கார்த்திகை 27
சுவிஸிலிருந்து மதிமுகன்.
முதல் உயிர்க்கொடை வரலாறு
உலகத் தமிழர் உளம் எனும்
மலை முழைஞ்சுகளில் எங்கும் நுழைஞ்சு
பொங்கிப் பெருகும் விடுதலைப் பேராறு!
இறுதியாகப் பரிதியெனும் ஒளிவெள்ளம்
உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம்
பாய்ந்து உணர்வில் தீ மூட்டும்! நாளை யார்?
நீயா நானா? அவனா அவளா? எதுவரினும் வரட்டும்
தமிழீழம் பெறும் மட்டும்இ தமிழரின் பகையை
தமிழால் ஒன்றிணைந்து உலகத் தமிழினம்
ஓட ஓட விரட்டும்!
ஆழ்கடல் மடியினில் மீளாத் துயில்
கொள்ளும் கரிகாலன் வழி வந்த வேங்கைகளே!
காலச் சுழற்சியின் கார்த்திகை மாதமிது
கண்ணுறக்கம் கலைத்துப் பாருங்களே!
காந்தள் மலர் கொண்டு காத்து நிற்கின்றௌம்
வெள்ளலைக் கரம் நீட்டி வாருங்களே!
அறவழி நின்று களமாடிய வீரரே
முகவரியிழந்து முகமிழந்து போகுமோ?
புறநானுhற்றிற்குப் புதுவரி தந்தவரே
தொன்மைத் தமிழ் வீழ்ந்து சாகுமோ?
வானவெளியெங்கும் காற்றெனப் பறந்த
மானமா மறவரே! நீலப்புலிகளே!
மானம் காத்திடப் பிறந்தவர் மாதமிது
ஆனவரை எழுந்து வீசுங்களே!
கானக வெளியெங்கும் உறங்கும் வீரரை
எழுப்பி தமிழன் மானக்கதை நுhறு பேசுங்களே!
கைகளில் சுடரும் காந்தள் மலரும் கொண்டு
காணவரும் மக்கள் போற்றிடுவர்! வானவரும்
உங்கள் அதீத வீரம் கண்டு மழைக்கண்
சொரிந்து வாழ்த்திடுவர்!
நீளத் தரையெங்கும் அணியணியாக
நின்று போர் புரிந்த பெருவீரர்களே!
ஈழத்தமிழினத்தை நெஞ்சு நிமிர்த்தி
வாழ வைத்த வரி வேங்கைகளே!
வாழும் வயதினில் சாவை எதிர் கொண்டு
வஞ்சினத்தோடு மறப் போர் புரிந்தீர்
ஆளுங் காலம் வரும் புலிக்கொடி வானேறும்
மாளும் துன்பங்கள் மாளும் கோளென்
செய்யூம் கொடுங் கூற்றென் செய்யூம்
மாவீரர் பாதம் பணிந்திடும் போதினிலே!
தங்கச் சங்கிலிகள் சுமந்த தங்கையரும்
நஞ்சைக் கழுத்தினில் சுமந்தனரே!
வங்கக் கடலெங்கும் அங்கயற் கண்ணிகள்
துள்ளியெழுந்து அங்கவர் அங்கங்கள் சிதறிட
சிங்கப் படை சரித்து முடிந்தனரே! மங்கையர்
திலகங்களே! எங்கள் மாணிக்க தீபங்களே!
தீபங்கள் கையிலே ஏந்தியே நிற்கின்றௌம்
இது தீபாவளித் திருநாளல்லஇ ஆகாய வெளி
நின்று தேவரும் கூட ஆனந்தப் பூமழை
சொரியூம் மாவீரர் திருநாளிது!
பாரெங்கும் பரந்து வாழும் பண்பான
மறத் தமிழன் மார் தட்டும் மாதமிது!
கார்த்திகை என்றாலே துன்பங்கள்
கலைந்தோடும் தீபங்கள் இருள் விரட்டும்!
கார்த்திகா வந்து மழைக் கரங்களாலே
மண்ணினைத் துலக்கி வைப்பாள்
சோலைகள் மரங்கள் பசுமை புனைந்து
தமிழீழ மண்ணினை அழகூட்டும்!
மாவீரர் கொடுஞ் சமராடுவது போல்
இடிமின்னல் வீச்சாய்ப் பிறந்திடும் மாதமிது
தமிழினம் வாழ இன்னுயிர் தந்தவரைப்
போற்றிடும் நாள் வரும் மாதமிது! இதைத்
தமிழீழ மாவீரரின் மாதம் என்போம்
அவர் தாள் பணிவோம் மாவீரர்
நாளில் மாவீரம் தான் பெறுவோம்!
ஈழம் எனும் அமிழ்தத்தை எடுக்க
உடலை மத்தாகவூம் உயிரைக்
கயிறாகவூம் தந்து கடைந்த மாவீரரே!
விலை போகா வீரமும் மழைக்கை போல்
ஈகமும் கொண்டோரே! எங்கள் உடலோடு
உயிராய் இருக்கும் வரை உங்கள்
அடையாளங்கள் எப்படி அழியூம்?
நாம் இன்று நல்லாயிருக்கிறௌம் என்றால்
அது பெற்றௌர் செய்த தியாகம்
நாம் இன்று படித்திருக்கிறௌம் என்றால்
பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த
ஆசிரியரது தியாகம்! வயிறார உண்ணுகிறௌம்
என்றால் நெற்றி வியர்வை சிந்திய உழவரது தியாகம்
தமிழரென்று உலகில் தலை நிமிர்ந்து நடக்கிறௌம்
என்றால் அது மாவீரர்கள் செய்த தியாகம்!
தியாகங்களிலெல்லாம் உன்னத தியாகம்
உயிர்த் தியாகம்! அந்தத் தியாகிகளைப்
போற்றும் அதிஉன்னத நாள் மாவீரர் நாள்
உயிரைத் தானம் செய்து தமிழ் மானம்
காத்தவரை வானத்தை விட உயர்வாய் எண்ணுவோம்!
ஓராயிரம் எதிர்முனைச் சக்திகள் ஒன்று சேர்ந்து
சதிகள் செய்தாலும்இ எமைக்கொன்று
நம் ஒற்றுமையைச் சிதைத்தாலும்இ ஆராவமுதாம்
அன்னை தேசம் மீட்க நுhறாயிரமாய் எழுவீர்!
நெருப்பிடையிட்டு நீறாக்கிப் போட்டாலும்
தமிழன்னை நெற்றியை அலங்கரிப்பீர்!
வாழ்வதும் வீழ்வதும் தமிழன்னை வெற்றிக்கே என்றெழுவீர்!
செங்களம் தனிலே தன்னந் தனியனாய்
எங்களை எதிர்க்கத் திராணியற்ற சிங்களன்
உலகைத் துணைக்கழைத்து அழித்தான்.
தீர்ப்பைச் சொல்ல உலகும் தயங்குகிறது!
நாங்கள் நடத்தியது தர்மயூத்தம்
தர்மம் இருப்பது உண்மையானால்
புத்தபகவானே! சித்தம் இரங்கி வா!
முள்ளி வாய்க்காலில் தமிழீழ மக்ளுக்கு
நடந்த இனப்படுகொலையை பக்கச் சார்பில்லாமல்
எழுத ஒரு “அந்தோணி மாஸ்கரனேஸாக”
அவதாரம் எடுத்து வருவாயா?
சர்வதேசத்திற்கும் தமிழினத்திற்கும்
ஓர் நற்செய்தி தருவாயா?
பழந்தமிழனிடம் இல்லாத வான் படை கண்ட
ஈழத்தமிழன்இ வீரத்தமிழன் பிறந்த மாதமுமிதுவே!
வளம் தரும் தமிழீழம் தனை மீட்டிட
களம் தனில் வீழ்ந்திட்ட மாவீரரை உளம்
தனில் ஏந்திடும் நாளிது! வளம் பெறுவோம்
நலம் பெறுவோம்! அவர் பாதங்கள்
போற்றிடுவோம்! இழந்த நம் உரிமையை
மீட்டிட நிலமென்ன புலமென்ன இளமென்ன
கிழமென்ன அனைவருமே ஒன்றாய் எழுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக