செவ்வாய், 22 நவம்பர், 2011

கார்த்திகை மாதத்து காற்றும் வந்து

கார்த்திகை மாதத்து
காற்றும் வந்து
காதோரம் கவி
சொல்லும்-ஈழம்
மீட்பது உறுதியென்று


மாவீரர் சிந்திய
உதிரத்தில் முளைத்த
மரங்களும் சொல்லும்
சிந்திய குருதிக்கு
சீக்கிரம் பதில்லுண்டென


ஒன்றாக இருந்து
ஒருதட்டில் உண்ட
இரண்டகர் சிலர்
தமிழீழம் கனவாம்
தலைவனும் இல்லையாம்
பேடிப் பயல்களின்
பிசத்தல் தான் இது.!

உணர்வுள்ள தமிழன்
உலகில் உள்ளவரை
புலி கொண்ட கொள்கை
மாறாது கோடியாண்டு
ஆனாலும் ...!!!
-பா .சங்கிலியன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக