வியாழன், 27 செப்டம்பர், 2012



ரின் எல்லைகளை

புங்கைநகர் உங்களை அன்போடு வரவேற்கிறது

by
கொஞ்சி விளையாட
கடல் அலைகள்

குருத்தோலைகளை
சிரிக்க வைப்பதற்கென்றே
பனை ஓலைகளோடு
பகிடிபண்ண
வாடைக் காற்று

அந்திமாலை வேளை
தென்னம் ஓலைகளோடு
பின்னி விளையாட
பருவக்காற்று

கோவிலை
குடை பிடிக்க
ஆலமரம்
அதன் நிழலில்
அமைதியாய் தூங்கும்
நாச்சிமார்கோவில்குளம்

சூரியன் சிரிக்கும் போதெல்லாம்
வெய்யிலோடு விளையாட
சிறுவர்கள்

மாலை நேர தூக்கத்துக்காய்
தாய்மடியோடு காத்து நிற்கும்
மாமரங்கள்

இது மட்டுமா..

வந்தோரையும்
வாழ்வோரையும்
வாழவைக்க
கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
தேவலயங்கள்,
சனசமுகநிலையங்கள்
என எல்லாமே திறந்தே கிடக்கும்

கவிதை வேணும் என்றால்
எங்கள் கடலை எட்டி பார்த்தால்போதும்
பொங்கி வழியும் ஊர்த்தமிழ்

எங்கள் ஊர் வீட்டுத்தின்னைகள்
ஒவ்வொன்றிலும் உட்காந்து பார்த்தால்
தெரியும் விருந்தோம்பல்
என்பது தமிழரின் பண்பாடு என

இருவரியில் சொல்வதென்றால்
எங்கள் ஊராரின் மனதை படித்தவன்
எங்கள் ஊரின் அழகை கேட்டு
ரசிக்காமல் விடமாட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இயற்கையின் அத்தனை அழகையும்
பொத்திவைத்திருப்பதால்
என் கவிதையின் நாயகியானால்
பசி என்றி சொல்லி யாரையும்
அழவைக்காததால் எங்கள்
எல்லோருக்கும் அவளே தாயானால்


-யாழ்_அகத்தியன்