சனி, 18 ஜனவரி, 2020

கிராமம்

கிராமம்
பரவும் பகலவனின் கதிர் !
பசுமைப் பயிர்களின் உயிர் !

நிலத்தை உழும் ஏர் !
நிலதேவியின் தேர் !

வானுயர வளர்ந்த மரங்கள் !
வானுலகம் செல்லும் வழிகள் !

ஆநிரைகளின் கூட்டம் !
ஆண்டவனின் தோட்டம் !

உணவளிக்கும் உழவர் !
உலகத்தின் முதல்வர் !

ஊருக்கு ஓர் ஊருணி !
நீர் தரும் பேரணி !

அழகிய ஊற்றாய் அருவி !
அழகு சேர்க்கும் கருவி !

படர்ந்த வயல்வெளி !
பசுமைப் புல்வெளி !

வீரம் கொண்ட மாந்தர் !
வீரர்களில் வேந்தர் !

மனம் வீசும் தோட்டம் !
மனங்கவர் பூக்கள் கூட்டம் !

மழை தரும் மேகம் !
மயில்களின் மோகம் !

குயில் பாடும் பாட்டு !
குழந்தைக்கு தாலாட்டு !

வாசலின் கோலங்கள் !
வர்மரின் ஓவியங்கள் !

ஊர்கோலத் திருவிழா !
ஊர்மக்களின் பெருவிழா !

ஒற்றுமையின் வலிமை !
வேற்றுமையில் ஒருமை !


எங்கு நோக்கிலும் இனிமையான காட்சி !
இங்கு நடப்பதோ இயற்கையின் ஆட்சி !
எங்கு தேடினாலும் கிடைக்காத ஆனந்தம் !
இங்கு வாழ்ந்திட செய்திட்டேன் புண்ணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக