சனி, 18 ஜனவரி, 2020

கிராமத்து வாழ்க்கை

பழங்கஞ்சி பாலோட,
கொச்சிக்கா வெங்காயம்,
ரெண்டு ஊடு ஒத்துமயா,
திண்டு போட்டு கத பேசும்...

கூரைட இடுகல்ல,
குருவிக்கும் கூடிரிக்கும்,
சோத்துமணி நாலஞ்சி,
அதுகளுக்கும் வந்து உழும்...

வயித்துப் பொழப்புக்கு,
வெள்ளாம வெவசாயம்,
நெல்லு மூட்ட நாலஞ்சி,
ஊரெல்லாம் சுத்தி வரும்...

வெள்ளாம முடிஞ்சிட்டா,
வெளயாட ஆக்கள் வரும்,
வரண்ட பூமி மைதானம்,
கல கட்டி கூச்சல் போடும்...

நோயின்டா, நொடியின்டா,
ஓரு கூடி பாக்க வரும்,
மூலிக எல வெச்சி,
வைத்தியமும் செஞ்சி விடும்...

பெரச்சின ஏதுமுன்டா,
மரத்தடிய கூட்டம் வரும்,
பொலிசுக்குப் போகாம,
வெவகாரம் முடிஞ்சி விடும்...

மாடியில கோடியில,
இல்லாத சந்தோஷம்,
மாடு மேய்க்கும் வேலைல,
நெரஞ்சிருக்கும் பாக்க வாரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக