எங்கள் குலவிளக்கு எழில்ராணிபேத்தியவள்
திங்கள் ஒளிதேவியவள் தீவுமண்ணின் சேயுமவள்
தங்க மேனி தாரகையே தவழ்ந்தெழுந்து நில்தாயே
எங்கள் துயர் துடைத்திட ஏற்றம்பெற எழுந்திடுவாய்
விண்ணுதித்த முழுநிலவே வீரவம்சம் வாழ வந்தாயே
முன்னுதித்த முத்துப்பேத்தி முத்தமிழின் மூச்சு நீயே
தன்குலத்தை தழைக்கவென தரணிவந்த தமிழழகே
உன்குலத்தை உயர்த்திடவே உதயமதாய் உதித்திடுக
பெற்றவளும் பெரும்தந்தையும் பேருவகை மாமனவன்
உற்றவளாய் உன்முகம் உவக்கும் அம்மம்மா தானவளும்
சிற்றன்னைசித்தியவள் சிரிப்புக்காட்டும் தாத்தாவும்
உற்றம் உறவு புடைசூழ வந்து வாழ்த்தும் நேரமிது
ஆடி ஓடி அசைந்தாடும் அழகுமயில் கோலமவள்
நாடி வந்த எம்மை எல்லாம் சோகம் தீர்த்த செல்லவள்
கூடி நின்று உம்மை நாம் கொலுவிருத்தி கொற்றவையில்
ஆடிப்பாடி ஆசி கூறி ஆனந்தமாய வாழ்த்துகிறோம்
வாழி தாயே ! வாழி சேயே !! வாழி நீயே !!!
வாலி தாயே வாலி செய் வாலி நீயே