சனி, 17 டிசம்பர், 2011


திகழ்
22. Nov, 10:39


காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து Weitere Informationen …
திகழ்
7. Nov, 11:32


நஞ்சுண்டான் நாமம் பிறவிக்கு நஞ்சாகும்

அந்நஞ்சு நாவேற நெஞ்சுக்(கு) அமிழ்தாகும்
அஞ்செழுத் தோத உயிராம் எழுத்தழியும்
அஞ்சாளும் அஞ்சுகொல் நெஞ்சு ! Weitere Informationen …
திகழ்
30. Okt, 6:56


அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்! - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்!
முருகா என்றோதுவார் முன்! Weitere Informationen …
திகழ்
29. Okt, 8:13


ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டியதேன்? வேடன்கண் அப்பர்
சிறுகண்ணைத் தோண்டியதேன் செப்பு. Weitere Informationen …
திகழ்
28. Okt, 14:57


பலன்கருதிச் செய்கர்மம் எப்பலத்தால் நிற்கும்?
பலன்கருதாக் கர்மம்தான் தற்பலத்தால் நிற்கும்!
பலனொன்றும் வேண்டாது பாப்பலவே செய்தேன்
பலனென்றன் சிற்றம் பலம்! Weitere Informationen …
திகழ்
26. Okt, 9:27



காளியே ! அன்பரைக் காத்திடும் ஈசனின்
தோளினைப் பங்கிட்ட தேவியே ! வாளித்
தவளையாய் வாழ்கிறேன்; நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா. Weitere Informationen …
திகழ்
16. Okt, 12:11



வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
 Weitere Informationen …
திகழ்
15. Okt, 11:01


சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு. Weitere Informationen …
திகழ்
11. Okt, 14:51



அள்ளித் தருவதற்கு ஆயிரம் உண்டிங்கே
உள்ளிபோல் உன்னை உரித்துத் தரவேண்டாம்
துள்ளிக் குதிக்க , துடிக்கும் உயிர்க்கு
துளியேனும் நெத்தத்தைக் கொடு. Weitere Informationen …
திகழ்
9. Okt, 15:05



தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன்
வேளாள னென்பான் விருந்திருக்க - வுண்ணாதான்
கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர்
கேளாக வாழ்த லினிது. Weitere Informationen …
திகழ்
1. Okt, 17:10


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்! Weitere Informationen …
திகழ்
24. Sep, 8:07


ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொழுதுங்
கொண்டக்கால் வாராது கூற்று. Weitere Informationen …
திகழ்
23. Sep, 16:47


பொய்களெல்லாம் நாணும் ; பிணந்தின்னும் பேய்கள்
பயந்தோடும் ; பெட்டிகள் பஞ்சுமெத்தை யாகும் ;
வரந்தரும் தெய்வங்கள் வேடமிட்டுக் கொள்ளும் ;
அரசியல் வாதியைக் கண்டு. Weitere Informationen …
திகழ்
21. Sep, 14:38



பனிபோல் உருகுகிறேன் பாராயோ கண்ணா !
இனியும் எனக்குநீ இன்பத்தைத் தாராயோ
கண்ணா ! சிதைக்கும் கவலைகளைத் தீராயோ
கண்ணா ! மணிவண்ணா ! நீ Weitere Informationen …
திகழ்
20. Sep, 14:28


அந்நியன் வந்தான்; அவனை விரட்டிடவே
இந்தியன் என்றோம்; இணைந்தே திரண்டிட்டோம்;
இன்னலைப் போக்கியே இன்பத்தைக் கண்டோம்;
இனியொன்றாய் வாழ்ந்திடு வோம். Weitere Informationen …
திகழ்
18. Sep, 14:32



தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்
செவ்விதழைத் தந்தாயோ செய்து! Weitere Informationen …
திகழ்
11. Sep, 10:40



அடக்குமுறை எங்கள் அணுகுமுறை என்றே
அடங்காமல் ஆடும் அரசாங்கந் தன்னை
அடக்குவார் நாட்டுமக்கள் தேர்தலின் மூலம்!
அடங்காமை வீழ்ச்சிக்கே வித்து. Weitere Informationen …
திகழ்
10. Sep, 13:08



தண்ணீரே இல்லாமல் தாமரைத்தான் வாழுமோ?
விண்மீனும் வானத்தை விட்டுத்தான் வாழுமோ?
எண்ணாமல் எப்படித்தான் நானும் இருப்பேனோ?
கண்ணா உனையெண்ணா மல். Weitere Informationen …
திகழ்
6. Sep, 14:40


நீயில்லை என்னும் நினைவே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நிகழ்வே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நொடியே எனக்குவேண்டாம்;
நீயே எனக்குவேண் டும். Weitere Informationen …
திகழ்
20. Aug, 11:10


முக்தி பெறுவதற்கும் ; முன்னேற்றம் காண்பதற்கும் ;
சக்தி பெறுவதற்கும் ; சாதனை செய்வதற்கும் ;
உக்தி வகுப்பதற்கும் ; உண்மை உணர்வதற்கும்
பக்தியே பாதை நமக்கு. Weitere Informationen …
திகழ்
9. Aug, 9:16



தாவிக் குதிக்கும் தவளை மனமே!நீ
பாவம் புரிந்தென்னை பாவியாக்கப் பார்க்காதே!
ஆவி துறக்கும்முன் ஆசை அடக்கியே
கோவில்கொள் ஆண்டவனை !
 Weitere Informationen …
திகழ்
24. Jul, 11:54


கதிராடும் நன்நிலத்தை; காற்றாடும் காட்டை
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிகெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியைச் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு. Weitere Informationen …
திகழ்
17. Jul, 6:27


மல்லரை வென்ற மணிவண்ணா! உந்தன்
மலரடி போதும் மணிவண்ணா! எந்தன்
கவலையைப் போக்கிடும் கார்வண்ணா! இன்பக்
கவிதையைக் கேள் கார்வண்ணா!

*************************************
முழுப்பாடலை வாசிக்க இங்கே செல்லவும்

***************************************
 Weitere Informationen …
திகழ்
9. Jul, 14:57


வண்டாய் மலர்தாவும் வண்டாய் மனமலையும்
செண்டாய் மதிமயங்கும் செண்டாய் மனம்மயங்கும்
நண்டாய் நிலம்கீறும் நண்டாய் மனம்சிதையும்
கண்டால் உனைக்கண்டால் நன்று. Weitere Informationen …
திகழ்
9. Jul, 9:59


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. Weitere Informationen …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக