சனி, 25 டிசம்பர், 2010

கை பேசி! (பகுதி: 1)
புதுக்கவிதை:
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவள்
அப்பனும் நோக்கினான்
அட
அனைவருந்தான் நோக்கினர்
”பெரிதாய்” ஒன்றுமில்லை...
நோக்கியாக் கடை
ஷோக்கேசில்
புத்தம் புதுவரவு
புதியவகைப் புதுவடிவு
கையடக்கக் கவர்ச்சி
நோக்கியாக் கைபேசி!!!
எண் சீர் விருத்தம்:
நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுர்வாய்
நோக்கியரே நோக்கினரே நோக்கா நோக்கியாம்
நோக்கியா அங்காடிக் நோக்கப் பேழையிலே
நோக்கக் கவர்ச்சியாம் நோகாத வளர்ச்சியாம்
போக்கும் வரவும் போற்றிடுந் தெளிவாம்
நேர்த்தியாம் தோற்றமாம் நெடுங்காலத் தேற்றமாம்
நோக்கும் வாக்கும் வழிகோலும் வரைபடமாம்
நோக்கியாப் புதுவரவாம்; அந்தப்புது நளினக்கைபேசி!!!
இன்னிசை வெண்பா:
நோக்கியாப் புதுவரத்துக் கருவி வெளியீடு
வாக்கில் வல்லொலி திரையில் தெள்ளொளி
தாக்கும் மென்கிருமிக் காப்பு; தகதகத்து
நோக்கக் கவர்ச்சிக் கைபேசி யதுதானே!
அகவல்:
கையகப் படுத்திய வையகச் சுருக்கம்;
காதினுள் அடங்கும் காதலின் நெருக்கம்;
வானொலி தேனொலி மந்திர மயக்கம்;
வண்ணொளி கண்ணொளி இந்திரக் கிறக்கம்;
வரம்புகள் இல்லா வானலைப் பிணையம்;
நரம்புகள் இல்லா நனவலை இணையம்;

தகுதியைக் கூட்டும் கௌரவத் துண்டு;
தரத்தினைக் காட்டும் யௌவனப் பெண்டு;
பணியோ இலையோ பதவிசுப் பேழை;
பணிவோ பயமோ அறியாக் கோழை;
பொய்யோ மெய்யோ புலம்பிடும் கருவி;
புரிந்தால் இசையாய் உருகிடும் அருவி;

அவசர கால அடிப்படை மருந்து;
அடிக்கடி படைக்கும் அழையா விருந்து;
உறவுகள் பெருக்கும் உணர்விலாச் செல்லம்;
உயிரினைச் சொடுக்கும் சொல்லில் வெல்லம்;
அரற்றும் மொழிக்கே கட்டண எச்சம்;
அனைத்து வரத்தும் இலவச மிச்சம்;

அறிந்தவர் தெரிந்தவர் கூப்பிடு தூரம்;
அழைப்பும் மறுப்பும் கூடுதல் பேரம்;
தொலைவைச் சுருக்கிய ஓயாத் தொல்லை;
செலவைப் பெருக்கிடும் மாளாக் கிள்ளை;
தனிமை கெடுக்கும் தடங்கல் வில்லை;
தவறியும் பிழைக்கும் வளர்ப்புப் பிள்ளை;

உரையினைப் பரிமாறும் இடைமுகத் தகடு;
உளங்களை இடம்மாற்றும் மறைமுகச் சுவடு;
தடைகளைத் தாண்டிடும் படையெறி அம்பு;
கடமைகள் வேண்டிடும் கைப்பொறி வம்பு;
இருப்பினை இழக்கா இயந்திர உலவி;
இரக்கைகள் இல்லா இராட்சதக் குருவி;

கணத்திடை கடத்தும் காற்றலைப் பூவை;
கடமையைத் துலக்கும் எந்திரப் பாவை;
குறுகியத் தகவலின் விரைவியத் தூது;
கொஞ்சிடும் சேவையில் விஞ்சுவது யாது?
நன்மைகள் சேர்க்கும் நாவலந் தீவு;
நம்பிக்கை காக்கும் நயம்படு மாது;

தரவினைப் பேணும் குறுந்திரள் உருட்டி;
வர-வினை செல-வினை வைகுந் திரட்டி;
நினைவினைத் தூண்டும் குறிப்புரை ஊட்டி;
நனவினைப் பகரும் ஆண்டுநாட் காட்டி;
சலிப்பினைத் தெரியாச் சமர்த்துக் குட்டி;
சஞ்சலம் அறியாச் சந்தனக் கட்டி;

தற்புகழ் தேடா ஊழியப் பிறவி;
தன்லயந் தவறா தனிபெருந் துறவி;;
நினைவகச் சுமையைக் குறைக்கும் நட்பு;
நெருங்கிய அண்மையில் துடிக்கும் உயிர்ப்பு;
வையகம் இங்கே வாழ்கிற வரைக்கும்
மெய்யுறை அங்கமே இந்தக் கைபேசி!
இதயத்து நெருக்கம் மார்பக வலியாம்;
காதொடு பெருக்கம்; கபாலப் புற்றாம்;
காந்தக் களத்திடைக் கனன்றிடும் வாழ்வே;
கவனம் வைத்திடில் வருமோ தாழ்வே?
அறிவொடு நுகர்வின் அனைத்தும் நலமே;
அளவினை மிஞ்சின் அமிர்தமும் விடமே!!!

ஒரு பாக்யராஜ் ரசிகனின் கதை

"கன்னி பருவத்திலே" என்னோட நண்பன் கனகராஜ் "தாவணி கனவுகள்" கண்டு கொண்டு இருந்த சில பொண்ணுங்க கிட்டே "டார்லிங் டார்லிங் டார்லிங்" சொல்லி, அவங்களை முதல்ல "வீட்ல விசேஷங்க"-ன்னு சொல்ல வச்சு பிறகு "ஆராரோ ஆரிராரோ" பாட வைக்கலாம்னு ஆசைப்பட்டு பல தடவ "வேட்டிய மடிச்சு கட்டி"க்கிட்டு போயிருந்தாலும், எப்போதும் அவனுக்கு முதல்ல கிடக்கிற பதில் "விடியும் வரை காத்திரு", அப்புறம் "இன்று போய் நாளை வா".

காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி பண்ணி அதுக்கு அவங்க குடுத்த டோஸ்-ல அவனோட ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு". கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல. இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா சித்திரங்கள்" எப்படி போடறது, "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது, நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான்.

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி"- யை "முந்தானை முடிச்சு" பண்ணின பிறகு "இது நம்ம ஆளு"ன்னு பேசாம சௌதியில "ராசுக்குட்டி" போல இருக்கான் "எங்க சின்ன ராசா". அங்கே "சின்ன வீடு" தேடி "பாமா ருக்மணி" வீட்டுக்கு போனா "அவசர போலீஸ் 100 " கூப்பிட்டு உள்ளே தள்ளிருவாங்கல்லே. கல்யாணத்தப்போ என்னதான் "பவனு பவுனுதான்" எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் அவன் ஒரு "ஞான பழம்"னு யாரும் நெனச்சிராதீங்க.

புதன், 22 டிசம்பர், 2010

<object width="640" height="390"><param name="movie" value="http://www.youtube.com/v/tJ7silhxp5U&hl=en_GB&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tJ7silhxp5U&hl=en_GB&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object>
<object width="640" height="390"><param name="movie" value="http://www.youtube.com/v/5B2YiTmgC8U&hl=en_GB&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/5B2YiTmgC8U&hl=en_GB&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object>

வியாழன், 9 டிசம்பர், 2010

நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்...
                  
              -  தி.திருக்குமரன் 

லைப் பயணியே எங்கள்
தாற்பரிய வேர் முடியே
அலைக் கரத்தில் அவதரித்த
உலைக் கரமே யாராலும்
விலைக்கென்றும் வாங்கேலா
வித்தகமே எம் மண்ணில்
போர்க்குணத்தைத் தோற்றுவித்த
பொருள் முதலே!  கனவிலும் நாம்
கட்டுவதை எண்ணிப் பார்க்கேலாக்
கட்டமைப்பை உன்னுடைய
சுட்டு விரல் அசைவாலே
சூழந்து நிற்க வைத்தவனே..!

உலக வரை படத்தின்
எங்கோ ஓர் மூலையிலே
பெயரின்றிக் கிடந்த ஓர்
பேரினத்தின் பேண் தகவை
அகில உலகத்தின்
அன்றாடப் பார்வைகளில்
பெரும் பிம்பமாக்கி வைத்த
பெரும..! 

மண்ணின்று
நீ வந்த நாளின் நினைவில்
நின் இருப்பை
சோகங் கலந்திருந்தும்
சுமை நிறைந்து நெஞ்செரிந்தும்
தாகம் தீர்ப்பதற்கு வந்திடுவாய்
என ஏங்கி
பாலைவன ஒட்டகமாய்ப்
பார்த்துளது, காலத் தீ
உலகே சேர்ந்தொன்றாய்
ஊதி விட்ட காற்றினிலே
எம் காட்டை
எரித்து விட்டுப் போனாலும்
அதனுள்ளால்
நினை ஏந்திப் போயிருப்பார்
நிச்சயமாய் என்கின்ற
வானேந்தும் வார்கடலின்
வற்றாத உறுதியைப் போல்
நாமேந்திக் கொண்டிருக்கோம்.

நம் நெஞ்சில்..  ஆகவனே
எம்முடைய வாழ்வும்
எதிர்கால வழித் தெளிவும்
உன் பயணச் சுவடெங்கும்
உயிர் நிறைந்து கிடக்கிறது
எம் பயணம் எதுவென்றும்
எது அதற்கு வழி என்றும்
உன் பயணச் சாராம்சம்
உரத்திங்கே சொல்கிறது
கண்ணின் கதிராடி போன்றவனே!

உன் வரவை
எண்ணி இமைக் கரங்கள்
எட்டுகின்ற திசைகளெல்லாம்
அண்ணா எனத்தேடி அழைக்கிறது
விழிச் செவியும்
பார்வைச் செவிப் பறையில்
படும் உந்தன் குரல் என்று
ஆர்வங் குலையாமல்
அலைகிறது, போதுமினி
ஓர்மம்
தான் பெற்ற ஒரு மகனே
தோன்றிடுக..!

வெள்ளி, 3 டிசம்பர், 2010

கைபேசி கவிதைகள்

கைபேசி கவிதைகள் - SMS kavithai

கவிதை தலைப்புபார்வைகள்வெளியான நாள்
உயிர் கிடைக்க காரணமாக இருந்தாதல்(g.m.kavitha)4902-12-2010 10:27:58 PM
'செல்' காதல் (g.m.kavitha)3302-12-2010 06:31:47 PM
ஆசிர்வதாம் (lakshmi)10226-11-2010 10:24:20 PM
தோழியா, காதலியா தெரிந்து கொள் கைபேசி (A.Rajthilak)25824-11-2010 06:04:29 PM
உதடுகள் (priya sankar)19220-11-2010 01:44:44 PM
உனக்கும் எனக்கும் நண்பா (A.Rajthilak)15019-11-2010 07:17:39 PM
மறக்கவில்லை...மறந்துபோய் கூட..(manikandan mahalingam)21116-11-2010 01:57:14 PM
முகம் தெரியா காதலியே (A.Rajthilak)11916-11-2010 01:52:43 PM
kurumbu(senthilsoftcse)7911-11-2010 04:01:53 PM
என் ஏழை காதலி !(A.Rajthilak)16011-11-2010 03:31:49 PM
கொஞ்ச தூரத்தில் கொடுத்திடு முத்தம்(A.Rajthilak)16210-11-2010 07:55:12 PM
திறக் கற்றை உன்னை கொன்று விட வேண்டுமடி !(A.Rajthilak)7410-11-2010 07:48:18 PM
அடி பாவி கைபேசியே ?(A.Rajthilak)12410-11-2010 07:26:10 PM
கைபேசி நீ குற்றவாளி (A.Rajthilak)14509-11-2010 07:43:00 PM
கைபேசி (A.Rajthilak)15108-11-2010 10:11:25 AM
கை அணைத்துபிடிக்கும் காதலி,,,,(manikandan mahalingam)16806-11-2010 11:28:02 PM
அலை பேசி(சுதந்திரா)13730-10-2010 07:11:50 PM
விதிவிலக்கு(Kavisathish)11128-10-2010 08:38:37 AM
தவறான எண்(A.Rajthilak)25223-10-2010 06:19:40 PM
செல்போனின் அழைப்புக்காக.............(manikandan mahalingam)32318-10-2010 01:10:59 PM

காதல் கவிதை

காதல் கவிதை - Kadhal Kavithai / Love Poem

கவிதை தலைப்புபார்வைகள்வெளியான நாள்
எது பூக்காம்பு,எது உன் விரல்....(manikandan mahalingam)2103-12-2010 10:37:11 PM
என் மனசு(g.m.kavitha)4303-12-2010 07:27:22 PM
நான் உன்னை காதலிக்கிறேன் என்று.....(manikandan mahalingam)8703-12-2010 03:34:24 PM
காதல் புத்தகம் என்றும் நீயல்லவா?(manikandan mahalingam)3903-12-2010 03:07:44 PM
மார்கழி பனியாய் நான்.....(manikandan mahalingam)4303-12-2010 02:08:13 PM
காதல் பஞ்சம் (Vedhagiri)4003-12-2010 02:04:26 PM
அடடா!இதுவல்லவா?சிரிப்பு.... (manikandan mahalingam)3603-12-2010 02:00:17 PM
என்னை(Vedhagiri)3303-12-2010 01:59:02 PM
அழிக்க முடியவில்லை இதயத்தில்....(manikandan mahalingam)4903-12-2010 01:55:56 PM
அது என்ன பனித்துளியா........(manikandan mahalingam)3103-12-2010 01:51:30 PM
எத்தவம் செய்து (Vedhagiri)3103-12-2010 01:51:02 PM
உனக்கான வார்த்தைகள்(dhatcha)3803-12-2010 01:38:53 PM
விழிகளுக்கு சோகம்(renga)4103-12-2010 01:25:21 PM
அவள் கண்கள் (Vedhagiri)4003-12-2010 01:21:24 PM
அவள் கண்கள் (Vedhagiri)3503-12-2010 01:16:08 PM
காதலை....(Vedhagiri)3103-12-2010 11:38:15 AM
நீ என்றென்றும் மாறமாட்டாய்(renga)3403-12-2010 10:55:27 AM
காதலியின் திருமணம்!(geethu)4303-12-2010 10:44:50 AM
நீ என்றென்றும் மாறமாட்டாய்(renga)2703-12-2010 10:38:02 AM
காதல் கஜினிகள்..(Gokulan)3003-12-2010 10:31:18 AM