புதன், 2 நவம்பர், 2016

முட்கம்பி வேலிக்குள்
முகவரிகள் தொலைத்து
முடங்கிப்போனது நம் வாழ்வு

பட்டுணரும் வலிகளாலே
பலநாட்கள் கழிய
பட்ட்ட மரமாகிறது நம் வாழ்வு

எம்மை விட்டுச்சென்ற வசந்தம்
இன்னும் எட்டி எட்டிப் போக
ஏதிலியாய் வாடியே
ஏங்குகின்றோம் இங்கேயே

எம் இனிய ஊரைப் பிரிந்து
கூடிக் குலாவிய
உறவுகளைப் பிரிந்து
தவியாய்த் தவித்தேன்
தனி மரமானேன்

தனிமை வாழ்வியலின் வல்லிகளை
கடந்து வந்த நாட்களை
கண்முன்னே கொண்டு வர
எதிர்காலம் கேள்விக்குறியாகி
கரைகிறது யுகமாகிப் பொழுதுகள்

யுத்தத்தில் வென்றுவிட்டோம்
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டோம்
நீ மகிழ்ச்சியில் திளைக்கிறாய்
ஆனாலும் இங்கே
காகிதமாய்க் கிழிவது
நாம் தானே...

எமையெல்லாம் இந்த
திறந்த வெளிச்சிறையில்
அடைத்து வைத்து
என்னதான் செய்யப்
போகின்றாய்?
ஏன் தான் எம்மை
இப்படி வதைக்கிறாய்

கூட்டுக்குள் வாழ்வதற்கு
நாம் மிருகங்கள் அல்ல
கூடிக்குலாவிச் சுதந்திரமாய்
அவையே வாழ்கின்றன
இது உனக்கும் தெரியாதா?

நாமும் உன்னைப் போல்
மனிதர்கள் தான்
எமக்கும் ஆசை உண்டு
எல்லைகள் தாண்டியே
எங்கணும் சென்றிட
விருப்பமும் உண்டு

எம்மை விடு..
எம்மை வாழவிடு...
சுதந்திரக் காற்றை
நாமும் சுவாசிப்போம்
சுற்றியே எங்கணும்
சிறகுகள் விரிப்போம்.பலம் சில கொண்டு 
களம் பல கண்டு 
தளம் பல வென்ற -வேங்கைகள் நாளினை 
வளம் பல பெற்று 
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம்- எம் 
தலம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம் 
குலம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம்தனைக் கொண்டு 
புலம் தனில் உள்ளோர் -மீண்டும் 
பலம் தனைப் பெற்ரால் !
இளம் தலை முறையின் இனியவழிகாட்டலில் 
இழந்ததைப் பெறலாம் நாம் இழந்ததைப்பெறலாம் 
பளம் கதை போதும் -இனி 
பளம் கதை போதும்
கலம் கொண்டுதாக்க 
களம் இப்போது இல்லை 
பலம் கொண்டு தாக்க -போர்க் 
களம் கூட இல்லை 
வலம் வரும் உலகை 
புலன் கொண்டு பார்த்தால்! 
பலன் ஒன்று கிடைக்கும் 
புலம் தனில் நாங்கள் 
பலம் தனைப் பெற்று 
நிலம் தனை மீட்போம் -நாம் 
இழந்ததை மீட்போம்- தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்! 
தமிழரின் தாகம் தமிழீழ்த்தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக