புதன், 2 நவம்பர், 2016

தமிழா!
மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,
சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,
துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,
சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,
இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,
என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன்
இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!
காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?
அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!
நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!
வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!
மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,
என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,
நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !
வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்
அன்புடன் தோழன்
….மதன் (பகலவன்) ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக