புதன், 2 நவம்பர், 2016

தறுதலைகள்
தலையணையாய்
ஊரிலே காணியில்லை
உறவுமற்றொருவரில்லை!

பெயரில் வடக்கும் கிழக்கும்
முதலமைச்சர் நிதி நீதியில்லை
விக்னேஸ்வரன் ஐயா தமிழன்
ஒடுங்கும் குரலின்றி
ஒங்கியகுரல்
காலம் கை  நழுவிவிட்டது!

காலத் தலைவனும் கண் எதிரில் இல்லை?

அகத்தில் பதறல் புதையுண்டவர்
காரிருள் நின்று கதறுகின்றார்
எரிமலை ந‌டுவில் இமயம்!
உறைவாள் உடைந்தாலும்
உள்ளமுடையாத் தமிழ்மாறன்
நாட்டிவைத்த நாட்டாமைப் புலி
தேர்தல் மேடையில் மத்தளமாய்!
நடமாடும் மாங்காய் வடிவத்துள்!

அனுராத புரத்தில் இனவெறியன்வெடி
அராலியில் சுயரூபம் கிழி அடி
எத்தனைகால கபட நாடகனொடி?
எத்தனைகாலஒப்பந்தம் கிழி இடி?

எத்தனைகால பொய் முகதரிசனம்?
பிலாக்காய் திண்ணியின் வெடியில்
பனங்கொட்டை சூப்பி கிளர்ந்தெழாது
முப்பது ஆசனத்திற்கு அழுகிறான்!

இம்சை எல்லாம் தூசி என்கிறான்!!
உணர்வுக் கத்தியச் சுழற்றாது
இனமானத்தை கொன்று புலிச்சாயல்
கூவி ஆசனம் பொறுக்க அழைப்பு

தமிழன் தோலுரித்து செருப்புத்
தைப்பேன் அவன் துட்டகைமுனு
ஓப்பந்தங்கள் கிழிக்கப்பட்டது? சீய்!
நீள்யோசி! சீறு! வீறுகொள! நில்!
நிமிர்ந்து! வாக்குக்கேள் வாக்குக்கொடு
பகைவன் கையைப் பலப்படுத்தாதே!
காலாகாலங்கள் நீதிமடிந்த அடிமை!

கைகொடுத்து தோள் கொடுப்பாரற்றாய்
கை ந‌ழுவி தோள் சறுக்கிவிட நின்றாய்
கைகூடும் தருணம் வாய் மூடக் கண்டாய்
கை தூக்கி முள்ளிவாய்க்கால் மிச்சத்
துகிலுரிந்த துன்சதனர்கள் தேர்தலில்
முள்ளிவாய்க்கால் கொடூரம் உச்சம்!

எத்தனாய் கை கழுவிய பிலாத்துக்களாய்!
புலம்பெயர் தமிழனை கூப்பிடுகிறான்!
திடீரெனப் பெய்தமழை இந்திரன்கள்
வார்த்தைகள் வழிகளை ந‌ம்பாதீர்கள்!

தமிழா புலம்பெயர் தமிழா!! தமிழினமே!
வாடும் சமுகம் வதைபடும் உரிமைகள்
உன்னைத் தேடும் கணிப்பை ஒருகணம்
உனக்குள் சிந்தித்து விடையளிப்பாய்:!

இப்போதும் நீசிந்தும் ஒரு விழி நீர்த்துளி
முள்ளி வாய்காலுக்காய் சிந்தும் மணித்துளி
புலம் பெயர்ந்தவன் ஒளிந்து கொண்டிருக்கவில்லை
முள்ளிவாய்கால் கண்மணிகளை சுமந்து கொண்டிருப்பவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக