வெள்ளி, 1 அக்டோபர், 2010

வர

நம்முடைய பிளாக்கில் நாம் தினம் பதிவு எழுதி வெளியிடுகிறோம். அப்படி வெளியிடும் போது நம் பிளாக்கில் நம் பதிவின் தலைப்பு இடது பக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கும். சிறிய தலைப்புகளாக இருந்தால் பாதியிலேயே பார்ப்பதற்கு அழகற்று காணப்படும். ஆனால் நம் பிளாக்கின் தலைப்பை நடுவில் கொண்டு வந்தால் நம் பதிவின் தலைப்பு அழகாக இருக்கும். அதை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வருவது என இங்கு பார்க்க போகிறோம்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design - Edit Html - என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று .post h3 { என்ற வரியை கண்டு பிடிக்கவும் (இந்த கோடிங் உங்கள் தளத்தில் சற்று மாறியிருக்க வாய்ப்புள்ளது) .
  • Ctrl+f உபயோகித்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம். உங்கள் கோடிங் கீழே இருப்பதை போல இருக்கும்.
.post h3 {
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
இந்த கோடிங்கில் நீங்கள் text-align:center; இந்த ஒரே ஒரு வரியை மட்டும் சேர்த்தால் போதும்.
.post h3 {
text-align:center;
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
மேலே காட்டியுள்ள இடத்தில் சரியாக text-align:center; ஒருவரியை மட்டும் சேர்த்து விட்டு கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங் வேலை செய்கிறதா என்று கண்டறிந்து பின் SAVE TMEPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.


இப்பொழுது உங்களின் பதிவின் தலைப்புகள் நடுவில் வந்து விடும்.உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் தானாகவே மாறிவிடும். அதற்காக edit செய்ய வேண்டியதில்லை.
டுடே லொள்ளு
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts

மவனே யார்க்கிட்ட

8/8





பிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில்(Center) கொண்டு வரSocialTwist Tell-a-Friend

16 comments:

அருண் பிரசாத் said... 1

நன்றி சசி,

என் பிளாக்கில்

/* Posts
----------------------------------------------- */
h3.post-title {
text-align:center;
margin: 0;
font: $(post.title.font);
}

இவ்வாறு வருகிறது. சேர்த்துவிட்டேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... 2

good post

என்னது நானு யாரா? said... 3

நன்றி சசி! நன்றி அருண்!

உங்க ரெண்டுப் பேரு உதவியால நானு மாத்திட்டேன்.

அப்புறம் சசி! ஒரு பதிவுல Alexa ஹிட்ஸ் விட்ஜட் இணைப்பதனால நிறைய பேரு நம்ப வலைப்பக்கம் வருவாங்கன்னு சொன்னீங்க. அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

dondu(#11168674346665545885) said... 4

இதற்கு ஏன் இத்தனை பாடுபடவேண்டும்?

பிளாக்கர் புதுப்பதிவு பக்கத்தில் compose mode-ஐ ஐ செலக்ட் செய்தால், தானே நடுசெண்டருக்கு செல்ல ஐக்கான் கிடைத்து விட்டு போகிறது.

சாதாரண வேர்ட் எடிட்டர் போல எல்லா ஐக்கான்களும் உல்ளனவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் உதயம் said... 5

உபயோகித்து கொள்கிறோம் சசிகுமார்.

பிரவின்குமார் said... 6

எளிமையான விளக்கத்துடன் பயனுள்ள தகவல் நண்பரே..!

எஸ்.கே said... 7

மீண்டும் ஒரு நல்ல பதிவு!

நேசமுடன் ஹாசிம் said... 8

மிக்க நன்றி நண்பா அருமையான பதிவு பயனுடையதாக இருந்தது

prabhadamu said... 9

என்னுடைய தளத்தில் அந்த கோடு இல்லையே நண்பா. என்ன செய்யட்டும்?

சைவகொத்துப்பரோட்டா said... 10

நன்றி நண்பா.

ஈரோடு தங்கதுரை said... 11

டுடே லொள்ளு ஓபன் ஆகவில்லை சசி.

சசிகுமார் said... 12

/dondu(#11168674346665545885) said... 4
இதற்கு ஏன் இத்தனை பாடுபடவேண்டும்?

பிளாக்கர் புதுப்பதிவு பக்கத்தில் compose mode-ஐ ஐ செலக்ட் செய்தால், தானே நடுசெண்டருக்கு செல்ல ஐக்கான் கிடைத்து விட்டு போகிறது.

சாதாரண வேர்ட் எடிட்டர் போல எல்லா ஐக்கான்களும் உல்ளனவே//.


நண்பரே நீங்கள் சொல்கிற முறையில் பதிவின் தலைப்பை மாற்ற முடியாது பரிசோதிக்கவும்.

dondu(#11168674346665545885) said... 13

@சசிகுமார்
கண்டிப்பாக முடியும். இப்போதுதான் செய்து பார்த்தேன், பார்க்க:
http://dondu.blogspot.com/2010/09/hello-how-are-you.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சசிகுமார் said... 14

//dondu(#11168674346665545885) said...//

நண்பரே நீங்கள் கூறிய முறையில் ஒவ்வொரு பதிவிற்கும் செய்ய வேண்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் பழைய பதிவுகளில் மாறாது. ஆனால் இந்த ஒரு வரியை சேர்த்து விட்டால் அனைத்து பதிவிலும் மாறிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் சேர்க்க வேண்டியதில்லை நண்பரே. தகவலுக்கு நன்றி.

Islamiya Paarvai said... 15

நண்பரே நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஐடியாவும் சூப்பர். உங்கள் தளத்தை நான் தினமும் பார்த்து வருகிறேன். நீங்கள் உபயோகமான பல தகவல்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிட்டு வருகிறீர்கள். நீங்கள் கொடுத்துள்ள அனைத்து டிப்ஸ்களும் என்னுடைய பிளாக்கரில் பயன்படுத்தி என்னுடைய பிளாக்கரை மேம்படுத்தியுள்ளேன். என்னுடை பிளாக்கரை பார்ப்பதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்கள் உதவிக்கு நன்றி!

ம.தி.சுதா said... 16

தங்கள் பதிவுகள் ஒரு காலத்தில் பத்தகமாக வந்த பிரபலமடையப் போகிறத வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக