புதன், 2 நவம்பர், 2016

சுற்றி நின்று கொல்லுகிறான்…..

சுற்றி நின்று கொல்லுகிறான்
சூழ்ந்து நின்று கொழுத்துகிறான்
சற்றேனும் இரக்கமின்றி;ச்
செல்லு குண்டைக் கொட்டுகிறான்
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி    கண்ணீரைச் சொரியுது!
புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது!
போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது!
பெற்றவர்கள் படும் பாட்டைப் பேச முடியல்லை!
பேசாமைப் படுப்பதற்கும் மனசு கே ட்கல்லை!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!
கெட்டவ்ர்கள் பூமியிது!
கேட்பதற்கும் மனுசரில்லை!
சட்டங்களைப் போட்டு எம்மை;ச்
சவமாக மாத்திறார்!
சுட்டெரிக்க நம்ம சனம் சாகுது! ஓன்றும்
செய்ய முடியாமை மனம் வேகுது!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!
கட்டுக்கடங்காது துயர் காட்டுவெள்ளமாகுது
கைகொடுக்கஉலகம்தடைபோடுது!
நித்திரையில் நெஞ்சு கனமாகுது!
விட்டு விடமுடியாது தோழரே! நாங்கள்
விண்ணதிரக் கத்த வேண்டும் தோழரே! உண்மை
வெல்லும்வரை உழைக்க வேண்டும் !தோழரே!

2) உலகே ஒருகணம் எங்கள் முன் நில்லு!…

உலகே ஒருகணம் எங்கள் முன் நில்லு!
எம்விழி பார்த்து ஒருபதில் சொல்லு!
அலைகளின் நடுவில் அழிவினில் நின்று
அழியும் இனத்திற்குத் தாபதில் ஒன்று!
இன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும்?
இனப்படுகொலையெனச்சொல்வதற்கு!
மண்ணில் எத்தனை மரணங்கள் வேண்டும்?
மனிதத்தின் கொலையெனச் சொல்வதற்கு!
எண்ணி யெத்தனை எறிகணை வேண்டும்?
இறப்பவர் எண்ணிக்கை கணிப்பதற்கு!
கண்ணில் எத்துணை நீர்வரவேண்டும்?
கவலையங்குண்டெனக் கணிப்பதற்கு!
என்ன காணிக்கை நாம் தரவேண்டும்?
எம்மையும் இனமென ஏற்பதற்கு!
எந்த மாணிக்கக் கல் தரவேண்டும்?
எம்மின அழிவினைக்காப்பதற்கு!
பெண்கள் மானத்தைக் காத்திடக்கதறிப்
பேச்சு மூச்சின்றி மரணிக்கி;றார்!
பிள்ளை குட்டிகள்

3) கன்றுகளா ! கன்றுகளா!

கன்றுகளா ! கன்றுகளா!
காலந்தந்த கன்றுகளா!
நீங்கள் வந்த நேரம் நல்ல நேரமப்பா!
நிச்சயமா ஈழம் வென்றே  தீருமப்பா!
குஞ்சுகளா! குஞ்சுகளா !
குரல் கொடுக்க வந்திகளா!
கூடுவிட்டு வந்த நேரம் நல்லதப்பா!
கச்சிதமாய் ஈழப்பாட்டைப் பாடுமப்பா!
கொன்று தள்ளி விடுவமென்றே
கங்கணந்தான் கட்டிநிற்கும்
சிங்களத்தின் சேட்டை பலிக்காதப்பா!
சத்தியத்தைப் பொய்கள் nஐயிக்காதப்பா!
சாமத்திலே வெய்யில் எறிக்காதப்பா!
இன்று இந்த வையத்தினை
ஆட்சிசெய்யும் மனிதரெல்லாம்
நின்று பிடிப்பார்களென்பதில்லையப்பா!
நீதி வெல்லும் காலம்ஒன்று உள்ளதப்பா!
நீங்கள் சொல்லும் வேதம்அன்றுவெல்லுமப்பா!

4) களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே…

களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே
கரித்துண்டாய்ப் போகி;றான் தமிழன்!
விழித்தின்று குரல்கொடுதமிழா!- கொடும்
விதிவெல்லப் புறப்படுதமிழா!
பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று
பதியின்றியலைகி;றான் இன்று!
துயில்கொள்ளத்தரைகூடஇன்றி-அவன்
துடித்தங்குமடிகிறான்இரைதண்ணியின்றி!
அழிநச்சுவாயுவின்எரிபட்டுஉறவுகள்
உருகெட்டுச்  சாதல்கண்டும்
பரிவற்றுவாய்மூடிப்பதுங்கிடும் உலகத்தின்
சதிவெட்டக் குரல் கொடு தமிழா!
வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம்
விழிமூடியுறங்கினால்யாருள்ளார் தமிழா!
அழிக்கின்றபகைவெல்வோம் தமிழா!- உளம்
அனல்பொங்க உலகிற்குஉண்மைசொல்தமிழா!

5) அன்னைத்தமிழினம் துன்பத்தீயினில்

அன்னைத்தமிழினம் துன்பத்தீயினில்
அழிந்திட விடுவோமோ?
முன்னைப் பழங்குடி கண்ணில் நீர்மழை
பொழிந்திடவிடுவோமோ?
எண்ணக் கூசிடும் வண்ணம் எம்மவர்
குழிகளில் விழலாமோ?
சின்னக் குழந்தைகள் பெண்கள் கதறியே
அழுவது முறையாமோ?
மன்னராண்டதும் மாட்சிகொண்டதும்
மாண்டவர் கதைதானேர்?
கன்னற்தமிழிலே காப்புயுhத்ததும்
வீண்புகழுரைதானோ?
தின்னத்தானிவர் தோன்றினாரெனக்
காண்பவர்நகையாரோ?
இன்னுமேனிவர் இறந்திலராமென
நாண்பட வசையாரோ?
இந்தப்பூமியில்யாருளர்அவர்க்கெனும்
சொல்லெழவிடலாமோ?
சொந்தச்சோதரர்இவர்க்கிலராமெனும்
சொல்வரவிடலாமோ?
வந்தப+மியில் வாழுவம் யாமெனும்
கல்மனம்வரலாமோ?
வெந்ததேசத்தைவேற்றினமாண்டிட
நம்மினம்தரலாமோ?

6) உலகம் உறங்கினால் உறங்கட்டும்!

உலகம் உறங்கினால் உறங்கட்டும்!
உலகத்தமிழனே உறங்காதே!
இதயம் இரங்கினால் இரங்கட்டும்!
இளைய தமிழனே தயங்காதே!
உதிரம் பெருக்குது எம்தேசம்!
உயிரையெரிக்குது இனப்பாசம்!
புதினம்கேட்டது இனிப்போதும்!
பூமியதிர்ந்திடஇடுகோஷம்!
வளைய நின்று எம்இனத்தைக்கொல்கிறான்
வட்டமிட்டுச்செல்குண்டைப்பொழிகிறான்
முளையிற் தமிழனைக்கிள்ளநினைக்கிறான்
மூர்க்கமாய் இனக்கொலையைநடத்திறான்!
இதனைக்கண்டுமிவ்வுலகம் உறங்குது
எட்ட இருந்துதான்முனகியிரங்குது!
மழையும்வெய்யிலும்பனியும்எங்களை
வாட்டிவதைக்கக்கூடும்!
களைப்பும்காய்ச்சலும்சளியுமெங்களை
வீட்டிலடைக்கக்கூடும்!
தளர்ச்சிவென்றுநாம்தமிழரென்பதை
மூச்சில்நிறைக்கவேண்டும்!
தொடர்ச்சியாகஎம்முயற்சியுழைப்பினால்
நீச்சலடிக்கவேண்டும்!

7) தீக்குழம்பிற் துடிக்குதடா தமிழர் தேசம்!

தீக்குழம்பிற் துடிக்குதடா தமிழர் தேசம்!
தீக்குளித்து மடியுதடா தமிழர் தேகம்!
தூக்கத்திலும் வெடிக்குதடா எமதுசோகம்!
காக்கும் வழிதேடுதடா தேசப்பாசம்!
அந்தோ கொடுமை
அசுரரின் பிடியில்
அன்னைத் தாய்நிலம் கருகுவதோ?
செந்தீக்குழியிற்
செந்நீர்வடியச்
சிதறித் தமிழினம் கதறுவதோ?
சேர்ந்து பிறந்தவர்
செல்லிலும் குண்டிலும்
மாய்திடல்காண்பது சம்மதமோ?
சோர்ந்து படுத்துநாம்
சுவைத்துக்கிடப்புது
சுகமெனச்சொல்வது எம்ம்தமோ?
வாழ்ந்த நிலத்தில்
வதங்கித்தவிக்கும்
வேதனை எவர்க்கும் புரியலையோ?
நேர்ந்த நிலைக்கு
நிம்மதித்தீர்வை
வழங்கிட எவரும் இரங்கலையோ?

8) தானாடா விட்டாலும் – எம்  தசைகளாடுதே!

தானாடா விட்டாலும் – எம்  தசைகளாடுதே!
தாய் நாட்டின் திiசியிலெங்கள் விழிகளோடுதே!
தேனாக எங்கள் தமிழ்  உயிரிலுர்றுதே!
தேசத்தின் சோகமெங்கள் உணர்விலூறுதே!
வுhனமதில் வந்து குண்டை
வாரிக்கொட்டிச்செல்லுகிறான்!
சேனைகட்டி நின்று எல்லை
ஊரில்வெட்டிக்கொல்லுகிறான்!
மான பங்கம் செய்து பாவம் வாரிக்கட்டுகிறான்!
ஊனமுறக் கண்ணிவெடிக் காட்டிற் தள்ளுகிறான்!
பானங்கஞ்சி பாலுமின்றி;ப்
பாய்படுக்கை யேதுமின்றி
ஆன உடை கூட இன்றி
அலைகிறார்களே!
தாயகத்தில் நாதியின்றி
அழிகிறார்களே!
தாய்மரணம் அணைத்தபின்னும்
தாய்மார்பைச்சுவைத்தபடி
சேய் தூங்கும் காட்சி நாங்கள் காண்கிறோம்!
வாய்மூடி நெஞ்சு ஏங்கி நோகிறோம்!

9) சத்தியத் தீயில் வந்தவரே!

சத்தியத் தீயில் வந்தவரே!-தமிழ்ச்
செம்மொழித்தாயின் சந்ததியே!
நித்திலத்தீவின் சொந்தங்களே!-எம்
நீள்வரலாற்றின் சந்தங்களே!
கட்டியணைக்கின்றோமிங்கே நாங்கள்! – நல்ல
காலம்பார்த்து நேரில் வந்தீர் நீங்கள்!
ஓற்றுமைக் காற்றை வீசி வந்தீர்!
ஓற்றை நீதியோடு வந்தீர்!
கற்றவராகக் கண்திறந்தீர்!
நற்றவப் பேறாய் நீர்பிறந்தீpர்!
எத்தனை கோடி இடர்வந்தாலும்
எதிர்த்து ஆடும் பலம் படைத்தீர!
இத்தரை மீது இறைமையோடு
அணைத்துவாழும் வளம் உடைத்தீர்!
கொற்றவனேனும் குற்றமிழைத்தாற்
குமுறியெழும் அறத்தில் நின்றீர்!!
நிச்சயம் நீங்கள் வெற்றி கொள்வீர்!
இமயமாகப் பெற்றி கொள்வீர்!

10) சரித்திர ஏட்டினைப்புரட்டு! – அட

சரித்திர ஏட்டினைப்புரட்டு! – அட
சர்வதேச உலகே!
நெரித்தின உரிமைகள் பறித்தே – நீ
நிகழ்த்திய கொடுமைகள் புரியும்!
விரித்தனை உன் விஷச்சிறகை!- பிறர்
வீழ்ந்திட மிதித்தனை விளைத்தனை கொடுமை!
பறித்தனை படைத்தவர்பொருளை!
பயத்தினை விதைத்தே புதைத்தனை அருளை!
அரசுகளோடு அழகிய மண்ணில்
அமைதியில் வாழ்ந்தவர் நாங்கள்!
படையுடன் வந்தே பறிமுதல்செய்தே
பதியின்றி ஆக்கினை யெம்மை!
கடையினமாக்கிக் காப்பவரின்றிப்
பிறரிடம் எங்களை விற்றாய்!
இடர்ப் படும்போது எங்களை மறந்தே
இனப்படுகொலை பட விட்டாய்!
சுதந்திரமென்ற பெயரினிலெம்மை
நிரந்தர அடிமைகளாக்கிப்
பகையிடம்பிச்சை யிரந்திடும் நிலையில்
அலைந்திட ஆக்கினீர் உண்மை!

11) பாவியரே உங்கள்…

பாவியரே உங்கள்
பார்வையிலே எங்கள்
பாலகர்கள் படுமவலம் படவில்லையா? – அங்கே
கூவியழும் தாயர் முகம் தெரியலையா?
ஏவுகணைப் பேய்நெருப்பை
ஏவுகின்ற போதுமக்கு
எங்கு விழுமதுவென்று புரியலையா? – எங்கள்
சாவுகளின் கோர முகம் தெரியலையா?
ஆவிமனம் துடித்திங்கே
அகிலத் தழிழ் நெஞ்சம்
கூடிக் குரல் கொடுப்பதுவும் கேட்கலையா?- நாங்கள்
கொந்தளித்து நடப்பதுவும் தெரியலையா?
பாரிலுள்ள பலமெல்லாம்
பகிர்ந்தளித்து நம்மினத்தைப்
படுகொலை நீர் செய்கின்றீர் புரியலையா?
நடுமனிதர் நான்கிருவர் இங்கிலையா?

12) பத்தியெரியுது வயிறு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக