ங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:
என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..
கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை
முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,
கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்
என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..
என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...
குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்
பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,
கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி
வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,
கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,
நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,
என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,
தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து
என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,
என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக