திங்கள், 1 நவம்பர், 2010

அந்த ஒற்றை மரம்
பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று
பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது
கூடுகட்டிக் குருவிகள் வசித்தது
மரம் முழுக்க மந்திகள் இருந்தது
மரங்கொத்தி பறவையும் மறைப்பில்
குருவிச்சை கூட குசியாய் இருந்தது
எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது
உண்ணக் கனி கொடுத்தது
உறங்கப் பாய் கொடுத்தது
ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது
ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து
கொலை செய்யவும் துணிந்தது
கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்
இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று
எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌
காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை
தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு
காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்
உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு
காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி
பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது
மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு
ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது
அதிலும் குளிர்காயச் சிலர்
அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்

jeeva.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக