புதன், 16 நவம்பர், 2016

மாவீரர் எழுந்தமானக் கவிதை ப் போட்டியில் நான் சமர்பித்த கவிதை .உடனடியாக எனக்கு தரப்பட தலைப்பு இது தூ ரத்தே இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
......................................................................................................................
1.போவீரா போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை
               பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை
தாவீரா தமிழ்த்தாயி ன் துயர் துடைத்து தலைவன் வழி
             தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர்
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும்
              சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி
                 மலர்க்கவிதை நான் தொடுக்கத்தான் .
2.கல்வெட்டில் பதித்திட்ட கரிகாலன் கரந்தடிப்படை
              காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள்
வல்வெட்டித்துறை தந்த வரலாற்று நாயகனை
             வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன்
              சேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும்
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான் நாடும்
              நல்ல சபையோரே நல்கிடுவேன் நன்றி
3.தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து
           தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை
எம்பி தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே
                 எலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான்
               தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும்
                நாலு படை சேர் நல்ல வழி பார் என்றான்
4.கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்ப்பார்த்தவள்
        கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி
பொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கிய
     பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள்
கடுகு வெந்தய ம் கருக்கி கறிவைத்தி றக்கியவள்
        கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள்
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள்
          வீரமங்கை வழி செல்ல மேய்ப்பன் அழைக்கின்றான்
ஐந்து நட்சத்திரமும் ஐம்பத்திரண்டு நட்சத்திரமுமாய்
           அயல் வீட்டு அறுந்த காவி படையும் கூட
சந்தர்ப்பம் பார்த்து சடுதியில் யூதாசுடனே
          சனி புரூட்டசுமாக புகுந்து விளையாடிடவே
கந்தகத்தீ கருக்கி மண்ணை எரித்த காட்சி
             காரியத்தை முடித்து வைக்க மௌனித்த வேள்வி
நொந்து போய் இருந்திலோ ம் நொடிப்பொழுதில் முடிவெடு
              நேரத்தில் மேய்ப்பன் குரல் மெல்லென நீயெழு
கொத்துக்கொ த்தாக கொத்துக்குண்டுமழை வீச
              கொடுங்கோலன் கோத்தபாயா கோரத்தாண்டவமாட
பொத்துப் பொத்தென்று நாம் பெத்து போட்ட செல்வங்கள்
         பெருவெளியில் பேரிருளில் பெரும் சதையாய்
செத்து செத்து வீழ்ந்த கதை சொல்ல முடியா வேளை
           செல்வோமா செய்வோமா சேதிஎன்னவென்று நீ
பத்து முறை யோசித்து பார்வையாளனாய் அன்றி
          பார் மேய்ப்பன் குரல் கேட்கும் பக்கமே சேர்
தாய் நிலத்தை காதல் செய் தரணியெங்கும் மோதல் செய்
             மீண்டுமெழ தாயகத்தில் நாம் வாழ
நோய் நலத்தில் வீழ்ந்தால் நொந்து சாதல் உண்டே
                நோக்கமது காக்க நொந்து சாதல் நன்றே
பாயநிலத்தில் படுத்து பைந்தமிழ்ச்செவிமடுத்து
              பார்க்கவொரு மார்க்கமுண்டு கேளாய்
சேய் நலத்தை பேணும் தாயாய் நாம் இங்கிருந்து
           
செல்ல மேய்ப்பன் குரல் கேட்கும் காத்திரு

1 கருத்து:

  1. அற்புதம் நண்பர்களே..! சிறந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Latest tamil news

    பதிலளிநீக்கு