வெள்ளி, 16 ஜனவரி, 2015

எங்கள் ஊர்... - கவிதை


மலர்களிலே குருதி மணக்கிறது,
நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம்
வண்டுகள் இப்பொழுதெல்லாம்
தேன் குடிப்பதில்லை - அவை
குருதி குடிக்கப் பழகியதால்
துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன.

காற்றில் உயிர்கள் மிதக்கின்றன - அவை
பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால்
உரிய இடம் சேராமல்
காற்றில் மிதந்து அலைகின்றன.

நாளைகளில்......
ஊர்கள் இருக்கும்.
புல் பூண்டு, மிருகம், பறவைகள்
எல்லாமே இருக்கும்.
மனிதனைத் தவிர...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக