வெள்ளி, 16 ஜூன், 2017

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.


மணமகன்; செல்வன் கியுசன்மணமகள்  ;செல்வி மூகாம்பி 


புலம்பெயர் மண்ணில் புவிபுகழ் கனடா தன்னில் 
இளம்புயல்  இனிய கியூசன் இல்லறம் புக்க வேளை
நிலமுறு  பொறுமை கொண்டாள் நேரிழை மூகாமபி
வலம் வர மாலை சூடி வளம் தர வாழ்த்தும் ஓலை 

பூவோடு தோரணங்கள்  பொலிவுறு மேடை தன்னில்
யாவரும் வாழ்த்திசைக்க யெளவன நங்கை அவள்
மேவிய குணக்  கருணா செல்வம்   மூகாம்பிதனை
காவிய நாயகன் கியுசன் கடிமணம் புரிந்திட்டானே

பூமணம் புகழ்மணம் கொண்டு புதுமணத்தம்பதி
பாமணம் புனைந்து பலரும் பாயிரவாழ்த்தொலிக்க
நாமணம் ததும்ப விருந்தில் நல்லவர் நயந்திருக்க
ஒர்மணம் ஆகினரே ஈருடல் ஓருயிராக அவரே

வெற்றி மேல் வெற்றி ஈட்டி வேய் குழல் அவளை மீட்டி
சொற்றிறம்பாமல் வாழ்ந்து தொழிலொடு நலன்கள்
பெற்றதும் குலமே தழைக்க பேரருள் போற்றி நிற்க
கற்றவர் காமுறவே  காளையவன் கரம் பற்றி வாழ்க

இருமனம் ஒன்று சேர இளமையில் நின்று நீவிர் 
திருமணம் பந்தம் சேரீர் செந்தமிழ் பண்பை பாரீர் 
அரும் பொருளை ஈட்டி அன்பினால் உம்மை கூட்டி 
தரும் கவி தன்னை பாரீர் தமிழதன் இனிமை காணீர் பூவினால் காயும்  தோன்றும்.புலவனால் கவியும்  தோன்றும் 
கூவினால் குயிலின் ஓசை ஆடினால் மயிலின் தோகை அத்
தேவியாள் மூகாம்பி தேடினால் இல்லறமே தோன்றும் 
நாவினால்  நற்கவி தோன்றும் நற்றமிழ் வாழ்த்து தோன்றும் 

                                                                 செந்தமிழால் வாழ்த்திக் களிவுறும்
                                                                இராசகுலசிங்கம் சரோஜா குடும்பம் 
                                                                              சுவிட்சர்லாந்து 
04.06.2017

1 கருத்து: