சனி, 26 ஜூன், 2021

 


                இயற்கையின் கோரம்

தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த
தாரணி கொண்ட  இயற்கையாள்

வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்

ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை  கிறங்கச் செய்தோடின

நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள்
மங்கை இயற்கையைப்  பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ
சற்று விதிகள் புரிந்திட்டேன்

சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள்
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன

மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப்  படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???

kirikasan

unread,
29 Jun 2013, 14:46:55
to santhav...@googlegroups.com
இது நீண்ட நாட்களுக்கு முன் தொடங்கி எப்படி முடிப்பது என்றுதெரியாமல் அரகுறையாக இருக்கும் ஒரு கவிதை.
பெரியவர்கள் கதை கூறும் கவிதையில் ஆர்வம் காட்டும்போது எனக்கும் இந்தக்கவிதையை முழுதாக்கி  ஒப்படைக்கும் ஆவல் பிறந்துள்ளது
எப்படிமுடிப்பேன் என்று தெர்யவில்லை. எந்த  முன் எண்ணமுமில்லாமல் தொடங்கியது பார்ப்போம் சக்தி துணை!


 

            வாழ்க்கை

1. மயக்கும் மாலை

வான மகளித ழானமுகில் தனை
வண்ணச் சிவப்பினில் சாயமிட
தேனு மினியபொன் மாலையிளங் குளிர்
தென்றலலைந் தென்னை தேடிவர
ஞானமறை ஓதும் கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் நேர் நடந்தே யந்தப்
புல்வெளிமீது நடைபயின்றேன்

தேனை உண்ணமலர் சேரும்வண்டு எனை
தீயன் எனஎண்ணித் துள்ளியெழ
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேரும் பறவைகள் ஓசையிட
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சிட மண்ணை வளர்த்ததென
கானமிசைத்த நற்காட்டு குருவிகள்
கண்டு  பறந்தன சத்தமிட

வீசி அடித்திடும் காற்றினிலே மரம்
விழ்ந்து குதித்திடும் சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன பங்கயங்கள்
பேசிச் சிரித்திடும் நங்கையர்கள் கரை
பககமிருந் தள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் அத்தனை யும்ரசித்து

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்த முகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணின் ஒளிசிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்ட அந்தமூத்தவளும்
எண்ணிய தேதென நான்நினைத்தே அயல்
ஏகமுதல்கணீ ரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை வந்தாள்

எங்கு சென்றாயடி சின்னவளே இங்கு
என்னைவிட்டு என்று கோபமிடும்
தங்கமூதாட்டியும் தானவள் பேத்தியின்
தன்மைகண்டு நானும் எண்ணலுற்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தடைந்து நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழி சிந்தவும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலப்பல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்தபின்
ஊன்றுதடி கொண்டு கூனெடுத்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையாமொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் கண்டுநின்றேன்
அந்த சிறுமகள் புன்னகைத்தே யெனைச்
`அண்மையில் வந்து கிளுகிளுத்தாள்

(தொடரும்)

kirikasan

unread,
29 Jun 2013, 23:34:03
to santhav...@googlegroups.com
   வாழ்க்கை  (தொடர்)


2. அந்தி மயக்கம்

கண்கள் இரண்டவை துள்ளுங் கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவு முகமென்னில் மதியிடை
ஏந்தும் இதழ் கொவ்வை என்பது பொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வையெனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்துப் பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்த அன்னை தன்னை கண்விழித்து
”என்னுடை அன்னையின் அன்னையிவள்இன்று
தன்னுடை யில்லம் திரும்புகிறாள்

என்ன முயன்றுமூர் வண்டியை விட்டனம்
இன்று இனி ஒரு வண்டியில்லை
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்றெண்ணி சோருகிறேன்
தன்னந்தனி துணைவந்த தவறெண்ணி
துன்பமுற்றேன் வழி செய்குவீரோ
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்கிணி நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகி
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்றுத் தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றி வளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிடப் பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்தே - அந்த
நீலவிண் ணின்மதி தங்கையினை
சற்றுப் பொறு வழி தோன்றியதேயென்று
சஞ்சலம் விட்டிடென் றாற்றுவித்தேன்

ஒய்யாரமாய் நடைபோட்ட களைப்பினை
ஊடே நிறுத்திட மாடுகளும்
கையில் பிடித்தக யிற்றினிலே களைப்பாறத்  
கடைவழி ஊற்றிநிற்க
வையகமீதினில் கவ்வும் இருள்வர
வாடும் மலர்களின் கூட்டத்திலே
மொய்த்த இனம் விட்டு வானெழவும் அந்த  
மோகமலர்களும் வாடுதல்போல்

தன்னின் ஒளிதனை விட்டபகல்சோரத்
தூறும் மழைபோன்ற சத்தமுடன்
புன்னகைத்தே மக்கள் கூடக்கண்டேன் அந்தப்
போதினில் முன்னந்தி அங்காடியில்
சின்னஞ்சிறு பந்த தீயெரியச் சிலர்
சேர்த்த அகல்விளக் கேற்றி வைத்து
மின்னும் ஒளிமாலை ஆகமுன்னேயந்த
மேன்மைத் தமிழ்மாந்தர் கூடிநின்றார்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொன்னேன்
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இருள்
ஆகமுதல் வழி கொள்ளுமென்றேன்

கண்மணி  யாள்விழித் தச்சம்கொண்டே அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவெறிக் கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தென்னில் புன்னகைத்தான்
அண்ணா கூட நீயும் வாருமென்றாள் விழி
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்தல் சரியெனக்
கேட்கமனம்  கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைவில்
பாடிக்களித்திட எண்ணியவன் ஒரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

kirikasan

unread,
30 Jun 2013, 11:45:03
to santhav...@googlegroups.com

        தமிழைக் காப்போம்

தமிழே எங்கள் தாயின் மேலாம்
தமிழே உயர் தெய்வம்
தமிழாம் அன்பின் திகழ்வாம் தமிழே
தனதின் உயிர் மூச்சாம்
தமிழே வாழ்வாம் தமிழே இன்பம்
தமிழெம் ஆசானாம்
தமிழுக் கிழிவை தருமோர் செயலை
தவிர்த்தே தமிழ்காப்போம்

தமிழே வீரம் தமிழே மானம்
தமிழே உயிர்நாடி
தமிழே நிதியாம் தமிழ்பொற் குவையாம்
தமிழே தலையுயர்வாம்
தமிழின் சொல்லும் தரமும் மேன்மைத்
தகமை பெற்றோங்க
தமிழைப்போற்றித் தமிழில் ஆக்கம்
தருவோம் தலை நிமிர்வோம்

இழிமைச் சொல்லும் இன்னா பொருளும்
எடுத்தே ஆளாமல்
அழிவைத் தாரும் அறனில் வார்த்தை
அதனில் கொள்ளாமல்
மொழியின் உயர்வும் மேன்மைத் தனமும்
மெருகும் அதிலேற்றிப்
பழியும் சேராப் பண்பைப் போற்றிப்
பாரில் தமிழ் காப்போம்

ஒன்றே சேர்வோம் ஒருமை காண்போம்
உயர்வைக் கைக்கொள்வோம்
நன்றே செய்வோம் நம்மொழி காப்போம்
நல்லோர் வழி செல்வோம்
என்றும் எங்கள் தாயின் அழகுக்
கெழிலார் அணிசெய்து
வென்றே துயரும் வீறுடன் அன்னை
வாழும்வகை செய்வோம்


**ஒரு தேவை கருதி உடன் எழுதியது

kirikasan

unread,
30 Jun 2013, 21:26:37
to santhav...@googlegroups.com

  வாழ்க்கை (தொடர்)

3. மயங்கும் வேளை

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலே வெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூத்தமலர் சிரித்து நிற்குது
செங்கனியின் வண்ணமெழச் செம்மைகாணுது
நேத்துவந்த பாசத்திலே நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று நேசம்கொள்ளுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூடப் பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்திரடி பக்க மென்றால் வம்பு செய்யுது
கூத்தடிச்சுச் சின்னவளாய் கும்மி ஆடுது
குழந்தையாகி ஏங்கும் நெஞ்சும் குமுறிக்காணுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் பாவிமாள்வது
பழமிருந்தும் பசியெடுக்காப் பொழுது போவது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றிவைக்கணும்
காட்டுமலர் காலம்சென்றால் காய்ந்து போய்விடும்

மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டவும்
முன்னிலவு பின்மறைய மேகம் மூடவும்
பேச்சுக்கென்றே யாருமில்லைப் பித்தங்கொள்வதோ
பின்னொழித்த  முகில்மறைவில் போவது ஏனோ
கூச்சமென்ன வெண்ணிலவே கொஞ்சம் கீழேவா
கூடிப்பேச ஆசையுண்டு  கொஞ்சம்  பூமிவா
பூச்சரமோ வாடிவிட  பொன்னிலவன்றோ
பூமியிலே நீயிருந்தால் புன்னகையன்றோ

கன்னி யவள் நெஞ்சம் கொண்ட காவலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசெய்யுது
சொல்லவந்தும் உள்ளமதை சுற்றிமூடுது
என்னசொல்லி ஏது செய்ய இத்தனை மனது
எண்ணங்களின் எல்லைதாண்ட ஏனிந்தப்பாடு

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லுங் கரைத்திடும் கட்டழகைக் கொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வஞ்சியுளம் வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானே புரிந்துகொள் ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந் தங்கு வீசியது அது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுபட அவை
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மன
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்கள் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்லுவிழுந்தன்ன
தேவதை உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையின் நாடகம் கண்டுநின்றேன்

போகும் பாதையிரு பக்கம் மரம் நிறை
பாதையில் செல்வண்டி மாடுகளும்
ஆகும் பொழுதும் இருண்டுவர ஒரு
அச்சமனதில் எழுதல்கண்டேன்
தேகம் குளிரினில் ஆடியதோ இல்லை
தீண்டும் மனதுள்ளே பேசியதோ
ஏகும் வழியினில் ஏதும் தடைவரும்
என்பதுபோல் மனம்  எண்ணக்கண்டேன்

மூத்தவயதினில் காணுபவள் அன்னை
மேனிசரித்து படுத்திருந்தாள்
கூத்து நடந்திடும் கோலமதைக் கண்டு
கொஞ்சம் மனதிற் கிலேசமுற்றாள்
பூத்தமுகத்தொடு சின்னவளோ சற்று
பேச்சில் அவனிடம் சேர்ந்துநின்றாள்
யாத்த விதிகளை மீறிடுமோ வென
யௌவனப் பெண்ணொரு பாடலிட்டாள்

(தொடரும்)

kirikasan

unread,
1 Jul 2013, 06:14:23
to santhav...@googlegroups.com




     வாழ்க்கை (தொடர் )

4. எதிர்பாராதது

(அவள் பாடுகிறாள்)

தேனிலே விழுந்தவண்ணத்
  திங்கள் நீயும் சொல்லடி
  தென்றல் சொன்ன சேதிஎன்னடி
நானில்லாத போதேயுன்னை
  நாணமின்றித்  தொட்டதார்
  நீ மறைந்த கோலமேனடி
வேனிலே எழுந்ததென்றல்
  வேதனை கொண்டீவதோ
  வேகமாய்வந் துள்ளம்தொட்டதோ
ஏனிலாத வாழ்வு தானும்
  இப்படிக் கசக்குமோ  
  என்றன் வாழ்விற் கென்னசொல்லடி

பூமணம் எடுத்த தென்றல்
  போனதெங்கே சொல்லடி
  போதும் இந்தக் கோலம் காணடி
தீமனம் விடுத்து என்னைச்
  சிந்தை கொள்ளும் தென்றலோ
  சென்றெனை மறந்துநிற்குமோ
நீரிலே மலர்ந்தபூவில்
  நின்றுமேகம் பெய்வதால்
  நிச்சயம் ஒன்றாவதில்லைக் காண்
வேரிலே மண்ணூன்றிவாழ
  விட்ட வேர்கள் தாங்குமோ
 வெற்றென்றாகி என்னை வீழ்த்துமோ

வாழ்விலே நல்லன்புகொண்டு
  வாழவேண்டும் பாரடி
  வற்றிப்போகு மாமோ சொல்லடி
தாழ்விலே நன்நீருமின்றித்
  தாமரை பிழைக்குமோ
  தங்குமுள்ளம் ஈரம் தானோடி
ஆள்வதென்ற அனபுநெஞ்சில்
  ஆசை மிஞ்சிப்போனதோ
  அத்தனைக் கும்ஏதுகூறடி
தோள்வலித்த ஆடவர்க்குத்  
  தன்னலத்தில் மோகமாம்
  திங்களுந்தன் உள்ளம் எப்படி?
*******


சல்சல் சலவெனத் தாளமிட வண்டி
சஞ்சலமின்றி உருண்டு கொள்ள
வல்ல மனம்கொண்ட வாலிபனோ சற்று
வேகமெடுத்தனன் பாட்டினிலே
அல்ல லிழைத்தவன் மாடுகளைப் பின்னே
ஆக்கினை செய்து விரட்டிவிட
எல்லைகடந் தொருவேகத்திலே வண்டி
ஏறிவிழுந்திட ஓடியது

மெல்ல நடத்திடு வண்டிதனை அன்னை
மேனிகுலுங்குதல் ஆகாதென்றே
சொல்ல நினைத்திட  பாதைமுன்னே ஒரு
சாய்ந்த மரமொன்றில் மோதுவதாய்
செல்ல கயிற்றினைப் பற்றியவன் என்ன
செய்தனனோ வகை நானறியேன்
கல்லொன் றிடித்தது போலிருக்கக் குடை
சாய்ந்து விழுந்தது வண்டிநிலம்

வாழைநிறை தோட்டம் உட்புகுந்த யானை
வீழ்த்தி சிதைத்திட்ட கோலமென
ஏழைமாந்தர் நாமும் கீழ்கிடக்க  அந்த
இரட்டைமாடுகள் துடித்திருக்க
வேளையதில் பக்கம் நேர்விழுந்தோன் அவன்
வேகமுடனங்கு துள்ளியவன்
தோளைச் சிலுப்பிய சுந்தரனின் மகன்
சுற்றுமுற்றும் கண்கள் நோட்டமிட்டான்

முன்னர் அவன் செய்த காரியமோ சின்ன
மோகன நங்கை அருகணைந்து  
என்ன நிலையினில் காணுகிறாள் என்று
ஏக்கமுடன் கேள்வி கேட்டுநின்றான்
பின்னல் சடைகுலைந்தாட அவள்மெல்ல
பேச்சின்றிப் பார்த்து விழிசினந்து
என்னேசெய்தாய் என்று கேட்பதுபோல் மெல்ல
ஏறிட்டுபார்த்து முகம்சரித்தாள்

நானுமெழுந்து நடக்கவெண்ண பாதம்
நல்லோர் வலிகண்டு நோவெடுக்க
கூனும்விழுந்த கிழவி கண்டேன் ஏது
குற்றுயிரோ என அச்சமுற்றேன்
வானும் இருள்சூழ்ந் திருண்டுவிட இருள்
வைத்தவிழி காட்சி அச்சமிட
ஊனிடை நோவெழ மூத்தவளோ அன்னை
ஓசையிட்டு வைய ஆரம்பித்தாள்

பாவிமனிதனே பைத்தியமோ எனைப்
பாடையிலே போட எண்ணினையோ
ஆவி தனைபோக்கி ஆனந்தமாய் பெண்ணை
அள்ளிக் கட்டிக் கொள்ளும் உத்தேசமோ
கூவிகதறிடக் கத்தியவள் முன்னே
கொஞ்சம் தயங்கிய காளையவன்
தாவிநடந்து விழுந்தவளைச் சற்று  
தாங்கிக் கரம்பற்றி தூக்கச்சென்றான்

ஆயின் அவள்வய தானவளின் உடல்
அத்தனை நல்லோர் நிலை குலைந்து
காயமுண்டோ காலும் நோகுதென்றே யவள்
கத்திஎழுந்திடக் கூச்சலிட்டாள்
போயவள்பக்கமும் நானணைந்து முது
பாட்டிநிலை ஏது கண்டுகொண்டேன்
தீயை மிதித்தவன் போலுணர்ந்தேன் அவள்
தேகம் முடியாது வீழ்ந்திருந்தாள்

(தொடரும்)

kirikasan

unread,
2 Jul 2013, 12:10:15
to santhav...@googlegroups.com
வாழ்க்கை தொடர் முழுவதுமாக எழுதிவிட்டு திருத்தங்கள் செய்து  தரமானதாக காணப்பட்டால் மட்டும்  இங்கே வெளியிடப்படும்

அன்புடன் கிரிகாசன்




          நான் நானேதானா?



அதிமதுரச் சுவையெழவும் அழகிலொரு மலர் எனவும்
அகிலமதில் வாழவிட்டதாயே
பதிமனதில் இதுவெதெனப் பழகுதமிழ் புதியதெனப்
பருவமதைத் தந்தவளும் நீயே
கொதியுலையில் கிடவெனவும் குளிருறையப் படுவெனவும்
குவலயத்தி லென்வாழ்வை யீந்து
விதியதனை விளக்கமின்றி வெறுங்கரத்தில் திணித்துவிட்டு
வேடிக்கை பார்ப்பதுவும் நீயே

மதிபுரள மயக்கங்களும் மனதில் நிழல் மறைவுகளும்
மருளவென உயிரிட்ட தாயே
சதிஎனவும் கதிஎனவும் சஞ்சலத்தி லாழ்ந்துவிட
சரித்திரமும் எழுதிவைத்ததேனோ
புதிதுஎன எதுவுமிலை பொழுதுவரும் அதுவுமெல்லை
புகட்டிஎனை புதுமனிதம் ஆக்கி
முதிர்பருவ மதிற்தெளிவு எதுவுமின்றி இது வெனது
முகமெனவே காட்டி யருள் சேர்த்தாய்

கதிஇதுவோ எனதெனவும் கரமெழுதும் கருவிதனும்
கடைவழியில் நிற்குமிவன் ஏந்தி
துதிதமிழைப் பாடுஎனத் தூரிகைகொள் ளாதவனை
துணி வண்ணம்தீட்டுவென வைத்தாய்
நதியெனவே பொங்கக் கவி நிதியளித்த தேவியுனை
நிறுத்தி ஒரு வரமிதனைக் கேட்டேன்
எதில் இவனும் மூழ்குவது எதை விடுத்தே ஏகுவது
இதை அறியு மாற்றல்தனும் தாநீ

வதியும்பல அறிஞரிவர் வளமுடைய கலைநிதியர்
வருமழகு சோலைதனில் நானும்
எதிலும் மனஇயல்புதனை ஏற்றவிதமாக்கியருள்
இதமுடனே வாழ வழிசெய்வாய்
அதிதொலைவில் இல்லையிவன் அகமுழுதும் நிறைந்தவராம்
அதனில் ஒரு குறையெதுவுமில்லை
பதிலிதெனில் பச்சைவண்ண பாம்பிலுறை வோனையன்று
பார்க்கச் சென்ற குசேலர் உணர்வானேன்

இமயமலை கண்டவரை எனதயலில்காணுகையில்
எதை பொருளென் றெடுத்தியம்பக் கூடும்
சமயமதில் ஏதறிவும்  தனதுடைமை இல்லையெனில்
சற்று மனம்கோணும் குரல் திக்கும்
இமைநழுவும் விழியெதுவும் இலக்கியங்கள் அறிந்ததில்லை
எதையெடுத்து பேசமுனைவேனோ
அமைதி கொளும் நெஞ்சினிலே அவளிருந்துசொல்வதின்றி
அவைதனிலே எழ மனதுகூசும்

***************






kirikasan

unread,
3 Jul 2013, 00:12:51
to santhav...@googlegroups.com


       தேவைகளை ஈய்பவளே!

கூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன்
கொப்பிருந்தால் போதாதோ
தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத்துள்ளிசையும் தேவையாமோ
தாவும்சிறு மான்குட்டி தான்குதிக்கத் தாளஒலி
தானுமங்கு தேவையாமோ
ஆவின்மடி பால்கறக்க ஆட்டமென்ன பாட்டிசையேன்
அ தன்கன்று வந்திடாதோ

மாவின்கனி பழுக்கவென மந்திரமேன் தந்திரமேன்
மழையிருந்தால் போதாதோ
நாவில் தமிழ் சிறக்கவெனில் நூல்படித்து காணவில்லை
நெஞ்சில் அவள் நின்றதாலோ
பாவின் அடி சந்தமிடப் பார்த்துக் கனம் கொள்வனல்ல
பாமொழிந்த தவளேயன்றோ
தேவியவள்  பார்த்திடுவள்  தீயின்தகிப் பேற்றமுறத்
தீமைகளும் ஒழிந்திடாதோ

பூவினெழில்  சிறப்பென்னில் புகழ்வேது புனைவேது
பூங்காற்றின் வேலையன்றோ
மேவுங்கட லலைநீரும்  மிதக்கும் படகாடிடினும்
மீண்டும் கரை சேர்க்குமன்றோ
தூவும் மலர்கொண்டருளும் தெய்வத்திடம் கேட்டுவிடு
தேவைகளைத் தந்திடாளோ
ஏவுமவள் சொல்லினுக்கு ஏற்றவழி நாம் நடக்க
இன்பமது கூடிடாதோ

தேவியவள் வரமீயத் திகைப்பில்லை விழிப்பில்லை
தேன் தமிழும் ஒழுகிடாதோ
சேவித்தவள் திருப்பாதம் தலைவைத்துத் தொழுதுமெழ
துன்பமெலாம் கரைந்திடாதோ
கேவியழுதாலென்ன கீழ்மைதனை மனங் கொள்ளின்
கிடைப்பதெது கேடுதானே
ஆவியது உள்ளவரை அனல்நீங்கிக் குளிரும்வரை
அவள் மூச்சி னுயிர்ப்பு நாமே

தூற்றுபவர் தூற்றட்டும் துணிவெடுத்து நேர்நின்றால்
துயரழிந்து போய்விடாதோ
காற்றடித்து மரம்வீழல் கற்பனையே நாளுமவள்
கருணைவிழு தாங்கிடாதோ
மாற்றமில்லை அனபினிலே மனங்கொள்ளும் மதிகொல்லும்
மயக்கமது தீர்ந்திடாதோ
ஊற்றிதனை தந்தவளே உன்பெயரில் பாடுகிறேன்
உள்ளதெலாம் நீயேயன்றோ

kirikasan

unread,
3 Jul 2013, 12:10:01
to santhav...@googlegroups.com

வாழ்க்கை தொடர் 5

இந்தத்தொடர் நல்ல முடிவைக் கொண்டிருக்கும்
 . அதற்கு சக்தியே பொறுப்பாவாள். நம்புங்கள் .என் எண்ணத்தை ஆளுபவள் அவளே! நான் எந்த்தக் கவிதையையும் திட்டமிட்டுத்தொடங்குவதில்லை. முதல் சொல் ஒன்று தோன்றும் அதை எழுதும்போது இரண்டாவது சொல் என்னவென் றறியேன். முதற்சொல்லை எழுதிமுடிக்கும்போது இரண்டாவது தோன்றும் அதன்பின் அடுக்கடுக்காக தோன்றும். என் வேலை எழுதிக்கொண்டிருப்பதே! அதையே இங்கும் செய்கிறேன்.


வாழ்க்கை (தொடர்)
 5. விதியின் விளையாட்டோ

நானதிற் குற்ற மிழைத்தவனாய் நெஞ்சு
நாணி மனம்சோர்ந்து வாடலுற்றேன்
ஏனதி ஆர்வத்தில் ஈது செய்தேன் அந்த
ஏழைமனதிலும் இங்கிவளின்
ஆன அழகென்னும் மாயக் கவர்ச்சியும்
ஆக்கிய சூட்சும மாற்றம்தோ
போன் திசையினை விட்டே அவருடன்
போகமனங்கொண்ட காரண்மென்

சுற்றுமுற்றும் கண்ணிற் காணும்பொருள்மங்கி
சூழும் இடம் கொஞ்சம் மாறிவிட
பற்றை மரக்காடு பார்த்துநின்றேன் ஒரு
பாவி மனிதரும் காணவில்லை
நிற்பதென் மாபெருங்காடு முயர்மர
நெஞ்சம் உறை இருள் ஆழ்வனமோ
உற்றதொரு நிலை ஏனன்னையே இந்த
ஓர்முறை எம்மையும் காத்துவிடு

பற்றைகள் சின்னச் செடிமரங்கள் அவை
பக்கம்வளர்ந்து நிறைந்திருக்க
பாதை ஓன்று செல்ல அயல்
உள்ளே மறைந்தொரு கோவில்கண்டேன்
வற்றும் குளத்தினில் வாழுமீனைக் கொண்டு
விட்டதொரு வாவி என்பதுபோல்
சற்றுத் தவிப்பினை ஆறிநின்றேன் அங்கு
சஞ்சலம்தீர வழிஉளதோ.

காலம் என்றாலென்ன ஊழ்வினையோ அது
கண்ணில் தெரிந்திட பின்னேவரும்
கோலம் எமதயல் கூடிநிற்கும் மதி
கொஞ்சம் அயரக்கீழ் தள்ளிவிடும்
ஞாலமதில் நன்மை யேது செய்யும் போதும்
நஞ்சுமனதிடை கொள்ள வைக்கும்
ஓலமிட்டே அழுதென்ன பயன் அது
உள்ள தனைத்துமே செய்துவிடும்
 

வானில் கிழக்கினில் சந்திரனும் பிறை
வட்டமெனக் கண்டு மேலெழுந்து
ஆனது என்ன இப்பூமியிலே என
அத்தனை பேரையும் கேட்பதுபோல்
தானே நலிவடைந் தாலும் பிறரது
துன்பங் களைந்திடும் உத்தமராய்
கானகத்து நடுவாயு மெழுந்தெம்மைக்
காணச்சிறு ஒளிகாட்டிநின்றான்

மங்கும் நிலவொளி தன்னில் முதியவள்
மட்டு மனுங்கிடும் சத்தமெழ
தொங்குங் கிளையினி லெங்கிருந்தோ அவள்
தோரணையில் ஒரு ஆந்தைகத்த
எங்குவந்தேன் இது வேண்டியதா யானும்
எந்தன் பாடுகண்டு போயிருந்தால்
பங்கமிலைப் பழி யாவும் இன்றியிந்தப்
பாடு கொளேன் இதன்பேர் விதியா

நில்லுங்கள் என்றே விழித்தவரை யானும்
நேர்நடந்தே யந்தக் இல்லமிடை
செல்லுகிறேன் எவர் நின்றிருந்தால் அங்கு
சேரும்வழிதனை  கேட்டிடலாம்
வல்லகடவுளை வேண்டியங்கு என்ன
வாய்த்த் விடிவென்று பார்த்திடுவோம்
சொல்லமுதல் அந்த வண்டிகாரப் பையன்
சேசே வேண்டாம் செல்லல் ஆபத்தென்றான்

என்ன மனதினில் கொண்டனையோசொல்லாய் 
இந்த நிலையுந்தன் வேகத்தினால்
சின்னமதி கொண்ட செய்கையினா லிங்கு
சேர்ந்தே நாமின்னல்பட் டேங்குகிறோம்
பொன்னென் னழகுடை பெண்ணவளும் அந்தப்
பேரரும் மூதறி பாட்டிதனும்
அன்னதொரு  குற்றம்செய்ததென்ன இந்த
ஆளில்லா கானகத் தில்விழுந்தோம்

கண்களுருட்டி யும் காணலுற்று மந்தக் 
காளை வனத்திடை பார்வையிட்டு
பெண்ணே பயம்கொள்வ ளோஅறியேன் ஆயின்
பேச்சிலுரைப்பது தேவையென்றான்
அண்ணளவில் ஒரு கோவிலெனக் காணும்
அங்குதெரிவது கோவிலன்று
கண்ணின் பெருமொரு மாயவிம்பம் உண்மை
காணின் சுடுகாட்டு மையமென்றான்

மேகமிடிந் தென்னில் வீழ்ந்திடலாம் மழை
மின்னல் தெறித்தென்னைத் தாக்கிடலாம்
ஆக இவையொன்றும் தீங்கில்லை யாமிந்த
ஆண்மகன் வார்த்தையில் ஆடிவிட்டேன்
வேக  நெருப்பிடை வீசியதாய் மனம்
விந்தை நிலையெண்ணித் துன்பமுற்றேன்
ஏக ஒருமித்த தாய்விதியும் என்னை
என்ன செய்ய வலு கொண்டதுவோ

(தொடரும்)

kirikasan

unread,
3 Jul 2013, 12:52:52
to santhav...@googlegroups.com
எனது கணினி வேலை செய்யவில்லை அதனால் பல தட்டச்சுப் பிழைகள் மனிக்க
திருத்தம்


பற்றைகள் சின்னச் செடிமரங்கள் அவை
பக்கம்வளர்ந்து நிறைந்திருக்க
உற்ற பாதையொன்று பக்கம்கண்டேன் அயல்
உள்ளே மறைந்தொரு கோவில்கண்டேன்
வற்றும் குளத்தினில் வாழுமீனைக் கொண்டு
விட்டதொரு வாவி என்பதுபோல்
சற்றுத் தவிப்பினை ஆற்றிநின்றேன் அங்கு

kirikasan

unread,
4 Jul 2013, 06:48:17
to santhav...@googlegroups.com

        பலம் கொள்வோம்

புத்தொளிக்குக் கீழ் நடந்து செல்வோம் - நாம்
போகுமிடம் எங்குமிருள் போகிடவே செய்வோம்
சத்தமிட்டு சாதனைகள் செய்வோம் - இனிச்
சத்தியத்தைக் கையெடுத்துச் சாத்திரத்தை வெல்வோம்
உத்தமரே ஒன்று கூடிவாரீர் - இனி
ஒங்கியே ஒலிப்பதென்ன ஒற்றுமையே கொள்வீர்
சத்துருக்கள் கொள்பகைக்கு எல்லை - வைத்து
சாத்துவீகம் என்னவென்று சற்றுரைத்து நிற்போம்

முற்றம்மீது பூமரங்கள் வைப்போம் - அவை
முற்றும் மக்கள் காண்சுதந் திரத்தைப் பூக்கச்செய்வோம்
கற்று நீதிகொண்டு காவல் செய்யும் - அந்தக்
காரியத்தில் கண்கள் வைத்துக் காதல் பூமி கொள்வோம்
சொற்பதத்தை நற்பதத்தில் கொள்வோம் -அந்தச்
சுந்தரப் பனித்துளிக்கு துள்ளும் மேடை பூவாம்
நிற்பதற்கு நாணிஓடும் தன்மை - கொண்ட
நீசம்செய் மொழிக் கலப்பை நீக்கி மொழி காப்போம்

மற்றவர்கள் எத்துணைக்கு மேன்மை - அதை
மட்டுமின்றி மேலும்நாம் உயர்ந்து உச்சி செல்வோம்
பற்றெடுத்துப் பாசம் அன்பு காதல் - இவை
பற்றவில்லை என்பதற்கே அர்த்தமில்லை ஆவோம்
விற்பதற்கு மானம் என்ற கீழ்மை - கொல்லும்
வித்தை கற்றுக் கொள்ளவைத்துப் பெண்ணினத்தை வீரம்
பெற்று மென்மை மேன்மை கொள்ள வைப்போம்-  எந்தப்
பீதியற்றும் நாட்டை மீண்டும் சொர்க்கமாக்கி வைப்போம்

பொற்றிரைகள் மேவும் ஆழிமீது - அந்தப்
புத்துணர்வுச் சூரியன்செய் பொற்பளிங்கு மேடை
அற்புதத்தை ஆக்கும் சக்தி போற்றி - நாமும்
ஆணவத்தை நீக்கியன்பு மூச்சில் வாழ்ந்து கொள்வோம்
கொற்றவர்க்கு ஆளும் நீதிசொல்லும் - மேன்மை
கொண்ட ஆட்சி செய்விதத்தை கற்றுக்கொள்ள வைப்போம்
புற்றரைக்கு கீழ்மை கொள்ளும் நாட்டை நாம்
புன்மை கொள்ளப் பார்த்திருக்கா போய்திருத்தி வைப்போம்



**************************

kirikasan

unread,
4 Jul 2013, 09:40:51
to santhav...@googlegroups.com

         விட்டு விடலாமோ?

புன்னகைப்பூ சென்றதெங்கே பொன்னிலாவே- நீயும்
போகும்பாதை இன்னலென்ப  கொள்வதாலே
என்னகத்தில் வாடும்பூக்கள் கொள்ளக் காணே - இனி
என்னசெய்தும் மீண்டும்பூக்க வைப்பேன்நானே
கண்ணசைக்கக் காவியங்கள் நூறு காண்பை - இன்று
காலமென்னும் மேடை கண்டும் ஆடுகின்றேன்
பண்ணிசைக்க பாதம் தூக்கி ஆடுவேனோ - இல்லை
பட்டதுன்ப மெண்ணி மூழ்கித் திக்குவேனோ

சின்னவன்கொள் என்னிருந்தும் வெண்ணிலாவே - நீயும்
செல்லும் எந்தன்பாதை கண்டு சேர்ந்துவந்தாய்
மின்னல் கொண்ட மேகம் நின்னை மூடிநின்றால் - அதை
மெல்லத் தள்ளி விட்டுத் தென்றல் ஒடுமாமோ
மன்னனேம ரகதப்பொன் மஞ்சள்வானில் - அந்த
மாலையின் நிலாவென்றாகிப் பொன்ரதத்தில்
இன்பமே கொள்ளென் றுபூமி உன்னதத்தில் - மேலும்
ஏற்றம் கொள்ளச் செய்குவை ஒளிச்சரத்தில்

தண்ணிலாவே என்ன உண்டோ என்கரத்தில் - நானும்
தந்துவாழ அன்பொன் றுண்டு யென் மனத்தில்
கண்ணிலாத கால்கள் செல்லும் கல்லிடிக்குள் - அந்தக்
கண்கள் சேரின் காண்வழிக்கு முன்னிருட்டி(இ)ல்
எண்ணும் பாதை நான்நடக்க உன்னொளிக்குள் - எண்ணம்
இல்லையென்ற வாழ்வே யில்லை என்வரைக்குள்
மண்ணுலாவும் எந்தன்வாழ்வு மானுடத்தில் - என்றும்
மாளுமட்டும்  உண்டே உண்டு நின்னொளிக்குள்

********************

kirikasan

unread,
5 Jul 2013, 09:54:38
to santhav...@googlegroups.com
   வாழ்க்கை தொடர்

6.  காலத்தேவனின் வாழ்க்கைப் பொறி


நானுமவன் சொல்லை நம்புவதா இல்லை
நாடி உதவியும் தேடுவதா
வானும் ஒளிர்ந்திட்ட பொன்னொளியில் அந்த
வண்ணஉருவத்தைக் நம்புவதா
ஏனோ எண்ணம் குறை காணவில்லை அது
இட்ட துணிவினில் செல்வதென
நானும் முடிவெடுத் தானபின்னர் அவர்
நாடி செயலினை கூறிநின்றேன்

சொல்ல அவன்கண்டு கண் விழித்து‘என்ன
சற்றுப்பொறுங்கள் கண் காண்பதென்ன
பொல்லாச் சுடுகாட்டுச் சூழலன்றோ நீவிர்
பித்தம் பிடித்தென்ன பேசுகிறீர்
நல்லதொரு பார்வை கெட்டதுவோ’ என
நங்கையவள் தலையாட்டி வைத்தாள்
எல்லையற்ற அவர்கற்பனையை நான்
ஏற்கவில்லை எந்தன் நோக்கம்சொன்னேன்

நீவிர் அனைவரும் இங்கிருங்காள் நானும்
நேரே அதைநோக்கி செல்லுகிறேன்
ஆவி பிழைத்திடின் நான் வருவேன் ஏதும்
ஆகிவிடில் குரல் நான்தருவேன்
மேவியெனைப் பேய்கள் கொன்றுவிட்டால் இங்கு
மீளவென வழி வேறெண்ணுவீர்
தேவி இறையன்னை போற்றுகிறேன் - இதைத்
தாண்டி யொருவழி ஏதுமில்லை
 
கோவில் என்றுநானும் எண்ணியது ஒரு
கொஞ்சம் பிழைத்தது உண்மையிலே
பாவியிவன்  சென்று பார்க்கையிலே  அந்தப்
பாழடைந்த சிறுமண்டபமாய்                                                        
ஏவி விட்டதென வௌவால்களும் உள்ளே
இட்டுமுட்டாய் இருளுள் பறந்து
நாவும் குரல் வற்றிப் போமளவு என்னை
நன்குபயமெழச் செய்தனகாண்

வேண்டிய மண்டப முன்றல் நின்றேன்  அங்கு
வானத்துப் பொன்னொளி பட்டிருக்க
தீண்டலின்றி வலை பின்னியதாய்ச் - சில
சின்னச் சிலந்திகள் காத்திருக்க
நீண்ட வலைப் பின்னல் வாசலிலே கண்டு
ந்ச்சயம் வந்துசெல்வோ ரிங்கில்லை
ஆண்டு வரும் சக்தி அன்னைதனும் இதற்
கானவிடை தாரும் தாயே என்றேன்

நெஞ்சினில் சக்தியை நேர்நினைத்து - அந்த
நீலக்கரை யில்லா வானத்திலே
மஞ்சளொடு நீலம் கொண்டு வானத்தடி
மாறும் சிவந்திட்ட கோலமதில்
அஞ்சும் வகை வெகு தூரத்திலே இருந்
தாட்கொண்ட மாபெரும் சக்தியினை
வஞ்சமற்றவிதம் வந்துவிட்டோம் எமை
வாழ் உயிர் தந்துநீ காத்திடம்மா

மின்ன லடித்ததோ மேகமில்லை ஏது
மாபெருந்தீ யொன்று பற்றியதோ
முன்னே இருந்த உள்மண்டபத்தே காண
மூண்ட ஒளியி லதிசயித்தேன்
சின்னக் கதவிடுக் கூடொளிர்ந்த அந்தச்
சிற்றொளியின் ஒளித்தன்மையினில்
என்ன அதுவெறும் தீப்பிழம்போ அன்றி
ஏது யாரும் உள்ளே காணுவரோ

அச்சமெதுவு மணுகவில்லை பதில்
அங்கேயுட் செல்லவென் றாவலெழ
உச்ச உணர்வினால் டக்டக்கென கணம்
ஒடி இருதயம் வேகம்கொள்ள
மெச்சும் வகையிற் துணிவெழுந்து = எந்தன்
மேனியிடை ஒரு வீரங் கொள்ள
இச்சையுடன் உள்ள கைப்பிடியைத்தொட
ஈர்கதவும் திறதென்னை விட

கண்களை வெட்டி விழித்தவனோ ஒரு
காட்சி கண்டு எந்தன் மெய் சிலிர்த்தேன்
வண்ண ஒளியிலோர் யந்திரமோ அல்ல
வேடிக்கை மாபெரும் ஜாலமென்றோ
தண்ணொளி மின்னிடத் தாறு மாறாயங்கு
தங்க முலாமிட்ட பொற்பொறியாய்
எண்ணத்தில் எட்டா விநோதமென அங்கே
ஏதோ இருப்பதைக் கண்டுகொண்டேன்

(தொடரும்)

kirikasan

unread,
5 Jul 2013, 16:17:32
to santhav...@googlegroups.com
 

      வாழ்க்கை (தொடர்)

 7.  காணாத காட்சி


ஒளியும் விழிகொள் அளவைமிஞ்சும்
உயர்வை விட்டகல
தெளியும் புகையுள் ஒருவன் நின்றான்
திகழும் முகங்கண்டேன்
நெளியும் திரைகள் போலே மின்னும்
நீலக்கடுஞ் செம்மை
துளியும் அச்சம் இல்லாதவனாய்
தோன்றக் காண்கின்றேன்

விழியே புரியா விதம்மா யங்கே
விளங்கும் பொருள்கண்டு
தொழிலாம் இதுவென் றுனதோ என்றே
தோன்றக் கேட்கின்றேன்
வழியே புரியா வந்தே இடையில்
வருந்தும் நிலைகொண்டே
அழிவுக் கஞ்சி ஆபத்தென்று
அருகில் வந்தவனே

எனவே விழித்தோன் அவனைநோக்கி
எப்படி யறிந்தாய் சொல்
வனமும் வாழும் சுடுகாட்டிடையே
வாழும் ஒருவன்நீ
தினமும் இங்கே இருப்பாயோ உன்
திறமை ஏதென்றேன்
கனவைப்  போலக்காணும் இவையென்
கருத்தை யுரையாயோ

சிரித்தான் முன்னே கண்டோன் கண்கள்
தெரியும் தூரத்தில்
விரித்தே வைத்தோர் பொறியின் முனையில்
விசையைக் கரம்தட்டி
எரித்தே சாமபல் எடுக்குமிடமென்
றெவர் தான் சொன்னார்கள்
சரித்தே வீழ்த்திச் சஞ்சலம் தந்தான்
சிறுவன் சொல்லாமோ

மொழிந்தே னல்லேன் எனிலும் எண்ணம்
முழுதும் அறிந்தவனே
பழியும் கொண்டே கொல்லும் பேயோ
பதறிக் காண்கின்றேன்
அழியும் தருணம் கொண்டேனோவென்
றலறிக் கலங்கிவிட
ஒழிஉன்நினைவை உலகத்தினரின்
விதியே நானென்றான்

உலகைப் படைத்தாள் உன்னைப் படைத்தாள்
உயிரைத் தந்தவளாம்
அகிலம் காக்கும் அண்டத் துறையும்
அன்னை சக்தியினை
கலகம் செய்யும் நோக்கில் நீயும்
காரணம் சொல்லென்றே
பலதும் உந்தன் பாடல் கொண்டு
பாரில் குழப்பமிட்டாய்

கோலம் உனது செயலால் அன்னை
கோபம் கொண்டாலும்
ஞாலம் மீது நடப்பதுமென்ன
நடைமுறை காட்டவென
நீலத் திரையின் பின்னே காணும்
நிசத்தைப் போலிங்கே
காலப்பொறியை கருத்தி லொத்தோர்
காட்சிப் பொருளிட்டாள்

என்னே இதனில் நோக்கம் உலகின்
உயிர்கட் கென்னாகும்
சின்னோர் அறிவிற் குரையாய் முறைகள்
சிறிதும் தெளிவற்றேன்
மின்னல் போலே மீண்டும் சிரித்தே
மெல்லக் கண்டவனும்,
சொன்னாற் புரியும் தகைமை கொண்டாய்
பெரிதும் எண்ணம்தான்

வாவென் பின்னால் மனிதா என்றான்
விரைந்தே  அவன்செல்ல
போயென் காண்பேன் புரியாதிருந்தும்
போகத் துணிகின்றேன்
மாயக் கதிர்கள் மாறித் திரியும்
மானிட வாழ்வென்னும்
தூய கணிதச் சூட்சுமத்தூடே
தேடிக் கணம் சென்றோம்

(தொடரும்)

kirikasan

unread,
6 Jul 2013, 10:50:13
to santhav...@googlegroups.com

              குயிலின் ஆசை

சோலைக் குயிலுக்கும் ஆசை பிறந்தது
சுற்றியெங்கும் பேரெடுக்க - அது
காலைக்கதிர் வரக்காற்றில் பறந்தது
காணும்படி ஊர்முழுக்க
சாலை மரத்தினில் சற்று இருந்தது
சோர்வெடுத்தே கால்வலிக்க - அது
மாலைவரை இசைபாடிக் களித்தது
மக்களெல்லாம் பேருரைக்க

நாளும் பொழுதிருள் கொள்ளப் பறந்தது
நாடித்திசை இல்லம் வர- அங்கே
ஆளூம் தனதன்பு தாயும்  இருந்தது
அஞ்சிமனம் நொந்திருக்க
மீளும்,செயலுண்டோ என்று நினைந்தனன்
மேதினியில் நீ பறக்க - அன்னை
மூளும் மனத்துயர் வேண்டியதேன் குயில்
மீளுமன்றோ ஆசைவிட

எங்கு பறப்பினும் சந்தமிடும் சோலை
இந்தகுயில் இல்லமன்றோ - அது
தங்குமிடம் இல்லம் சொர்க்கமெனும் போது
தாயை விட்டும் சென்றிடுமோ
பொங்கும் மனத்துயர் போதுமினித் - தாயே
புன்னகைப்பாய் என்ற குயில்
அங்கம் சிலிர்த்திடக் கொண்டபுகழ் தனும்
அத்தனையும் போதுமென்றாள்

வானிற் பறப்பினும் பட்டமது  மீண்டும்
வந்துதரை இறங்கிடுமாம்
தேனின் சுவைதேடி வண்டு எழும்புகழ்
தேன் திகட்ட வீடு வரும்
தானே தரைவிட்டு நீர்க்குளத்தே வாழத்
தாமரையும் சென்றிடுமாம்
ஏனோ இருப்பது மண்ணென் றுணர்விட
இட்டுவேரை பற்றிடுமாம்.

காற்று மலைவது பூவின்மணங் கொண்டு
கானகத்தே பேரெடுக்க
ஆற்றுவெள்ளம் மலை ஊற்றெடுக்கும் அது
ஆழிசெல்லும் ஊர்பசப்ப
சீற்றம்கொண்டே கதிர் சேர்த்துவைக்கும் அது
சுட்டேஆவி வானிலெழ
மாற்றமில்லை மழைமேகமென்றாகிடும்
மீண்டும், மலைசேர்த்தணைக்க


***************

kirikasan

unread,
6 Jul 2013, 20:19:44
to santhav...@googlegroups.com

   வாழ்க்கை (தொட ர்) 8

முதலில் இது எனது சொந்தக் கருத்தேயாகும், இது இப்படித்தான் இருக்கலாம் என்ற தெரிந்த தகவல்களோடு மனதில் உதித்த கற்பனை.இதற்குள் சமயக் கோட்பாடுகள்  எதையும் பாதிப்பதாக இருந்தால் தெரிந்தால் திருத்திக் கொள்வேன். இது ஒரு கற்பனையே!


8. ஒளியும் இருளும்





***************
பிரபஞ்சம் தோன்ற முன்னே பெருமிருள் மேவிஅண்டம்
இரவெனு மொன்றேயாகி இருந்தது எங்கும்கருமை
ஒளிதனும் சிறிதுமில்லா ஒன்றென இருண்ட பாகம்
வெளிதனும் சுருங்கி ஒன்றாய் வெற்றிருள் பந்துபோலே
குளிர்தனும் எங்கும்மேவி குறுகியே கிடந்தகாலை
மருளுறும் மாயையென்னும் மதிபிறழ் இருளரக்கன்
கருமையில் மறைத்தே யெங்கும் காணல் என்றெதுவுமற்று
அருவருப்பாகி அண்டம் அழுக்கினில்அசைவுமின்றி

இருந்திட இரவின் ஆழம் எதுவுமற் றுறைவில் மூழ்கி
பெருமொரு சக்திதன்னின் பெருமையின் தன்மைகாணா
வரும்விதம் அறிந்திடாது விரிநிலை நிகழக்காத்துக்
கருவெனக் கிடந்தபோதும் கண்டதோர் நாளில்மாற்றம்
அடக்கிடும் போதிலறிஞர் அடங்குவர் எல்லைமீறி
முடக்கிடும் செயல்தொடர்ந்தால் முழுதென வெடித்துப்பாயும்
இதனையும் ஒத்ததாக இருந்ததோர் சக்தியென்ப
முதல்முதல் மாற்றம் கொண்டு மிகப்பெரும் அணுகுண்டாக
அதனிலும் கோடிகோடி ஆற்றல்கொண் டண்டம் மீது
அதிர்ந்திட வெடித்தபோது ஆதியென்சக்தி தோற்றம். (The Big bang)

இதுவரை இருளை மட்டும் எடுத்திரு அண்டம்மீது
மெதுவெனப் பாய்ந்த சக்தி மின்னலென் றொளிப்பிளம்பாய்
சீறியே வெடித்தபோது திரண்ட இப் பிரபஞ்சத்தில்
மீறியே விரிந்தஎல்லை மிகப்பெரும் வெளியும்தோன்றி
நூறெனக் கோடிகோடி நுண்துகட் கரும்பதார்த்தம்
ஆறெனப் பாய்ந்து சிதற அதிலெரி தீயும்பற்றி

பேரொளி பிறந்தேயெங்கும் பெரிதென ஆகி வெம்மை
சேரொளி பரவிநிற்க சொல்லரும் சத்தமெங்கும்
ஓமெனும் நாதஓசை ஓடியே அதிர்ந்துகொள்ள
தாமிது வண்ண மாற்றம் தகிப்பெழக் கண்டதாமே
இருளெனும் தீயபக்கம் இதைஎதிர் பார்க்கவில்லை
கருமையின் ஆட்சிமாறிக் கனலெழும் தீயினாட்சி
பெருமொரு அண்டம்மீதில் பிரளயம் போலமாற்றம்
வருமொரு நிலைமைகண்டு வந்தெதிர்கொள்ள நின்றும்

எரியழல் தீயின் சக்தி அதனையும் மீற ஒன்றும்
புரிவதன் ஆற்றலற்றுப் புழுங்கியே கிடந்தபோதும்
பேரொளிச் சக்திகண்டு பேயிருள் தோற்றபோதும்
தூரமே உறைந்தநின்றும் துணிவுடன் சிறியதொல்லை
காரிருள் என்றயெயரில் கண்ணியமற்று செய்தான்
பேரொளி காணும் மெங்கும் பெருகிட; மூளும் தீயில்
குளிரினில் உறை பதார்த்தம் கொண்டதீ தன்னில் பற்றி
வெளியிடை எரியும்போதில் வீறெழும் சக்திதோன்றும்
அழிவெனும் இருளரக்கன் அதைஎதிர் தன்மைகொண்டே
ஒளிதனை அணைக்கஎண்ணின் இயற்கையின் மோதல் தோன்றும்

சிதறிய அண்டம் கொண்ட தீயெரி பொருளிலொன்று
கதியொடு தூரவந்து கனலதைக் கக்கும்போது
கருமையின் அரக்கன்கண்டு குளிரினை ஊதிநிற்க
பெருபுவி யாறவைத்தான் பிறந்தது பூமியன்றோ
புவிதனில்மேற்பரப்பை  பெருமலை திடலென்றாக்கி
இருளிடை இழுக்க அவனும் எத்தனித் தேகும்போது
கதிரெனும் சூரியன்கள் கனதொகை தூவும்சக்தி
மதியொடு உலகை வெய்யோன் மீதொளி காந்தம்கொண்டு
கதியொடு சுற்றி நிற்க கட்டியே விட்டபோதும்

ஒருபுறம் பகலினாட்சி மறுபுறம் இருளின் ஆட்சி
பெருமருள் சக்திமுன்னால் பின்னிருள் கொடுமைசெய்வோன்
இருவர்க்கும் இடையில் பூமி இருப்பதே துன்பமாகும்
இரவதும் பகலுமாட்சி இதுவரை பாதிபாதி
இருந்திடும்வரையும் நீசம் இகத்தினிலொழித்தலரிதே
இவனுடை ஆட்சிதன்னும் இகமிடை பெரிதென்றாகா
புவியிடை நடுவில்தீயாய் பின்னரும்காணும்சக்தீ
மனதிடை நோக்கம்கொண்டு மானிடமன்று செய்தாள்

தனதொரு தீயின் பாகம் தரணியில் மேல்நிலைக்க
புனிதமும்கொண்டுமேனி புதிதொருவடிவிற் செய்தாள்
கனமிட காந்தம்கொள்ள காற்றிலே வீழ்ந்திடாமல்
புனலொடு மண்குழைத்து பதமிட தீயும்சேர்த்து
அனலொடு காற்றுமூதி அண்டத்தின் அசைவு கூட்டி
மனமதும் உணர்வுமாக்கி மண்ணிடை காவல்வைத்து
ஒன்றுபின் இரண்டென்றாகி இரண்டது மூன்றுமாகி
மூன்றது பலவுமாகி  பலஉயிர் கோடியாக
செயலுற ஆக்கிவைத்தாள். தொடங்கிய வாழ்க்கை உலகை
பயமுறும் தீய இருளின் பலமதை ஒடிக்கவாமே

மண்ணதில் இச்சைகொண்டு மனதினில் பெருகுமெண்ணம்
கண்ணொளி காட்சிஎன்றும் காரிய மாற்றச் செய்து
விண்ணிடை இருளின் கைகள் வென்றிடா வண்ணமாக்கி
எண்ணமும் அறிவின் மூலம் இவரினை கட்டுள்வைத்தாள்
இருளெனும் அரக்கன் தானும் இதனிடைஊறு செய்ய
மதியிடை கொலையுணர்வும் மனிதனை அவனேகொல்லும்
வகையினில் பகமை கொள்ள வழிசெய்து வரம்புமீறி
அதிபலம் கொண்டோர்தம்மை ஆசையின் மூலம்கேடும்
பிறிதொரு அவலம்செய்து பிணமென ஆக்கவைத்தான்
உலகிடைஅவலவாழ்வை ஒளியதற் கெதிராய் செய்தான்

http://www.youtube.com/watch?v=PV0ACIykxQI

**************




kirikasan

unread,
7 Jul 2013, 08:24:58
to santhav...@googlegroups.com


On Saturday, July 6, 2013 7:19:44 PM UTC+1, kirikasan wrote:

   வாழ்க்கை (தொட ர்) 9

9. ஒளியும் இருளும் 2


நான்:-
இருளதும் ஒளியுமின்றி இகமதில் வாழ்க்கை இல்லை
இரவுகள் இல்லையாயின் இருவிழி தூக்கமில்லை
அருளது செய்யும் சக்தி அதனையு மறிவளன்றோ
உறுவிழி தூக்கமின்றி உலகவாழ் வுண்டோ கூறீர்

காலதேவன்
இரவில்கொள் உறக்கம் என்ன இதையும்நீ சிந்தித்தாயோ
இருதயம் உறக்கம் கொள்ளா இரத்தமும் உறங்கலில்லை
வருவதும் போவதான வாயுவென் மூச்சுக்கில்லை
கருதிடும் எண்ணும் துங்கா காதிலோர் சத்தம் கேட்க
பரபரத்தெழுந்து கொள்ளும் புலன்களும் உறக்கமில்லை
பார்த்திடில் பார்வை ஒளியைப் பறித்தனன் இவ்வரக்கன்
கருப்பென ஒளியைக்காணா கண்ணிமை மூடவைத்து
கருமமும் ஆற்றலின்றி கனவுகள் காணவைத்தான்
இரவதில் களவுசெய்வோர் இட்டுத்தீ வீடெரிப்போர்
கரமதில் கத்தியேந்தி கொலைகளைச் செய்வர்தம்மை
உரமிட்டே ஆசிகூறி உலகத்தில் பாவம்செய்ய
பிறன்மனை நாடி இன்னும் பிழைகளை ஊக்குவித்து
கருமையில் துணிவுதந்து காரியமாற்ற விட்டான்.
தருமத்தின் எதிரியாக தங்களை மாற்றிவிட்டான்

நான்
உறக்கமும் இரவில் கொள்வோம் உண்மையில் தூக்கமின்றேல்
துறப்பது மனதின் அமைதி  துவள்வது அழகுமேனி
சிறப்பது சொல்லின் தூக்கம் செய்திடா மாந்தர் காலை
மறப்பது மனத்தின் தெளிவும் மற்றும்நற் சுகங்களன்றோ
`

காலதேவன்
ஒருதரம் மீண்டும் யோசி ஓய்வது வேண்டுமாயின்
வருபகல் நேரம் கொள்ளின் வாழ்வது மாறிடாது
தருமமும் நீதி மீண்டும் தழைத்திடவேண்டின் இந்தப்
புவியதில் இருளைஓட்டிப் புதுஒளி பாய வேண்டும்
உலகத்தில் இன்றுசக்தி ஒளியினை மறந்தெல்லோரும்
கலகத்தின் தலைவனான கருமைகொள் பேயின்பக்கம்
மனமுவந்துள்ளார் மாந்தர்மறுபடி திரும்பிவாரின்
கனமதுநீங்கி வாழ்வில் கனிவினைக்காண்பர் அன்றோ

நான்
புரிந்ததுபோலும் இன்னும் புரிந்திடா நிலையைப் போலும்
இருமனம் கொண்டேன் யானே இருப்பினும் சிறிய கேள்வி
உலகத்தை ஆக்கிவைத்தாள் உருவத்தை ஆக்கி வைத்தாள்
பலமுடன் மனிதம் ஆக்கிப் பகையினை வென்றாலென்ன?

காலதேவன்
பலமுடன்தானே செய்தாள் பரிபூர்ண ஆதிசக்தி
பலமதை இழந்த துங்கள் பயனற்ற செயலினாலே
புதிதென விதிகள் போட்டீர் புதியதாம் இயல்பு கொண்டீர்
நிதியெனக் காசு செய்தீர் நிறையவும் கருவிசெய்தீர்
சுகமென மெய் சுகிக்க சொல்லொணாப் பொருளும்செய்தீர்
இகமதை கூறுபோட்டீர் எனதென்றும் உனதும் என்றீர்
தேவைகள் பெருக்கிவிட்டீர் தேடியும் அலைந்துகொண்டீர்
அவைகளில் விலையும் இட்டீர் அதற்கெனப் பணமும் தேடி
அதுவொன்றா மிதுவுமென்றே ஆசைகள் நிறையக் கொண்டீர்]
மதுவுண்டு மனதுகெட்டீர் மற்றவர் அழிவில் பூத்தீர்
உழுதுண்டு வாழுஎன்றோர்  உயரிய கொள்கைவிட்டு
பழுதுண்டு பலரை ஏய்த்தே பயனற்று வாழச் சக்தி
எது செய்வாள்?- இயற்கைதந்த இனிய நற்கனிகளோடு
மதுமலர் மரமும் செடிகள் மழையொடு நீலவானம்
இளமையும் உறுதி, வீரம் இவைகளைத் தந்தபின்பு
வழமையில் அறியும் ஞானம் வைத்தவள் ஆக்கும்போதும்

கருமையின் கயமை உங்கள் கரங்களைத் தொடஇசைந்து
பெரும்பிணி தீயஎண்ணம் பேச்சினில் பொய்மைவாங்கி
அருந்திடப் போதைபானம் அதனுடன் புலாலுமென்று
விருந்தினைக் கொள்ளும் நீங்கள் விளைத்தது அபத்தமன்றோ

நான்:-
எல்லாமே அண்டம்மீது எள்ளுடை அளவுகூட
இல்லையாம் தவறென்றாக்கி அசைத்திடும் சக்திதேவி
எம்மையும் பிழையின்பாதை செல்வதைத்  தடுக்க லாமே
பொம்மை யென்றெம்மை ஆட்டும் பெருஞ்செயல் செய்தாலென்ன

காலதேவன் :-
கோள்களும் கிரகம்வேறு கொடுத்தைச் செய்யும் நீவிர்
ஆளுமை கொண்டவாறு அன்னையும் படைத்தாளன்று
பூமியின் இருளரக்கன் போரினில் வெல்லவேண்டி
ஆம் நினைப் படைத்தபோது அதிகமாய் சக்திதந்தாள்
நீவிரே எண்ணம்கொண்டு நினைத்தை முடிக்கு வகையில்
ஆவியில் திறனைச் சேர்த்தே அமைத்தனள் மனிதப்பிறவி
தானுமைப் படைத்ததாலே தன்னுடன் நிற்பீரென்று
மானிடம் செய்தபோதும் மாறிநீர் பக்கம் நின்றீர்
மாயமாம் இருளின் பேச்சை மதிக்கின்றீர் தீயசெயலை
மனதிலே ஆசைகொண்டு மானிடா செய்துநின்றீர்
ஆம் இவள் பார்ப்பதெல்லாம் அறிவினைக் கருத்தில்கொண்டு
பூமியின் இருளைஓட்ட புறப்படும் சக்தியோடு
சேருவீர் ஆகில் இந்தச் சுழன்றிடும் பூமிமீது
ஆருயிர்க் கின்பவாழ்வை அமைத்துமே வாழலாமே!


(தொடரும்)

****************************

kirikasan

unread,
8 Jul 2013, 02:59:48
to santhav...@googlegroups.com
                வாழ்க்கை (தொடர் )

10. ஒளியோடு சேரும்

(மீண்டும் கூற விளைகிறேன். இது என்மனத் தோன்றல். எவ்வித சித்தாந்தங்களும் படித்தது கிடையாது. எனவே பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்
வழமைபோல அவள் சொன்னாள் நான் எழுதினேன் )


நான்;-
இருளென்னும் கேடுசெய் வோன் இருந்திடும் பக்கம்செல்லா
தருமத்தைக் காக்கும்சக்தி தாயெமைக் காப்பதற்கு
வருமினிக் காலம்தன்னில் வாழ்வினை நாமும்பேண
தெரிந்திடேன் ஏதுசெய்வோம் தெளிவுறக் கூறுமய்யா

காலதேவன்:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக