குழலூதி கழலோதி

12 views
Skip to the first unread message

sankara dass nagoji

unread,
10 Jun 2021, 06:25:31
to santhav...@googlegroups.com
காலி மேய்த்த ஆய னேக றுத்த மேனி மாயனே
காலி னால்வி சும்பு மண்ண ளந்த கல்வி வல்லவா
கூலி யேநி னைந்து நாளும் வாடு வேனை ஏல்வையோ
நாலி ரண்டில் ஆலு கின்ற சக்க ரத்தெம் அண்ணலே.....(71) -- 10-June-2021

காலி - கால்நடை உயிரினம்

- sankara dass

sankara dass nagoji

unread,
11 Jun 2021, 06:28:52
to santhav...@googlegroups.com
தோளி ரட்டி நான்கி னாய்து ழாய்து ளங்கு தாரினாய்
கோள்கள் ஒன்ப தேத்து கின்ற குற்ற மற்ற குள்ளனே
காள மேக மூர்த்தி யேக லங்கு வேனை ஆள்வையோ
தாள மோடு நாத மாய சக்க ரத்தெம் அண்ணலே....(72) -- 11-June-2021

- sankara dass

sankara dass nagoji

unread,
12 Jun 2021, 14:09:12
to santhav...@googlegroups.com
பூத்த உந்தி மேல யன்ற னைப்ப டைத்த பொற்பனே
நாத்தி கர்க்கு நன்மை நல்கி டாத நல்ல நம்பனே
ஆத்தி கத்தின் ஆணி யாய ஆழி வண்ண ஆதியே
ஆத்தி சூடி யோன்வ லத்த சக்க ரத்தெம் அண்ணலே....(73) -- 12-June-2021

ஆணி - ஆதாரம்
பொற்பு - அழகு

- sankara dass

கடிச்சம்பாடி

unread,
12 Jun 2021, 16:09:09
to santhav...@googlegroups.com
  'நாத்தி கர்க்கு நன்மை நல்கி டாத நல்ல நம்பனே'  

பெரும்பாலும் இம்மாதிரி கருத்துகளுக்கு நான் பதில் இடுவதில்லை.
அதைத் தவிர்க்கத்தான் நான் கடவுள் பற்றிய கவிதைகளைத்  தவறாமல் படிப்பேன்; 
ஆனாலும்  பின்னூட்டம் இடுவதைத் தவிர்ப்பேன் (இங்கு பெரும்பாலும் அவை தான் - 
முக்கியமாக சிவனைப் பற்றியதாகத் தான் இருக்கும்).
'சித்தம் போக்கு, சிவன் போக்கு' என்று விட்டு விடுவேன்.

இருப்பினும் இங்கு ஒன்று கூற விழைகிறேன்.

கடவுள் என்றால் அது 
'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு 
நல்லாருக்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலமா'க 
அல்லவா இருக்க வேண்டும்?
இல்லாவிட்டால் அது வெறும் கல்லாகத்தான் மண்ணாகத்தான் அல்லவா போய்விடும்?

இது பற்றிய விவாதத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை.
ஆகையால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFRyaoJEyypGKtEPRr_ijKnkzngLdsXSeDtzNcKAdPxvrA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

sankara dass nagoji

unread,
13 Jun 2021, 06:22:52
to santhav...@googlegroups.com
நத்தை போல மெள்ள மெள்ள நாடி னாலும் நல்குவான்
மத்தை சூடி மேவு மேனி கொண்ட மாய மாதவன்
வித்தை கற்ற மித்தை யில்த விக்கும் என்னை மீட்பவன்
அத்தை மக்கள் ஐவர் போற்று சக்க ரத்தெம் அண்ணலே...(74) -- 13-June-2021

மத்தை - ஊமத்தை
அத்தை - குந்தி

- sankara dass

sankara dass nagoji

unread,
14 Jun 2021, 07:56:36 (13 days ago) 
to santhav...@googlegroups.com
கற்ப கத்தின் நாத னைப்பி ரிந்தி டாத கண்ணனே
கற்ப னைக்க கப்ப டாத காதல் காட்டு கள்வனே
விற்ப னர்கள் போற்று கின்ற மேன்மை மிக்க வேதியா
அற்பன் என்னை ஆள வந்த சக்க ரத்தெம் அண்ணலே....(75) -- 14-June-2021

கற்பகம் - கற்பகாம்பாள்

- sankara dass

sankara dass nagoji

unread,
15 Jun 2021, 13:07:16 (11 days ago) 
to santhav...@googlegroups.com
பட்டி மாடு காத்த வாப ரைக்கு மூத்த பட்டனே
மட்டி லாம யக்க றுக்க வல்ல னேத யாகரா
கொட்டி யாடு வான்வ லத்த குற்ற மற்ற கோலனே
அட்டி செய்தி டாமல் ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே...(76) -- 15-June-2021

பரை - உமை
அட்டி - தடை, தாமதம்
கொட்டி - கொடுகொட்டி - சிவனின் நடனம்

- sankara dass

sankara dass nagoji

unread,
16 Jun 2021, 09:12:27 (10 days ago) 
to santhav...@googlegroups.com
உம்பர் போற்றும் உண்மை யேஉ யோகு செய்யும் உத்தமா
கம்பர் செய்த காதை ஓது வார்க்க ருள்செய் கண்ணனே
பம்பை மீது சேது கட்டு பற்ப நாப மூர்த்தியே
நம்பு வேனை ஆள்க நாத சக்க ரத்தெம் அண்ணலே....(77) -- 16-June-2021

பம்பை - பாம்பன் ஜல சந்தி
சேது - பாலம்

- sankara dass

sankara dass nagoji

unread,
17 Jun 2021, 13:25:35 (9 days ago) 
to santhav...@googlegroups.com
விக்கி னத்தை நீக்கு வாற்கொர் வீர மிக்க மாமனே
தக்கி ணத்தை நோக்கு மூர்த்தி தங்கு மேனி கொண்டவா
எக்க ணத்தும் உன்றன் எண்ணம் என்ற னக்கு வாய்க்குமோ
சுக்கி ரன்கண் ஒன்றை வாங்கு சக்க ரத்தெம் அண்ணலே....(78) -- 17-June-2021

சுக்கிரன் - சுக்கிராச்சாரியார்

- sankara dass

sankara dass nagoji

unread,
18 Jun 2021, 08:57:38 (8 days ago) 
to santhav...@googlegroups.com
பெண்ண மர்ந்த மேனி யாற்க ருள்பு ரிந்த பிஞ்ஞகா
புண்ணி யம்செய் பத்தர் புத்தி உள்ள உள்ள ஊறுவோய்
கண்ணி  ரண்டி ருந்தும் என்று காண்பன் உன்னை மாயனே
மண்ண ளந்து விண்ண ளந்த சக்க ரத்தெம் அண்ணலே....(79) -- 18-June-2021

- sankara dass

sankara dass nagoji

unread,
19 Jun 2021, 09:51:46 (7 days ago) 
to santhav...@googlegroups.com
ஆழி மீது பள்ளி கொண்ட ஆதி அந்த மூர்த்தியே
கோழி வேந்தர் பாடு பாட்டில் ஆழ்ந்த பக்தி கொண்டவா
மூழி தாங்கி நின்ற வாமு ழங்கு பாஞ்ச சன்னியா 
தாழி வெண்ணெய் உண்ட வாய சக்க ரத்தெம் அண்ணலே.....(80) -- 19-June-2021

கோழி வேந்தர் - கோழிக்கோன் குலசேகர ஆழ்வார்
மூழி - மத்து

- sankara dass

siva siva

unread,
19 Jun 2021, 12:16:16 (7 days ago) 
to santhavasantham
/ கோழி வேந்தர் - கோழிக்கோன் குலசேகர ஆழ்வார்  /

இச்சொற்றொடர் பொதுவாகச் சோழர்களை அன்றோ குறிக்கும்?
கோழிவேந்தன் kōḻi-vēntaṉ , n. < id. +. Chola, as the king of Uṟaiyūr; [உறையூர் அரசன்] சோழன். (திவா.)

sankara dass nagoji

unread,
20 Jun 2021, 14:27:30 (6 days ago) 
to santhav...@googlegroups.com
வேணி மோது நீரி னான்வ லத்த மர்ந்த மேதையே
பாணி மிக்க பாத னேப ணிந்த வர்க்கொர் சேணியே
காணி இன்றி வாடு வேனை ஆத ரிக்கும் ஆணியே
சாணி னோடு கோணு மாய சக்க ரத்தெம் அண்ணலே...(81) -- 20-June-2021

கோண் - அணுவில் 100ல் ஒரு பகுதி
காணி - நிலம், உரிமை
பாணி - அழகு
சேணி - ஸ்ரேணி - ஏணி

- sankara dass

sankara dass nagoji

unread,
21 Jun 2021, 17:47:29 (5 days ago) 
to santhav...@googlegroups.com
கூறு மேவு நீற்ற னைப்பி ரிந்தி டாத கோதிலோய்
வேறு வேறு தன்மை கொண்ட னைத்தி லும்வி ளைந்தவா
ஈறி லாத வீர னேஎ னைப்ப டைத்த தேன்சொலாய்
ஆறும் நாலும் ஆகி நின்ற சக்க ரத்தெம் அண்ணலே....(82) -- 21-June-2021

ஆறும் நாலும் - ஆறு அங்கம், நாலு வேதம்
கோது - குற்றம்

- sankara dass

sankara dass nagoji

unread,
22 Jun 2021, 15:32:09 (4 days ago) 
to santhav...@googlegroups.com
சூடி மாலை தந்த மங்கை சொன்ன சொல்ல ணிந்தவா
நாடி வந்த அன்பர் முன்பு சேவை சாதி நம்பனே
பாடி யாடு பத்த ரிற்ப ரந்த வாவொர் பாம்புமேல்
ஆடி நின்ற ஆய னாய சக்க ரத்தெம் அண்ணலே...(83) -- 22-June-2021

சேவை சாதித்தல் - காட்சி அளித்தல்

- sankara dass

sankara dass nagoji

unread,
23 Jun 2021, 18:51:10 (3 days ago) 
to santhav...@googlegroups.com
பற்ப நாப னேஉ யர்ந்த பாண்ட வர்க்கு நேயனே
கற்பெ னுங்க னல்கொள் மாதை மீட்டு வந்த காவலா
கற்பம் எண்ணில் கண்ட வாக லங்கு வேனை ஆள்வையோ
தற்ப ரச்சு யம்பு வாய சக்க ரத்தெம் அண்ணலே....(84) -- 23-June-2021

கற்பம் - 4,32,000 0,00 ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு நாள்.

- sankara dass

sankara dass nagoji

unread,
24 Jun 2021, 16:33:45 (2 days ago) 
to santhav...@googlegroups.com
குரங்கு காட்டும் அன்பி லேநெ கிழ்ச்சி காட்டு கொற்றவா
மரங்க ளேழ்து ளைத்த வாவ ராக மாய எந்தையே
தரங்க மேற்று யில்கொ ளும்க றுத்த வண்ண அங்கனே
அரங்க மேய அப்ப னாய சக்க ரத்தெம் அண்ணலே....(85) -- 24-June-2021

- sankara dass

rajjag

unread,
24 Jun 2021, 17:09:14 (2 days ago) 
to santhav...@googlegroups.com
அருமை

Sent from my iPhone

On 24 Jun 2021, at 15:33, Nagoji <nag...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sankara dass nagoji

unread,
25 Jun 2021, 15:30:01 (yesterday) 
to சந்தவசந்தம்
உத்தி யாலொர் ஐவ ருக்கு நாடு தந்த ஒப்பிலோய்
முத்து வேளை மெச்சு கின்ற மூப்பி லாத மாமனே
குத்த லாக வேஇ ருக்கும் என்னை யுங்கு றிக்கொளாய்
அத்த னைக்கும் ஆதி யாய சக்க ரத்தெம் அண்ணலே....(86) -- 25-June-2021

முத்துவேள் - முருகன்
குத்தல் - பிறருக்கு நோவு தருதல்

- சங்கர தாஸ்

sankara dass nagoji

unread,
15:52 (5 hours ago) 
to santhav...@googlegroups.com
இந்து சேக ரற்கு மிக்க இட்ட மான ஈசனே
கந்த மிக்க சந்த னம்து ளங்கு கின்ற மார்பனே
பந்த மிக்க வாழ்வ ளித்த தைய றுக்க வல்லவா
அந்து ழாய மர்ந்த ணிந்த சக்க ரத்தெம் அண்ணலே....(87) -- 26-June-2021

துழாய் - துளசி
அமர்தல் - விரும்புதல்
Reply to all
Reply to the author
Forward