புதன், 2 நவம்பர், 2016

மாவீர்நாள்
விழிகள் நனைந்து
ஒயாதலைகள் ஓடும்…
விழிப்போடு இருக்கும்
நினைவுகள் கனத்து
ஆனையிறவு விரியும்!

மலரோடு பிறந்து
இமயமலையோடு மேதிய
வித்தைகள் வியக்கும்!

பாயும் கத்திபோல் வந்து
வார்த்தைகள் விழும்
சரித்திரம் திரும்பும்
வரலாறு பேசும்போது!

அடிமைச் சங்கிலி
உடைக்கப்படுமா?
காணியும் கலைகளும்
திரும்பப் கிடைக்குமா?

உன்மேல் போர்த்தபட்டிருக்கும்
சிறைகளும் இம்சைகளும்
விட்டு விடுதலையாகுமா?

இல்லை மேலும் சிங்களம்
நஞ்சினை உண்டவர் செஞ்சின
விழியர் கண்டு! நடுங்கும்
பயத்தில் நாணம் மதியின்
தெளிவிழந்த பாவத்தில்
மோசமாய் காரிருள் சூழுமா?

மீண்டும் நீண்டு தொல்குடி உன்னை
இனக்கலவர நெருப்பு எரிக்குமா?
உன் ரணகள் வடுக்கள் நூராது
தோண்டி நாறுமா? இதைக் காணும்முன்
புஜவலிமை புயலாய் பாரெங்கும்
சுழன்றெழ நீட்டியகை ஆணைகேட்கும்!

இன்றாறாவது மகாவம்ச மகாநாடுகளில்
ஆயுதங்களோடு பேசும் பேச்சில்
ஆயுளை நீடிக்கப் பேசியதுண்டா?
முள்ளிவாய்க்கால் இனக்கொலை
குருதி குமுறி குளித்த பின்பாவது
வலிதீரும் வழி ஒருதுளி உண்டா?

அச்சுப் பிழையான இனவெறியாடுவர்
வெளிச்சத்தை நூலால் மறைக்கப்
பார்க்கிறது! நலியாது நலிந்துபோகாது
தொட்டால் நெருப்பு பாய்ந்தால் புலி
கோட்டையாய் பாசறை விரிகிறது
பெரியபடையின் சேட்டைகள் அடக்கி
வேலி போடவே புலிகள் பாய்கிறது!

எல்லை பிரிந்து தமிழீழத்தை
புலிகள் ஆளும்காலம் ஒடிவருகிறது
உன்னைக் கண்டு அடங்கிட
உன்னைக் காட்டும் நாள்!
பிறந்தநாள் இன்று, நாளை மாவீர் நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக