முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை
திசைமாறி நடந்திருந்தால்
புனித அரியணையில்
தமிழ்த்தாய் வீற்றிருப்பாள்
இனப்படுகொலை
திசைமாறி நடந்திருந்தால்
புனித அரியணையில்
தமிழ்த்தாய் வீற்றிருப்பாள்
மானிட ஒழுக்கத்தின்
அச்சுப் பிழைகளான
மகாவம்ச சீடர்களோடு
பக்கதேசப் படைக்கலன்கள்
இணையாதிருந்தால்
புலிகள் ராஜாங்கம்
மனிதனோடு கைகோர்த்து
இணைந்து வந்திருக்கும்
அச்சுப் பிழைகளான
மகாவம்ச சீடர்களோடு
பக்கதேசப் படைக்கலன்கள்
இணையாதிருந்தால்
புலிகள் ராஜாங்கம்
மனிதனோடு கைகோர்த்து
இணைந்து வந்திருக்கும்
ஆனால் இங்கு
கல்லறைகளே
கல்லறைகளாகிவிட்டதால்
சடலங்களை விழுங்கும்
விலங்குகளால்
கல்லறைப் பிணங்களும்
மதம் எனும் பூதத்தால்
விழுங்கப்பட்டது அனாச்சாரம்
கல்லறைகளே
கல்லறைகளாகிவிட்டதால்
சடலங்களை விழுங்கும்
விலங்குகளால்
கல்லறைப் பிணங்களும்
மதம் எனும் பூதத்தால்
விழுங்கப்பட்டது அனாச்சாரம்
தொல்குடி மக்களின்
செதுக்கப்பட்ட நாகரிகத்தின்
சின்னங்கள் தூபிகள் சிலைகள்
ஆலயங்கள் கல்லறைகள்
வழிபடத் தெரியாத வழிபாடு
சிங்களக் கீழ்னிலை கண்டு
செதுக்கப்பட்ட நாகரிகத்தின்
சின்னங்கள் தூபிகள் சிலைகள்
ஆலயங்கள் கல்லறைகள்
வழிபடத் தெரியாத வழிபாடு
சிங்களக் கீழ்னிலை கண்டு
அஞ்சுமா புலிப்படை அடங்குமா சினம்
புதியபுதிய அலைகள்வந்து புரளும்
புதிய புறனாநூற்றை படைக்கும்
தமிழீத்தை புலியாட்சி செய்யும்
பூமிபிளந்து விதைகள் விழுந்து
புதியபுதிய அலைகள்வந்து புரளும்
புதிய புறனாநூற்றை படைக்கும்
தமிழீத்தை புலியாட்சி செய்யும்
பூமிபிளந்து விதைகள் விழுந்து
விழவிழ எழுந்து வீரம்காப்போம்
சடலமானவர் மயானம் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
செத்தவர் சமாதிகள் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
காலமானவர் சவக்காலை அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
சடலமானவர் மயானம் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
செத்தவர் சமாதிகள் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
காலமானவர் சவக்காலை அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
சாவுவீடு பாடும் ஒப்பாரியும் அல்ல
போர்குணம் நின்று எழும் ஆணை
புனிதர்கள் எழுந்தருளும் ஆலயம்
கவிதையில் கதையில் கல்லில்
போர்குணம் நின்று எழும் ஆணை
புனிதர்கள் எழுந்தருளும் ஆலயம்
கவிதையில் கதையில் கல்லில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக