வெள்ளி, 8 மார்ச், 2013


எங்கள் கலைப்பொக்கிஷம் காலவதியாகிப் போனதுவோ?

ஊருக்குள் ஒரு நல்லதுரை
அவர்தான் எங்கள் இராஜதுரை
பல்துறையில் கண்டார் ஒருகரை
வாத்தியாருமா யமனின் பசிக்குஇரை

நல்லதம்பி வாத்தியின் வித்து
நம்கலையுலகின் முதிராச் சொத்து
நாடகஉலகில் இவருக்குதலை பத்து
இவர்தந்தார் நமக்கு நல்லதமிழ் முத்து

கணிதம் விஞ்ஞானம் இவருக்கு அத்துப்படி
மனிதம் மெஞ்ஞானம் எப்போதும் வாய்த்தபடி
வாய்விட்டுச் சிரிப்பார் ஆகா அழகுவெடி
வாழ்வாங்கு வாழ்ந்தாரே என்றும் அறத்தின்படி


ஆலய வரலாற்றில் இவருக்குபல அத்தியாயம்
அறிவக பணியில் போட்டார்பல அத்திவாரம்
ஆண்டவன் படைப்பில் இவரொரு அதிசயம்
அவசரமாய் அழைத்தானேஅது அநியாயம்

வாத்தியார் வார்த்தை எல்லோருக்கும் விளங்கும்
வாத்தியார் கைவைத்தால் நல்லகாரியம் துலங்கும்
வாத்தியாரோடு கதைத்தால் நேரம் சுணங்கும்
ஊரைதீவின் வானமும் பூமியும் அவரை வணங்கும்

வாத்தியாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக