்று
எழுந்தபகை அழிந்த நிலம் என்று
உருவழிய உறவோட ஊர்கலைந்து வந்தோமெம்
இனியவர்கள் உங்களையும் என்று
கரும்பின்சுவை வாழ்வதனிற் கலந்துவிட வைப்போம் நாம்
கைதவறி நதிவீழ்ந்த மலராய்
வருமொளியை எதிர்பார்த்து அலைசுழலில் புரளும்விதி
விடியலினைக் காணும்நாள் என்று??
************
29 Sept 2013, 17:07:51
to santhav...@googlegroups.com, kirikasan
என் மனமே என் எதிரி
வண்ணத் தமிழ்கொண்டு வாய்மொழிகள் சொல்லி
வந்தபயன் என்னடி சொல்கிளியே
கண்மணி நீயன்றோ காதலில் பொன்வண்டோ
காணுவரென் றோதியதும் பொய்யோ
எண்ணங்களின் மாயம் இருட்டறையிற் கூடல்
இட்டபகை எதிரியென்று பேச்சும்
உண்டுதின்று மேனி ஊத்தைகளின் நாற்றம்
ஊற்றுமிடம் ஆக்கியதுமேனோ
கண்டு பீதி கொள்ளும் காட்டின் மாக்களுக்கு
காதலுற்ற மேனி உறவாமோ
எண்ணுதற்கு தீதாய் இட்டதுமேன் சொல்லாய்
எழுதிவைத்த இறைகணக்கும் ஈதோ
தன்பலம் தளர்ந்து தரையிறங்கும் மின்னல்`.;,
தானிவளோ துள்ளிடும் பெண்மானோ
விண்ணுயர்ந்த சொர்க்கம் விரிந்ததென்றே எண்ணி
வீண் உழன்று மாளும் வகை நாமோ
மெல்லிடையும் ஆட மேனிசுழல் கொள்ள
மெச்சியதும் மெல்ல நகைப்பாமோ
கொல்லும் வெறிபோன்றே கொண்டசைந்துகூடி
குற்றமெனும் உள்ளுணர்வு கொண்டே
அள்ளவென்று வண்ணம் அவன்படைத்ததென்றே
அல்லல்தனை கொள்பசிக்குத் தீனாய்
தொல்லையினை வாங்கி சுகமிருக்குதென்றால்
தோன்றுவது பொய்த்த வெறும்வாழ்வோ
ஆடுமுடல் அரவம் அலையும்மனம் நஞ்சு
ஆகப் பொங்கி வளருடலம் புற்றோ
தேடும் மலர் அரளி தொட்டபின்பு கருகி
திளைப்பதென்ன தீயணைத்து மேனி
பாடும்குரல் மாயம் பருவமென்ப மரணப்
பாதையிலே கால்கள் வைக்கத் தூண்ட
ஆடும்வரை ஆடி ஆறடிக்குள் போகும்
ஆசைகொள் மனம் பகைத்த தொன்றோ
----------------************************
வண்ணத் தமிழ்கொண்டு வாய்மொழிகள் சொல்லி
வந்தபயன் என்னடி சொல்கிளியே
கண்மணி நீயன்றோ காதலில் பொன்வண்டோ
காணுவரென் றோதியதும் பொய்யோ
எண்ணங்களின் மாயம் இருட்டறையிற் கூடல்
இட்டபகை எதிரியென்று பேச்சும்
உண்டுதின்று மேனி ஊத்தைகளின் நாற்றம்
ஊற்றுமிடம் ஆக்கியதுமேனோ
கண்டு பீதி கொள்ளும் காட்டின் மாக்களுக்கு
காதலுற்ற மேனி உறவாமோ
எண்ணுதற்கு தீதாய் இட்டதுமேன் சொல்லாய்
எழுதிவைத்த இறைகணக்கும் ஈதோ
தன்பலம் தளர்ந்து தரையிறங்கும் மின்னல்`.;,
தானிவளோ துள்ளிடும் பெண்மானோ
விண்ணுயர்ந்த சொர்க்கம் விரிந்ததென்றே எண்ணி
வீண் உழன்று மாளும் வகை நாமோ
மெல்லிடையும் ஆட மேனிசுழல் கொள்ள
மெச்சியதும் மெல்ல நகைப்பாமோ
கொல்லும் வெறிபோன்றே கொண்டசைந்துகூடி
குற்றமெனும் உள்ளுணர்வு கொண்டே
அள்ளவென்று வண்ணம் அவன்படைத்ததென்றே
அல்லல்தனை கொள்பசிக்குத் தீனாய்
தொல்லையினை வாங்கி சுகமிருக்குதென்றால்
தோன்றுவது பொய்த்த வெறும்வாழ்வோ
ஆடுமுடல் அரவம் அலையும்மனம் நஞ்சு
ஆகப் பொங்கி வளருடலம் புற்றோ
தேடும் மலர் அரளி தொட்டபின்பு கருகி
திளைப்பதென்ன தீயணைத்து மேனி
பாடும்குரல் மாயம் பருவமென்ப மரணப்
பாதையிலே கால்கள் வைக்கத் தூண்ட
ஆடும்வரை ஆடி ஆறடிக்குள் போகும்
ஆசைகொள் மனம் பகைத்த தொன்றோ
----------------************************
29 Sept 2013, 18:47:57
to சந்தவசந்தம்
அன்புள்ள கிரிகாசன்,
கவிதை அருமையாக, உருக்கமாக இருக்கிறது.
ஏழுசீர் காயும் ஒரு சீர் மாவும் வரும் அழகான எண்சீர் விருத்ததில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் சில விருத்தங்களில் அளவொத்து வரவில்லை. கட்சி விருஹ்ட்தஹ்த்டைச் சற்று மாற்றியிருக்கிறேன். இந்த வண்ணம் அமைத்தல் ஏழுசீர் காயாகவும் கடைசீர் மாவாகவும் வரும் விருஹ்த்டஹ்த்டிற்கு இது ஒரு நல்ல எடுத்துக்க்காட்டாக அமையும்.
ஆறோடு சேர்ந்த அலை அடித்தோடி யலைந்துகெடும்
ஆனாலும் எங்கள்துயர் அந்தங் கொள் ளாதோ
பேறோடும் பெருமைகளும் பெற்றவராய் நாமிருந்தும்
பின்னிருந்து விதிமுடிக்கும் விளைவுகளு மேனோ
வீறோடு வீரமெனும் வெற்றிதனைக் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமெழுந்து வீழ்த்திடுத லாமோ
ஏறோடி உயரஎழுந் திருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்குமளிக் காதோ?
வீறோடு வீரமெனும் வெற்றிதனைக் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமெழுந்து வீழ்த்திடுத லாமோ
ஏறோடி உயரஎழுந் திருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்குமளிக் காதோ?
இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
30 Sept 2013, 05:36:21
to santhav...@googlegroups.com
"எண்ணம் கிறங்கித் தவிக்கும் - அது
எங்கெல் லாமோ சென்று மீளும்
எங்கெல் லாமோ சென்று மீளும்
கற்பனையைப் பற்றிய அருமையான கருத்து. மிக நல்ல கவிதை. இனிமையான சொல்லோட்டம்.
சங்கரன்
கற்பனை என்னும் மாயை
.
கண்கள் கூசும் ஒளிவெள்ளம் - அங்கு
.
--
Swaminathan Sankaran
30 Sept 2013, 05:40:10
to santhav...@googlegroups.com
என்ன சொல்லுது
.
.- அது
பட்ட துயர்தனை விட்டு விடுதலை
பெற்றிடச் சொல்லுது
.
--
Swaminathan Sankaran
30 Sept 2013, 19:48:14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள் ஐயா! சில வேளைகளில் மனதுக்குள் சந்தத்தில் திருப்தி இல்லாது இருக்கும் போதும் கூட அவசரப்பட்டு வெளியிட்டு விடுகிறேன் இனி கவனமாக இருக்கவேண்டும் . தங்கள் ஆசியொடு மனம் சோர்ந்தவேளைகளில் வெளியிடாது சற்று ஆறுதலெடுத்து திருத்தி வெளியிட முனைகிறேன். எனக்கு முடிந்தவரையில் --
இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டேன். நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்
*****************************************
இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டேன். நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்
*****************************************
30 Sept 2013, 19:50:13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள் ஐயா!
அன்புடன்
கிரிகாசன்
அன்புடன்
கிரிகாசன்
30 Sept 2013, 20:51:16
to santhav...@googlegroups.com
இளையோர்களே!
மனமெங்கும் குதித்தோடும் மகிழ்வோடு எதிர்கால
மன்னர்கள் வாருங்களே - உங்கள்
இனமெங்கும் செழித்தோங்க இயல்பான வழியொன்றை
இகம்மீது காணுங்களே
வனம்கொள்ளும் விலங்கோடு வாழ்கின்ற நாள் போயும்
வலை போலும் முள்வேலிக்குள் - இவர்
தினம்காணும் துயரம்போய் திறன்கொண்டே சுதந்திரந்
தனும் காணல் இனியுமுண்டோ
பொழில்கூடும் மலரோடு புதிதாக வரும்காற்று
பொன்மாலை தனில் நீவிடும் - அந்த
எழில்தானும் இசைகொண்ட தமிழ் என்பதுணர்வாய்நீ
இதை என்று முயர்வென்று கொள்
பழிபாவம் எமதில்லைப் பரிகாசம் எமக்கில்லைப்
படைகொண்டு நிலமாண்டவர் - எம்
வழிதானும் விடிவுக்கு வலுகொண்ட துணர்வாய் உன்
வசம் எங்கள் எதிர்காலம் கொள்
விழுந்தோம் இன்றெழுந்தோடும் வீறோடு உரம்கொண்ட
விதம் எங்கள் குலம்காணவும் - துயர்
அழுந்தாது மனம்துள்ளி அகமோடு புறம்யாவும்
ஆனந்த நதியோடவும்
பொழுதான தமிழென்ப புகழோடு பெருமைக்கும்
பொலிந்தாடும் கனம் கொள்ளவும் -இனி
முழுதான உணர்வோடு மெருகேற்றி வாழ்வென்ப
மேன்மையில் நிலைகொள்ளச் செய்
தமிழ்கற்கும் போதேநற் தருங்கல்வி தமிழன்னை
தனின் சிறப்புயர் வோங்கவும் - அதில்
எமையென்றும் ஒருமைக்குள் உரமாக்கிப் பலங்கொண்டு
உரிமைக்கு வழிகாணவும்
அமையுந்தன் மனம் மீதில் அழகான நீரோட்டம்
அதுபோலத் தடை யின்றியே - எங்கள்
உமைபாகன் முடிகொண்ட உருண்டோடும்நதி பொங்கும்
உணார்வோடு வழிகண்டுசெல்
பெறவேண்டும் வரம்நீதி பிணியற்ற சுகவாழ்வு
பிறையல்ல முழுவான்மதி - இன்னும்
அறமென்ப ததுபோலும் அருகாது மனவானில்
அழகாகப் பொலிந்தாகட்டும்
துற உந்தன் நலமெண்ணல் துணி தமிழ்தனைகற்றுத்
தொடர் எது வளங்காக்குமோ - இவர்
இற என்ற ஈனர்தம் இழிஎண்ணம் தனைநீக்க
எடு எதிர்காலம் கையில்
2 Oct 2013, 09:49:36
to santhav...@googlegroups.com
கனவுகளின் காதலன்
test பண்ணுவதற்காக Spoil-er இதை செய்து பார்க்கிறேன். சரிவந்தால் விடையை உள்ளே கிளிக் செய்து பார்க்கவும்
[spoiler]இறுதியில் போடவேண்டிய விடையை முதலிலே கூறிவிடுகிறேன்
யாரிவள் புதுக்காதலி. ஆம் கனவுகள் இவை இல்லையெனில் நாம்
வாழமுடியுமோ தெரியவில்லை. கற்பனைகளும் கனவுகளும்
எம் வாழ்வின் துணைகள் அல்லவா! அந்த கனவுகளை நான் விரும்புகின்றேன்[/spoiler]
கனவுகளின் காதலன்
எண்ணங்களின் இளங் காதலியே - நீ
எப்போ வருகின்றாய்
தண்ணிலவின் ஒளி மின்னலிலே - நான்
தவிக்கும் நிலைகாணாய்
உண்ண மனம்கொளும் இச்சையில்லை - என்
உள்ளத் தவிப்பறிவாய்
மண்ணுலகில் என் மனமகிழ்வே - நீ
மறுபடி வாராயோ
வண்ணங்களின் ஓர்வடிவழகே - என்
வாழ்வின் கற்பனையே0
கண்களின் முன்னால் வருவதில்லை விழி
காணாக் கோலமுமேன்
எண்ணங்களின் துயில் இடருறவே அதில்
என்றும் இணைபவளே
மண்ணுலகின் பெரும் மர்மமடி - நீ
மாயை உருவமடி
பொன்மணிகள் போற்கலகலத்தே, - எனைப்
புத்துணர் வாக்குகின்றாய்
புன்னகையை எனில் போர்க்கின்றாய் - பின்
பேசா தழிக்கின்றாய்
தென்பினை உடலில் தருகின்றாய் - கணம்
தேம்பியும் அழவைப்பாய்
என்னசெய்வேன் நீ இல்லையெனில் - எனை
இதயம் நிற்குமடி
எப்பொழுதும் நீ வருகின்றாய் - பின்
இடையில் மறைகின்றாய்
தப்பெனதோ ஒரு தவறுதலோ - உனைத்
தழுவிக் கொள்கின்றேன்
முப்பொழுதும் என் கற்பனையில் - உன்
மூச்சை உணர்கின்றேன்
செப்படியேன் துயில் கொள்கையிலே - எனை
சேரத் துடிப்பதென்ன
ஓடும் நதிக்கரை ஓரத்திலும் - மலர்
உதிரும் சோலையிலும்
ஆடும் கடல் அலைக் காற்றினிலும் - அந்த
அல்லிக் குளத்தடியும்
நாடுமிருள் வரும் மாலையிலும் - ஏன்
நண்பகல் நேரத்திலும்
வாடும் மனந்தனில் கனவுகளே உன்
வண்ணம் எழுகிறதே
நனிசுவை தேனும் இனிப்பதில்லை - நீ
நாடுங் கணங்களிலே
பனியிழை புல்லும் குளிர்வதில்லை உன்
பாசத் தழுவலிலே
இனியொரு வாழ்வே இல்லையடி - நீ
இல்லை என்பதிலே
புனிதமுடன் எனை இணைவதிலே என்
பிணிகள் தொலையுதடி
தனிமையிலே நான் இருக்கையிலே எனைத்
தழுவும் வேகமென்ன
இனிமையுடன் மனம்நிறைவதிலே என்
இடர்கள் மறைவதென்ன
மனிதன் எனுமுணர் வெழஉடனே - மனம்
மயங்கித் தவிப்பதென்ன
கனியெனவே தினம் இனிப்பவளே - என்
கனவுகளே சுகமா?
*******************************
3 Oct 2013, 12:16:12
to santhav...@googlegroups.com
தேவை எதுதானோ?
பொங்கா நதியும் புரளா அலையும்
புரியாச் செயல் முறையும்
தங்கா மடமும் தளராக் கொடியும்
தவளாக் குழந்தையதும்
மங்கா மாலை வெயிலும் மருளா
மாதின் விழியழகும்
எங்குமுளதோ உண்டேல் காணீர்
இயற்கை முரணாமே
ஏங்கா மனமும் இளகா அன்பும்
இணங்காத் துணைநலமும்
தூங்கா இரவும் தொடரா விடிவும்
துணியா மனத்தீரம்
நீங்கா துயரும் நினையாப் பிரிவும்
நிலையா இல்லறமும்
தீங்கே எண்ணும் குணமும் வாழ்வில்
தேவையென லாமோ
கூவாக் குயிலும் குழையா மொழியும்
குதித்தோடா மானும்
தாவா முயலும் தணியாச் சினமும்
தரைகாணா அலையும்
பூவாய் மலரா தரும்பும் புலராப்
பொழுதும் பணிசெய்ய
ஏவா அரசன் எழுதா ஆணி
இருந்தும் பயனென்ன
நாவால் புறமும் நச்சுபொய்யும்
நாட்டில் கொடுங்கோலும்
சாவால் சிதையு மினமும் கண்டே
சஞ்சல மற்றவரும்
ஆவேசமும் ஆடும் சிவனும்
அழிவுவின் கோரங்களும்
தேவி கூறாய் தினமும் வாழ்வில்
தேவை யெனலாமோ
வீழா மழையும் விதையா வயலும்
விளையாப் பயிர்நலமும்
வாழாத் தேகம் வணங்காத் தெய்வம்
வடிவே யற்ற கலை
மாளாத் துயரம் மகிழா நெஞ்சம்
மறைவில் வைத்த ஒளி
கேளாப் பிள்ளை கூடா நட்பு
கேடென் றுணர்வாயே
துவா மழையும் துயிலா விழியும்
தொங்கா மந்தியினம்
காவா வீரம் கலையா கேசம்
காதலற்ற மனை
மேவா தோடும் மலைவீ ழருவி
முகிழா மலர்த்தோட்டம்
நீ வா கேளாய் நிச்சயம் வாழ்வின்
நிகழா திருப்பதுவோ!
******************
4 Oct 2013, 22:22:20
to santhav...@googlegroups.com
ஒன்றெனக்கூடு உரிமையை வெல்லு
மலர்களிலே எத்தனைதான் மணமிருந்தாலும்
மாற்றமில்லை மலர்வதென்ற வகையி லொன்றாகும்
புலர்வதிலே எத்தனைதான் பொழுதுவந்தாலும்
பூமியிலே காலையின் புத் துணர்வில் ஒன்றாகும்
உலர் விழிகள் வழிந்தழுது துன்பங் கொண்டாலும்
உலகிலெங்கும் இரங்குபவர் இல்லையென்றாகும்
சிலரதிலே துயர்தரவே தீமைசெய்தாலும்
செல்வழியில் நேர்மைகொள்ளு, தீரம் உண்டாகும்
இசைதனிலே பலவகையில் ராகமுண்டாகும்
இதயமதில் உணர்வினிமை என்றுமொன்றாகும்
தசையினுள்ளே தமிழ்கலந்து குருதி சென்றாளும்
தருணமதில் வீரமொன்றே விளைவெனக் காணும்
அசைவதிலே விதியுமொரு பக்கம் நின்றாலும்
அதை வெல்லவே மனது ஒன்றா யாகிடவேண்டும்
வசைசொல்லியே வரும்சிலரால் வாழ்வு துண்டாகும்
வழிமறித்து மதியுரைத்து வென்றிடவேண்டும்
திசைகள்தொறும் வழிகள்பல தனியேசென் றாலும்
செல்லும் வழி முடிவினிலே ஒன்றிட வேண்டும்
விசையுடனே விரைந்து செலும் வில்லம்பு போலும்
விளைவினிலே விடுதலையாம் இலக்கது வேண்டும்
பிசையுமுளத் துயர்களைந்து பெருமை கொண்டாடும்
பிறவிதனை இழிமை செய்வர் புறமுதுகோடும்
கசையடிகள் காணுமுடல் கனிவென மாறும்
காலமெனும் ஒன்றையினிக் காணுதல் வேண்டும்
நிலைமை வரும் மகிழ்வுடனே நிலமதை மீட்கும்
நேரமதில் நெஞ்சலையில் நீந்திடும் வெள்ளம்
கலை பலதென் றாயிருந்தும் காண்பவர் உள்ளம்
காட்சிதனைக் காணுகையில் களிப்பதே மிஞ்சும்
குலைகளிலே கனிகள் பல கூடுதல்போலே
குறியைஎண்ணி ஒற்றுமையாய் குழுமிடல் வேண்டும்
இலை குணங்கள் ஒன்றெனவும் இருந்திடும்போதும்
ஏற்றமுடன் தமிழ்நினைந்தே உழை -- நிலம்மீளும்
******************
சென்றாளும் - சென்று ஆளும் உடலை
***********************
4 Oct 2013, 23:02:08
to சந்தவசந்தம்
எவருடைய பாராட்டையும் எதிர்பாராமல் ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கும் கதிரவனப் போல, தொடர்ந்து அழகழகான சந்தங்களில் விதம்விதமான கருத்துகளைக் கொண்ட கவிதைகளை இங்கு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க உமது தமிழ்த் தொண்டு!
அனந்த்
5 Oct 2013, 00:48:10
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! நான் ஒன்றையே எண்ணுகிறேன். என்னை எதற்காக கவிதை எழுத வைத்தாள் என் அன்னை சக்தி. அதை பூர்த்தி செய்வது என்கடமை. அத்துடன் ஒரு குழந்தை கருவில் வந்துவிட்டால் பிறந்தே தீர வேண்டுமல்லவா? உருவாவதற்கு உருவம் கொடுத்தே தீரவேண்டும்!
நன்றிகள்
நன்றிகள்
5 Oct 2013, 01:02:33
to santhav...@googlegroups.com
இது இதற்கு முன்னதற்கு முன் எழுதிய கவிதை
சந்தம் நன்றாக இல்லாததுபோல் தோன்றவே புனரமைத்தேன்
தேவை எதுதானோ (மாற்றியது)
பொங்காத கடலும் புரளாத அலையும்
புனலோடிக் கடல்கூடா நதியும்
தங்காத காற்றில் தளராத கொடியும்
தவளாத குழந்தையும் அந்தி
மங்காத ஒளியும் மயங்காத மனமும்
மரணத்தை எண்ணாத மனிதன்
எங்கேனுமுண்டோ இயற்கையில் கொண்ட
இயல்பென் றுரைத்திடில் தவறோ!
ஏங்காத மனமும் இளகாத அன்பும்
இணங்காத துணை கொண்டவாழ்வும்
தூங்காத இரவும் தொடராத விடியல்
துணியாத படை வீரன் மறமும்
நீங்காத துயரும் நினையாத பிரிவும்
நிலையாத மேனியில் அன்பும்
தீங்கினைச் செய்து திளைக்கின்ற நெஞ்சும்
தேவையென் றோதிடல் நன்றோ?
கூவாத குயிலும் குரல்சேரா மொழியும்
குதித்தோடா இளம் புள்ளி மானும்
தாவாத முயலும் தணியாத சினமும்
தரைகாணா அலைகொண்ட கடலும்
பூவாகி அரும்பிப் புதுவண்டு காணா
பூவிதழ் தேனோடு, பகைமேல்
ஏவாத படையும் இசைபாடும் அரசன்
இருந்துமென் பயனுண்டு கூறு
வீழாத மழையும் விதையாத வயலும்
விதைத்தும் பின்பொய்த்த நெற்பயிரும்
சந்தம் நன்றாக இல்லாததுபோல் தோன்றவே புனரமைத்தேன்
தேவை எதுதானோ (மாற்றியது)
பொங்காத கடலும் புரளாத அலையும்
புனலோடிக் கடல்கூடா நதியும்
தங்காத காற்றில் தளராத கொடியும்
தவளாத குழந்தையும் அந்தி
மங்காத ஒளியும் மயங்காத மனமும்
மரணத்தை எண்ணாத மனிதன்
எங்கேனுமுண்டோ இயற்கையில் கொண்ட
இயல்பென் றுரைத்திடில் தவறோ!
ஏங்காத மனமும் இளகாத அன்பும்
இணங்காத துணை கொண்டவாழ்வும்
தூங்காத இரவும் தொடராத விடியல்
துணியாத படை வீரன் மறமும்
நீங்காத துயரும் நினையாத பிரிவும்
நிலையாத மேனியில் அன்பும்
தீங்கினைச் செய்து திளைக்கின்ற நெஞ்சும்
தேவையென் றோதிடல் நன்றோ?
கூவாத குயிலும் குரல்சேரா மொழியும்
குதித்தோடா இளம் புள்ளி மானும்
தாவாத முயலும் தணியாத சினமும்
தரைகாணா அலைகொண்ட கடலும்
பூவாகி அரும்பிப் புதுவண்டு காணா
பூவிதழ் தேனோடு, பகைமேல்
ஏவாத படையும் இசைபாடும் அரசன்
இருந்துமென் பயனுண்டு கூறு
வீழாத மழையும் விதையாத வயலும்
விதைத்தும் பின்பொய்த்த நெற்பயிரும்
வாழாத தேகம் வணங்காத தெய்வம்
வடிவற்ற சித்திரக் கலையும்
மாளாத துயரம் மகிழாத நெஞ்சம்
மறைவினில் வைத்ததோர் ஒளியும்
கேளாத பிள்ளை கூடாத நட்பும்
கேடென்று கொள்ளலாமன்றோ
தூவாத பனியும் துயிலாத விழியும்
தொங்கிமரம் பாயாத மந்தி
காவாத வீரம் கலையாத கேசம்
காதலே யற்ற மணவாழ்வும்
மேவாத தென்றல் மலரற்ற சோலை
மிளிராத வெய்யோனின் கதிரும்
நீ வாசொல்கூறாய் நிச்சயம் வாழ்வின்
நிலைக்குமோ நின்றுமென் பயனோ?
*********************
மாளாத துயரம் மகிழாத நெஞ்சம்
மறைவினில் வைத்ததோர் ஒளியும்
கேளாத பிள்ளை கூடாத நட்பும்
கேடென்று கொள்ளலாமன்றோ
தூவாத பனியும் துயிலாத விழியும்
தொங்கிமரம் பாயாத மந்தி
காவாத வீரம் கலையாத கேசம்
காதலே யற்ற மணவாழ்வும்
மேவாத தென்றல் மலரற்ற சோலை
மிளிராத வெய்யோனின் கதிரும்
நீ வாசொல்கூறாய் நிச்சயம் வாழ்வின்
நிலைக்குமோ நின்றுமென் பயனோ?
*********************
5 Oct 2013, 01:38:04
to santhav...@googlegroups.com
இதுவும் முன்னைய கவிதை ஒன்றின் மாற்றம்
இளைய சந்ததியே
மனமெங்கும் குதித்தாட
...மகிழ்வோடு நிதம்காணும்
...மணிவண்ண ரூபங்களே - உங்கள்
இனமிங்கே உயிரோடு
...இயல்பான வகைவாழ
...இகம் மீது உதவுங்களே - எங்கள்
சனம் அங்கம் தனையீந்து
...தலையின்றி உடலின்றி
...சருகாகும் குறை வாழ்விலே - நாமு
கனமோடு உயர்வான
...சமுதாயம் உருவாகக்
...கனவொன்றை நிசமாக்குங்கள்
பொழிலாடும் மலரோடு
...புதிதாக வரும்காற்று
...பொழுதோட உறவாடிடும் - அதில்
எழிலோடு மயிலாட
...இசைபாடும் இன்பங்கள்
...எமைக்கூடி மகிழ்வாக்கவும் - வெறும்
பழியோடு காண்போரின்
...பரிதாப நிலைநீங்கி
...பாரெங்கும் வளம் கொள்ளவும் - எமை
விழிநோக்கி உயர்வென்ற
...வகையிலோ ரிடம்தந்து
...விடு என்று வாழ்வீந்தனை
விழுந்தோமின் றெழுவேமா
...விதியென்று கொள்கின்ற
...வெகுவான துயர் மாற்றவும்
அழுகின்ற மனம் துள்ளி
...அகமோடு புறம்யாவும்
...ஆனந்தம் குதித்தாடவும்
பொழுதன்று தமிழெங்கும்
...புகழோடு பெருமையிற்
...பொலிந்தாடும் வளம் கொள்ளவும்
முழுதான தொருநல்ல
...வழிகண்டு வாழ்வோரின்
...மூச்சினை மீட்டிடுங்கள்
தமிழ் பேசிப் பிறந்தோமே
...தமிழ் கூறி வளர்ந்தோமே
...தமிழ் கற்று உயர்வாகினோம் -இன்னும்
தமிழென்ப அழிவில்லை
...தரம்கொண்ட மொழியென்பர்
...தன்னம்பிக் கைகொள்ளவும் -என்றும்
இமைமூடி இதயத்தில்
...எமையாளும் பெருந்தீயின்
...எழும் சக்திதனை வேண்டிடு - இன்றே
அமையுமுன் பெருவாழ்வில்
...ஆற்றலும் உயர்சக்தி
...அதை கொண்டுன் மண் மீட்டுக்கொள்
*****************
5 Oct 2013, 01:46:03
to santhav...@googlegroups.com
திருத்தம்.
விழுந்தோமின் றெழுவேமா
...விதியென்று கொள்கின்ற
...வெகுவான துயர் மாற்றவும் - இங்கே
அழுகின்ற மனம் துள்ளி
...அகமோடு புறம்யாவும்
...ஆனந்தம் குதித்தாடவும் - எந்தப்
பொழுதன்று தமிழெங்கும்
...புகழோடு பெருமையிற்
...பொலிந்தாடும் வளம் கொள்ளவும் - இன்று
முழுதான தொருநல்ல
...வழிகண்டு வாழ்வோரின்
...மூச்சினை மீட்டிடுங்கள்
*********************
5 Oct 2013, 23:59:56
to santhav...@googlegroups.com
அன்னிய மண்ணில் எம் தமிழை எங்கள் சந்ததி மறக்க விடுவதா? இல்லை அது பெருந்துரோகம். அதனால் சனிக்கிழமைகளில் தமிழ்கல்வி கற்கும் வகுப்புக்கள், சிறுவர்களுக்கு, இங்கேயும் ஏன் முழு ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு கட்டமைப்பின்கீழ் நடத்தப்பட்டு வருகிறது. இது அப்படி ஒரு கல்விநிலைய விழாவுக்கு எழுதினேன் அதை சிறிதுமாற்றிப்
பொதுவான வாழத்தாக இங்கே தருகிறேன்
தமிழ் வளர்ப்போம்
நாட்டில் நலிந்தோடி நாமுழன்று
நலம்தேடி நாளில் வந்தோம்
கூட்டாய் பலமெடுத்தே வென்றிடவும்
கொள்கைதனை கொண்டோமா சொல்
தேட்டமெனுங் கல்விதிசை திக்கெதெனத்
தெரியாது தொலைப்போமா சொல்
நாட்டின் எதிர்கால நம்மிளைய
வீரர்களே நற்றமிழ் கொள்வீர்
பூக்கள் சொரியட்டும் புன்னகையும்
பரவட்டும் பொலிந்தே இன்பம்
நாக்கில் சுவைத்தமிழே நல்லுணர்வாய்
விரியட்டும் நலிந்து துன்பம்
போக்கில் தமிழ்வளர்ந்து பெருவளமும்
கொள்ளட்டும் புகழ்ச்சி கொண்டே
நோக்கில் சிறப்போங்கி நிற்கத் தமிழ்
நிலையத்தை நெஞ்சே வாழ்த்து!
ஆர்க்கும் முரசொலித்தே அறம்தன்னைக்
கூட்டட்டும் அன்பு கொண்டே
சேர்க்கும் கலைத்திறனும் கல்வியதும்
சிறப்புடனே செறிந்து காண
கோர்க்கும் மணியாரம் கொள்ளும்
எழில் முத்தேபோல் குழந்தையுள்ளம்
தேர்ச்சி பெருமளவில் சிறக்கவெனத்
தமிழென்ப தினம் படிப்பீர்
கற்கும் மாணவர்க்கும் கற்பிக்கும்
ஆசிரியர் கடமை கொண்டோர்
உற்றோர் வழியினிலே உருவாக்கி
வழிநடத்தும் உயர்ந்தோர் உள்ளம்
சற்றும் நெறிவழுவா சத்தியத்தின்
நேர்வழியில் செல்லென்றோதும்
முற்றும் ஓர்குடைகீழ் கொண்டார்
பெருந்தகை நம் தலைவர் தானும்
ஐயா பெரியவரை அகமகிழப்
போற்றினோம் அன்புகொண்டு
மெய்யாய் உடல்வருந்தி மேதினியில்
தமிழ்தன்னை மிளிரவைக்கும்
செய்யக் கடுமை எனும் செயல்களையும்
சீருறவே செய்தளிப்பார்
கையை பற்றியவர் கனவெதுவோ
இலக்கதனை காணச்செய்வோம்
வையகமும் புகழ்ந்தேத்த வெய்யவனாய்
ஒளிர்வாழ்வு விளங்க வாழ்த்தி
மெய்கொண் டிலங்குதமிழ் மேன்மையுறச்
செய்கநற் பணிகள்தானும்
எய்யும் ஓர்அம்போடி இலக்கடையும்
ஈதேயாய் இலங்கும்வண்ணம்
தெய்வச்சுடரொளியாம் திகழ்வல்ல
தீபத்தை தொழுது நின்றேன்
**********
6 Oct 2013, 00:05:05
to santhav...@googlegroups.com
மேற்காணும் கவிதையில் அடிகளை ஒரு வகையாகப் பிரித்தெழுதினேன். எப்படி யுள்ளது? இப்படி எழுதலாமா? தெரியவில்லை
6 Oct 2013, 02:20:56
to santhav...@googlegroups.com
அறுசீர் விருத்தத்தில் 1, 3, 5 சீர்களில் அல்லது 1,5 சீர்களில் மோனை இருந்தால்,
பூக்கள் சொரியட்டும் புன்னகையும் பரவட்டும்
பொலிந்தே இன்பம்
நாக்கில் சுவைத்தமிழே நல்லுணர்வாய் விரியட்டும்
நலிந்து துன்பம்
-என்பது போலும் எழுதலாம். அப்போது மோனையில் ‘ஓர் அழுத்தம்’ கொடுத்துப்
படிக்கும் போது ஓசைச் சிறப்பு புலப்படும்.
1,4 மோனை இருந்தால் , அடியைச் சரி பாதியாய்ப் பிரித்து எழுதுவது வழக்கம்.
அடிகளைப் பிரிப்பது எதுகை. அடியின் வரிகளைப் பிரிப்பது மோனை. இது பொதுவான வழக்கம்
மேற்காணும் கவிதையில் அடிகளை ஒரு வகையாகப் பிரித்தெழுதினேன். எப்படி யுள்ளது? இப்படி எழுதலாமா? தெரியவில்லைஅன்புடன் கிரிகாசன்
7 Oct 2013, 08:01:36
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! இப்படி எங்கும் கண்டதில்லை ஆனாலும் கேட்டுவிட்டேன். இப்போது உணர்ந்துகொண்டேன் நன்றிகள் தொடர்கீறேன் வந்து கண்டு செல்லுங்கள். இதோ அடுத்து இன்றைய கவிதை
அன்புடன் கிரிகாசன்
7 Oct 2013, 08:17:43
to santhav...@googlegroups.com
சக்தியே என் அன்னையே
காலகால மாகத்துன்பம் காண்பதற்கென்றா யிரண்டு
கண்கள் தம்மை நீகொடுத்தனை
கோலமோ இழிந்துகெட்டு கோணலாக ஆடை போர்க்கும்
கேவலம் இத்தேக மீந்தனை
ஆலமே உள் எண்ணமாக ஆடியும் துடிக்கு மென்மை
அற்புதப் பொறிக்குச் சக்தியே
நீலமே கத்தின் இருப்பு நிர்மலம் என்றான விட்டு
நெஞ்சங் கொல்ல வன்மை வைத்ததேன்?
மேளதாள வாத்தியங்கள் மேடைமீது நாட்டியங்கள்
மேனி கூடவோர் பெரும்விழா
ஆளவந்தவன் அழித்தும் ஆனந்திக்கும் போது இங்கே
ஆக்குவர் அதற்கும் பேரவா
மாளவும் எரிக்கும் நீயே மற்றவர் எரிக்கும் வண்ணம்
மாசுடர் அவ்வானில் வைத்தனை
கேளம்மா எத்திக்கிருந்து கோமகன் எரித்துமூடக்
கேள்வியே இல்லாதுவிட்ட தென்?
ஆளையாள் கலந்துசெய்யும் ஆளணிப் பெருக்கமூடே
அன்பிலார்க் கிங்கேது செய்பணி
வாளையும்தன் குட்டிகாண வாழ்வினை இழக்கு மாமெம்
வாழ்விலும் இதற்கென் றேன்விதி
கேளம் மாமலை யிருந்து கீழ்நிலம்பரந்த மண்ணில்
கோடிகோடி யாய்ப் பரந்தனர்
வாழவாயிவ் வையம்மீது வைத்தனை இல்வீழ்த் தவென்று
வஞ்சகர்க் குத்தீனி தந்தனை
சூழுமா அலைநிறைந்த சோதியும் தினம் உதிக்கும்
சூட்சுமங்கள் செய்த பாரிலே
தாளுமா என்வாழ்வு மின்பம் தாங்குமா இத்தோளும் பாரம்
தூங்குமா என்மேனி என்பதாய்
மீளுமா அப்போன வாழ்வு மீண்டுமே என்காட்சியாகி
மேனியும் சிலிர்த்து வாழ்வேனா
பாளமாய் உடைந்துகெட்டுப் போனதாய் வகுத்ததேனோ
பாரமாவென் தூறல் பொய்த்ததேன்
தோளும்மார் பிலே தவழ்ந்து தூயநல் மொழிக்கென்றீந்து
தீரமும் கொள்ளென்று ஆக்கினாய்
தேளுமா பெரும் கொடுக்கன் தூங்குமாம் சுருண்டபாம்பு
தேவையா எம்பாதை வைத்தனை
மூளுமா உன்தீயும் எம்மை மோசமாய் அழித்தவர்க்கு
மூடராம், இல்லாத மூர்க்கரின்
வாழுமா ஜனங்கள் வாழ்வில் வந்துமே இடர் அளிப்பர்
வானிருந்தும் காத்துக் கொள்வையோ
9 Oct 2013, 03:26:46
to santhav...@googlegroups.com
வேறில்லை .நான் நீண்டநாள் விரும்பிய் மென்பொருள் குறுந்தட்டு கிடைத்தது. இதையிட்டு இக்கவிதை FPS creator என்னும் முப்பரிமாண விளையாட்டு செய்யும் புரோகிராம், ஒருகை பார்க்கவேண்டும்
தேடினேன் வந்தது
ஐந்தாறு மாதமாய் ஏங்கியலைந்தபின்
அங்காடி முன்னேகண்டேன்
செந்தூர வண்ணமோ பட்டுவெயில் மின்ன
சற்று விழிக்கக் கண்டேன்
இந்தா பார் என்னடி விடியும் முன்னாலே ****
யிங்கே யென்றேன் அருகே
வந்தொரு பையனோ வேணுமா இன்னிக்கு
வந்த புதிசு என்றான்
அந்தோ இருக்கட்டும் என்னைவிடு போதும்
என்றதும் பார்வையிலே
விந்தை கண்டேன் அடவேண்டி யலைந்தது
வேறில்லையென்று ணர்ந்தேன்
கந்தாமுருகா என் கற்பனையும் அன்று
கண்ணின் முன்னால் திகழ
எந்த விதி என்னைக்கொண்டு வந்ததிங்கே
என்று மயங்கி விட்டேன்
சந்தன வாசமும் செவ்வண்ணப் பூக்களின்
சேர்ந்தோர் நறுமணமும்
செந்தூர ரூபச் சிவந்தே யிருவிழி
தீண்டி மகிழ்ந்த தய்யா
இந்தா எனக்காசை விட்டெறிந்தேன் -அவன்
ஏங்கிய துங்களுக்கே
சந்ததி காணாத தன்மை புதிதென
சாற்றிக் கரமளித்தான்
முந்தாநாள் ராத்திரி மூடும் விழியின்றி
முன்னேயிருத்தி வைத்து
வந்தா ளொருத்தியைப் போல முன்னாலெனை
வாட்டி வதைக்குதய்யா
நிந்தனை செகுவனல்லன் எனைக்கொண்ட
செந்தாழம் பூமடற் பாதமில்லை அதிற்
சின்னக் கரங்களில்லை
சுந்தர வாய்மொழி சொல்லா திருப்பினும்
சுற்றிச் சுழன்று என்னை
சிந்தாத தேன்மலர் வண்டினை யுமொப்பச்
சிந்தைதனில் கலந்து
பந்தாடி யென்மனப் பாங்கினை யேபட்ட
பாடென ஆக்குதய்யா
தந்தாலும் தந்தவன் சொல்லிவிட்டானுனைத்
தன்னந் தனியிருத்தி
சொந்த மெனக்கொண்ட போதினிலும் துன்பம்
சொல்லா வினைகள்தரும்
மந்தார எண்ண முழுதும் இச்சைதனில்
மயங்க வைக்கு மென்றான்
நந்தவனமலர் பொய்கை யிலாடிடும்
நாட்டிய பொன்னலைகள்
செந்தாமரை தன்னைத் தள்ளிச் சிரிப்பதாய்
சீண்டி அலைக்குமய்யா
இந்தா மனிதா நீஏனோ விரும்பினை
இஷ்டம் உனது என்றான்
வெந்தே சுடும்மனம்; வீணழியும் நேரம்
விட்டுவிடாய் என்றவன்
நந்த பாலா, இந்த நல்லவனை நீயே
நாடிஉதவும் என்றான்
எந்தோ இவனிங் குரைப்ப தெல்லாம் ஒரு
இம்சை புரிவன் குணம்
பிந்தாமல் ஓடிப்போய் பேசும் கணனியின்
பொல்லாப் பசிதனுக்கு
இந்தா என்றே குறுந்தட்டை யளித்தபின்
என்னை மறந்து நின்றேன்
மந்திரமோ எனத்தானும் கண்டேனங்கு
என்னை மயக்க விட்டேன்
**** இந்தா பார் என்ன டிவிடி (DVD) யும் முன்னாலே )
தேடினேன் வந்தது
ஐந்தாறு மாதமாய் ஏங்கியலைந்தபின்
அங்காடி முன்னேகண்டேன்
செந்தூர வண்ணமோ பட்டுவெயில் மின்ன
சற்று விழிக்கக் கண்டேன்
இந்தா பார் என்னடி விடியும் முன்னாலே ****
யிங்கே யென்றேன் அருகே
வந்தொரு பையனோ வேணுமா இன்னிக்கு
வந்த புதிசு என்றான்
அந்தோ இருக்கட்டும் என்னைவிடு போதும்
என்றதும் பார்வையிலே
விந்தை கண்டேன் அடவேண்டி யலைந்தது
வேறில்லையென்று ணர்ந்தேன்
கந்தாமுருகா என் கற்பனையும் அன்று
கண்ணின் முன்னால் திகழ
எந்த விதி என்னைக்கொண்டு வந்ததிங்கே
என்று மயங்கி விட்டேன்
சந்தன வாசமும் செவ்வண்ணப் பூக்களின்
சேர்ந்தோர் நறுமணமும்
செந்தூர ரூபச் சிவந்தே யிருவிழி
தீண்டி மகிழ்ந்த தய்யா
இந்தா எனக்காசை விட்டெறிந்தேன் -அவன்
ஏங்கிய துங்களுக்கே
சந்ததி காணாத தன்மை புதிதென
சாற்றிக் கரமளித்தான்
முந்தாநாள் ராத்திரி மூடும் விழியின்றி
முன்னேயிருத்தி வைத்து
வந்தா ளொருத்தியைப் போல முன்னாலெனை
வாட்டி வதைக்குதய்யா
நிந்தனை செகுவனல்லன் எனைக்கொண்ட
செந்தாழம் பூமடற் பாதமில்லை அதிற்
சின்னக் கரங்களில்லை
சுந்தர வாய்மொழி சொல்லா திருப்பினும்
சுற்றிச் சுழன்று என்னை
சிந்தாத தேன்மலர் வண்டினை யுமொப்பச்
சிந்தைதனில் கலந்து
பந்தாடி யென்மனப் பாங்கினை யேபட்ட
பாடென ஆக்குதய்யா
தந்தாலும் தந்தவன் சொல்லிவிட்டானுனைத்
தன்னந் தனியிருத்தி
சொந்த மெனக்கொண்ட போதினிலும் துன்பம்
சொல்லா வினைகள்தரும்
மந்தார எண்ண முழுதும் இச்சைதனில்
மயங்க வைக்கு மென்றான்
நந்தவனமலர் பொய்கை யிலாடிடும்
நாட்டிய பொன்னலைகள்
செந்தாமரை தன்னைத் தள்ளிச் சிரிப்பதாய்
சீண்டி அலைக்குமய்யா
இந்தா மனிதா நீஏனோ விரும்பினை
இஷ்டம் உனது என்றான்
வெந்தே சுடும்மனம்; வீணழியும் நேரம்
விட்டுவிடாய் என்றவன்
நந்த பாலா, இந்த நல்லவனை நீயே
நாடிஉதவும் என்றான்
எந்தோ இவனிங் குரைப்ப தெல்லாம் ஒரு
இம்சை புரிவன் குணம்
பிந்தாமல் ஓடிப்போய் பேசும் கணனியின்
பொல்லாப் பசிதனுக்கு
இந்தா என்றே குறுந்தட்டை யளித்தபின்
என்னை மறந்து நின்றேன்
மந்திரமோ எனத்தானும் கண்டேனங்கு
என்னை மயக்க விட்டேன்
**** இந்தா பார் என்ன டிவிடி (DVD) யும் முன்னாலே )
9 Oct 2013, 03:34:15
to santhav...@googlegroups.com
இடையில் வந்த குறைவரிகளை நீக்க மறந்துவிட்டேன்.மன்னிக்கவும்
கிரிகாசன்
கிரிகாசன்
13 Oct 2013, 10:53:12
to santhav...@googlegroups.com
இரண்டு நாட்களாக வரவில்லை. கொஞ்சம் புதிய மென் பொருளுடன் போரட்டம் . தீபாவளிக்குள் ஒரு தமிழ் முத்திரை பதித்த விளையாட்டு சிறுவருக்கு செய்தளிக்க வேண்டுமென்ற அவா. ஆனால் கடுமையாக என் தேகம் வேதனை அளித்தது. கண்ணீர் வராத குறை! அதனால் ஒரு கவிதை எழுதினேன். மீண்டும் முயற்சியுடன் ஒரு பரிசாக தீபாவளிக்குள் முடிந்தால் (அல்லது சற்று தாமதமாகி) வழங்குவேன் .
தாயே அன்பு கொள்வாய்!
இயக்காத காலும் எழுதாத கையும்
இருந்தென்ன போயென்ன தாயே
தயங்காத நெஞ்சும் தவிக்கின்ற உள்ளம்
தந்தென்ன நொந்தேனே நானே
பயந்தாடும் போக்கில் பகலென்ன அந்தி
பனிபொங்கும் இரவென்ன தாயே
சுயமின்றி ஆடும் சுந்தரன் உள்ளம்
சுகம்தந்து அருள் கொள்வை யாமே!
வயதுண்ட தேகம் வளைந்தாட வென்னில்
வடிவுண்டோ இளநங்கை போலே
நயன்தாரும் இன்பம் நல்குமோ உந்தன்
நினைவெங்கு எனைகண்டு தாயே
வியந்தோடும் வண்ணம் வினைவந்து தீர்ப்பாய்
விரைந்துவா உயிர் போகும் முன்னே
துயர்கொண்டு பாரில் துடிக்மென் நெஞ்சை
துணைகொண்டு வரம்நல்கு வாயே
செயம் கொண்டவீரன் செல்கின்ற பாங்கில்
சிரம்தூக்கி நடைகொண்ட வாறுன்
மயம்சக்தி என்றே மனம் மகிழ்ந் தாடி
மலர்கொண்டு துதிசெய்வன் தாயே
கயமைக்கு தேடி கருவென்றே ஆக்கி
கசந்திடும் வாழ்வென்ப வேண்டாம்
புயலுக்குள் பூவாய் புரிகின்ற அன்பை
புறந் தள்ளு பகையென்ப தாமோ
முயலுக்கு தாவும் கயலுக்கு நீந்தும்
கலைசொல்லி வாழென்று விட்டாய்
வயலுக்கு நீரும் வானுக்கு ஒளியும்
வரச்செய்து வாழ்வென்று தந்தாய்
செயலுக்கு காலும் சிறப்பென்று கையும்
சிரிப்பென்று முகம் மலர்வாக்கி
அயலுக்கு நல்லோர் ஆயிரம்செய்தும்
அடியேனை ஏன் வதைக்கின்றாய்?
***********************************
13 Oct 2013, 15:07:08
to santhav...@googlegroups.com
மிக நல்ல கவிதை. உள்ளத்தை நெகிழ வைக்கிறது.
சங்கரன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
Swaminathan Sankaran
18 Oct 2013, 20:05:12
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!
அனைவருக்கும் வணக்கங்கள்! மீண்டும் வந்துவிட்டேன். ஏதோ ஒருவருடம் கடந்துவிட்ட்து போன்ற உணர்வு. எப்படி வராமல் இருந்தேன். கல் நெஞ்சம்தான்!. இடையில் சில கவிதைகள் எழுதினேன். அந்த் மென்பொருள் பைத்தியமாக்காத குறை இரவுபகலாக இருந்தேன். அதைப் பற்றி பின்னர் கூறுகிறேன் இப்போது எழுதிய கவிதை ஒன்று
அன்புடன் கிரிகாசன்
18 Oct 2013, 20:26:00
to santhav...@googlegroups.com
தாய் தமிழ் மண்ணை உயிராக நேசி
மணிநாத ஒலிகூட்டும் மலர்விரிந்து நாறும்
பணிவோரின் இசைபக்தி பரவும் அதிகாலை
அணிசேரும் குருவியினம் ஆர்க்குமொலி கீதம்
தணியாத இன்பங்கொள் தமிழீழ மன்றோ
குளிர் தாரும் பெருவேம்பு முற்றத்தின் ஓரம்
புளி மாவின் பிஞ்சாய புரளும் கறை தேகம்
துளிவீழ மழைவெள்ளம் தோட்ட வரம்போடும்
களிகொண்டு சிறுவர்விடும் காகித மென் ஓடம்
நளினமிடும் நெற்கதிரும் நாடிவருந் தென்றல்
வெளி வானம் வீழ்ந்ததென விம்பம்தரும் குளநீர்
நெளிந்தோடும் நீரலையில் நீந்தப் பெரும் சுகமே
ஒளிகொண்ட விழிகொள்ளும் எங்கள் தாய் மண்ணே
எழில் வண்ணத் திருகோவில் திருவிழாக் கூட்டம்
தொழில் மாந்தர் துயர்போக்கும் சதிராட்டம் தாளம்
பொழில் தூங்கும் தாமரைகள் புனல் சந்த ஓசை
மொழி இன்பத்தமிழ் பேசும் மேன்மைநிறை ஈழம்
தாய்மண்ணைச் சூழ்கலிகள் தனைநீக்கு என்றும்
தேய்பிறைகள் அழிவதில்லை திரும்பவும் வளரும்
காய்நினைவு கனிந்துவரக் கரம்தூக்க வேண்டும்
நீ நடந்து செல்லும் வழி நீதி முறை காணும்
*********************
21 Oct 2013, 11:23:26
to santhav...@googlegroups.com
சக்திதாயே ! (அருள்வேண்டி)
எண்ணுக்குள் கூட்டல்என்றும்
. எழுத்துக்குச் சேர்ந்தேசொல்லும்
. இயல்பென்றும் ஆக்கும் சக்தியே
கண்ணுக்குள் ஒளியின் ரூபம்
. கருத்துக்கு மொழியின் ஆக்கம்,
. காலத்தின் போக்கென் றாக்கியும்
பண்ணுக்கென் றிசையும் ராகம்
. பருவத்தில் பெய்யும் மேகம்
பரவசங் கொண்டோர் மேனியும்
வண்ணத்தில் எண்ணம்கொண்டே
. வாழவும் செய்தே தீமை
. வழிநடந் தேகச் செய்ததேன்
விண்ணுக்குள் எரியும் சக்தி
. வியப்பிற்கு வழியும்கோலி
. வெறுமைக்குள் பொருளென் றானவள்
வண்ணத்து மலர்கள்பூத்தும்
. வளர் குறை நிலவும் ஓடி
. வருடுங்காற் றசையும் மென்மையும்
திண்மைகொள் வகையில் வாழ்வும்
. தெளிந்திடும் தன்மை தீரம்
. தினம் புதுத் தென்பும் தந்தபின்
மண்ணுக்கென் றாசைப்பட்டு
. மடமைகொண் டுயிரைவாங்கும்
. மாந்தர்செய் தேனோ விட்டனை
கண்ணுக்குள் கனவென் றின்பம்
. கற்பனை மகிழ்வென் றுள்ளம்
. காணென்றும் செய்தாய் பின்னரோ
உண்மைசொல் அழிவென்றாக
. உறவுக்குள் வலிமை சோர
. உரிமைக்குப் பஞ்சம் வைத்ததேன்
பெண்ணுக்குள் கருவென்றாகிப்
. பின்னர் வந்தழுதே வீழும்
. பிணிகொண்ட வாழ்வை ஈந்தனை
அண்மைக்குத் துணையைக் கொண்டு
. அன்புக்குள் மடமைகண்டு
. அழியென்று விதியும் செய்ததேன்
உண்ணென்றே உலகில்பயிரும்
. உயிரென்று மூச்சில் காற்றும்
. உள்ளத்தில் நெகிழென் றுணர்வாக்கி
புண்ணுக்குள் தீயை வைக்கும்
. பெருந் துயர்கொண்டே யுழலும்
. பேரழிவொன்றே உடமைகொள்
அண்மையென் றாக்கி துன்பம்
. அதுகொண்டும் வாழும்போதே
. அறிவற்ற மூடர் அயல்செய்தே
எண்ணத்தில் தீதே கொள்ள
. எட்டாத வெளியில் நின்றே
. ஏன்செய்தாய் எங்கள் அன்னையே
வெண்மைக்கென் றுள்ளம்செய்து
. விருப்புக்குள் நீதி கண்டு
. வியனுறு தமிழை மொழியாக்கி
தண்மைகொள் மனமும்தந்து
. தரணிக்குள் இனமென்றாக்கி
. தவித்தழி அந்தம்கொள்ளென்றே
உண்மைவாய் நஞ்சும் ஊட்டி
. உயர்வென்னும் வேரைவெட்டி
. உலகில் யாம் நிலையாத் தன்மையும்
விண்ணுக்குள் நின்றே செய்தாய்,
. விடிவுக்கென் றொளியைத் தந்தாய்
. வீணுக்கென் றெம்மைச் செய்ததேன்
*************************
21 Oct 2013, 11:43:26
to santhav...@googlegroups.com
21 Oct 2013, 23:01:54
to santhav...@googlegroups.com
மனமகிழ்வுடன் நன்றிகள் தங்களுக்கு!
21 Oct 2013, 23:10:22
to santhav...@googlegroups.com
நிலவின் கோபம்
மன்னவன் பஞ்சணை தூங்கிய நெஞ்சினில்
மஞ்சம் கசக்கக் கண்டான்
அன்ன மென்மையுடன் ஆடுந் தோகைநடம்
யாருக்கு வேண்டுமென்றான்
புன்னகை மாதரின் கையிடை பந்தெனப்
பட்டுத் துடித்ததெல்லாம்
என்னவை இந்திர லோகத்தின் ஊர்வசி
ரம்பையோ என்றழிந்து
மென்னகைப் பூவிதழ் ஓத்தடம்கொண்டது
மேனி சிலிர்த்த தெல்லா0ம்
பின்நகை பூத்துச் சிரித்தபடி அவன்
பின்வழி மாடம் சென்றான்
பொன்னெழில் வாரிப் பொழிந்த நிலா வானிற்
பேசல் எதுவுமின்றி
தன்னொளி வீசுமப் போதினிலே உடல்
தன்னில் தவிப்பெழவோ
மின்னிடும் வெண்ணொளி கொண்டும் துயர்பட்டு
மேனி மெலிந்ததுவாய்
தன்னிலை யும்கெடக் கண்டவன் நெஞ்சினில்
தாபம் நிறையக் கண்டான்
சின்னவளே நீயும் தென்றல் தொடும்வேளை
செல்லநடை கொள்ளினும்
என்னது காணலில் துன்பநிலை கொள்ள
ஏதுண்டோ ஏகாந்தமோ
உன்னெழில் விட்டுமுன் மன்னவன் செல்லிடம்
ஏதென் றுரைத்திடுவாய்
அன்னவன் எங்கணும் உள்ளனனோ என
அற்பனைக் கண்டு கொள்வேன்
பொன்னொளி தேயும் நிலை கடந்தே உன்னைப்
பூரண தோற்றமுடன்
தன்னந்தனி வானில் செல்லும் துயர்களைந்
துன்நிலை மாற்றிடுவேன்
சொன்னதும் வானிடை வந்தமுகில்மடி
சென்று விழுந்தநிலா
என்னவிதம் நீயும் எண்ணமெ டுத்தனை
என்று சிரித்தவளோ
கன்னமிடும் மனம்கொண்டு மாதரெழில்
கண்படக் கொள்வதன்றி
வன்மை மனங்கொண்டு வாழுங்குடி கொல்லும்
வக்கிர மானவன்நீ
என்னுடை மக்களை கொன்றதுண்டோ உந்தன்
எண்ணம் பிழைத்ததென்றான்
அன்னிய தேசத்தில் ஆசைகொண்டே அதை
ஆக்கிரமித்தவுடன்
மென்மைகொள் பெண்டிரின் மேனி வதைசெய்யும்
மேன்மையுடை அரசே
என்ன புதுமை நின்பஞ்சணையில் மட்டும்
இச்சை தவழ்வதென்ன
பொன்னும் மணியுடன் பட்டிலுடை கொண்டு
புன்னகையில் மயங்கி
தின்ன மதுகொண்டு செல்வமெனக் கொஞ்சி
தேன்நில வென்றவளைத்
தன்னலம் கொண்டு தவிததவள் பார்வையில்
தன்னை யிழக்கும் உன்னை
என்னொளி தந்துமுன் தேசம் திகழ்வது
எத்தனை பாவம் என்றாள்
சின்னஇடை மாதர் சூழுலகெங்கணும்
சென்றிடும் தேசமெல்லாம்
அன்னை படைத்த ஒர் அற்புதச் சித்திரம்
ஆக்கி உயிரளிப்பர்
பன்மடங்காகிட பாலர் குழந்தைகள்
பல்கிப் பெருகவைக்கும்
உன்னத மாதரை உன்கொடு வாள்கொண்டு
எப்படி நீயழிப்பாய்
என்ன விலங்கினம் ஆயினும் தன்னினம்
என்னில் அழிப்ப தில்லை
சின்ன றிவுதனைக் கொள்ளினும் ஓரினம்
சென்று அதனினத்தை
வன்மை எதிரணி வாழும்நிலம் எந்தன்
விட்டொழி என்றலறி
மென்மை கொண்டவரைத் தாய் தங்கை பிள்ளையர்
மேனி கெடுப்பதில்லை
மன்னவனே உந்தன் மாசுகொண் டோர்படை
மண்ணில் பெரும் இழிமை
தன்னலப் பேய்களின் தாகம் உதிரம் கொள்
தன்மையில் பேய்கள்படை
புன்மைகொள்ளும் உந்தன் தேசம் வந்தேகொண்டேன்
பாரில் பெரும் பழியை
சின்னவனே நின்றன் பாவ மண்ணில்காய்ந்து
கொண்டேன் மென்மேலுங் கறை
---------------------*************************
22 Oct 2013, 14:19:27
to santhav...@googlegroups.com
கவிதை எழுதுவதற்கு கரு ஒன்றும் மனதில் தோன்றவில்லை. மனதில் ஒரு யோசனைதோன்றியது ஒன்றுமில்லாத கவிதை எழுதினால் எப்படியிருக்கும்?. மனதில் வந்த வரிகளைச் சொற்களைக் சிந்தனையின்றிக் கூட்டி எழுதினேன்
ஒன்றுமில்லாத அந்தம்
நீ நடந்த பாதையெங்கும் நிலவெறித்தது - அது
நெஞ்சில் மீண்டும் இன்சுகத்தை நேரெறித்தது
தீபரந்த வேளையென்று வான் ஒளிர்ந்தது - அங்கு
தேடிவந்த ஆதவனால் திங்கள் போனது
பூ நிறைந்த சோலையெங்கும் போயலைந்தது - தென்றல்
பூமணத்தைக் கேட்டு வாங்கிப் போட்டழித்தது
நாவினிக்க ஒர் சுகத்தைத் தேன் கொடுப்பது - போலும்
நாடிவந்து ஓர் இதத்தைப் பா கொடுத்தது
சூனியத்தில் ஓர் பெருத்த தீ எரிந்தது - அது
சுட்டபோது மேனியெங்கும் சூடெழுந்தது
ஆநிசப்த வான்பரப்பு ஆற்றல் கொண்டது - அது
யார் வகுத்ததோ மனத்தில் ஞானம் தந்தது
வானிலோடும் பூமியெங்கும் பாசம் பொங்குது - அது
வந்து மீண்டும் ஏன்மனத்தைப் பின்னிழுக்குது
ஏநிகர்த்த தேது அன்பு என்றும் நல்லது - அது
ஏறிவந்த ஏணிபோலும் வீழ்த்த வல்லது
கூவி நிற்கும் கோகிலத்தின் கீதம்கேட்குது - அது
கொண்டதென்ன யார் கொடுத்த தேனினிக்குது
ஆவின் பாலைப் போலஉள்ளம் ஆசைகொண்டது - அது
ஆகவெண்மை யாயிருக்க மாசு கண்டது
தாவிஓடும்மானினத்தின் தன்மைதோற்குது - பாரில்
தன்மை மாறி வெஞ்சினத்தின் கேடு வெல்லுது
பூவினாலே வாழ்வுகொள்ள காடு என்பது - மட்டும்
போதுமாம் சுதந்திரத்தைப் பார்த்தளித்தது
வாய் சிரிக்க உள்ளம்போலி வாழ்வு கண்டது - அது
வண்ணம் கொண்ட பூவைப் போலும் வாடிப்போனது
தூய வெண்கதிர் நினைந்து சுற்றும் உலகிது - தானும்
தோன்றும் மாயகற்பனைக்குச் சொந்தமானது
தாய் நினைத்ததென் இருத்தி வாழ்வளித்தது - பின்ன
தாய் நினைத்ததென் கருக்கி வாழ்வழிப்பது
பாய்விரித்த போது முன்னர் பூக் கிடந்தது - பின்னர்
பார்த்தபோது பூமறைந்து நோய் பரந்தது
மாயவாழ்வில் மந்திரத்தை யாருரைத்தது - அங்கு
மங்கை என்று பேரெடுத்துத் தோளிணைந்தது
சாயவென்று தோள்விரிப்பில் சார்ந்துகொண்டது - கூந்தல்
சாமரைக்கு நேர்நிகர்த்த சாயலானது
காயமிட்ட நெஞ்சில் தீபம் யார் வளர்த்தது - வானம்
காணும் தீயின் வெம்மை பட்டுத் தீபமாடுது
தோயும் இன்பம் தோல்விகண்டு தீயில் வேகுது - இந்த
தேகம் கொண்ட ஞாபகங்கள் என்னவாகுது
ஒன்றுமில்லாத அந்தம்
நீ நடந்த பாதையெங்கும் நிலவெறித்தது - அது
நெஞ்சில் மீண்டும் இன்சுகத்தை நேரெறித்தது
தீபரந்த வேளையென்று வான் ஒளிர்ந்தது - அங்கு
தேடிவந்த ஆதவனால் திங்கள் போனது
பூ நிறைந்த சோலையெங்கும் போயலைந்தது - தென்றல்
பூமணத்தைக் கேட்டு வாங்கிப் போட்டழித்தது
நாவினிக்க ஒர் சுகத்தைத் தேன் கொடுப்பது - போலும்
நாடிவந்து ஓர் இதத்தைப் பா கொடுத்தது
சூனியத்தில் ஓர் பெருத்த தீ எரிந்தது - அது
சுட்டபோது மேனியெங்கும் சூடெழுந்தது
ஆநிசப்த வான்பரப்பு ஆற்றல் கொண்டது - அது
யார் வகுத்ததோ மனத்தில் ஞானம் தந்தது
வானிலோடும் பூமியெங்கும் பாசம் பொங்குது - அது
வந்து மீண்டும் ஏன்மனத்தைப் பின்னிழுக்குது
ஏநிகர்த்த தேது அன்பு என்றும் நல்லது - அது
ஏறிவந்த ஏணிபோலும் வீழ்த்த வல்லது
கூவி நிற்கும் கோகிலத்தின் கீதம்கேட்குது - அது
கொண்டதென்ன யார் கொடுத்த தேனினிக்குது
ஆவின் பாலைப் போலஉள்ளம் ஆசைகொண்டது - அது
ஆகவெண்மை யாயிருக்க மாசு கண்டது
தாவிஓடும்மானினத்தின் தன்மைதோற்குது - பாரில்
தன்மை மாறி வெஞ்சினத்தின் கேடு வெல்லுது
பூவினாலே வாழ்வுகொள்ள காடு என்பது - மட்டும்
போதுமாம் சுதந்திரத்தைப் பார்த்தளித்தது
வாய் சிரிக்க உள்ளம்போலி வாழ்வு கண்டது - அது
வண்ணம் கொண்ட பூவைப் போலும் வாடிப்போனது
தூய வெண்கதிர் நினைந்து சுற்றும் உலகிது - தானும்
தோன்றும் மாயகற்பனைக்குச் சொந்தமானது
தாய் நினைத்ததென் இருத்தி வாழ்வளித்தது - பின்ன
தாய் நினைத்ததென் கருக்கி வாழ்வழிப்பது
பாய்விரித்த போது முன்னர் பூக் கிடந்தது - பின்னர்
பார்த்தபோது பூமறைந்து நோய் பரந்தது
மாயவாழ்வில் மந்திரத்தை யாருரைத்தது - அங்கு
மங்கை என்று பேரெடுத்துத் தோளிணைந்தது
சாயவென்று தோள்விரிப்பில் சார்ந்துகொண்டது - கூந்தல்
சாமரைக்கு நேர்நிகர்த்த சாயலானது
காயமிட்ட நெஞ்சில் தீபம் யார் வளர்த்தது - வானம்
காணும் தீயின் வெம்மை பட்டுத் தீபமாடுது
தோயும் இன்பம் தோல்விகண்டு தீயில் வேகுது - இந்த
தேகம் கொண்ட ஞாபகங்கள் என்னவாகுது
22 Oct 2013, 14:24:23
to santhav...@googlegroups.com
ஒரு திருத்தம் /ஆதவனால்/ என்பதை மாற்றிக்கொள்கிறேன்
திருத்தம்
ஒன்றுமில்லாத அந்தம்
நீ நடந்த பாதையெங்கும் நிலவெறித்தது - அது
நெஞ்சில் மீண்டும் இன்சுகத்தை நேரெறித்தது
தீபரந்த வேளையென்று வான் ஒளிர்ந்தது - அங்கு
தேடிவந்த செங்கதிரால் திங்கள் தேய்ந்தது
23 Oct 2013, 11:37:42
to santhav...@googlegroups.com
கண்ணே கண்ணுறங்காய்
சித்திரமே செங்கரும்பே சேர்ந்தாடும் மல்லிகையே
நித்திரையைக் கொள்வையடி நீர்விழிகள் ஊற்றுவதேன்
இத்தரையில் நீபிறந்தாய் ஈர்விழிகள் கண்டதெலாம்
அத்தனையும் துன்பமடி ஆறிமனம் கண்ணுறங்காய்
புத்திரியே பூமகளே பொல்லாயிப் பூமியிலே
கத்தியழும் காட்சிகளே காலையிலே சேதியடி
நித்திரையில் கண்ணயர்ந்தால் நெஞ்சமெலாம் பதறியழக்
கத்தியும் கொண்டோர் உருவம் கனவிலெனைத் துரத்துதடி
பத்திரிகை கையெடுத்தால் படத்துடனே வெடிகுண்டால்;
இத்தனைபேர் போனதென எண்ணிக் கணக்குரைப்பர்
சத்தமிட்டு அழுபவரும் சித்தமழிந் தாடுமிடம்
புத்தொளிவண் ணத்தொலைகாண் பெட்டிதரும் காட்சியடி
நித்தம்விழி காண்பதிலே நொந்துமனம் துடிதுடித்து
கொத்தும் விசஅரவமெனக் குலைநடுங்க வைக்குதடி
நித்தம் வருஞ் சேதியினை நீமறந்து கண்ணுறங்கு
அத்தனைக்கும் நீவருந்த ஆவி துடித்தஞ்சுமடி
சத்தியத்தின் ரூபமற்ற தத்துவமும் என்ன படி
மத்தியிலே அன்புஎனும் மாமருந்தே தேவையடி
சுத்தமென வாழ்நெறிகள் சொல்லிமனம் காப்பதற்கு
உத்தமரோ இவ்வுலகில் உள்ளனரோ .ஐயமடி
பெற்றவரின் குற்றமதோ பிள்ளைகளோ நாமறியோம்
குற்றமிடும் காட்சிகளில் கொண்டவரைத் தூண்டிவிட
பற்றெழத்துப் பாக்கியினைப் பெற்றழிக்கும் நாயகனை
முற்றும் முழுத்திரையினிலே முன்னெடுத்துக் காட்டுகிறார்
அற்றதிங்கே நீதியென அழுதுமென்ன ஆரமுதே
தொற்றியதோர் நோயாகித் துடிக்கு முயிர் வதைப்போரும்
இற்றைய நாள் தீரரென இம்சையிட்டுக் கொல்கலையை
பற்றியவர் வீரரெனப் பாரில் புகழ்ந் தேற்றுவதோ
கற்றறியக் கணனியொன்றைக் கைமடித்துத் தூக்கவெனப்
பொற்குலத்துப் பிள்ளையர்க்குப் பொருள்வழங்கப் போதைதரும்
உற்றதொரு குருதிதெறித் உடலமதில் குண்டு துளைத்
தற்றுயிரும் வீழ்த்துகின்ற தகமை பெற விளையாடி
பற்றெழவும் பாவியுடல் பதைபதைத்துக் கொல்வதினைச்
சுற்றுலகில் நாயகனாய் சொல்லாமல் உணர்வூட்டும்
வெற்றுலகின் வன்மைதனை விதைப்பவரோ பேருலகின்
முற்போக்கு வாதிகளும் மேலுலகாம் என் செய்வேன்
வித்தை யொன்று மில்லையடி வேந்தன் எனில் சொல்லும்வகை
உத்தரவென் றாணையிட ஊரையெலாம் கொன்றொழித்துப்
பைத்தியமாய் தேசமெலாம் படை நடந்த கேவலத்தை
சத்தியத்தின் செய்கையென சாற்றுவதும் வேடிக்கையோ
கொல்லுமொரு கொலைவெறிக்கு கூடியிந்த உலகமெலாம்
நல்லோர் பொற்கிழி யளித்து நாட்டியமும் ஆடுதெனில்
இல்லார் குணமெடுத்தோர் இயல்புடை நல் லோரெனவோ
எல்லாமோ எண்ணி விழி ஈரமெழ நீயழுதாய்
பொற்குவையே பேரழகுப் பேறேயென் புதுநிலவே
சொற்றமிழின் நற்கவியே சுந்தரமென் இதழ்குவித்து
வெற்றுவிழி செவ்வானச் சிவப்பெடுக்க நீயழுதால்
பெற்ற மனம்நோகுமடி பேசாமல் கண்ணுறங்காய்
******************************
24 Oct 2013, 02:10:55
to santhav...@googlegroups.com
இது திரும்பிப் பார்க்கிறேன். அன்று எழுதிய உருவகக் கவிதை. இதைஎழுதத் தொடங்கும்போது எந்த எண்ணமுமில்லை .முடித்தபின்னால் தோன்றியது ஆகா
பரவாயில்லையே என்று.. ஞாபகப்படுத்திய நண்பருக்கு நன்றிகள்
ஒரு பூவின் காதல் கதை
********************
பரவாயில்லையே என்று.. ஞாபகப்படுத்திய நண்பருக்கு நன்றிகள்
ஒரு பூவின் காதல் கதை
பூக்கள் மலர்ந்தன பொன்னொளி தோன்றிட
போனது காரிருளும்
தீக்குளித்தே யொருசெந்நிற மேனியன்
திக்கில் கிழக்கெழுந்தான்
நோக்கி யவன்வர வெண்ணி மலரொன்று
நெய்யிதழ் தானவிழ்க்க
போக்கில் பறந்திட்ட போதைகொண்ட வண்டு
பூவைச் சுவைக்க வந்தான்
ஆற்றாமை கொண்டிளம் பூவெனும் பொன்மகள்
அஞ்சிக்கண் ணீர் சொரிய
காற்றெனும் காவலன் கண்டு சினம்கொண்டு
கற்பினைக் காக்க வந்தான்
சீற்றமுடன் விசைகொண்டு குலுக்கிட
சென்றது வண்டெழுந்து
போற்றி மனம்நன்றி கூறிக் கொடிமலர்
பூரிப்பிலாடி நின்றாள்
வார்த்தை யொன்று அந்தபூமகள் கூறவே
வானத் தலைவனிடம்
நீர்குளமாகிட விம்மும் மலர்கொண்ட
நேசமுரைப்பதற்கு
தேர்சில்லு மில்லா ரதமெடுத்துக் கீழைத்
திக்கி லுயர்ந்து வரும்
கூரொளி ஆதவன் காதில் உரைத்திடக்
கோல விண்ணில் எழுந்தான்
பார்த்திருந்த பகை மேகமொன்று
பழியானது கொண்டயலில்
சேர்ந்தொளி வெய்யோன்வழி மறைத்தேயிடை
சென்றுமுன்னே மறைத்தும்
கார் திரள்மேகக் கறுத்தவனோ மலர்
காண சபலம் கொண்டு
நீர்த்துளிகள் என்னும் நீள்கரம் நீட்டியே
நேரில் தழுவிகொண்டான்
போர்க்குணம் கொண்டவன்காற்றும் சினம்கொண்டு
பொல்லாச் சுழலெடுத்து
ஆர்த்தெழுந்தே அவன் ஆடியவேகத்தில்
அண்டம் கிடுகிடுக்க
சேர்ந்தமுகில் விரைந் தோடியும் போனது
தெற்குத்திசை வழியே
தேக்குமரங்களும் மூங்கில் வளர் கரும்
தூரடர் காட்டுக்குள்ளே
காலையில் பூவிடம் கண்ணியம் காத்திட்ட
காதலன் சூரியனோ
மேலை வானமெழ கொண்டபொறாமையில்
மேனி அனல் தெறிக்க
ஆலை உருக்கு மிரும்பெனச் சுட்டனன்
ஆயினும், காற்றிவனோ
சோலைமலருக்கு பொய்கை குளிர்கொண்டு
தேகம் துடைத்துவிட்டான்
பூவையின் காவலன் போதுமினிஅவள்
பட்ட துயரமெல்லாம்
பாவையின் உள்ளம் பரிதவிக்கு மவள்
பாசமிருந்த தென்றால்
தேவை நிரந்தர காவலெனில் அவள்
தேடும் துணை கொடுப்பேன்
சேவைசெய்வேன் அவள் சித்தமென்றால் மணம்
கொள்வேன் என்நினைத்தான்
சின்னமலர் மனம் எண்ணியது தென்றல்
செய்திடும் வீரமெல்லாம்
என்ன சினம்கொண்டு ஓங்கிஅடித்திடும்
உள்ளம் வருடுவதும்
என்னை அவர்அன்பு கொண்டதனாலேயே
இத்தனை யாகிநின்றார்
தன்னை மணந்திடுவார் என நம்பியும்
தன்னெழில் வாசமீந்தாள்
காற்று விரைந்தது காத்துக் கிடந்த பூ
கண்டு மலர்ந்துகொண்டாள்
ஊற்று என இரு உள்ளத்தில் இன்பமும்
ஓடிப் பெருகி வர
வேற்றுமை காணா விருவரும் காதலில்
வீழ்ந்து கிடந்தனராம்
ஈற்றில் மலர்மணம் கொண்டனன் காற்றென
ஊரில் பசப்பி நின்றார்
கட்டியணைத்தவன் காற்றெனவே காலைக்
கட்ட முடிய வில்லை
விட்டுச் சுழன்றதி காலையிலே என்ன
சேதிகள் காணச் சென்றான்
வட்டமிட்டு அவன் வந்தபொழுதினில்
வண்ண மலரதுவோ
நெட்டுஇருந்தது பூவில்லை மானிடர்
வெட்டி எடுத்துவிட்டார்
கோபமெடுத்தது காற்று பெரும்புயல்
கூவிச்சுழன்றடித்து
கோபுரம் கூரைகள் கொட்டில் கதவெனக்
கொண்டவை பிய்த்தெடுத்து
சாபமிட்டே மரம்வீழ்த்தி அழுதது
யாரடா சொல்லு என்று
பாவமிழைத்த மனிதரோ சொல்லினர்
பேய்க்குணம் காற்றுக்கென்று
போனது காரிருளும்
தீக்குளித்தே யொருசெந்நிற மேனியன்
திக்கில் கிழக்கெழுந்தான்
நோக்கி யவன்வர வெண்ணி மலரொன்று
நெய்யிதழ் தானவிழ்க்க
போக்கில் பறந்திட்ட போதைகொண்ட வண்டு
பூவைச் சுவைக்க வந்தான்
ஆற்றாமை கொண்டிளம் பூவெனும் பொன்மகள்
அஞ்சிக்கண் ணீர் சொரிய
காற்றெனும் காவலன் கண்டு சினம்கொண்டு
கற்பினைக் காக்க வந்தான்
சீற்றமுடன் விசைகொண்டு குலுக்கிட
சென்றது வண்டெழுந்து
போற்றி மனம்நன்றி கூறிக் கொடிமலர்
பூரிப்பிலாடி நின்றாள்
வார்த்தை யொன்று அந்தபூமகள் கூறவே
வானத் தலைவனிடம்
நீர்குளமாகிட விம்மும் மலர்கொண்ட
நேசமுரைப்பதற்கு
தேர்சில்லு மில்லா ரதமெடுத்துக் கீழைத்
திக்கி லுயர்ந்து வரும்
கூரொளி ஆதவன் காதில் உரைத்திடக்
கோல விண்ணில் எழுந்தான்
பார்த்திருந்த பகை மேகமொன்று
பழியானது கொண்டயலில்
சேர்ந்தொளி வெய்யோன்வழி மறைத்தேயிடை
சென்றுமுன்னே மறைத்தும்
கார் திரள்மேகக் கறுத்தவனோ மலர்
காண சபலம் கொண்டு
நீர்த்துளிகள் என்னும் நீள்கரம் நீட்டியே
நேரில் தழுவிகொண்டான்
போர்க்குணம் கொண்டவன்காற்றும் சினம்கொண்டு
பொல்லாச் சுழலெடுத்து
ஆர்த்தெழுந்தே அவன் ஆடியவேகத்தில்
அண்டம் கிடுகிடுக்க
சேர்ந்தமுகில் விரைந் தோடியும் போனது
தெற்குத்திசை வழியே
தேக்குமரங்களும் மூங்கில் வளர் கரும்
தூரடர் காட்டுக்குள்ளே
காலையில் பூவிடம் கண்ணியம் காத்திட்ட
காதலன் சூரியனோ
மேலை வானமெழ கொண்டபொறாமையில்
மேனி அனல் தெறிக்க
ஆலை உருக்கு மிரும்பெனச் சுட்டனன்
ஆயினும், காற்றிவனோ
சோலைமலருக்கு பொய்கை குளிர்கொண்டு
தேகம் துடைத்துவிட்டான்
பூவையின் காவலன் போதுமினிஅவள்
பட்ட துயரமெல்லாம்
பாவையின் உள்ளம் பரிதவிக்கு மவள்
பாசமிருந்த தென்றால்
தேவை நிரந்தர காவலெனில் அவள்
தேடும் துணை கொடுப்பேன்
சேவைசெய்வேன் அவள் சித்தமென்றால் மணம்
கொள்வேன் என்நினைத்தான்
சின்னமலர் மனம் எண்ணியது தென்றல்
செய்திடும் வீரமெல்லாம்
என்ன சினம்கொண்டு ஓங்கிஅடித்திடும்
உள்ளம் வருடுவதும்
என்னை அவர்அன்பு கொண்டதனாலேயே
இத்தனை யாகிநின்றார்
தன்னை மணந்திடுவார் என நம்பியும்
தன்னெழில் வாசமீந்தாள்
காற்று விரைந்தது காத்துக் கிடந்த பூ
கண்டு மலர்ந்துகொண்டாள்
ஊற்று என இரு உள்ளத்தில் இன்பமும்
ஓடிப் பெருகி வர
வேற்றுமை காணா விருவரும் காதலில்
வீழ்ந்து கிடந்தனராம்
ஈற்றில் மலர்மணம் கொண்டனன் காற்றென
ஊரில் பசப்பி நின்றார்
கட்டியணைத்தவன் காற்றெனவே காலைக்
கட்ட முடிய வில்லை
விட்டுச் சுழன்றதி காலையிலே என்ன
சேதிகள் காணச் சென்றான்
வட்டமிட்டு அவன் வந்தபொழுதினில்
வண்ண மலரதுவோ
நெட்டுஇருந்தது பூவில்லை மானிடர்
வெட்டி எடுத்துவிட்டார்
கோபமெடுத்தது காற்று பெரும்புயல்
கூவிச்சுழன்றடித்து
கோபுரம் கூரைகள் கொட்டில் கதவெனக்
கொண்டவை பிய்த்தெடுத்து
சாபமிட்டே மரம்வீழ்த்தி அழுதது
யாரடா சொல்லு என்று
பாவமிழைத்த மனிதரோ சொல்லினர்
பேய்க்குணம் காற்றுக்கென்று
********************
24 Oct 2013, 12:12:46
to santhav...@googlegroups.com
இது புதியது இன்றைய கவிதை
என்னாவேன்
தேடிப் பார்த்தேன் திக்கெட்டெங்கும்
தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
வகையேன் விடைகேட்டேன்
கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
சலனம் எதுகாணேன்
சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
காற்றை விடைகேட்டேன்
நானாய் இன்றும் கண்டேன் நாளை
நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
தருணம் என்னாவேன்
நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
பனியென் றழிவாமோ
வெள்ளை நிறமும் விடிவான் செம்மை
விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை
குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர்
பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
தெரியாப் போமாமோ
எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
மயங்கும் விடைகாணேன்
மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள் உணர்வும் கற்பனை கொண்டும்
காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
நெஞ்சம் என்செய்யும்
என்னாவேன்
தேடிப் பார்த்தேன் திக்கெட்டெங்கும்
தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
வகையேன் விடைகேட்டேன்
கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
சலனம் எதுகாணேன்
சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
காற்றை விடைகேட்டேன்
நானாய் இன்றும் கண்டேன் நாளை
நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
தருணம் என்னாவேன்
நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
பனியென் றழிவாமோ
வெள்ளை நிறமும் விடிவான் செம்மை
விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை
குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர்
பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
தெரியாப் போமாமோ
எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
மயங்கும் விடைகாணேன்
மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள் உணர்வும் கற்பனை கொண்டும்
காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
நெஞ்சம் என்செய்யும்
24 Oct 2013, 15:40:16
to santhav...@googlegroups.com
இது புதியது இன்றைய கவிதை
என்னாவேன்
தேடிப் பார்த்தேன் திக்கெட்டெங்கும்
தெரியா விடைகொண்டேன்
.
24 Oct 2013, 18:04:33
to சந்தவசந்தம்
25 Oct 2013, 18:38:06
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! மகிழ்வு கொண்டேன்.
25 Oct 2013, 18:39:53
to santhav...@googlegroups.com
மிக மகிழ்வடைந்தேன். அன்புடன் அளவற்ற நன்றிகள் கூறிக் கொள்கிறேன்
அன்புடன் கிரிகாசன்
25 Oct 2013, 18:52:44
to santhav...@googlegroups.com
இதை எழுதும்போது பெரிதாக வந்துவிட்டதால் இரண்டு பிரிவாக்கி இடுகிறேன்
தேடியதும் நாடுவதும் (1ம் பகுதி)
உள்ளம் பிழிந்தினி சொல்லுங் கவிதைக்கு
உட் பொருள் தேடி நின்றேன் - ஒரு
கொள்ளை எழில்மலர் கூடிப்பொ லிந்தபூங்
காவினுள்ளே நடந்தேன் -அங்கு
அள்ளும் மனதெழில். ஆனந்தபோதைகொண்
டாட மலர்கள் கண்டேன்- இனி
கள்ளினைத் தேக்கிய வெண்மலர்காள் ஒரு
கற்பனை தாருமென்றேன்
வெள்ளை மலரொன்று வேடிக்கை நோக்குடன்
விந்தை உணர்வு கொண்டு -ஏது
தெள்ளத் தெளிவின்றி கூறுவதென் உந்தன்
தேவையும் என்னவென்றாள் - ஆகா
அள்ளக் குறைவற்ற பேரழகி நானும்
அன்னைத் தமிழ்க் கவிக்கோர் - நின்றன்
கள்ளின்சு வையொத்த உட்பொருளில் ஓரு
கற்பனை தேடுகிறேன்
நள்ளிரவில் மின்னும் தாரகை போலந்த
நன்னெழிற் பூவருகில் - மெல்லக்
கள்ளச் சிரிப்பென்றைக் காற்றில்விடுத் தயல்
காணும் சிவந்தமலர் - விரல்
கிள்ளிவிட்ட கன்னச் செம்மையுடன் கண்டு
கற்பனை யாமறியோம் - இங்கு
உள்ள தெல்லா முண்மை தானறிவோம் அதில்
என்றும் மலர்ந்தோ மென்றாள்
எள்ளவும் துய ரேதுமற்ற அந்த
இன்மல ரண்டை விட்டு - கரம்
அள்ளிச் சிறுபிள்ளை குங்குமமும் கொட்டி
அப்பிய கன்னமென - தரும்
உள்ளமதில் அச்சம் ஊற்றெழவே கதிர்
ஓடியெழ முன்னதாய் -பெரு
வெள்ளமெனச் சிவந் தோடும் முகில் கண்டு
விண்ணை ரசித்து நின்றேன்
வெள்ளிக் கொலுசுகள் துள்ளிக் குதிக்குமவ்
வேளை தனில்எழுமே - அந்த
அள்ளிச் சிதறிடும் ஆரவாரத்தொடு
ஆலமரக் கிளை யில் - சிறு
புள்ளின கூட்டமும் புத்துணர்வில் வானம்
போகுமவ் வேளையிலே -அயல்
தள்ளியோர் புள்ளிசை கானம்படித்துப் பின்
தம்மினம் சேரக்கண்டேன்
(குருவி பாடியது)
நெல்லிருக்கும் தேசம் தேடிப் போகிறோம் - இந்த
நீல விண்ணிலே எழுந்தே ஏகுவோம்
நல்முதிர்ந்த நெற்கதிர்கள் கண்டிடில் -அதை
நாடியுண்டு வீடு வந்துசேருவோம்
இல்லையென்ற கற்பனைக்குள் மூழ்குவோம் - இன்னும்
எல்லையற்று நாடுதாண்டி ஓடுவோம்
அல்ல லற்ற ஆனந்தமாம் வாழ்விலே - கண்டு
அன்பு கொண்டும் ஒன்றுகூடிக் காண்கிறோம்
நல்லவர்தம் நாட்டில் நின்று பாடுவோம்- அந்த
நாட்டிலெங்கும் பச்சைவளம் காண்கிறோம்
அல்லவரின் தேசம் கூடச் செல்கிறோம் - அங்கு
அன்னமின்றி ஏங்கும் மக்கள் நோகிறோம்
சொல்லவல்ல தூயமனம் கொண்டவர் - எங்கும்
தோல்விகொள்ளத் தீயவர்கள் வெல்வதும்
எல்லயற்ற கற்பனை இல் உண்மைதான் - கண்டு
ஏங்கி விழி சோர்ந்து வீடு செல்லுவோம்
********
சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
சிந்தை பறிகொடுத்தேன் -அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
காணவென் றாசை கொண்டேன்
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
அன்னையா கட்டுமென்றாள்
(அடுத்ததில் முடியும்)
தேடியதும் நாடுவதும் (1ம் பகுதி)
உள்ளம் பிழிந்தினி சொல்லுங் கவிதைக்கு
உட் பொருள் தேடி நின்றேன் - ஒரு
கொள்ளை எழில்மலர் கூடிப்பொ லிந்தபூங்
காவினுள்ளே நடந்தேன் -அங்கு
அள்ளும் மனதெழில். ஆனந்தபோதைகொண்
டாட மலர்கள் கண்டேன்- இனி
கள்ளினைத் தேக்கிய வெண்மலர்காள் ஒரு
கற்பனை தாருமென்றேன்
வெள்ளை மலரொன்று வேடிக்கை நோக்குடன்
விந்தை உணர்வு கொண்டு -ஏது
தெள்ளத் தெளிவின்றி கூறுவதென் உந்தன்
தேவையும் என்னவென்றாள் - ஆகா
அள்ளக் குறைவற்ற பேரழகி நானும்
அன்னைத் தமிழ்க் கவிக்கோர் - நின்றன்
கள்ளின்சு வையொத்த உட்பொருளில் ஓரு
கற்பனை தேடுகிறேன்
நள்ளிரவில் மின்னும் தாரகை போலந்த
நன்னெழிற் பூவருகில் - மெல்லக்
கள்ளச் சிரிப்பென்றைக் காற்றில்விடுத் தயல்
காணும் சிவந்தமலர் - விரல்
கிள்ளிவிட்ட கன்னச் செம்மையுடன் கண்டு
கற்பனை யாமறியோம் - இங்கு
உள்ள தெல்லா முண்மை தானறிவோம் அதில்
என்றும் மலர்ந்தோ மென்றாள்
எள்ளவும் துய ரேதுமற்ற அந்த
இன்மல ரண்டை விட்டு - கரம்
அள்ளிச் சிறுபிள்ளை குங்குமமும் கொட்டி
அப்பிய கன்னமென - தரும்
உள்ளமதில் அச்சம் ஊற்றெழவே கதிர்
ஓடியெழ முன்னதாய் -பெரு
வெள்ளமெனச் சிவந் தோடும் முகில் கண்டு
விண்ணை ரசித்து நின்றேன்
வெள்ளிக் கொலுசுகள் துள்ளிக் குதிக்குமவ்
வேளை தனில்எழுமே - அந்த
அள்ளிச் சிதறிடும் ஆரவாரத்தொடு
ஆலமரக் கிளை யில் - சிறு
புள்ளின கூட்டமும் புத்துணர்வில் வானம்
போகுமவ் வேளையிலே -அயல்
தள்ளியோர் புள்ளிசை கானம்படித்துப் பின்
தம்மினம் சேரக்கண்டேன்
(குருவி பாடியது)
நெல்லிருக்கும் தேசம் தேடிப் போகிறோம் - இந்த
நீல விண்ணிலே எழுந்தே ஏகுவோம்
நல்முதிர்ந்த நெற்கதிர்கள் கண்டிடில் -அதை
நாடியுண்டு வீடு வந்துசேருவோம்
இல்லையென்ற கற்பனைக்குள் மூழ்குவோம் - இன்னும்
எல்லையற்று நாடுதாண்டி ஓடுவோம்
அல்ல லற்ற ஆனந்தமாம் வாழ்விலே - கண்டு
அன்பு கொண்டும் ஒன்றுகூடிக் காண்கிறோம்
நல்லவர்தம் நாட்டில் நின்று பாடுவோம்- அந்த
நாட்டிலெங்கும் பச்சைவளம் காண்கிறோம்
அல்லவரின் தேசம் கூடச் செல்கிறோம் - அங்கு
அன்னமின்றி ஏங்கும் மக்கள் நோகிறோம்
சொல்லவல்ல தூயமனம் கொண்டவர் - எங்கும்
தோல்விகொள்ளத் தீயவர்கள் வெல்வதும்
எல்லயற்ற கற்பனை இல் உண்மைதான் - கண்டு
ஏங்கி விழி சோர்ந்து வீடு செல்லுவோம்
********
சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
சிந்தை பறிகொடுத்தேன் -அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
காணவென் றாசை கொண்டேன்
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
அன்னையா கட்டுமென்றாள்
(அடுத்ததில் முடியும்)
26 Oct 2013, 14:30:30
to santhav...@googlegroups.com
இரண்டாம் பகுதி
தேடியதும் நாடுவதும் ( 2ம் பகுதி)
சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
சிந்தை பறிகொடுத்தேன் - அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
காணவென் றாசை கொண்டேன் -அந்த
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
அன்னையா கட்டுமென்றாள்
***********( விடியலுக்கு சற்றுமுன்)
கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
தேகம் மெலிந்ததுவோ
தள்ளிக் கிடந்தது தாமரை நீரென
தண்ணிலா வான்.குளத்தில்- அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
கோலமதி மறைந்தாள்
நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர்
பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே கொள்ள
ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
காக வடிவெடுக்க
செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
எண்ணம் தவிராய் என்றாள்
எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
என்னைக் கண்டுசினந்தான் - அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
வன்மைகள் மெய்யுரைப்பீர்
கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
` கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே
சொல் லெனத்தான் சினந்தான்
தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
. கீழ்மையை என்னுரைப்பேன்
சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை அங்கு
ஏதுசெய்வ தறியேன்
தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு
நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
சேதியென் றாகுமன்றோ
நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி
தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
என்னிடமில்லை யென்றேன்
கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
நிலையற்றுத் தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
தூரிகை கொண்டமைத்தேன்
கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
தேகம் மெலிந்ததுவோ
தள்ளிக் கிடந்தது தாமரை நீரென
தண்ணிலா வான்.குளத்தில்- அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
கோலமதி மறைந்தாள்
நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர்
பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே கொள்ள
ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
காக வடிவெடுக்க
செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
எண்ணம் தவிராய் என்றாள்
எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
என்னைக் கண்டுசினந்தான் - அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
வன்மைகள் மெய்யுரைப்பீர்
கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
` கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே
சொல் லெனத்தான் சினந்தான்
தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
. கீழ்மையை என்னுரைப்பேன்
சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை அங்கு
ஏதுசெய்வ தறியேன்
தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு
நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
சேதியென் றாகுமன்றோ
நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி
தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
என்னிடமில்லை யென்றேன்
கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
நிலையற்றுத் தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
தூரிகை கொண்டமைத்தேன்
27 Oct 2013, 08:12:45
to santhav...@googlegroups.com
முடி தலையெடு
நாளையென் றானது நாளை வந்தேகுமோ
நடப்பது தெரியாது
வேளை யென்றாலதில் விடிவது தோன்றுமோ
விளக்கிடும் நிலையேது
பேழையுள் காண்பது பொற்குவையோ விசப்
பாம்பென தெரியாது
மூளையில் தோன்றிடும் ஊகங்கள் உண்மையின்
முடிவென ஆகாது
மேளங்கள் கேட்டணி மாலைகள் சூட்டினும்
மனமொன்றி இணையாது
தாளங்கள் போடினும் தவறுகளே வரும்
தருமுற விணையாது
வேழங்கள் ஏகிடும் வேளையில் பாதையில்
விளைபயிர் பிழையாது
நீளங்க ளாகிடும் துன்பங்கள் மாற்றிட
நினை வெழு செயலாற்று
வீழ்பனி தூங்கிடும் விடிகதி ரோன்வர
விரும்பியும் நிலையாது
கேளினி தூங்கிடும் காலமும் நிலைத்திடில்
கிழக்கது விடியாது
வாழினி வந்தவன் வாட்டிடும் வேதனை
வரைமுறை தனைமீறில்
தோழெடு வீரமும் துணிவொடு கூறிடு
தமிழெனும் நம்நாடு
நீள் வழி என்றிதில் நீசெல்ல அஞ்சிடில்
நிலைப்பது துயர்வாழ்வு
காழ்வொடு பகைவனும் காணிகள் தோட்டங்கள்
கவர்ந்திடப் போராடு
மூள்பெருந் தீயுடன் மனமெழுந் தாலன்றி
முனைந்திடப் பெருவா ழ்வு
சூழ் கலிமேதினி மீதினி லாகுமோ
துணி இடி புயலாகு
வாழ்வது சுதந்திர வாழ்வில்லையா பெற
வரைமுறை விதியேது
கூழ் குடித்தே சிறு குடிசையில் தூங்கினும்
கொள்வது பெருவாழ்வு
பாழ்படப் பேரர சானது பலியிடப்
பார்த்தும் பின் தூங்காது
மீழ்,வரும் நாளினில் மேன்மைகொள் தமிழவர்
முடியொடு அரசாளு!
******************************
நாளையென் றானது நாளை வந்தேகுமோ
நடப்பது தெரியாது
வேளை யென்றாலதில் விடிவது தோன்றுமோ
விளக்கிடும் நிலையேது
பேழையுள் காண்பது பொற்குவையோ விசப்
பாம்பென தெரியாது
மூளையில் தோன்றிடும் ஊகங்கள் உண்மையின்
முடிவென ஆகாது
மேளங்கள் கேட்டணி மாலைகள் சூட்டினும்
மனமொன்றி இணையாது
தாளங்கள் போடினும் தவறுகளே வரும்
தருமுற விணையாது
வேழங்கள் ஏகிடும் வேளையில் பாதையில்
விளைபயிர் பிழையாது
நீளங்க ளாகிடும் துன்பங்கள் மாற்றிட
நினை வெழு செயலாற்று
வீழ்பனி தூங்கிடும் விடிகதி ரோன்வர
விரும்பியும் நிலையாது
கேளினி தூங்கிடும் காலமும் நிலைத்திடில்
கிழக்கது விடியாது
வாழினி வந்தவன் வாட்டிடும் வேதனை
வரைமுறை தனைமீறில்
தோழெடு வீரமும் துணிவொடு கூறிடு
தமிழெனும் நம்நாடு
நீள் வழி என்றிதில் நீசெல்ல அஞ்சிடில்
நிலைப்பது துயர்வாழ்வு
காழ்வொடு பகைவனும் காணிகள் தோட்டங்கள்
கவர்ந்திடப் போராடு
மூள்பெருந் தீயுடன் மனமெழுந் தாலன்றி
முனைந்திடப் பெருவா ழ்வு
சூழ் கலிமேதினி மீதினி லாகுமோ
துணி இடி புயலாகு
வாழ்வது சுதந்திர வாழ்வில்லையா பெற
வரைமுறை விதியேது
கூழ் குடித்தே சிறு குடிசையில் தூங்கினும்
கொள்வது பெருவாழ்வு
பாழ்படப் பேரர சானது பலியிடப்
பார்த்தும் பின் தூங்காது
மீழ்,வரும் நாளினில் மேன்மைகொள் தமிழவர்
முடியொடு அரசாளு!
******************************
27 Oct 2013, 12:59:53
to santhav...@googlegroups.com
காற்றில் வரும் கனவுப்பெண் (சின்னத்திரை)
நேற்று நடந்தாள் இன்று நடந்தாள்
நாளையும் நடைகொள்வாள்
காற்றினில் வீழும் மென்னிலைபோலும்
காலத்தி லசைகின்றாள்
ஊற்றிடும் அருவி போல்மொழி பகர்வாள்
ஒளிவிழி குளமாவாள்
ஈற்றினில் போகும் இடமென்னஅறியேன்
இதயத்தின் துடிப்பாவாள்
ஆற்றென நீர்விழி பொழிகின்றாள் அவள்
அழுகையின் மெருகேற்றி
கூற்றினில் வன்மையும் கொள்ளுகிறாள் இக்
குணவதி நிலைமாறி
தோற்றமும் அன்பெனும் பண்புடையாள் இங்கு
துயரமே கதியாகி
ஆற்றலும் தீரமும் கொண்டவளோ அதை
அழிவுக்கு துணையாக்கி
சேற்றிலும் வளரும் தாமாரையாம் இவள்
சிறுகுளம் சேறாக்கி
மாற்றமென்றே மனை ஆளுபவள் பெரும்
மாயைகொள் கதைபேசி
வேற்றுமனம் வினையாக்கலென பல
விந்தைகொள் பெண்ணாகி
ஏற்றமும் தாழ்வு மிழைத்தவளாம் அயல்
இன்குடி கெடுக்கின்றாள்
சீற்றமும் கொள்வாள் சினந்தெழுவாள் இவள்
செய்வினை கொடிதாகும்
கூற்றுவன் வேலை கையெடுப்பாள் நிதம்
கொடுமையில் மனையாளும்
பேற்றுடையாள் பெரும் வாக்குடையாள் ஏன்
பிணியொடு நினைவாகி
தோற்றமும் கொள்வாள் ஒளிக்காட்சித் தொலைத்
தொடர்களின் இளவரசி
******************
28 Oct 2013, 17:49:25
to santhav...@googlegroups.com
பெண்களே வாழ்மின்!
காற்றும் காற்றுடை வாசம் கனிகளின் கூட்டம்
கனவெனும் மனவுணர்வும்
ஊற்றும் குளிர்தரு மோடை உறைபனிக் கூட்டம்
இயற்கை யென்றாக்கியவள்
மாற்றம் மனதுகொள் வேட்கை மலர்வினில் நாட்டம்
மகிழ்வெழ இன்பமிட்டும்
தோற்றும் துயரெழும் தாக்கம் துடித்திடும் இதயம்
துவளென உணர்வளித்தாள்
நாற்றம் மதுமலர் தேக்கம் நனையிதழ் ஊட்டம்
நாடிடும் வண்டினமும்
போற்று மெழில்சுனை ஆட்டம் புதிதெழும் காற்றும்
புரள் அலையோட்டமென
சாற்றும் மொழிதரும் பாட்டும் முழவொலி கேட்டும்
மனமெழும் தீரமுடன்
நேற்றும் இன்றுடன் நாளை நிகழ்வது யாவும்
நிலைகொள வழிசமைத்தாள்
சீற்றம் இடியொளி மின்னல் சொரிமழை வானம்
சிதறிடும் மர இலைகள்
ஆற்றும் செயலிவை யாவும் அவனியில் சேரும்
இயற்கையின் கடமைகளே
ஏற்கும் உடைகளும் உண்ணும் உணவுடன் இனிமை
உறவுகள் அவள்தரவே
கூற்றன் கொடிதெனும் பாசக் கயிறிட கொள்ளும்
கணம்வரை உயிரளித்தாள்
ஏற்றம் எழவிழும் தாக்கம் இழிமையின் துச்சம்
இவைதரும் உணர்வழிய
மேற்கும் மறைகதிர் போக்கும் மதியின் பொன்கீற்றும்
மகிழ்வுள்ளம் ஆக்கிவிட்டு
நூற்கும் நூலிழை சேர்க்கும் நாற்குணப் பெண்மை
நினைவுகள் இனிமை யென்றாள்
போற்றும் செயலதும் புகழும் இயற்கையின்
புலமை கவிஞரின் வழக்கமன்றோ
பெண்ணும் பெண்ணவள் பேச்சும் பேச்சினில் மாற்றம்
பெரிதெழ ஆக்கியவள்
மண்ணும் மண்விழை பொன்னும் பொன்முடி அரசும்
படையுடன் போரெனவும்
எண்ணும் மனதினில் இன்பம் இளமை யின் எண்ணம்
இவைகளில் சாம்ராஜ்ஜம்
திண்ணம் விழநிலை கொள்ளும் திறனுடை0 பெண்ணும்
தேர்ந்திட அழகீந்தாள்
முன்னும் கண்விழி அம்பும் மெய்யிடை போரும்
மூளென தீயிடுவாள்
என்னும் வலிமையும் கொண்டால் இகமதில் இன்னும்
எழும் வலி இவள் கொண்டால்
தன்னும் தன்நிலை- பேணுந் தன்மையில் ஆளும்
தகமையைக் கொள்வளெனில்
மின்னும் தாரகையல்லள் மேதினி கொள்ளும்
இன்னொரு சுடராவாள்
30 Oct 2013, 07:43:21
to santhav...@googlegroups.com
புதுத்தம்பதியினர் திருமணம் முடிந்து வண்டியில் செல்லும் காட்சி
புதிய பாதை
காலைத் தூக்கித் தாளம்தட்டிக் காளை இரண்டு முன்னே பூட்டிக்
காலை நேரம் சாலையோர மோடுது வண்டி -அதைக்
காண நெஞ்சம் துள்ளுதடா கடகடவென்றே
வாலை யாட்டி மூச்சுமுட்ட வண்டிமுன்னே தோளுயர்த்தி
வைத்தடிக்கு நல்லமாடு வேகமுங் கூட்டி -அது
வந்த காற்றை மோதி வென்று ஓடுது பார்நீ
சேலை கட்டும் மாதொருத்தி சின்னப்பெண்ணைத் தாலிகட்டிச்
சேர்ந்துவாழ இரண்டுபேரும் ஆசையில்கூடி அங்கு
செல்லுகின்ற வண்டி மீது உள்ளதைப் பார்நீ!
மாலை மாற்றிக் கைபிடித்து மங்கை நெற்றி பொட்டுமிட்டு
மாது காதல் கொண்ட அந்த மன்னவன்நாடிச் - செல்ல
மாந்தர்கூடி வாழ்த்துன்றார் மங்கலம்பாடி
ஓலைமீது ஓடிவீழும் கூரைசொட்டும் தூறல் போல
ஓரக் கண்ணிலூறும் நீரைக் கீழே விழுத்தி - அன்னை
ஊரை விட்டுப போவதென்று வாடும் ஒருத்தி
பாலைப் போலும் உள்ளங் கொண்டு பாதைமீது ஆடிநின்று
பாட்டுப்பாடி ஓடும் சின்னக் கூட்டமும் கண்டு - அந்தப்
பேதையுள்ளம் மீண்டுங் காணும் ஆனந்தம் கொண்டு
சோலைக் காற்றும் வீசக்கொப்பில் தொங்கியாடும் மந்திஒன்று
சுத்தமான தேனடையை உண்டதன் பின்பு ஆடிச்
சோர்ந்து போகும்போது காணும் தன்மையுங் கொண்டு
சாலையோடு போகும்வண்டி சடசடத்த ஒட்டம்மாறிச்
சற்று சோர்ந்து போனதென்ன வீதியில் இறங்கி - அது
செல்லும்பாதை கோவில்பக்கம் மண் அணைவீதி
துள்ளும்காளை தாளங்கேட்டு தூரநின்று கூவும் பட்சி
துள்ளிசைக்குக் கூச்சலிட்டு பாடுதுகத்தி - அயல்
தோழமை கொண்டான தொன்று கொஞ்சுது முட்டி
முள்ளைத் தன்னில் கொண்டதாளை மூடிஎங்கும் கூரைநீட்டி
முன்னிருக்க பாம்புஒன்று போகுது சுற்றி - அது
மௌனத்தாலே சொல்லும் சேதி நெஞ்சினில் பற்றி
வெள்ளை நீல வான் பறக்கும் விட்ட பஞ்சு கொண்டமெத்தை
வைத்தபூக்கள் மீதுறக்கம் கொள்வதுமல்ல - இன்பம்
வாரி அள்ளித் தூவும் வாழ்வு முற்றிலுமல்ல
உள்ளம் உண்மைகாண வென்று அன்னை சொல்லும் சேதிபற்றி
ஒன்றுகலந் துறுதிகொள்ளும் இதயமும் கொண்டே- இவர்
உலகவாழ்வில் பயணம்போகும் உன்னத காட்சி
*********
30 Oct 2013, 07:48:21
to santhav...@googlegroups.com
கடைசி வரிகள் திருத்தம்
ஒன்றுகூடி உறுதிகொள்ளும் இதயமும் கொண்டே- இவர்
ஒன்றுகூடி உறுதிகொள்ளும் இதயமும் கொண்டே- இவர்
31 Oct 2013, 20:24:01
to santhav...@googlegroups.com
இது முன்பு எழுதிய தேன் கவிதை [போலவே இன்றும் ஒரு தேன்கவிதைசெய்தேன். எதற்காக?? இன்று என் பிறந்தநாள் அடடா வாழ்த்துக்களா! வேண்டவே வேண்டாம்! நான் வீட்டிலேயே கொண்டாடுவதில்லை அதை அப்படியே ஓரத்தில் வைத்துவிடுங்கள்.
மனதோடு உறவாடும் இன்பம் ஒன்றுபோதும். இந்தக்கவிதை மூலம் அதையே செய்ய விழைகிறேன்
அன்புடன் கிரிகாசன்
நான் என் செய்தேன்?
பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
அகத்தென் இருளைக் கொண்டேன் நான்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடைத்தேன்
செழித்தேன் எழுந்தே சிரித்தேன் அப்
புறந்தேன் கொள்ளும் புன்னகை கண்டேன்
பொய்த்தேன் அவளுள் புகுந்தேன் ஏன்
மறந்தேன் என்னை மலரின் தேனை
மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தென் றாகிப்
பரந்தென் இனமும் அழிந்தேகாண்
இறந்தே னென்போர் இழப்பைக் கண்டும்
இருந்தேன் ஏதும் செயலற்றேன்
நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
நாளும்கண்டேன் நினைவெல்லாம்
அறுந்தென் எண்ணம் அழிவென்றாக
அடைந்தேன் பிணியும், தமிழன்னை
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தே னன்றிப் புரிந்தேன் கடமை
புகழ்ந்தேன் தாயே சக்திதனை
கருந்தென் றலதும் காணா அண்டம்
கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
இரந்தேனன்றோ இதுவாழ்வோ?
பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
அகத்தென் இருளைக் கொண்டேன் நான்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடைத்தேன்
செழித்தேன் எழுந்தே சிரித்தேன் அப்
புறந்தேன் கொள்ளும் புன்னகை கண்டேன்
பொய்த்தேன் அவளுள் புகுந்தேன் ஏன்
மறந்தேன் என்னை மலரின் தேனை
மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தென் றாகிப்
பரந்தென் இனமும் அழிந்தேகாண்
இறந்தே னென்போர் இழப்பைக் கண்டும்
இருந்தேன் ஏதும் செயலற்றேன்
நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
நாளும்கண்டேன் நினைவெல்லாம்
அறுந்தென் எண்ணம் அழிவென்றாக
அடைந்தேன் பிணியும், தமிழன்னை
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தே னன்றிப் புரிந்தேன் கடமை
புகழ்ந்தேன் தாயே சக்திதனை
கருந்தென் றலதும் காணா அண்டம்
கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
இரந்தேனன்றோ இதுவாழ்வோ?
31 Oct 2013, 20:38:29
to சந்தவசந்தம்
>> இன்று என் பிறந்தநாள் அடடா வாழ்த்துக்களா! வேண்டவே வேண்டாம்!
உள்ளத்துணர்வுகளை அழகுசிந்தும் கவிதையாகப் படைக்கும் திறன்வாய்ந்த உங்களுக்கு எவ்வாறு பிறந்தநாள் வாழ்த்துக் கூறாமலிருக்க இயலும்?
... சந்தவசந்த நண்பர்களோடு அனந்த்
... சந்தவசந்த நண்பர்களோடு அனந்த்
31 Oct 2013, 21:32:06
to santhav...@googlegroups.com
இல்லை. அன்பு கொண்டவர்களிடம் எதையாவது மனதுள் வைத்துக்கொண்டு கூறாமலிருக்க முடியாதல்லவா/ அந்த தூண்டலில்தான் கூறினேன், வாழ்த்துக்கள் விரும்பவில்லை என்பது உண்மை. கொடுத்தால் மறுப்பதற்கும் இல்லை. ஆனால் வேண்டாமே!
8 Nov 2013, 10:31:02
to santhav...@googlegroups.com
கரம் கோர்ப்போம்
ஓடிநடந்து மென்ன செல்லமே செல்லம் - தினம்
உண்டுங் களித்துமென்ன சொல்லடி செல்லம் - ஒரு
ஆடிவந்தான பின்னர் ஆவணி வரும் - எங்கள்
அன்னை நிலத்தில் என்றும் துன்பமே வரம்- இன்பம்
தேடிநடந்துமென்ன பாரடி செல்லம் - எங்கள்
திக்கில் இருளடர்ந்த பேய்களின் வாசம் - வந்த
பேடி பிறத்தியர்கள் கொண்டனர் நிலம் -நெஞ்சு
பித்துப் பிடித்தழிந்தோம், கொஞ்சமோ வஞ்சம்
நாடிபிடித்து மென்ன தங்கமே தங்கம் - அவர்
நாளை பிழைப்பரென்று சொன்ன சாத்திரம் - இங்கு
ஓடி நிலம்பறிக்கும் புல்லரின் கரம் - எங்கள்
ஓசை வழியிறுக்க கொள்ளுமோ உரம் - இவர்
கோடி உழைத்து மென்ன தங்கமே தங்கம் - உயர்
கோபுரக்கள் சுற்றியென்ன தங்கமே தங்கம் - இங்கு
கூடி உழைத்து உண்ட நெல்வயல் நிலம் - நாமும்
கொண்டோர் பொருள் கவர்ந்து போயினர்எல்லாம்
\
மாடி மனைகள் கட்டி வாழுவர் செல்லம் - உயர்
மன்னர் குலத்தரென்று பேசுவர் தம்மை- கொடும்
பேடி மனத்தரிவர் செய்யும் இழிமை இந்தப்
பூமி பொறுத்தேனோ பொய்மை வாழவும் - உண்மை
மூடி மறைக்க வில்லை செல்லமே செல்லம் - ஒரு
மூடர் இருக்கும் இனம் சொல்லவா செ ல்லம் - என்றும்
ஓடி ஒருகுலமென் றாவது மில்லை - அவர்
உய்யும் வழி இடையில் தோன்றலுமில்லை
வாடி நடந்துவழி காணுவோம் தங்கம் - எங்கள்
வம்சம் எடுக்கும் வீரம் வெல்லது திண்ணம் - அந்தச்
சூடிப்பிறை யுடையோன் கொண்டவள் நெஞ்சம் - வந்து
சுட்ட உதிரம் வலு ஊட்டுவள் இன்னும் -இனித்
தாடி உனது கரம் தங்கமே தங்கம் - நாங்கள்
தன்னந் தனியே இல்லை தங்கமே தங்கம் -வரை
கோடிஎன இழந்தும் உள்ளவர் சேரின் - இங்கு
கொள்ளும் துயர் மறையக் காணுவோம் தேசம்
10 Nov 2013, 23:00:13
to santhav...@googlegroups.com
துயரும் விதியும்
மாலை ஒன்று கோர்த்தெடுத்தேன் மங்கும்விடி காலைவெயில்
மாவுலகை ஆளமுன்னே மங்கலமாக
காலைவேளை கண்விழித்து கைதொழவே கோவில் சென்றேன்
கையிருந்த மாலைகொண்டு கடவுளை வேண்ட
நூலையன்றி ஏதுமில்லை நெஞ்சம்நிறைந் தன்புடனே
நின்றவனின் கையுதிர்ந்து பூக்களும்போக
பாலைவனம் மீதுவந்தே தாகமுற்ற மானின்நிலை
பரிதவிப்பு நெஞ்சிடையே பாதகஞ் செய்ய
சோளம்கொண்டு வயல்விதைத்து சுற்றிவேலி கட்டிவைத்து
சூரியனை வேண்டிநின்றேன் என்பயிர்வாழ
நாளும் நீரை விட்டிறைத்து நல்ல கதை பேச்சுரைத்து
நாளும் எண்ணிக் காத்திருந்தேன் உண்பதற்காக
வேழமொன்று கோபப்பட்டு வேலியதை தாண்டிவந்து
வேகமுடன் சுற்றிவர என்பயிர்மாள
தாளமிடும் என்னிதயம் தன்னிலையும் கெட்டழுது
தவிக்குதய்யோ முற்றிலும்சூழ் துன்பமென்றாக
மூளவென்று தீயுமிட்டு மூடுபனிக் கூதலுக்கு
முன்னிருந்தேன் தீயிலெழும் வெம்மையில் காய
மாளவென்று நீரையிட்டு மேகவந்து தூறியதென்
மாறிப்புயல் காற்றடித்து மெய்கிடந்தாட
கேளடி ஓர் சென்மம் என்று கீழுரைக்கும் பேச்செடுத்து
கிட்டநின்றே புன்னகைப்போர் என்னயல் போக
வாழவென்று ஆசைபட்டு வந்தவனை நோகவைத்து
வேடிக்கையும் பார்ப்பதுமென் என்விதிதானோ
Game creator ஒன்றுடன் சந்தவசந்த பிறந்த நாளுக்கு ஒரு intro போன்று தயாரிக்க முயன்று கணினி குழம்பித் தவித்து(நானும்தான்) என்னை ஏமாற்ற அந்த மனவேதனையில் இதை எழுதினேன் எப்படியும் அதை தயாரித்து கொண்டுவருவேன்
மிகுந்த இலகுவான 3D game maker பெரியவர்கள் பிள்ளைகளுக்கு ஆக்க பூர்வமான game designer வழிமுறைகளை காட்ட விரும்பினால்
MEGAKERMA GAMEMAKER http://silentworks.hu/mk/ பரிந்துரைக்கிறேன்
13 Nov 2013, 09:12:55
to santhav...@googlegroups.com
வாழச் செய்வாய்
நீளப்பரந்த வானத்தின் நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம் தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின் வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன் மேகத்திடி மின் னல்கூட்டம்
ஆளப் பிடித்த அரசனவன் அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன் மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ விடியும்காணென் றொளிர்தீயும்
ஆழக் கடலில் அடிவீழ்ந்தே அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி நடைகொள் மாந்தர் மனையேக
நாளும் பறந்தே இரைதேடி நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக் கூத்தா டும்விண் ணாழத்தில்
வாழுமுலகில் வாழாது வதைபட்டுழலென் றாக்கியவள்
ஆழும் முறைமை சீர்கெட்டே அநியாயத்தில் வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே வாசல் புகுந்த வேளையிலே
நீளப் பெருத்த பாம்புகளும் நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக் காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி அனைத்து மொன்றாய் அணிசேரின்
பேழைகுள்ளே பிணமாகிப் போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும் தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும் முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர் இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்
பூவைப் பூக்கச் செய்தாய் பின் போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் செல்லாக் காசாய் இருவென்றாய்
நாவிற் தேனாய் இசைபாட நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும் சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்
****************
17 Nov 2013, 12:12:58
to santhav...@googlegroups.com
இப்போது சிறிய ஓய்வெடுத்து வருகிறேன் .புதிய கவிதைகளுடன் வரமுன்பு இந்தமாதம் ஈழத்தவாரூகு சோகமான மாதம் ! அதனால் உன்பு எழுதிய கவிதையில் ஒன்று’
விடியுமா தேசம்.?
பனி படர்ந்து புல்வெளியிற் பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது பலதுளி நீர்சிந்த
சினமெழுந்து கதிர்பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதிசொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தைக் கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவிற் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகம்சிவக்க இளங்கிளியோ உண்ணும்
ஈழமண்ணின் இயற்கையான இனியதொருகாலை!
வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துமலர் கொஞ்சியெழும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழச் சுதந்திரத்தை எண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்றும் அதைத் தேட
குனிநடை கொள் குரங்கினமோ கொப்புகளில் தாவிக்
குழைஉதிரக் கலகமிடக் காணுமிளங் குயிலும்
தனியிருந்து ஒருகிளையில் துயரெழுந்து கூவ
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்
எதிர்நிமிர்ந்த பெருமலையோ இசைக்குயிலின் கீதம்
எதிரொலிக்க இளம்பறவை இன்பமுடன் கண்டு
மதிமயங்கி துணையை எண்ண,, மறையு மிருள்கண்டு
மனமகிழ்வில் கதிரவனும் அனல்பெருத்து மூள
நதிநடந்த விதம் நெளிந்து நெடுங்கிடந்தபாதை
நடைபயணம் கொள்ளவுமென் நேரெதிரே முன்னே
விதிசினந்த சிறுவர்சிலர் வேதனையில் கூடி
விரிஉலகம் நிறைதமிழில் மொழியுரைத்தல் கேட்டேன்
கருமைநிறம், மேனிகளில் கசங்கியதோர் உடையும்
காய்ந் துலர்ந்த உதரமிடை கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தவைகாண் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளும் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தனதெழிலை நினையா
தரைவிழுந்த புழுதிபட்ட தோர்மலராய் கண்டார்
அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழவும் ஆற் றொருவர் இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைத்துக் கூறும்
பலகுரலும் கேட்டு ஒரு பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறுஇதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் மென்? இவ்வுலகே யன்றோ!
சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையிற்குறை சொன்னவர்கள் இன்று
சிறுவருடன் மழலையரும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரைச் சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெலாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்
(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம் மாபெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன்சென்றாயோ
மாவில் தூங்கும்கிளியைப்போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவி கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலில்குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்ட அமைதிதானும் அதிலும் குறைவில்லை
(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்றார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியேபோய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண்டெறிகின்றார்
(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா?
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா?
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழை வாரிப்புதை என்றார்
(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் ஒழிவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !
(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நெளிந்துவளையும் நீசப் பாம்பானார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமையானால் பிழைப்போமா
(முதல் சிறுமி)
வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்
(எல்லோரும் சேர்ந்து)
வெல்லட்டும்தமிழ்தேசம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டே நில் வெல்வோம்
18 Nov 2013, 18:55:42
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக