சனி, 18 ஜனவரி, 2020

கிராமத்து காவியம் -அத்தியாயம் -1

கிராமத்து காவியம் -அத்தியாயம் -1
ஒத்தையடி பாதையிலே
ஒத்தகால் செருப்போட
ஒத்தபனமர நிழலுல
ஒத்தையா நா இருந்தேன்



வந்தவழி மறந்தவளோ - இல்ல
போறவழி தெரியாதவளோ


தெரியவில்லை!

அஞ்சு அடுக்கு பத்தான் போட்ட சட்ட
அவ சட்டையில 2 புள்ளி 1 வருச கோலம்
முட்டுக்கு மேல தூக்கி கட்டிய பாவாட
வெள்ளாட்டு மார்பு போல அவ பாதம்
திருக்க வாலு போல கழுத்து
சின்ன மடிப்புகாரி
சிவந்த உடம்புக்காரி - அவா


தலையில சுள்ளி விறகு
வடக்கை அருவா இடக்கை செருப்பு
கண்ணெல்லாம் கண்ணீரு
கன்னி பொண்ணு அவே
கண்கலங்கி நின்னா
செம்மண் புழுதிக்குள்ள


ஏம்பாடே பெரும்பாடு
ஒம்பாடு என்னமா


வைகையாத்து நீர் போல
தெரண்டு வந்த கண்ணீர் துளி

மழலை வாய் திறந்து

ஏ !
ஊருக்காரிக ,
என்னைய உட்டுபுட்டு போய்டாளுங்க!
எனக்கு வந்த பாத
மறந்து போச்சி !

சூரியனும் செத்துருட்சி!
நிலவும் பூத்துரிச்சி !

ஒத்த புள்ளக்காரியா எங்க ஆத்தா
ஒத்தையில போகவும் எனக்கு ஒப்பல
ஒத்தாசைக்கு கூட வாயா ?

கூட வந்தா என்ன புள்ள தரவ .................!


மொதல்ல வாயா பாப்போம் ..................!

அட சொல்லு புள்ள ...............................!


என்னய்யா உனக்கு வேணும்...............!

அப்புடி கேளு !

கள்ளிபழ உதட்டு காரி
கன்னிபைய எனக்கு
கன்னம் செவக்க ஒரு முத்தம் வேணும் புள்ள
அவ்வளவுதா!


இவ்வளவு தானாக்கும்
நா கூட உன்னைய கட்டிக்க சொல்லுவேயோனு நெனச்சே யா !


ஏ கட்டிக்க மாட்டியா ...........!

எனக்கும் ஆசைதா


பின்ன என்ன புள்ள ?


ஆனா ஒரு சிக்கல் இருக்குயா!

என்னது புள்ள

ஓ பொண்டாட்டி ஒத்துக்கணுமே யா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக